World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Caterpillar withdraws offer to reduce redundancies

பிரான்ஸ்: வேலை இழப்புக்களை குறைக்கும் திட்டத்தை கட்டர்பில்லர் திரும்பப் பெறுகிறது

By Antoine Lerougetel
15 May 2009

Back to screen version

திங்களன்று Grenoble இல் உள்ள Préfecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) அரசாங்க அலுவலகங்களில் தொழிற்சங்கங்களுடனான பணிக்குழுக்கூட்டத்தில் கட்டர்பில்லர் பிரான்ஸின் அதிகாரிகள் பணிநீக்கங்கள் மீதான பேச்சுவார்த்தைகளுக்கும் முன்பு, "வேலைகளை தடுத்ததற்கு" என்று 19 தொழிலாளர்களுக்கு எதிரான குற்றச் சாட்டு திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தனர். இதன் விளைவாக தொழிலாளர்களின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

"வேலைகளை தடுத்தல்" என்பது கடந்த மூன்று மாதங்களாக தங்களது வேலைகள், பணிநிலைமைகள் ஆகியவற்றைக் காக்க எடுத்த நடவடிக்கைகளை குறிக்கிறது: அவர்கள் தங்கள் பணியிடங்களை ஆக்கிரமித்தது, தங்கள் நிர்வாகிகளைப் பிடித்து வைத்தது மற்றும் ஆலை நுழைவாயிலை தடுத்து மூடியது ஆகியனவாகும்.

தொழில்துறை சட்டத்தின்படி, தொழிற்சங்க பிரதிநிதிகள் நியாயமற்ற முறையில் பணிநீக்கத் திட்டங்களை சட்டம் என நெறிப்படுத்தும் அமைப்பான பணிக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தால், அதையொட்டி நிர்வாகம் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் முடிவுகளை எடுத்துவிட முடியும்.

கோபமுற்றிருக்கும் கட்டர்பில்லர் தொழிலாளர்களின் "அச்சுறுத்தலுக்கு" ஆளாகியுள்ளனர் என்று விளக்கி, "தீவிர, தவிர்க்கமுடியாத ஆபத்து அவர்களுடைய உடல்நலத்திற்கு" இருப்பதால் தொழிற்சங்கத்தினர் தொழில்துறை சட்டத்தின்கீழ் தங்களின் "திரும்பப் பெறும் உரிமையை" வேண்டிக் கேட்கின்றனர்.

நிர்வாகம் உடனடியாக திட்டமிட்ட 733ல் இருந்து 600 பேரை அனுப்பவது என்பதை திரும்பப் பெறுவதாக அறிவித்தது --இந்த எண்ணிக்கை எஞ்சியுள்ள 2,000 தொழிலாளர்களை தீவிரமாகச் சுரண்டுவதற்கு ஈடாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது; இதற்கு பணி நேரம் ஆண்டுக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஏப்ரல் 19ம் தேதி பாரிசில் தொழிற்சங்கங்கள், நிர்வாகம், அரசாங்க அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தில் இத்தகைய திட்டம் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. மறுநாள் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன்பாட்டிற்கு வந்தபோது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அதை நிராகரித்தனர்; பின்னர் மே 6ம் தேதி முழுத் தொழிலாளர் தொகுப்பும் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்துவிட்டது.

தான் கொடுத்த வாக்கை கட்டர்பில்லர் திரும்பப் பெற்றுக் கொண்டது, பெப்ருவரியில் இருந்து நிர்வாகம் நடத்திய நீண்ட நாடகத்தின் இறுதி சோகக் காட்சியாகும்; உலக மந்த நிலையினால் வேலைகள் தீவிரமாக குறைந்தபோது, நிர்வாகம் 733 வேலைகளை Grenoble ல் அகற்றுவது என்ற முடிவிற்கு வந்தது. கூட்டு தொழிற்சங்கக் குழு கட்டர்பில்லரின் முடிவிற்கு எதிரான ஒரு திட்டத்தை கொடுத்து 450 வேலை இழப்புக்கள் மட்டும் போதும் என்றது.

CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானது) உடைய பிரதிநிதி பாட்ரிக் கோஹன் செய்தி ஊடகத்திடம் திங்களன்று கூட்டத்தை விட்டு புறப்படுகையில் கூறினார்: "தான் தொடக்கத்தில் இருந்து கூறியதை நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ளுகிறது. ஆரம்பத்தில் இருந்தே பேச்சுவார்த்தைகளை அது விரும்பவில்லை, ஆனால் அதன் வழியாக செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைத்தான் கொண்டிருந்தது."

மே 11ம் தேதி, ராய்ட்டர்ஸ் அறிவித்தது: "தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் இத்தகைய அறிவிப்பை எதிர்கொள்கையில் செயலற்றது போல் விளங்கின. CGT பிரதிநிதி நிக்கோலோ பெனுவா, ஏப்ரல் 19 அன்று பாரிசில் முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டவர், "இந்த முடிவு உறுதியாகவும் இறுதியாகவும் இருக்கும். நிர்வாகம் மட்டும்தான் இத்திட்டமான 733 தொழிலாளர்களை நீக்குவதற்கு பொறுப்பு ஆகும். மூன்று மாதங்களில் சற்றும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கவில்லை, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை" என்றார்.

மற்றொரு CGT பிரதிநிதியான பாட்ரிக் கோஹென் நிர்வாகத்தின் கவிழ்ப்புத் திட்டத்தினால் "பெரும் வேதனை அடைந்துவிட்டதாக" கூறி, கூட்டு தொழிற்சங்கக் குழு சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசிக்கும் என்றார்.

நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் மத்தியஸ்தாராக இருக்கும் என்பதை நம்பியிருந்த தொழிற்சங்கங்களின் தோல்வியுற்ற மூலோபாயம், தங்கள் அமெரிக்க முதலாளிகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் அரசாங்க நிறுவனங்களில் அரசாங்க அதிகாரிகளின் பார்வையின்கீழ் நடத்தப்பெறுவதில் முழு உருவகத்தை அடைந்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி கூடுதல் நன்மை தரக்கூடிய பிரிவு நிலைமகளுக்காக தங்கள் ஆலை உயரதிகாரிகளை அலுவலகத்தின் தடுத்து நிறுத்தி வைத்த கட்டர்பில்லர் தொழிற்சங்கத் தலைவர்கள், ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி, நிறுவனத்திற்கு கிடைப்பதற்கும் அதையொட்டி அது Grenoble ஆலைகளில் உற்பத்தியை தக்க வைக்கவும் "உறுதி மொழி கொடுக்கும் முறையீட்டை" எழுதியுள்ளனர்.

அவைகளே ஒப்புக் கொண்டுள்ளபடி, தொழிற்சங்கங்கள் கட்டர்பில்லரில் அனைத்து வேலைகளும் காக்கப்படுவதற்கு ஒன்றும் போராடவில்லை. பொதுவாக தொழிற்சங்கங்கள் அரசாங்கம் மற்றும் நிர்வாகங்களின் ஒருங்கிணைந்த பகுதிகளாக மாறிவிட்டன; தங்கள் நிறுவனங்கள் மற்றும் தேசிய முதலாளித்துவத்தை காக்கும் அடிப்படையில்தான் வேலைகள், நிலைமகள் "காக்கப்படலாம்" என்ற கருத்தில் உள்ளன.

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் ஆலைகள் மூடல், வெளியேற்றங்கள், பணிநீக்கங்கள், குறைந்த பணி நேரம் என்று தகவல்கள் குவிந்து வருகையில் (ArcelorMittal, Continentnal, Johnson Controls, Continentaltech), வேலை பாதுகாப்புக்கள், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத்தர பாதுகாப்பு ஆகியவை இப்பொழுது முதலாளிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் போர்க்குணமிக்க, அரசியல் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் கட்டாயத்தை கொடுத்திருப்பதுடன், தொழில்துறையை கட்டுப்படுத்த உள்நாட்டிலும் தேசியஎல்லைகளைக் கடந்தும் தொழிலாளர்கள் போராட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved