World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காSEP candidate certified for Detroit mayoral election டிட்ரோயிட் மேயர் தேர்லில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பதிவு உறுதி பெற்றது By Jerry White டிட்ரோயிட் நகர தேர்தல் துறை, ஆகஸ்ட் 4ம் தேதி நடக்க இருக்கும் டிட்ரோயிட் மேயர் பதவிக்கான ஆரம்ப தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் D'Artagnan Collier -க்கு அவருடைய பெயர், வாக்குச் சீட்டில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது. தேர்தல்கள் இயக்குனர் டேனியல் பாக்ஸ்டர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் கோலியர் போதுமான கையெழுத்துக்களை நியமன மனுக்களில் அளித்துள்ளதாகவும் அதையொட்டி அவருக்கு வாக்குச்சீட்டில் இடம்பெறும் அந்தஸ்து கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளார். 1,100க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை SEP சேகரித்தது. இது மே 12 க்குள் கொடுக்கப்பட வேண்டிய 583 கையெழுத்துக்களைப் போல் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும். வேட்பு மனுக்களைப் பரிசீலித்த தேர்தல் துறை SEP கோலியரை வாக்குப் பதிவில் இருத்தப் போதுமான சரியான கையெழுத்துக்களை விட அதிகமாகவே கையெழுத்துக்களை கொடுத்துள்ளதாக முடிவிற்கு வந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் இதன் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கும் கோலியர் நகரத்தில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளியாவார்; கிறைஸ்லர் தொழிலாளி ஒருவரின் மகனும் ஆவார். பெரு வணிகத்தின் இரு கட்சிகளுக்கு அரசியல் மாற்று ஒன்றை அளிப்பதற்காக அவர் தேர்தலில் பங்கு பெற்று, கெளரவ ஊதியங்கள் கொண்ட வேலைகள், வீடுகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் கல்வி ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கொடுக்கும் சோசலிச முன்னோக்கு ஒன்றை முன்வைக்கிறார். மனுக்கள் தயாரிப்பிற்காக இருந்த பல வாரங்களில் SEP உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பொருளார ரீதியாக பேரழிவு பெற்றுள்ள நகரம் முழுதும் பல ஆயிரக்கணக்கான கார்த் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், நகரத் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், வேலையில்லா தொழிலாளர்கள் ஆகியோரை சென்றடைந்து பேசினர். பிரச்சாரத்தின் போக்கில் ஒபாமா நிர்வாகத்தைப் பற்றிய ஏமாற்றம் பெருகுகையில், ஒரு சோசலிச முன்னோக்கு பற்றிய ஆர்வத்தில் குறிப்பிடத்தக்க கூடுதல் தன்மை இருந்தது. கடந்த மாதத்தில் வெள்ளை மாளிகை வோல் ஸ்ட்ரீட்டிற்கு வரம்பற்ற விதத்தில் பொதுப் பணத்தை அள்ளிக் கொடுத்தது; ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி கிறைஸ்லரை திவால்தன்மைக்குத் தள்ளி, ஜெனரல் மோட்டார்ஸுக்கான அதன் பெரும் வேலைக் குறைப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் மற்றும் நலன்களை குறைப்பதற்கான திட்டங்களுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது. மேலும் "மாறுதல்" பேசிய வேட்பாளர் ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அமெரிக்க போர்களை விரிவுபடுத்தியுள்ளார்; ஜனநாயக உரிமைகள் மீதான புஷ் நிர்வாகத்தின் தாக்குதலையும் தொடர்கிறார். இக்காலத்தில் நகரம், மேயர் Kwame Kilpatrick என்னும் முன்னாள் மேயரின் பதவிக் காலத்தை முடிப்பதற்கு ஒரு சிறப்புத் தேர்தலை நடத்துகிறது; அவர் கடந்த செப்டம்பரில் நீதியை தடுக்கும் முயற்சிகளுக்காக இராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார். ஜனநாயகக் கட்சியின் அரசியல் நடைமுறை மீது இருக்கும் விரோதப் போக்கு மிகப் பரந்து உள்ளது; அதையொட்டி இடைக்கால மேயர் கென்னத் காக்ரல் ஜூனியருக்கும் வணிகர் டேவிட் பிங்கிற்கும் இடையே நடந்த போட்டி மொத்த வாக்காளர்களில் 15 சதவிகிதத்திற்கும் மேலானவர்களை வாக்குச் சாவடிக்கு கொண்டு வர முடியவில்லை. ஒரு குறுகிய வெற்றியைப் பெற்ற பிங், உடனே பட்ஜேட்டை குறைக்க உறுதி கொண்டு, நகரத்தின் பணிகளைப் பெரிதும் குறைத்து, வேலைகளைத் தாக்கி, பொது ஊழியர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதும் தாக்குதல் நடத்தினார். அதே நேரத்தில் அவர் பெருநிறுவன நிர்வாகிகளை இன்னும் கூடுதலான வரிகளை சுமத்த திட்டம் கொடுக்கவும், பெருவணிக ஊக்கங்களுக்காக கட்டுப்பாட்டைத் தளர்த்தலுக்கான திட்டத்தையும் கேட்டார். வாக்குச் சீட்டில் அவர் பெயர் பதிவு செய்யப்படும் என்ற தகவலை பெற்றவுடன் கோலியர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்: "நம்முடைய மனுக்களில் கையெழுத்திட்ட அனைவருக்கும் நன்றி செலுத்த விரும்புகிறேன்; மேயர் தேர்தலில் தொழிலாள வர்க்கத்திற்கு குரல் கொடுப்பதற்காக என்னை வாக்குச் சீட்டில் பதிவு செய்வதற்கு போராடிய அனைவருக்கும் நன்றி. இது ஒரு முக்கிய சாதனை, தொழிலாளர்களுக்கு பெருமை ஆகும்; அரசியல் வாழ்வில் இருந்து ஊக்கம் இல்லாமல் ஒதுக்கப்படும் முயற்சிகள் இருந்தாலும், அவர்கள் ஒரு சோசலிச வேட்பாளரை வாக்குச் சீட்டில் இடம்பெறச்செய்ய முடிவெடுத்தனர். "ஜனநாயகக் கட்சி மீது தொழிலாளர்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உணர்வு, கிட்டத்தட்ட 90 சதவிகித தகுதிபெற்ற வாக்காளர்கள் கடந்த வார சிறப்புத் தேர்தலில் பங்கு பெற முடியவில்லை என்பதில் இருந்து அறியப்படலாம். எந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் இதே செயற்பட்டியல்தான் உள்ளது: பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு ஆதரவான பெருவணிகக் கொள்கை, தொழிலாள வர்க்கத்திற்கு ஊதிய, சமூகச்செலவினக் குறைப்புக்கள் ஆகும். "ஜனாதிபதி ஒபாமா போன்று, மேயர் பிங்கும் பெருவணிக மற்றும் நிதிய உயரடுக்கின் பிரதிநிதியாவார். அவர்கள் கொள்ள முற்படும் பொருளாதார மீட்பு என்பது வோல்ஸ்ட்ரீட்டில் இலாபத்தை மீட்டல், பெருநிறுவன அமெரிக்காவிற்கு இலாபத்தை மீட்டல் என்பது ஆகும். பல தசாப்தங்களாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற நலன்களில் எஞ்சியிருப்பதற்கு எதிராக ஒரு போரைத் தொடுப்பதன் மூலம் இவர்கள் இதை அடைவதற்கு நோக்கம் கொண்டிருக்கிறார்கள். "நான் என் முழு வாழ்வையும் டிட்ரோயிட்டில் கழித்து, பெருநிறுவனங்களும் ஜனநாயகக் கட்சி அரசியல் வாதிகளும் இதன் பேரழிவை மேற்பார்வை இடுதலையும் பார்த்துள்ளேன். நகரத்தின் கைவிடப்பட்டுள்ள ஆலைகள், வாடும் புறநகர்ப் பகுதிகள், நாட்டிலேயே முதலில் இருக்கும் வேலையின்மை விகிதம் ஆகியவை முதலாளித்துவமுறை மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றன; மேலும் அமெரிக்காவின் நிதிய உயரடுக்கு செயல்படுத்திய தொழில்துறை அகற்றப்படுதலுக்கு இது அடையாளம் ஆகும்; ஏனெனில் அவர்கள் தங்களை செல்வம் கொழிக்கச் செய்வதற்கு ஊக நடவடிக்கைகளுக்கு திரும்பிவிட்டனர். "டிட்ரோயிட்டை வறுமைப்படுத்தியதும் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தின் மீது ஒரு பெரும் குற்றச் சாட்டு ஆகும்; அதன் தேசிய தலைமையகம் இங்குதான் உள்ளது. இதன் பிற்போக்கு பொருளாதார தேசியம், லேபர்-நிர்வாக "பங்காளித்துவம்" மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு என்ற கொள்கைகள் கார்த் தயாரிப்புத் தொழிலாளர்களை மேலே செல்ல முடியாத பாதையில் நிறுத்தியுள்ளன. UAW உடன் முறித்துக் கொண்டு தொழிலாளர்கள் புதிய அமைப்புக்களைக் கட்டமைத்து வர்க்கப் போராட்டம், சோசலிசம் ஆகிய சக்தி வாய்ந்த மரபுகளைப் புதுப்பிக்கும் காலம் வந்துவிட்டது; இவற்றுடன்தான் ஒருகாலத்தில் கார்த் தயாரிப்புத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். "மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற பணம் இல்லை என்று கூறுவது ஒரு பொய்யாகும். இதுதான் வினா: தொழிலாளர் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்படும் செல்வம் அனைவருக்கும் கெளரவ வாழ்விற்கு உறுதியளிக்குமா அல்லது அது தொடர்ந்து வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுக்காக பயன்படுத்தப்படுமா? " நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் வேலைகளையும் வாழ்க்கையையும் அச்சுறுத்தும் உலகப் பொருளாதார நெருக்கடி, தொழிலாள வர்க்கம் தன்னுடைய சொந்த திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமான தலையீட்டை செந்வதற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரவிருக்கும் மாதங்களில், எங்கள் பிரச்சாரம் டிட்ரோயிட்டிலும் அமெரிக்கா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுக்காக அரசியல் குரல் கொடுக்க அரங்கம் கொடுக்கும்."மேயர் தேர்தலில் நான் ஒருவன்தான் தொழிலாள வர்க்க, சோசலிச வேட்பாளர். கார்த் தொழில் மற்றும் வங்கிகள் பில்லியனர் முதலீட்டாளர்களின் கரங்களில் இருந்து அகற்றப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வோல் ஸ்ட்ரீட்டிற்கு பிணை எடுப்பு அளிப்பதற்கு பதிலாக, பில்லியன் கணக்கில் டிட்ரோயிட்டை மறு கட்டமைக்கவும் கெளரவமான வேலைகள், சுகாதாரப் பாதுகாப்பு, வீடுகள், கல்வி தருதல் ஆகியவற்றிற்கு செலவழிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன். "என்னுடைய பிரச்சாரத்தை தீவிரமாக ஆதரிக்குமாறு உங்களை வலியுறுத்துகிறேன் எங்கள் கூட்டங்களில் பங்கு பெறுக; உங்கள் கவலைகள், அக்கறைகளை வெளிப்படுத்த எங்கள் பிரச்சார அலுவலகத்திற்கு எழுதுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக SEP உடைய வரலாறு மற்றும் வேலைத்திட்டம் ஆகியவற்றைப் படித்து, அதை தொழிலாளர் வர்க்கத்தின் வெகுஜன புரட்சி கட்சியாக கட்டியமைக்கும் விதத்தில் முடிவு எடுத்து சேருமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்." சோசலிச சமத்துவக் கட்சி உடன் தொடர்பு கொண்டு டிட்ரோயிட் மேயர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட, இங்கு கிளிக் செய்யவும். |