World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Neo-Nazis attack May Day demonstration in Dortmund

நவ நாஜிக்கள் டோர்ட்முண்ட் மே தின ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல் நடத்தினர்

By our correspondent
9 May 2009

Use this version to print | Send feedback

ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) ஏற்பாடு செய்திருந்த மே தினப் பேரணி மே 1 அன்று பழைய யூத தேவாலய கட்டிடத்தின் முன் தொடங்கி வெஸ்ட்பாலியா பூங்காவை நோக்கி செல்லப் புறப்பட்ட வேளையில் சுமார் 300 நவ நாஜிக்கள் அதன் மீது தாக்குதல் நடத்தினர்.

சுமார் 40 வலதுசாரிகள் பிரதான புகையிரத நிலையத்தில் 9 மணிக்கு வந்து சேர்ந்திருந்து, பேருந்துகளின் மூலம் வந்து சேருவோருக்காக அங்கு காத்திருந்தனர். ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டோர்ட்முண்ட் நகரில் இருந்து சுமார் 100 கிமீ தென்கிழக்கில் அமைந்திருக்கும் சீகன் நகருக்கு தாங்கள் செல்ல விருப்பதாக வலதுசாரி காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர்.

ஆயினும், நாஜிக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பிய சுமார் 30 பாசிச விரோத தொண்டர்கள் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூடுதலாய் கவனம் செலுத்தியிருந்தது தெரிந்தது.

மே 1 க்கு முன்னதாகவே பல வலதுசாரி இணையத்தளங்கள் "ஊக்கம்மிக்க" மற்றும் "பரவலான நடவடிக்கைகளுக்கும்", தனது ஆதரவாளர்கள் "பிற ஊர்வலங்களுக்கு சென்று பார்வையிடவேண்டும்" (இது தெளிவாக (DGB) ஊர்வலங்களினையே குறித்தது) என்றும் அழைப்பு விடுத்திருந்த போதிலும் சீகனில்தான் பிரதான போலிஸ் பிரசன்னம் காணப்பட்டதுடன், டோர்ட்முண்டில் குறைவான அளவில் தான் இருந்தது.

எவ்வாறிருந்துபோதிலும், சீகனுக்கு ரயில் வழி பயணம் செய்வதற்குப் பதிலாக, இப்போது சுமார் 300 என்கிற எண்ணிக்கைக்கு வளர்ந்து விட்டிருந்த நவநாஜிக்களின் கூட்டம், 11 மணிக்கு DGB ஊர்வலத்தை நோக்கி கிளம்பியது. வார்ட்பேர்க்கில் இருந்து இரண்டு பேருந்துகளும் மின்டெனில் இருந்து ஒரு பேருந்தும் வந்து சேர்ந்திருந்ததை அடுத்து அவர்களின் எண்ணிக்கை பெருத்திருந்தது. போலிசாரால் எச்சரிக்கப்பட்ட டோர்ட்முண்ட் DGB இன் மாவட்ட தலைவரான எபகார்டு வேபர், உடனே வெல்ஸ்ட்பாலியா பூங்காவை நோக்கி தொழிற்சங்க ஊர்வலம் துவங்குவதற்கு சகிக்கையை செய்தார், அங்கு தான் ஒவ்வொரு மே தினத்திலும் DGB இன் குடும்பவிழா நிகழ்ச்சி நடைபெறும்.

ஆயினும், நகர்ப்புற போக்குவரத்தை பயன்படுத்தி நவநாஜிக்கள் DGB பேரணி வந்து சேரும் முன்பே பூங்காவிற்கு வந்து சேர்ந்தனர். கம்புகள், வெடிகள், கற்கள் மற்றும் கண்ணாடித் துண்டுகள் கொண்ட மண் உருண்டைகளுடன் வந்த நாஜி ரவுடிகள் ஊர்வலத்தின் இறுதியில் வந்து கொண்டிருந்த குர்திஸ்கள் மற்றும் துருக்கியர்களின் ஒரு பிரிவைத் தாக்கினர். இதில் சில காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் காயமுற்றனர். குண்டு போல் ஒரு பொருள் வந்து தாக்கியதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் படுகாயமுற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

DGB ஊர்வலத்தினர் தங்களை பாதுகாத்துக் கொள்ள முற்பட்டனர். போதுமான அளவு தயார்நிலையில் இல்லாத அங்கிருந்த குறைந்த எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகள் இரண்டு குழுவினரையும் பிரித்து விட முயன்றனர். DGB ஊர்வலக்காரல்களில் சிலரை போலிசார் முழு காட்டுமிராண்டித்தனத்துடன் கையாண்டனர். ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களில் இது தெளிவுற வெளிப்படுகிறது, அத்துடன் ஒரு ஒளிப்பதிவிலும். தரையில் வீழ்ந்திருக்கும் ஒரு துருக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களின் தலையில் ஒரு போலிஸ்காரர் முழு கலக சூழ்நிலை வேகத்துடன் தலையில் ஓங்கி உதைப்பதை இந்த ஒளிநாடா காட்டுகிறது.

DGB ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியவர்களில் ''SS-Siggi" (Siegfried Borchardt) எனப்படுபவரும் இருந்தார் என்று பார்த்தவர்கள் சாட்சியம் கூறுகின்றனர். (http://www.wdr.de/mediathek/html/regional/2009/05/02/lokalzeit-dortmund-rechte.xml இல் பதிவுகளை காணலாம்) இவர் இதற்கு முன்னரே பலமுறை குற்றம் சாட்டப்பட்டிருப்பவரும், 1970கள் முதல் நவநாஜி மத்தியில் தீவிரமாக இயங்கி வருபவருமான ஒரு நபராவார்.

டோர்ட்முண்ட் போலிசார் ரூவரின் பிற நகரங்களில் இருந்து படைப்பிரிவுகளை கோரினர், ஆனால் அவை பின்னர் தான் வந்து சேர்ந்தன. போலிசார் செய்திகளின் படி, அதிகாரிகள் தாக்கியவர்களுக்கு எதிராக தடியடி பிரயோகம் செய்து அவர்களை பின்வாங்க செய்தனர். சுமார் 150 நாஜிக்கள் பாதசாரி பகுதியருகில் கைது செய்யப்பட்டனர், இன்னுமொரு 40 பேர் ரெய்னோல்டி தேவாலயம் அருகே கைது செய்யப்பட்டனர். இது தவிர, போலிசார் அணிவகுத்து நடத்திய 'சுற்றிவளைத்தல்' நடவடிக்கையில் DGB ஊர்வலக்காரர்களில் ஒரு பகுதியினரும் உள்ளடங்கினர்.

டோர்ட்முண்டில் முன்பு பாசிச-எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதைக்கு நேர்மாறாக, கைது செய்யப்பட்ட நவநாஜிக்களை போலிசார் மரியாதையுடன் கையாண்டனர். போலிசார் பாதுகாப்பின் கீழ், அவர்கள் கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர், சிறார்களும் கர்ப்பிணிப் பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களது தகவல்களை போலிசாருக்கு தெரிவித்த பின்னர் விடுவிக்கப்பட்டனர். சுமார் 280 வலதுசாரிகள் மொத்தத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர், இவர்கள் அமைதி குலைப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்.

அதே நாளில் பின்னர் நடத்த திட்டமிடப்பட்ட எதிர்-ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டது. "அவசரகால நிலை" அறிவிக்கப்படும் என்று போலிசார் எச்சரித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்குப் பதிலாக ஒரு கூட்டத்தினை நடத்தினர். ஆயினும் பங்குபெற வந்து சேர்ந்திருந்த நாஜி-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து தடுக்கப்பட்டனர்.

DGB ஊர்வலத்தின் மீதான தாக்குதலை நேரில் கண்டிருந்த டோர்ட்முண்ட் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தலைவரான பிரன்ஸ் ஜோசப் டிராபிக் "வலதுசாரி தீவிரவாதிகளின் முரட்டுத்தனத்தால் நான் கடும் கோபமுற்றேன். அங்கிருந்த குறைந்த எண்ணிக்கையிலான போலிசார் மீது ஒருவர் குற்றம் காண முடியாது. அவர்களே இந்த தாக்குதல் கண்டு அதிர்ச்சியுற்றனர். ஆனால் நான் எனக்கே கேட்டுக் கொள்வது எல்லாம், எப்படி இத்தகையதொரு நாஜிக்கள் கூட்டம் போலிசார் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் கண்களில் சிக்காமல் இருக்க முடியும் என்பது தான்". எனகூறினார். டோர்ட்முண்டின் மாவட்ட DGB தலைவரான வெபரும் போதுமான போலிசார் இல்லாமல் போனதாக ஆதங்கம் வெளியிட்டார். "இது தெளிவுபட்ட சூழ்நிலை. இந்த பிராந்தியமே முரட்டுத்தனமான நவநாஜிக்களின் பாரிய பிரச்சினையைக் கொண்டுள்ளது. நாம் வினவுகிற கேள்வி எல்லாம் அரசாங்க பாதுகாப்பு படைகள் டோர்ட்முண்டில் என்ன அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன என்பது தான்" என்றார்.

இது உண்மையில் எழுப்பப்பட வேண்டிய ஒரு கேள்வியே. அதீத-வலதுகளின் உள்ளே பல உளவுத்துறை முகவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மையைக் கொண்டு பார்த்தால், என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்று சொல்வது விந்தையாகத் தோன்றுகிறது. குறிப்பாக சில வருட காலமாகவே டோர்ட்முண்டையும் ரூவர் பகுதியையும் தங்களது நடவடிக்கைகளுக்கான மையமாக மாற்ற நாஜிக்கள் முயன்று கொண்டிருக்கையில், அவர்கள் போலிசாரையும் உளவுத்துறையினரையும் இத்தகைய பெரும் வகையில் குழப்ப முடிந்தது என்பது கொஞ்சமும் நம்பத்தகுந்ததாய் இல்லை.

சமீபத்தில், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா பகுதியின் உளவுத்துறையினர் டோர்ட்முண்ட் பிராந்தியம் சில தேசியவாத குழுக்களின் அதீத போராளித்துவத்திற்கு ஆட்படுகிற வகையில் இருக்கிறது என்றும், இந்த குழுக்கள் தங்களை (தோற்றத்திலும் கூட) "இடது" அராஜகவாதிகள்(anarchists) வடிவப்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் எச்சரித்திருந்தனர். வலது-சாரி வன்முறை அதிகரிக்க இருக்கிறது என்பது சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது.

டோர்ட்முண்ட் நிகழ்வுகள் தனிமைப்பட்டவை அல்ல. ஜேர்மனியின் பல நகரங்களில் இந்த ஆண்டில், மே 1 ஐ தங்களது சொந்த பரப்புரை நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியை நவநாஜிக்கள் அதிகப்படுத்தியிருக்கிறார்கள். உல்ம், ரோடன்பர்க், மெய்ன்ஸ் மற்றும் பேர்லின் நகரங்களில், போலிசாருக்கும் வலதுசாரி எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பெரும் வன்முறை மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன.

"சுயாட்சி தேசியவாத" நடவடிக்கைகளின் வளர்ச்சியைக் கொண்டு பார்த்தால், எந்த மட்டத்திற்கு நாஜிக்கள் அல்லது அவர்களுள் இருக்கும் உளவுத்துறை அதிகாரிகளின் பங்களிப்பு பேர்லின் மற்றும் ஹேம்பர்கின் இந்த "இடது-சாரி கலகங்களில்" இருக்கும் என்பதை ஸ்தாபிப்பது கடினம்.

இந்த ஆண்டின் மே தின நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஸ்தாபனமான கட்சிகளும் ஊடகங்களும் அரசாங்க தலையீட்டை அதிகரிக்கவும், கொண்டாட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்யவும் கோருகின்றன. டோர்ட்முண்ட் காவல்துறை தலைவரான ஹேன்ஸ் ஸ்கல்ஸ் கூறும்போது, ஊர்வலங்களின் மீதான வலதுசாரியினரின் தாக்குதலைத் தொடர்ந்து, "நாஜிக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான ஒரு மறு மதிப்பீடு" செய்யப்படவிருக்கிறது என்றும் அவை தடை செய்யப்படலாம் என்றும் தெரிவித்தார். இப்போது வரை, மேல்நீதி மன்றம் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கே முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது, வெகு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே நாஜி பேரணிகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த விஷயத்தில், ஹனோவர் நகரில் நாஜி ஊர்வலத்தை தடைசெய்ததற்கு கூறப்பட்ட காரணங்களைப் பார்ப்பது முக்கியமானதாகும். இந்த சுயாட்சி தேசியவாதிகள் எனப்படுவதின் அதிகமான பேர் பங்கேற்கலாம் என்று கருதப்படுவதால் அது ஊர்வலத்தை வன்முறைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்கிற காரணமே போதுமானதாகும் என்று கீழ்நிலை சக்சோனி நிர்வாக நீதிமன்றம் கூறியது. வலதுசாரி ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்தால் கூட, பதில்-ஆர்ப்பாட்டம் நடந்து வன்முறைக்கு வித்திடலாம், இது போலிசாரை ஒரு "அவசர நிலை" அறிவிப்பு சூழலுக்கு தள்ளலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எதிர்வருங்காலத்தில் எந்த ஒரு கூட்டம் அல்லது ஊர்வலத்தையும் தடை செய்வதற்கு இத்தகைய காரணங்களை அதிகாரிகள் எளிதில் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்பதோடு, கருத்துரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை முற்றிலும் தடை செய்வதற்கும் வசதி செய்யும்.

டோர்ட்முண்டில் நாஜிக்களுக்கு எதிரான பதில் ஆர்ப்பாட்டத்தை தடை செய்வதற்கு ஒரு நீதிபதியும் கூட அவசியப்படவில்லை. "ஒரு காவல்துறை அவசரகாலநிலையை" தாங்கள் எதிர்கொண்டிருப்பதாக போலிசார் அறிவித்ததே போதுமானதாக இருந்தது, இந்த முடிவும் பாதுகாப்பு பிரிவினர் போதியளவு தயார் நிலையில் இருந்த அளவைப் பார்த்த போது நியாயப்பட்டதாக இல்லை.

இந்த நிகழ்வுகள் எல்லாம் தவறாக வழிநடத்தப்பட்ட இளம் "இடதுசாரி" அராஜகவாதிகள் அல்லது நாஜிக்களால் நிகழ்ந்ததா என்பதைப் பற்றியெல்லாம் கவலை எதுவுமின்றி, மே 1 அன்றான வன்முறை நிகழ்வுகளுக்கு அரசியல் மற்றும் தொழிற்சங்க மேல்தட்டினர் மற்றும் ஊடகங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய எதிர்வினைகளும், அரசாங்கம் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்டிருக்கும் அழைப்புகளும் மிகத் தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த ஆண்டு மே தினத்தில் "வலது மற்றும் இடது-சாரி வன்முறை" குறித்தான பத்திரிகை செய்திகளை படிக்கும்போதும், தீவிரமடையும் பொருளாதார சூழ்நிலை காரணமாக "சமூக பதற்ற" அபாயம் குறித்து சில அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் தொடர்ந்து எச்சரிப்பதை கேட்கும் போதும் இத்தகையதொரு பரப்புரைக்கான நோக்கங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகள், அவற்றை தீர்ப்பதற்கு சாதாரண உழைக்கும் மக்களின் முதுகில் சுமைகளைத் திணிப்பது ஆகியவற்றை மனதில் கொண்டு, இது வெகுஜன மக்களிடையே கோபத்தையும் பதட்ட நிலை அபாயத்தையும் ஏற்படுத்தும் என்று சமூக ஜனநாயககட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹெசின ஸ்வான் மற்றும் DGB தலைவரான மைக்கேல் சோமர் ஆகியோர் எச்சரிக்கத் துணிந்தபோது, அதிர்சியுடன் ஊடகங்கள் அலறின. ஆளும் வட்டாரங்கள் சூழ்நிலையின் வெடிப்பு தன்மை குறித்து மிகவும் நனவுடன் இருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. தங்களது அமைப்பை பாதுகாக்கவும் உழைக்கும் மக்களின் நியாயமான எதிர்ப்பை அடக்கி ஒடுக்கவும் அவசியமான அடக்குமுறை கருவிகளை கூர்தீட்டுவதற்கான அவசியத்தை அவை தெளிவுறக் காண்கின்றன. நவநாஜிக்களின் நடவடிக்கைகள் அதற்கான ஒரு நல்ல சாக்கினை அவர்களுக்கு வழங்குகின்றன.