World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Obama-Cheney "debate" and the threat of dictatorship in America

ஒபாமா-செனி "விவாதமும்" அமெரிக்காவில் சர்வாதிகார அச்சுறுத்தலும்

By Joe Kishore
22 May 2009

Use this version to print | Send feedback

ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனிக்கும் இடையே வியாழன் காலை நடைபெற்ற அசாதாரண பகிரங்க மோதல் அமெரிக்க ஜனநாயகத்தின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் அரசியமைப்பு முறை அராசங்கத்தின் நலிந்த தன்மை ஆகியவற்றை அம்பலப்படுத்துகின்றன.

வாஷிங்டன் D.C., Library of Congress ன் பொதுப் பார்வையாளர் கூட்டத்தில் பேசிய ஒபாமா, முந்தைய நிர்வாகம் அரசியலமைப்பை மீறியது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். குவாண்டநாமோ குடா சிறை முகாமை மூடும் தன்னுடைய முடிவை ஆதரித்துப் பேசிய கருத்துக்கள். ஒபாமாவின் உரையில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டிருந்தன. இதன் நோக்கம் ஜனாதிபதிக்கு முன்கூட்டியே வந்த எச்சரிக்கைத் தகவல்படி செனி பேசவிருக்கும் கருத்துக்களுக்கு முன்கூட்டியே விடையிறுப்பது என்பது தெளிவு.

அத்தாக்குதல் ஜனாதிபதி தன் கருத்துக்களை கூறிய சில நிமிஷங்களுக்குள் வந்தது. ஒரு வலதுசாரி சிந்தனைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய செனி ஜனாதிபதி பற்றி தூண்டிவிடும் தன்மை உடைய கடுமையான கண்டனத்தை வெளியிட்டார். புஷ் நிர்வாகத்தின் கொள்கையான "விரிவாக்கப்பட்ட விசாரணைமுறை"--அதாவது சித்திரவதை--பற்றி ஒபாமாவின் குறைகூறல்களை எள்ளி நகையாடிய முறையில், முன்னாள் துணை ஜனாதிபதி அமெரிக்காவின் விரோதிகளுக்கு ஜனாதிபதி கிட்டத்தட்ட உதவியாகவும் உடந்தையாகவும் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராக காங்கிரஸில் பெருகிய முறையில் காழ்ப்புப் பிரச்சாரத்தை திரட்டுவதில் மையமாகவும், இன்னும் ஆபத்தான வகையில் தன்னுடைய நண்பர்கள், பரிவுணர்வு காட்டுபவர்கள் என்று இராணுவ, CIA பிரிவுகளின் மையத்திலும் செனி உள்ளார். இப்பிரச்சாரத்தின் பெருகிய திறன் புதனன்று ஒபாமாவின் குவாண்டநாமோ சிறையை மூடும் திட்டத்திற்கு எதிராக வந்த காங்கிரஸ் வாக்குப் பதிவில் பிரதிபலித்தது. FBI இயக்குனர் Robert Mueller III அமெரிக்காவில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டால் இக்கைதிகள் கொடுக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் பற்றி எச்சரித்திருந்த சாட்சியத்தால் ஊக்கம் பெற்று, பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் குவாண்டநாமோ மூடல் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

தன்னுடைய நிர்வாகத்தால் பின்பற்றப்பட்ட கொள்கைகளை காக்க முற்படும் வகையில், ஒபாமா தன்னுடைய சொந்த முடிவுகளை, முந்தைய ஆட்சியின் எட்டு ஆண்டுகால சட்டவிரோதம் மலிந்த நிலையில் இருந்து அமெரிக்க அரசியலமைப்பு முறையை மீட்கும் தீவிர மற்றும் தாமதித்த முயற்சிகளாகச் சித்தரித்தார்.

அரசியலமைப்பு ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் தீவிரத் தன்மையை அடிக்கோடிட்ட வகையில், தன்னுடைய உரையை அமெரிக்க ஜனநாயகத்தின் நிறுவன ஆவணங்களை - சுதந்திரப் பிரகடனம், அரசியல் அமைப்பு, உரிமைகள் சட்டம் ஆகியவற்றை அருங்காட்சிகாளாக கொண்ட அரங்கில் அளிப்பதாகக் குறிப்பிட்டார். தன்னுடைய கூட்டத்தினருக்கு ஒபாமா, தான் "அரசியலமைப்பை நன்கு பாதுகாப்பதாக எடுத்துக் கொண்ட உறுதிமொழியை" நினைவுறுத்தி "நாம் ஒருபொழுதும் நிலைத்த அரிய கொள்கைகளை சூழ்நிலைக்கேற்ற பொருத்தம் காரணமாக கைவிட்டுவிடக்கூடாது" என்றார்.

முந்தைய நிர்வாகத்தில் "நம்முடைய அரசாங்கம் முன்னோக்கு என்பதை விட அச்சத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தது; அதுவும் நம் அரசாங்கம் அதன் சிந்தனைப் போக்கு முன்கருத்துக்களுக்கு ஏற்ப உண்மைகளையும் சாட்சியங்களையும் உரு மாற்றியது." என்று ஒபாமா கூறினார்.

"சட்டத்தின் ஆட்சி மற்றும் முறையான வழிவகைகள்" மீட்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஒபாமா, "கடந்த எட்டு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஒரு தற்காலிக சட்ட அணுகுமுறையை பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிட நிறுவியது; அவை திறமையற்றவை, தொடர்ந்து செயல்படுத்தப்பட முடியாதவை--அந்த வடிவமைப்பு நம் சட்ட மரபுகள் மற்றும் காலம் கடந்து நின்றுள்ள நிறுவன அமைப்புக்களை நம்பி இருப்பதில் தோற்றுவிட்டன, நம்முடைய மதிப்புக்களை ஒரு திசைகாட்டியாக உபயோகிக்கவும் தவறிவிட்டன." என்று அறிவித்தார். புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் "சட்டத்தின் ஆட்சியை" கீழறுத்துவிட்டன என்றார்.

அவருடைய உரையில் மிக முக்கியமான பகுதியில்--அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் சீற்றத்துடன் நடக்கும் அரசியல் யுத்தங்களின் தன்மை பற்றிக் காட்டுவது-- ஒபாமா தன்னுடைய கொள்கையின் எதிர்ப்பாளர்கள், "இரு சொற்களில் சுருக்கமாகக் கூறிவிடக்கூடிய பார்வையைத் தழுவியுள்ளனர்: 'எதையும் செய்யலாம்'. அவர்களுடைய வாதங்கள் பயங்கரவாதத்தை எதிர்க்கும் முடிவுகள் எந்த வழிவகையையும் நியாயப்படுத்தும் என்பதைக் காட்டுகின்றன, ஜனாதிபதி விரும்பியதைச் செய்வதற்கு தடையற்ற அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்--அதாவது தாங்கள் உடன்பாடு கொண்டுள்ள ஜனாதிபதியாக இருந்தால்" என்றார்.

தன்னுடைய அறிவிப்பின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டும் வகையில் சொற்களை பயன்படுத்திய ஒபாமா, அரசியலமைப்பு முறைகளில் இருந்து முறித்து கொள்ளத் தயாராக இருக்கும் செல்வாக்கு மிக்க சக்திகள் இருப்பது பற்றிக் குறிப்பிட்டார். "அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெற்றிக்கு நாம் இக்கட்டிடத்தில் பொலிவாக்கப்பட்டுள்ள புதினக் கொள்கைகளில் இருந்து நகர வேண்டும் என்று நினைப்பவர்கள் அவ்வப்பொழுது உள்ளனர். இன்றும் அத்தகைய குரல்களைக் கேட்கிறோம்."

அவர் குறிப்புக் காட்டிய முக்கிய குரல் செனியுடையது ஆகும். ஒபாமா முன்னாள் துணை ஜனாதிபதியை ஒரு அதிருப்தி அடைந்த இயல்பிற்கு மாறான வலதுசாரி என்று நினைத்திருந்தால் ஒழிய அவர் கூற்றுக்கு விடையிறுக்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார். உண்மையில் புஷ் நிர்வாகத்தின் உண்மையான முடிவெடுப்பவர், ஒரு இரகசிய அரசாங்கத்திற்கு தலைமை தாங்கியவர் என்று இருந்த செனி, பென்டகன், பரந்த, பொறுப்பு கூறவேண்டிய தேவையில்லாத அளவிற்கு பெரும் அதிகாரத்தை கொண்டுள்ள CIA மற்றும் இராணுவம்-உளவுத்துறை அதிகாரத்துவங்களின் அதிகம் அறியப்படாத பகுதிகள் ஆகியவற்றில் இன்னும் மகத்தான செல்வாக்கைக் கொண்டுள்ளார் என்பதை ஒபாமா அறிவார்.

American Enterprise Institute க்கு கூறிய கருத்துக்களில் செனி, ஒபாமாவிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு, நிர்வாகத்தையும் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியையும் மறைக்காத இகழ்ச்சியுடன் பேசினார்.

விசாரணை முறைகள் பற்றிய ஒபாமாவின் குறைகூறல்கள் "தங்கள் பணிக்கு நல்ல மதிப்பைப் பெறும் தன்மை உடைய உளவுத்துறை செயலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கு பெருத்த அநீதியாகும்" என்று செனி அறிவித்தார். "இங்கு தேவையானதைவிடக் குறைவான குவிப்புத்தான் தேசியப் பாதுகாப்பிற்கு காட்டப்படுகிறது என்பதுதான் ஆபத்தாகும்."

இன்னும் தீய முறையில் செனி கூறினார்: "எடுக்கப் போகும் போக்கு பற்றி நிர்வாகம் மிகவும் கவனமாகச் சிந்திக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூறுவேன்."

முன்னாள் துணை ஜனாதிபதி கிட்டத்தட்ட பயங்கரவாதிகளுக்கு உதவுவதாகவும் நாட்டிற்கு துரோகம் இழைப்பதாகவும் ஒபாமா மீது குற்றம் கூறினார்.

"விசாரணைக் குறிப்புக்களை வெளியிட்டது அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நலன்களுக்கு அப்பட்டமான எதிர்ப்போக்குடையது ஆகும். இப்பொழுது பயங்கரவாதிகளின் கைகளில் இருக்கும் உயர்மட்ட இரகசியத் தகவலில்தான் தீமை துவங்கும்; அவர்கள் இப்பொழுது தங்கள் பயிற்சி செயற்பட்டியலுக்கு ஒரு விரிவான கருத்துத் தொகுப்பையும் கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் பயங்கரவாதிகளைப் பிடிக்க நமக்கு உதவிய அரசாங்கங்கள், முக்கியமான கூட்டு நடவடிக்கைகளின் தன்மை இனி சமரசத்திற்கு உட்பட்டுவிடும் என்று அஞ்சும். வெள்ளை மாளிகை அல்லது காங்கிரஸ் கஷ்ட நேரத்தில் தங்களுக்கு கைகொடுக்குமோ என்று CIA செயல்வீரர்கள் நினைக்க நேரும்."என்று அவர் அறிவித்தார்.

இச்சொற்கள் குறிப்பிடத்தக்க வகையில் தூண்டுதல்தன்மை, ஆபத்தைக் குறிப்பது போல் உள்ளன; ஏனெனில் அவை வேண்டுமென்றே தோல்வியுற்ற 1961 Bay of Pigs செயலுக்கு பின் CIA செயலர்கள் கென்னடி நிர்வாகத்திற்கு எதிராக கொண்டிருந்த எதிர்ப்பு உணர்வுகளை நினைவுபடுத்துகின்றன.

குறிப்புக்களை வெளியிடும் முடிவு ஒபாமா நிர்வாகத்திற்குள்ளேயே முக்கிய நபர்கள் பலரால் எதிர்க்கப்பட்டது என்று செனி களிப்புடன் சுட்டிக் காட்டினார்; அவர்களுள் CIA இயக்குனர் லியோன் பனேட்டாவும் தேசிய உளவுத்துறை இயக்குனர் டெனிஸ் பிளேயரும் உள்ளனர்.

புஷ் நிர்வாகம் பயன்படுத்திய விசாரணை வழிவகைகள் பற்றி "சீற்றம் அடைந்தது போல் காட்டிக் கொள்ளுபவர்கள்" பற்றி செனி எள்ளி நகையாடினார். "என்னுடைய நீண்ட கால வாஷிங்டன் அனுபவத்தில், ஒரு சில கைப்பற்றப்பட்ட பயங்கரவாதிகளிடம் காட்டப்பட்ட விசாரணை வழிவகைகள் பற்றி இந்த அளவிற்கு போலித்தன இகழ்ச்சியுணர்வு, போலித்தன அற உபதேசங்கள் வந்ததில்லை" என்றார் அவர். மேலும் இவ்வழிவகைகளைக் குறைகூறுபவர்கள் "பிறருக்கு 'மதிப்புகள்' பற்றி உபதேசிக்க உரிமை அற்றவர்கள்" என்றும் கூறினார்.

புஷ் நிர்வாகம் பயன்படுத்திய சிந்திரவதை உத்திகளை தெளிவாக ஆதரித்த முன்னாள் துணை ஜனாதிபதி "வருங்காலத்தில் முற்றிலும் விரிவாக்கப்பட்ட விசாணை முறைகளை ஒதுக்கிவிடுவது என்பது முற்றிலும் அறிவற்ற செயலாகிவிடும்" என்றும் வலியுறுத்திப் பேசினார்.

குவாண்டநாமோவை மூடும் ஒபாமாவின் முடிவைப் பின் கண்டித்த அவர் எச்சரித்தது: "சிந்தித்துப்பார்த்த பின் அமெரிக்காவிற்குள் மிக மோசமான பயங்கரவாதிகளைக் கொண்டுவருதல் வரும் ஆண்டுகளில் கூடுதலான ஆபத்துக்கள் மற்றும் வருத்தத்திற்கு வழிவகுத்துவிடும் என்று ஜனாதிபதி ஒப்புக் கொள்ளுவார் என்று நான் நினைக்கிறேன்."

இவ்விதத்தில் ஒபாமாவும் செனியும் பகிரங்கமாக மோதிக் கொள்ளுவது தற்கால அமெரிக்க வரலாற்றில் முன்னோடியில்லாத செயல் என்று கூறினால் அது மிகையல்ல. இந்தக் கடுமையான வாக்குவாதங்கள், ஒரு ஜனாதிபதிக்கும் முன்னாள் துணை ஜனாதிபதிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பற்றிய மோதல் ஒன்றும் அமெரிக்க ஜனநாயகம் பற்றி தீவிர ஐயங்களை எழுப்பவில்லை என்று நம்புவது பெரும் மெத்தனம் ஆகிவிடும்.

இதில் எந்தத் தவறுக்கும் இடமில்லை; ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் சார்பில் செனி பேசுகிறார்; இதற்கான ஆதரவு ஜனநாயக முறையின் பால் ஆழ்ந்த விரோதப் போக்குடைய இராணுவ, உளவுத்துறைக் கருவிகளின் கணிசமான பிரிவுகளில் இருந்து வருகின்றனது.

ஒபாமாவைப் பொறுத்தவரையில் அவருடைய நிலைப்பாடு ஆழ்ந்த, தீர்க்க முடியாத அரசியல் முரண்பாடுகளால் தாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் அவருடைய அழைப்பு குறைமதிப்பிற்கு உட்படுகிறது; ஏனெனில் அவருடைய நிர்வாகம் புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படை முன்கருத்துக்கள் மற்றும் அஸ்திவாரங்களை வினா எழுப்பாமல் எடுத்துக் கொண்டுள்ளது.

புஷ் நிர்வாகத்தின் சில நடவடிக்கைகளை எதிர்க்கையில், ஒபாமா இந்த குற்றங்கள் அனைத்தும் வெளிவந்த மைய அரசியல் பொய்யை அறைகூவலுக்கு உட்படுத்தாமல் இருப்பதில் கவனமாக உள்ளார்.

"அல் குவைதாா தீவிரமாக நம்மைத் தாக்க முயல்கிறது." இதே உரையில் ஒபாமா வியாழனன்று அறிவித்தார். "இந்த அச்சுறுத்தல் நீண்ட காலத்திற்கு நம்முடன் இருக்கும் என்பதை நாம் அறிவோம்; நம் சக்திகளை அனைத்துயையும் திரட்டி அதைத் தோற்கடிக்க வேண்டும்". உண்மையில் அவருடைய நிர்வாகம் மிக தொடர்ந்த உறுதிப்பாட்டில் இப்போரை நடத்துகிறது; "நம்மை 9/11 அன்று தாக்கிய தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் போரிடுகிறது." என்று ஒபாமா கூறினார்.

ஒபாமா கூறுவது உண்மை என்றால் --முந்தைய நிர்வாகம் "எதையும் செய்யலாம்" என்ற கொள்கைகையே ஏற்றிருந்தது எனபது-- பின் அதற்குப் பொறுப்பானவர்கள் அரசியல் குற்றவாளிகள் என்று குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாறாக, ஒபாமா அவர்கள் நடவடிக்கையை காக்கும் வகையில் ஒரு அரிய சிந்தனைப் போக்கைத் தொடர இவர்கள் கூடுதலான ஆர்வத்தைக் காட்டினர் என்று கூறியுள்ளார். "உறுதியற்ற அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில், நம் அரசாங்கம் பல அவசர முடிவுகளை எடுத்தது. இந்த முடிவுகள் அமெரிக்க மக்களைக் காக்க வேண்டும் என்ற நேர்மையான விருப்பத்தால் உந்துதல் பெற்று எடுக்கப்பட்டவை என்றுதான் நான் நம்புகிறேன்." என்று அவர் கூறினார்.

என கடந்த எட்டு ஆண்டுகளில் கொள்கைகள் பற்றி "மீண்டும் வழக்காடுதல்" என்பது இராது என்று ஒபாமா இரு முறை வலியுறுத்தியுள்ளார். ஒரு சுதந்திர குழு அமைப்பதை எதிர்த்த அவர் "கடந்த காலத்தின் மீது குவிப்பு காட்டும்" முயற்சி இருக்காது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

செனியைச் சுற்றி இருக்கும் சதிபுரிந்தவர்களுக்கு வக்காலத்து அளிக்கையில், ஒபாமா தொடக்கத்தில் இருந்து இவருடைய நிர்வாகத்தின் உள்ள கோழைத்தனம், முந்தையதை ஏற்றல் ஆகியவற்றைத்தான் தொடர்ந்து வருகிறார். ஒவ்வொரு சலுகையும் அரசாங்கத்தின் தீவிர வலதுசாரிப் பிரிவுகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளதுடன் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான சதிக்கும் ஆதரவு கொடுத்துள்ளது.

ஒபாமா இணங்கி நிற்றல், இடைவிடாமல் தாழ்ந்து போதல் என்பவை அவர் பிரதிபலிக்கும் வர்க்க நலன்களால் உருவாக்கப்படும் போக்குகள் ஆகும். புஷ் நிர்வாகத்தின் கொள்கை பற்றி ஒபாமாவின் குறைகூறல்கள் எப்படி இருந்தாலும், அதன் அடிப்படை நோக்கங்களை அவர் காக்கிறார். உள்நாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரையில், வங்கிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களுக்கு மாபெரும் பிணைத் தொகைகளை தொடர்ந்து கொடுக்கிறார். இராணுவக் கொள்கைகளை பொறுத்தவரையில், ஈராக் ஆக்கிரமிப்பைத் தொடர்கிறார்; அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் போரை விரிவாக்கம் செய்கிறார். சட்ட நெறிக்கான இவர் வாதம், இவருடைய நிர்வாகம் பழையபடி இராணுவக்குழுக்களை தொடக்கிவிட்டது, சிந்திரவதை புகைப்படங்களை வெளியிட மறுத்தல் மற்றும் பொதுவாக இவருக்கு முன்பு இருந்தவருடைய ஜனநாயக விரோதக் கொள்களைகளைத் தக்க வைத்தல் ஆகிய உண்மைகளினால் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது.

ஒபாமா அமெரிக்க ஜனநாயகம் அரிக்கப்பட்டுள்ளது பற்றி எத்தகைய சொற்கள் வழி எச்சரிக்கை கொடுத்தாலும், அவருடைய நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அதன் முறிவை வசதிப்படுத்தி, விரைவுபடுத்தும் தன்மையில்தான் உள்ளன. ஒரு ஏகாதிபத்திய போருடன் ஜனநாயகத்தை இணைப்பது இயலாத செயலாகும். பிந்தையது முந்தையதை எதிர்க்காமல் தப்பிப் பிழைக்க முடியாது.

செனியின் தாக்குதலில் இருக்கும் உண்மையான சமூக மற்றும் அரசியல் பொருளுரையை அம்பலப்படுத்த இயலாத நிலையில் ஒபாமா உள்ளார்; ஏனெனில் அவ்வாறு செய்வதற்கு "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" உந்துதல் கொடுத்த அரசியல் நோக்கங்கள் மற்றும் பிற்போக்குத்தன வர்க்க நலன்களையும் அம்பலப்படுத்துதல் தேவையாகிவிடும். மேலும், ஜனநாயக உரிமைகளைக் காக்க அமெரிக்க மக்களைத் திரட்டுவதற்கான முறையீடும் தேவைப்படும். ஆனால் நிதிய உயரடுக்கின் நலன்களைக் காக்கும் உள்நாட்டுக் கொள்கைகளை தொடரும் நிர்வாகம் இருக்கும்போது, ஒபாமா நிர்வாகம் அத்தகைய மக்கள் அதிருப்திக்கு ஊக்கம் கொடுக்கவும் விரும்பவில்லை.

ஜனநாயக உரிமைகளில் பாதுகாப்பு ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவினாலும் நடத்தப்படாது. அமெரிக்க ஜனநாயகத்தின் அமைப்புக்கள் ஏற்கனவே மிக அதிக சீரழிவான தன்மையில் உள்ளன.

ஜனநாயக உரிமைகளைக் காத்தல் என்பது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அமைப்பை நிறுவுதலில்தான் தங்கியுள்ளது.