World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The lies of the CIA and Nancy Pelosi

சி ஐ ஏ இன் பொய்களும் நான்ஸி பெலோசியும்

By Bill Van Auken
16 May 2009

Back to screen version

மன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர் நான்ஸி பெலோசி 2002 சித்திரவதை பற்றி CIA தன்னிடத்தில் பொய்கள் கூறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்; இது CIA யினால் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெலோசியும் ஜனநாயகக் கட்சியினரும் வாடிக்கையாக அமெரிக்க மக்களுக்கு புஷ் நிர்வாகத்தின் குற்றங்களில் தாங்கள் உடந்தையாக இருந்ததை மறைக்க பொய்கூறி வந்தனர் என்பது உறுதி.

பெலோசி வியாழனன்று காபிடல் ஹில்லில் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி, CIA தனக்கு என்ன கூறியது, சித்திரவதை பற்றி தனக்கு என்ன தெரியும் என்ற புதிரை விளக்க முயற்சித்தார்.

கடந்த வாரம் வெளிவந்த CIA அறிக்கை ஒன்று செப்டம்பர் 2002ல் அது கொடுத்த தகவலில் அந்த அமைப்பு சித்திரவதை வகைகளை, நீர் மூழ்கல் உட்பட விளக்கியதாகவும் பெலோசி மற்றும் குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் போர்ட்டர் கோசிடமும், அவை Abu Zubaydah க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அக்காலக்கட்டத்திற்குள்ளேயே அவர் குறைந்தது 83 தடவை "நீர்மூழ்கலுக்கு" உட்பட்டார் என்றும் தெரிவித்தது.

CIA தனக்கு 2002ம் ஆண்டு கொடுத்த தகவலில் ஏதும் கூறவில்லை என்பதால் சித்திரவதை பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்ற தோற்றத்தை பெலோசி கொடுத்திருந்தாலும், பெப்ருவரி 2003 லும் நீர்மூழ்கல் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது பற்றி அவர் கூறப்பட்டார் என்பது வெளிப்பட்டுள்ளது; அவரிடம் அவருடைய மூத்த உதவியாளர் பின்னர் கொடுக்கப்பட்ட தகவல்படி தெரிவித்திருந்தார்.

தன்னுடைய செய்தியாளர் கூட்டத்தில் மன்றத் தலைவர் 2002 ல் தனக்கு கொடுக்கப்பட்ட தகவலில் நீதித்துறை நீரில் மூழ்கவைத்தல் மற்றும் பிற "விரிவாக்கப்பட்ட விசாரணை உத்திகள்" சட்டபூர்வம் என்று வாதிட்டு குறிப்புக்கள் கொடுத்துள்ளதாகவும், ஆனால் "இவை பயன்படுத்தப்படவில்லை" என்று CIA தெரிவித்ததாகவும் கூறினார்.

CIA சந்தேகத்திற்கு உரியவர்களை சித்திரவதை செய்கிறது என்பது பற்றி பெப்ருவரி 2003ல் தெரிவிக்கப்பட்ட பின்னர் தான் ஏதும் செய்யவில்லை என்பதையும் பெலோசி ஒப்புக் கொண்டார்: மன்ற உளவுத் துறைக்குழுத் தலைவர், இவருக்குப் பின் வந்த மூத்த ஜனநாயகக் கட்சித் தலைவரான காங்கிரஸ் உறுப்பினர் ஜேன் ஹார்மனுக்கு அப்பணியை விட்டுவிட்டதாகவும் அவர் அமைப்பிற்கு "கவலைகளைத் தெரிவித்து" ஒரு கடிதம் எழுதினார் என்றும் பெலோசி கூறினார்.

இவர் கூறும் முழுக் கதையும் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. இவர் கூறுவது உண்மை என்று வைத்துக் கொண்டாலும், 2002ல் CIA இவரிடம் Zubaydah வை சித்திரவதை செய்தது பற்றி கூறவில்லை என்றாலும், புஷ் நிர்வாகம் அவற்றை பயன்படுத்தப் போவதில்லை என்பதால் நீதித்துறை குறிப்புக்களை வெளியிட்டு சித்திரவதை வழிவகைகளையும் விளக்கி, நியாயப்படுத்தியது என்று இவர் நம்புகிறாரா என்ன?

மற்றொரு போலிக் காரணத்தையும் பெலோசி முன்வைத்துள்ளார்: "இரகசியத் தகவல் பற்றி கூறப்படும் பிற காங்கிரஸ் உறுப்பினர்களைப் போலவே, நானும் அத்தகவல்களை பற்றி வெளியே கூறமாட்டேன் என்று உறுதி மொழிகளில் கையெழுத்திட்டுள்ளேன். இந்தப் பிரமாணத்தை நான் தீவிரமாகக் கருதுகிறேன்; எப்பொழுதும் அதை நிறைவேற்றுவேன்."

காங்கிரசின் பிற உறுப்பினர்களைப் போல் இவரும் பதவிப் பிரமாணத்தை "அமெரிக்க அரசியலமைப்பிற்கு ஆதரவு கொடுத்துக் காப்பேன்" என்று எடுத்துள்ளார்; ஆனால் அந்த உறுதிமொழி உலகம் முழுவதும் கொலைகார நிறுவனம் என்று அறியப்பட்டுள்ள ஒரு அமைப்பின் இரகசியத்தைக் காப்பதற்கு பின்புற இருக்கைகளுக்கு சென்று விட்டது போலும். 2003 ல் சித்திரவதை பற்றி உண்மையிலேயே அதை எதிர்த்திருந்தால் அதைக் கண்டிப்பதை அந்த உறுதிமொழி ஒன்றும் நிறுத்தியிருக்காது.

1971ல் செனட்டில் அலாஸ்கா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் மைக் கிரேவல், வியட்நாம் போர் எதிர்ப்பாளர், செனட் மன்றத்தில் பென்டகன் அறிக்கைகள் என அழைக்கப்பட்டவை மன்றத்தில் பதிவிற்கு வரவேண்டும் என்பதற்காக அவற்றைப் பற்றிக் கூறினார்; அவை போர் பற்றிய இரகசிய ஆவணங்களின் தொகுப்பு ஆகும்; நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் அவற்றை வெளியிடக்கூடாது என்று நீதித் துறை நீதிமன்றத்தில் தடுப்பு உத்திரவை வாங்கியிருந்தது. ஆனால் கிரேவல் அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள ஒரு விதி, அதாவது சட்ட மன்ற உறுப்பினர்கள் கீழ் பிரிவிலோ செனட்டிலோ என்ன கூறினாலும் அதற்காக கைது செய்யப்பட முடியாது என்பதை ஒட்டி அத்தகவலை வெளியிட்டார்.

இந்த அரசியலமைப்பு சலுகையைப் பயன்படுத்தலாம் என்று பெலோசிக்கு தோன்றியிருக்காது; ஏனெனில் அவர் ஒன்றும் சித்திரவதையை எதிர்க்கவில்லை. அவர் எடுத்துக் கொண்ட பிரமாணம் ஒன்றும் அவரை பேசாமல் இருக்கச் செய்யவில்லை, அவருடைய வர்க்க நிலைதான் அவ்வாறு செய்துள்ளது. காங்கிரசின் இரு மன்றங்களிலும் இருக்கும் வசதி, வாய்ப்புக்கள் பெருகிய நிலையில் உள்ள உறுப்பினர்களைப் போலவே, அவர் CIA க்கு ஆதரவு கொடுகிறார்; ஏனெனில் அமைப்பின் படுகொலைகள், சித்திரவதைகள், கடத்தல்கள் இன்னும் மற்ற குற்றங்கள் அமெரிககாவின் ஆளும் நிதிய தன்னலக்குழுவின் நலன்களைக் காப்பதற்காக செயல்படுத்தப்படுகின்றன.

இதுதான் செய்தியாளர் கூட்டத்தில் CIA தன்னிடம் பொய்கூறியது, "அவர்கள் எப்பொழுதும் எங்களிடம் தவறான தகவல்களைக் கொடுத்தனர்" என்று அவர் அறிக்கையில் இருப்பதை மிகவும் முக்கியத்துவம் பெறச் செய்துள்ளது. புஷ் நிர்வாகத்தின் சித்தரவதை சான்றுகள் பற்றி ஓரளவு ஒபாமா நிர்வாகம் வெளியிட்டு, பின் "முன்னேறுவோம்" என்ற முயற்சி எந்த அளவிற்கு ஜனநாயகக் கட்சியினரை ஒரு நெருக்கடியில் தள்ளி அரசாங்கக் கருவிகளுக்குள்ளேயே இருக்கும் கடுமையான உட்போராட்டங்கள் வெளிவந்துள்ளன என்பதைக் காட்டுகிறது.

பெலோசியின் அறிக்கை CIA இயக்குனராக ஒபாமாவால் நியமிக்கப்பட்டுள்ள லியோன் பனேட்டாவிடம் இருந்து ஒரு கடுமையான குறிப்பு வெளிவரத் தூண்டியது.

"விசாரணை பற்றிய அரசியல் விவாதங்கள் நேற்று காங்கிரஸிற்கு CIA தவறான கருத்தைக் கூறியது என்ற குற்றச் சாட்டு வெளிவந்த போது புதிய உரத்த குரல் அளவை அடைந்தன. அபு ஜுபய்தா பற்றி விசாரணையைப் பற்றி CIA அதிகாரிகள் உண்மையைத்தான் கூறியிருந்தனர். காங்கிரஸை தவறாக வழிநடத்தும் கொள்கையோ நடைமுறையோ எங்களுக்குக் கிடையாது. அது எங்கள் சட்டங்கள் மற்றும் மதிப்புக்கள் ஆகியவற்றிற்கு எதிரானவை ஆகும்."

வேறுவிதமாகக் கூறினால், CIA இன் ஜனநாயக்கட்சித் தலைவர் புஷ் நிர்வாகத்தால் நடத்தப்பட்ட செயல்களைக் காத்து, பிரதிநிதிகள் மன்றத்தின் ஜனநாயகத் தலைவரை ஒரு பொய் கூறுபவர் என்கிறார். CIA மற்றும் தேசியப் பாதுகாப்பு நடைமுறையும் அரசாங்கத்திற்குள் அராசாங்கமாக எவருக்கும் விடையிறுக்க தேவையில்லை என்ற முறையில் கொண்டிருக்கும் பங்கை இதைவிடத் தெளிவாக வேறு எதுவும் அம்பலப்படுத்த முடியாது.

இதன் அதிகாரம் புஷ்ஷினால் தொடக்கப்பட்டு ஒபாமாவால் தொடரப்படும் இரு போர்களினால் வலுவடைந்துள்ளது; அதைத்தவிர நாட்டுப்பற்று சட்டத்தில் இருந்து உள்நாட்டில் தொலைபேசி ஒட்டுக்கேட்டல், சட்டவிரோத காவல்கள், கட்டைப் பஞ்சாயத்து இராணுவக் குழுக்கள் ஆகியவை ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன்சட்ட நெறிக்கு உட்படுத்தப்பட்டவையும் அதை வலுப்படுத்தியது.

வலதுசாரி குடியரசுக் கட்சியை இவ்வித ஆதாரம்தான் தைரியப்படுத்தியுள்ளது; அது சிந்திரவதை பற்றி பெலோசி மாறிமாறிக் கொடுக்கும் தகவல்களைப் பயன்படுத்தி வாஷிங்டனில் எவருக்கும் கறைபடியாத கைகள் இல்லை, சித்திரவதை, புஷ் நிர்வாகத்தின் மற்ற குற்றங்கள் பற்றிய எந்த உண்மையான விசாரணையும் ஜனநாயகக் கட்சியினரையும் இழுத்துவிடும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளது.

இந்தக் கருத்து உண்மைதான்; ஆனால் இக்குற்றங்கள் குடியரசுக் கட்சியின் இழிந்த அரசியலின் விளைவு மட்டும் ஆல்ல, முதலாளித்துவ நெருக்கடி மற்றும் சமூகச் சமத்துவமின்மை முன்னோடியில்லாத வகையில் பெருகிய அழுத்தத்தினால் விளைந்த அமெரிக்க ஜனநாயகத்தின் ஆழ்ந்த இழிசரிவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஜனநாயகக் கட்சியும் ஒபாமா நிர்வாகமும் முற்றிலும் சமரசத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெளிவு; இவர்களும் உடந்தையாக இருந்த குற்றங்கள பற்றி எந்த விசாரணை பொறுப்பும் இவர்களிடம் ஒப்படைக்கப்பட முடியாது. காங்கிரஸ் விசாரணைகள் எவையாயினும், நீல ரிப்பன் குழு அல்லது பெலொசி கூறும் "உண்மையறியும் குழு" ஆகியவை வெள்ளைப்பூச்சாகத்தான் போகும்.

இது ஏற்க முடியாதது ஆகும். சித்தரைவதை, ஆக்கிரமிப்புப் போர்கள் மற்றும் கடந்த எட்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட மற்ற குற்றங்கள் பற்றிய விசாரணை மற்றும் குற்றச் சாட்டைத் தொடருதல் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கும் சமூகத்தின் அற நலன்களைக் காப்பதற்கும் மிகவும் முக்கியமானவையாகும். இவை விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படாவிடில் இக்குற்றங்கள் தொடரும் என்பதுடன் அமெரிக்காவிலேயே தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு எதிராக பெருகிய முறையில் மாறும்.

இக்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள், அவற்றில் பங்கு பெற்றவர்கள் மற்றும் அவற்றை மூடிமறைத்தவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வைப்பதற்கான போராட்டம் சோசலிச இயக்கத்திற்கான தங்கள் சொந்த வெகுஜன அரசியல் இயக்கம் நடத்தத் தொழிலாளர்களே ஈடுபடுவதின் மூலம்தான் தீவிரமாக செயல்படுத்தப்பட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved