World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : தொழிலாளர் போராட்டங்கள்

Workers march in May Day demonstrations around the world

உலகெங்கிலும் தொழிலாளர்கள் மே தின ஆர்ப்பாட்டங்களில் அணி திரண்டனர்

By our reporters
2 May 2009

Use this version to print | Send feedback

சர்வதேச பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டை கொண்டாடும் விதமாக வெள்ளியன்று உலகமெங்கிலும் மே தின ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர்.

கிரீஸ் நாட்டில், ஏதென்ஸில் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தில் 6,000 மக்கள் அணிதிரண்டனர். டிசம்பரில் 15 வயது சிறுவனான அலெக்சிஸ் கிரிகோரோபவுலஸ் துப்பாக்கி சூட்டில் இறந்ததை அடுத்து நிகழ்ந்த கலவரம் போன்று மறுபடியும் நிகழலாம் என்று அதிகாரிகள் அஞ்சியதால், மத்திய ஏதென்ஸில், 4,000 போலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர். டிசம்பர் ஆர்ப்பாட்டங்களின் மையமாய் இருந்த ஏதென்ஸ் பாலிடெக்னிக்கில் ஆர்ப்பாட்டக்காரர்களின் குழு மீது போலிசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

பிரான்சில் நிகழ்ந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்களில் சுமார் 1 மில்லியன் மக்கள் பங்கேற்றதாக மதிப்பிடப்பிடுகிறது (போலிசார் மதிப்பீட்டின் படி 450,000). "சார்கோ [ஜனாதிபதி நிகோலா சார்கோசி] எங்களுக்கு வாக்குறுதியளித்தார், சார்கோ பொய்யுரைத்தார்" மற்றும் "வங்கிக்காரர்களுக்கு எங்களது பணம் கிடையாது" ஆகிய பதாகைகளின் கீழ் பாரிஸில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் 165,000 பேர் பங்கேற்றனர். (பார்க்கவும் "பிரான்சு: ஒரு மில்லியன் மக்கள் வரை மே தின ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பு")

ஐரோப்பாவில், மிக அதிக வேலைவாய்ப்பின்மை சுைைமயை - 17 சதவீதம் - கொண்டிருக்கும் நாடான ஸ்பெயினின் பெரும் நகரங்களிலும் பேரணிகள் நடைபெற்றன. நாட்டின் இரண்டு மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் மாட்ரிட் நகரின் மையத்தில் 65,000 க்கும் அதிகமானோர் திரண்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இத்தாலியில், சென்ற மாதத்தில் நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து வேலையிழந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தங்கள் ஆதரவின் அடையாளமாக, தொழிற்சங்க தலைவர்கள் பேரணி ஊர்வலங்களை பெரும் நகரங்களில் இருந்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நகரான லி' அக்விலா க்கு இடம் மாற்றினர்.

ஜேர்மனியில், மரபார்ந்த ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடந்து முடிவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுவதற்கான விருப்பத்தை பிரகடனப்படுத்துவதற்காக DGB தொழிற் சங்க கூட்டமைப்பு தனது மொத்த அமைப்பினரையும் இந்த மே தினத்தில் அணிதிரட்டியது.

அது குறிப்பிட்டிருக்கும் எண்ணிக்கையின் படி, ஜேர்மனியெங்கிலும் சுமார் 400 ஆர்ப்பாட்டங்களுக்கு DGB ஏற்பாடு செய்தது. பல நகரங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பெரும் குழு கலந்து கொண்டதால் ஊர்வலத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருந்தது. பிராங்க்பர்டில் நடந்த ஊர்வலத்தில், இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் இரக்கமற்ற ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1,000 தமிழர்கள் கலந்து கொண்டனர்.

பிராங்க்பேர்ட் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற தமிழர்கள்

DGB இன் பிரதான நிகழ்வு வடக்கு துறைமுக நகரமான ப்ரெமென் நகரில் நடைபெற்றது. சுமார் 2,500 பேர் கூட்டத்தில் DGB தலைவர் மைக்கேல் சோமர் பேசினார். சமூக அமைதியின்மை குறித்த தனது எச்சரிக்கைகளை சோமர் மீண்டும் கூறினார், ஆனாலும் பின் அரசாங்கங்களுக்கு ஒத்துழைக்க தொழிற்சங்கங்கள் தயாராய் இருப்பதாய் தெரிவித்த அவர், அரசாங்கத்திற்கு புதிய மீட்புதொகை திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை தெரிவித்தார்.

ப்ரெமெனில் நடந்த பிரதான கூட்டத்தில் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் பேசவில்லை. ஆனால் SPD தலைவர் பிரன்ஸ் முன்ரபெரிங் வூப்பெற்றாலில் நடந்த DGB ஊர்வலத்தில் பேசினார், SPD வெளியுறவு அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் லூட்விக்ஸ்காபெனில் பேசினார்.

ஜேர்மனியைப் பொறுத்தவரை, மே தினக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் பொதுவாக தொழிற்சங்கங்களும் SPD ம் தங்களது அரசியல் பாதைகளை மறைத்து "இடதுவிதமாய்" பேசுவதற்குத் தான் பயன்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால் பொருளாதார நெருக்கடி ஆழமுற்று- வேலை, சம்பளங்கள் மற்றும் வேலை சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள சிதைவில் இரண்டு அமைப்புகளின் செயல்பாட்டு பங்களிப்பும் தெளிவுற வெளிப்பட்டுள்ள நிலையில் - இத்தகையதொரு சமாளிக்கும் நடவடிக்கை கூடுதல் கடினமானதாய் ஆகியிருக்கிறது. கடந்த மாதங்களில் ஜேர்மனியில் வேலைவாய்ப்பின்மை என்பது துரித வளர்ச்சி கண்டிருந்தது என்கிற போதிலும், ஜேர்மனியில் நடந்த ஊர்வலங்களில் குறைந்த அளவிலேயே தொழிலாளர்கள் பங்கேற்றனர் என்பதானது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீதான அவநம்பிக்கை அதிகரிப்பதான நெருக்கடிக்கு சாட்சியமளிப்பதாக இருக்கிறது.

ரஷ்யாவில் தொழிற் சங்கங்களும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் தலைமை கொடுத்த மாஸ்கோ ஊர்வலங்களில் 25,000 பேர் திரண்டனர். கார்ல் மார்க்ஸ் சிலை அருகே திரண்ட அவர்கள் அரசாங்கத்தின் ராஜினாமாவைக் கோரினர். செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் 120 ஆர்ப்பாட்டக்காரர்களை போலிசார் கைது செய்தனர்.

துருக்கியில், சென்ற ஆண்டு முதன்முறையாக அரசாங்கம் மே தின விடுமுறையை சட்டப்பூர்வமாக்கியதற்கு பின் நடக்கும் முதலாவது மே தின ஆர்ப்பாட்டத்தில் 2,000 பேர் தக்சிம் சதுக்கத்திற்கு பேரணி நடத்தினர். மே 1, 1977 அன்று ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கி சூடு நடத்திய படுகொலை சம்பவம் நிகழ்ந்ததான இந்த இடத்தில் திரண்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் மீது போலிசார் கண்ணீர் புகை வீசி, நீரை பீச்சியடித்து, தடியடி நடத்திய சம்பவம் நிகழ்ந்தது.

பாகிஸ்தானில், குவெட்டா, பெஷாவர், லாகூர், முல்தான் மற்றும் பைசலாபாத் உள்ளிட, மூன்று மாகாணங்களின் அனைத்து பெரிய நகரங்களிலும் மே தின ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான மாகாண அரசு மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்திருந்தது. 30 உயிர்களுக்கும் அதிகமாகப் பலியாக காரணமாக அமைந்த ஏப்ரல் 19 அன்று கராச்சியில் வெடித்த இனக்கலவரத்தை அது சாக்காகப் பயன்படுத்தியது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தொழிற்சங்க பிரிவான மக்கள் தொழிலாளர் கழகம் இந்த தடையை ஆதரித்தது.

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கூறும்போது, 'வெகுகாலமாக "ஏழை-ஆதரவு" கட்சியாக, இன்னும் சொல்லப் போனால் சோசலிசக் கட்சியாக கூட காட்சியளித்து வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மீது வெகுஜனக் கோபம் அதிகரித்து வருவதை இந்த ஆர்ப்பாட்டங்கள் விளங்கப்படுத்தியிருக்கின்றன. பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு, மார்ச் 2008 இல் இஸ்லாமாபாத்தில் பதவிக்கு வந்தது முதல், மின்சார விலை மானியங்களை நீக்குவது, தனியார்மயமாக்கத்தை முன்னெடுத்துச் செல்வது, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்காவுக்கு முக்கியமான ராணுவ-சரக்கு உதவிகளைச் செய்வது என முந்தைய முஷாரப் சர்வாதிகாரத்தின் கொள்கைகளைத் தான் தொடர்ந்து வந்திருக்கிறது' என்றார்.

பல இனங்களைக் கொண்ட 14 மில்லியன் பேர் வாழும் கராச்சியில் மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்ததன் விளைவு, சிந்தி, பஞ்சாபி, பலோச்சி, பஸ்தூன் மற்றும் உருது பேசும் தொழிலாளர்கள் பாகிஸ்தான் மேல்தட்டின் அனைத்து பிரிவினராலும் ஊக்குவிக்கப்படும் வகுப்புவாத அரசியலுக்கு எதிரான வர்க்க ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதைத் தடுப்பதாக இருந்தது என்று எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

பிலிப்பைன்ஸ் மணிலாவில் 7,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மென்டியோலா மற்றும் அமெரிக்க தூதரகத்தை நோக்கி பேரணி நடத்தினர், போலிசார் மத்திய மணிலாவில் தெருக்களில் தடைகளை உருவாக்கி இருந்தனர். வேலையில்லாதோர் ராணுவப் படைகளில் சேரலாம் என்ற ஜனாதிபதி குளோரியா மெக்பாகல் அராயோவின் அழைப்புக்கு கண்டனம் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரு குடும்பத்தின் தினசரி வாழ்க்கைச் செலவு 922 பெசோக்களாக இருக்க, குறைந்தபட்ச ஊதியமோ நாளுக்கு 382 பெசோக்களாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒலாங்கபோ சிட்டி மற்றும் சபிக் பே பகுதிகளிலும் பேரணிகளை நடத்தினர்.

அதேநாளில் அரசாங்கம் நடத்திய வேலைவாய்ப்பு முகாம் ஒன்றில் கட்டுமானம், பொறியியல் மற்றும் பிற வேலைகளில் வெளிநாட்டு வேலைகளுக்கு 200,000 பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, நாடெங்கிலும் பல்வேறு நகரங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அதற்கு விண்ணப்பித்து குவிந்திருந்தனர்.

தென் கொரியாவில், வேலை பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு கோரியும் பழமைவாத ஜனாதிபதியான லீ மியுங்-பாக் ராஜினாமா செய்யக் கோரியும் சியோலில் இருக்கும் தேசிய அவையில் 16,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். கலகத் தடுப்பு போலிசாருடன் மோதலையடுத்து பல ஆர்ப்பாட்டக்காரகள் சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

இந்தியாவில், வேலை மற்றும் ஊதிய வெட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுடெல்லியில் தொழிலாளர்கள் மே தின ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தெற்கு மாநிலமான கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தி இந்த தினத்தை தொழிலாளர்கள் அனுசரித்தனர்.

இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்தில், கோல்கோத்தாவில் தொழிலாளர்கள் மே தின ஊர்வலம் மற்றும் கூட்டங்களில் பங்கேற்றனர். இந்தியாவின் அயலுறவுக் கொள்கை, ஏகாதிபத்தியம் மற்றும் வகுப்பு வாதத்திற்கு எதிராக அவர்கள் முழக்க அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், சுமார் 2,000 தொழிலாளர்கள் மே தின ஊர்வலத்தில் பங்கேற்றனர், ஊர்வலத்தின் முடிவில் நடந்த கூட்டத்தில் சுமார் 3,000 பேர் திரண்டிருந்தனர். இரண்டு பிரதான ஸ்ராலினிய கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) - சிபிஎம் - மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் தொழிற்சங்க பிரிவுகளான இந்திய தொழிற் சங்கங்களின் மையம் (சிஐடியு) மற்றும் அனைத்து இந்திய தொழிற் சங்க பேரவை (ஏஐடியுசி) ஆகியவை கூட்டாக இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நகரின் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான பெரம்பூரில் பேரணிகளும் கூட்டங்களும் நடத்தப்பட்டன. சென்னை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து தொழிலாளர்கள், ரெயில்வே மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறை ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு வாகன தயாரிப்பு ஆலைகளில் இருந்தான தொழிலாளர்கள் இந்த பேரணிகளிலும் கூட்டங்களிலும் பங்கேற்றனர். ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் இருந்து பெண் தொழிலாளர்கள் குழு ஒன்று பங்கேற்றது. இந்த குழுக்கள் முறையே தங்களது தொழிற்சங்க பதாகைகளின் கீழ் பேரணி நடத்தினர்.

தொழிலாளர்கள் எழுப்பிய முழக்கங்களில் சில: "மே தினம் வாழ்க", "தமிழக அரசே, எங்களது தொழிற் சங்க உரிமைகளைப் பறிக்காதே", "புரட்சி ஓங்குக", "விலையேற்றங்கள் ஏழைகளை நசுக்குகின்றன" ஆகியவை.