ஐரோப்பா
:
பிரான்ஸ்
Protesting Continental workers occupy Sarreguemines
factory
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் கொன்டினென்டல் தொழிலாளர்கள்
Sarreguemines ஆலையை ஆக்கிரமிப்பு
செய்கின்றனர்
By Antoine Lerougetel
8 May 2009
Use this version
to print | Send
feedback
பிரான்சில்
Sarreguemines ல் உள்ள கொன்டினென்டல்
ஆலை
பிரான்சில் மூடப்பட இருக்கும்
Clairoix ல்
இருக்கும் ஜேர்மனிய டயர் தயாரிப்பு நிறுவனம் கொன்டினென்டல் ஆலைத் தொழிலாளர்கள் மே 6ம் தேதி
Sarreguemines
ல் இருக்கும் ஆலையில் மே 6ம் தேதி ஆக்கிரமிப்பு செய்தனர். மே 27ல் இருந்து மே 12ம் தேதிக்கு
கொன்டினென்டல் நிர்வாகம் மற்றும் பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களுடன் நடத்தப்படும் பேச்சு முன்கூட்டி நடைபெறும்
என்ற அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து அன்று மாலையே அவர்கள் ஆக்கிரமிப்பை கைவிட்டனர்.
இந்த வாரத் தொடக்கத்தில்
Clairoix ல்
உள்ள வேலையிழந்த தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை மீட்கும் பிரச்சாரத்தை முடுக்கிவிடும் வகையில்
பிரெஞ்சு-ஜேர்மனிய எல்லையைக் கடந்து ஆகென் (Aachen)
ெகான்டினென்டல்
ஆலையில் இருக்கும் ஜேர்மன் சக ஊழியர்களுடன் ஐக்கியத்திற்கான அறைகூவலுக்கு அழைப்புவிடுத்தனர்.
Clairoix ல்
இருந்து புதனன்று 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 60 கார்கள் மூலம்
Aachen ஆலையில்
இருக்கும் சக ஊழியர்களை சந்திக்கச் சென்றனர்.
அவ்வாறு அவர்கள் புறப்படுவதை தொழிற்சங்க அதிகாரத்துவம் தடை செய்தது.
Aachener Zeitung
மே 5ம் தேதி பதிப்பில் கொன்டினென்டல் யூரோப்பியன் பணிக்குழுத் தலைவர்
Bruno Hickert,
"தன்னுடைய சக ஊழியர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று அவசரமாக எச்சரித்தார். 'எவ்விதக் கலகமும்
நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்!'. ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று பிரெஞ்ச்சுத்
தொழிலாளர்களை சமாதானப்படுத்த முற்பட்ட அவர் ஜேர்மானியர்கள் எப்படி நடந்து கொள்ளுகின்றனர் என்பது
பற்றியும் அவர்களை உணர வைத்தார்.
திட்டமிடப்பட்ட பிரெஞ்சு பிரதிநிதிகள் குழுவின் வருகையால் எச்சரிக்கை அடைந்த
ஜேர்மனிய போலீஸாரின் ஒரு பெரும் பிரிவு ஆலைக்குள் செல்வதை தடுக்கக் கூடினர். ஆலையின் முன் வாகனங்களை
நிறுத்தும் இடம் போலீசாரால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டது;
Dusseldorf ல்
இருந்து குதிரைப்படை வீரர்களும், பயிற்சி நாய்ப் பிரிவுகளும் வந்திருந்ததுடன்,
Philipsstrasse
ல் இருக்கும் Aachen
ஆலைக்கு செல்லும் பாதைகளை சிறப்பு போலீஸ் கண்காணிப்பாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.
மே 6ம் தேதி பதிப்பில்
Libération,
Aachen
ல் போலீஸ் வந்தது பற்றி அறிந்தவுடன் வரிசையான கார்களில் வந்திருந்த
Clairoix
தொழிலாளர்கள் "தங்கள் இலக்கை மாற்றிக் கொண்டு பிரான்ஸ்-ஜேர்மன் எல்லையில் பிரெஞ்சு புறம் இருக்கும்
கொன்டினென்டலின் Sarreguemines
ஆலையை நோக்கிச் சென்றனர்." என்று எழுதியுள்ளது.
Sarreguemines ஆலையில்
கொன்டினென்டல் பிரெஞ்சு செயற்பாடுகளின் தலைமையகம் உள்ளது. அந்த ஆலையின் நிர்வாகம்
Clairoix
தொழிலாளர்கள் வருவது பற்றி எச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும்; அவர்கள் தொழிலாளர்களை ஆலைக்குகள் மூடி
வைத்துவிட்டனர். போலீஸர் மற்றும் CRS
கலகப்பரிவு போலீசாரும் Clairoix
தொழிலாளர்களை துரத்துவதற்காக அழைக்கப்பட்டனர்; ஆனால் அவர்கள் ஆலைக்குள் முண்டியடித்து வந்துவிட்டனர்;
ஆனால் உற்பத்திப் பிரிவுகளுக்குள் நுழைய முடியவில்லை. போலீஸாரும்
CRS பிரிவுகளும்
Sarreguemines
நீதிமன்றங்கள் மற்ற அரசாங்கக் கட்டிடங்களையும் காவல் காத்தனர்.
Le Nouvel Observateur ,
Clairoix
தொழிலாளர்கள் Sarreguemines
ஆலைக்கு வந்தது பற்றி கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது: " 'நம்முடைய இங்கிருக்கும் வீடடிற்கு வந்துவிட்டோம்',
'கொன்டினென்டல் ஒற்றுமை' என்ற கோஷங்களுடன் கொன்டி தொழிலாளர்கள்
Moses பிரிவின்
நுழைவாயில் தடுப்புக்களை அகற்றி ஆலைக்குள் சென்றனர். ஆனால் உற்பத்திக் கட்டிடங்களுக்கு செல்ல முடியவில்லை.
அவற்றின் கதவுகள் மூடப்பட்டிருந்தன, அல்லது எஃகு தடுப்புக்கள் இருந்தன. ஆலையின் கதவுகள் இறுதியில்
திறக்கப்பட நூறு தொழிலாளர்கள் வெளியேவந்தனர்; அப்பொழுது
Clairoix
தோழர்கள் "எங்கள் தோழர்களை வெளியே விடுக", "நிர்வாகிகளைத்தான் பிடித்து வைக்க வேண்டும்" என்று
கோஷமிட்டனர்.
Sarreguemines
தொழிலாளர்கள் WSWS
நிருபர்களுக்கு வியாழன்று பேசியவர்கள் கூற்றின்படி,
Clairoix தொழிலாளர்களை சன்னல்கள் வழியே நுழைந்து
எதிர்கொண்ட Sarreguemines
ஆலையின் தொழிற்சங்க அலுவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
CFDT (பிரெஞ்சு
தொழிலாளர் கூட்டமைப்பு) செய்தித் தொடர்பாளர்
Jean-Luc
Niedlander,
"இது பற்றி எங்களிடம் எவரும் கூறவில்லை. நீங்கள் எங்களைக் கேட்காமல் வந்துள்ளீர்கள்" என்று கூறியதாக
செய்தி ஏடு Le Point
குறிப்பிட்டுள்ளது.
Sarreguemines க்கு வந்தபின்
ஆலை ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன்
Hickert மீண்டும்
Clairoix
தொழிலாளர்களுக்கு விரோதப் போக்கை தெளிவாகக் காட்டும் வகையில் எதிர்ப்பாளர்களுடன் பேச மறுத்தார்.
"எங்களுக்கு இவ்விதத்தில் செயற்பாடுகளை செய்யும் பழக்கம் இல்லை" என்று
Hickert
கூறியதாக AZ
செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.
Clairoix தொழிலாளர்களின்
நடவடிக்கை Sarreguemines
உடைய அறிவிக்கப்பட்ட நோக்கம் பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள், ஜேர்மனிய உரிமையாளர்கள் மற்றும் பிரெஞ்சு
அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையே நடக்க இருக்கும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள மே 27 முத்தரப்பு கூட்டத்தை
முன்கூட்டியே நடத்த வேண்டும் என்பதாகும். CGT
Clairoix
உடைய ஆலைப் பிரதிநிதி
Xavier Mathieu,
Sarreguemines
ஆலையை ஆக்கிரமித்திருந்த தொழிலாளர்களிடம் கூறினார்: "நாங்கள் இங்கு உள்ளோம், அடுத்த திகதி வரை
இங்குத்தான் தொடர்ந்து இருப்போம்."
புதன் மாலை, மே 27ல் இருந்து மே 12ம் தேதி கூட்டம் முன்கூட்டியே
நடத்தப்படும் என்ற அறிவிப்பு வந்ததை அடுத்து
Sarreguemines ஆலையை விட்டு
Clairoix
தொழிலாளர்கள் நீங்கினர்.
தன்னுடைய பங்கிற்கு CGT
யும் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் வேலைகளை மீட்பதற்கு எந்தப் போராட்டத்தையும் நடத்த மறுக்கிறது; மேலும்
தொழிற்சங்கத்தின் ஒரே இலக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட கூடுதல் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய
பணத்தைப் பெறுவதுதான் என்றும் கூறுகிறது. Clairix
TM CGT
பிரதிநிதியாக இருக்கும் Bruno Levert
மே 6ம் தேதி Le Monde
இடம் பிரெஞ்சு அரசாங்கம் கொன்டினென்டலை
வாங்குவதற்கு ஒருவரைத் தேடும் என்ற நம்பிக்கை தனக்கு இனியும் இல்லை என்று கூறி பின் அறிவித்தார்: "ஒரு
வாங்குபவரிடம் ஒன்றும் கொன்டினென்டல் சந்தை பங்கை இழக்கப் போவதில்லை. அவர்கள்
Clairoix ஐ
மூடினால், ஐரோப்பாவில் வேறு எங்கோ சந்தையில் ஆதாயம் என்பதற்குத்தான். எங்களுக்கு வேண்டுவதெல்லாம்
எங்களுக்கு கொடுக்க வேண்டியதை அது கொடுக்க வேண்டும்; அதாவது பணிநீக்க ஊதியங்கள் முறையாகக்
கொடுக்கப்பட வேண்டும்."
இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து கான்டினென்டல் உலகெங்கிலும் இருக்கும் அதன்
133,000 தொழிலாளர்களில் 7,000 வேலைகளை அகற்றிவிட்டது.
Clairoix ல்
உள்ள ஆலை ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது; இன்னும் கூடுதலான வேலை வெட்டுக்களும் ஆலை மூடல்களும் தயாரிப்பில்
உள்ளன.
Clairoix ஆலை மூடல் என்பதில்
1,120 வேலைகள் இழக்கப்படுகின்றன என்றாகிறது. தங்கள் ஆலை மூடப்பட வேண்டாம் என்ற முறையீடு
ஏற்கப்படவில்லை என்பதை தொழிலாளர்கள் அறிந்தவுடன் அவர்கள் கோபத்துடன்
Compiègne ல்
உள்ள அரசாங்க அலுவலகங்களுக்கு சேதம் விளைவித்தனர். ஆலையில் சொத்துக்களை சேதப்படுத்தியதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் மீது இப்பொழுது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசாங்க அதிகாரிகள்
"தீவிரச் சிறுபான்மையினர் மீது" கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று கோபத்துடன் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 23ம் தேதி தொழிலாளர்கள் ஜேர்மனியில் உள்ள ஹனோவருக்கு பயணித்தனர்;
அங்கும் கொன்டினென்டல் ஆலை மூடல் அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தது. அவர்கள் ஹனோவருக்கு வந்த போது,
பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கு உளமார்ந்த வரவேற்பு ஜேர்மனிய சக ஊழியர்களால் கொடுக்கப்பட்டது; பிந்தையவர்
அன்று அதிகாலை ஹனோவரின் முக்கிய இரயில் நிலையத்தில் பிரான்சில் இருந்து சிறப்பு இரயில் மூலம் வந்த
பிரெஞ்சுத் தொழிலாளர்களை வரவேற்க வந்திருந்தனர். பிரெஞ்சு மற்றும் ஜேர்மனியத் தொழிலாளர்கள் பின்னர்
நகரம் முழுவதும் ஒரு கூட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
கூடியிருந்த ஜேர்மனியத் தொழிலாளர்கள் ஜேர்மனிய, பிரெஞ்சு மொழிகளில் கோஷ
அட்டைகளை எடுத்துச் சென்றிருந்தனர்; "Clairoix
ல் இருந்து வந்துள்ள பிரியமான சக ஊழியர்களே, ஹனோவருக்கு நல்வரவு", "உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!'
என்று அவற்றில் எழுதப்பட்டிருந்தது. பிரெஞ்சுத் தொகுப்பு இறுதியில் வந்தபோது, ஜேர்மனியத் தொழிலாளர்கள்
கீழ்க்கண்ட கோஷத்தை எழுப்பினர்: "Tous
ensemble, Continental-solidarite" (கொன்டினென்டல்
தொழிலாளர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு இருப்போம்). |