World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Defend jobs, wages and benefits! Vote "No" on Chrysler-UAW concessions! Oppose job cuts at GM!

Statement of the Socialist Equality Party

வேலைகள், ஊதியங்கள், நலன்களைக் காக்கவும்! கிறைஸ்லர்-UAW சலுகைகளுக்கு "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்! GM ல் வேலைகுறைப்புக்களை எதிர்க்கவும்!

சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை
28 April 2009

Back to screen version

General Motors இல் நடைபெறும் மாபெரும் பணிநீக்கங்களை நிராகரிக்கும்படி கார்த் தொழிலாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது; அதேபோல் கிறைஸ்லர், ஒபாமா நிர்வாகம் மற்றும் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கம் கோரும் மிகப் பெரிய இழப்புக்களை நிராகரிக்குமாறும் கோருகிறது. GM, Chrysler, மற்றும் கார்த் தொழில் அனைத்திலும் இருக்கும் தொழிலாளர்களை அவர்களுடைய வேலைகள், வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக பெருநிறுவனத் தாக்குதல்கள் நடப்பதை எதிர்த்தும் வெகுஜன எதிர்ப்புக்களை ஒழுங்கமைக்கத் தொடங்குமாறு வலியுறுத்துகிறது.

UAW விரைந்து செயல்பட்டு கிறைஸ்லரில் பெரும் இழப்புக்களைத் தொழிலாளர்கள் அடைய முயல்கிறது; இது 2007ம் ஆண்டு அது கிட்டத்தட்ட தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்ட ஒப்பந்தத்திற்கு பின் வருகிறது. UAW ஞாயிறு இரவு திருத்த உடன்பாட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டது பற்றி தொழிற்சங்க நிர்வாகிகள் புதனன்று வாக்களிக்க உள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு ஜனநாயக முறையின் கேலிக்கூத்து ஆகும். பல வாரங்களாக UAW கிறைஸ்லர் மற்றும் பியட் நிர்வாகிகளுடனும், ஒபாமா நிர்வாகத்துடனும் இரகசியப் பேச்சு வார்த்தைகளை நடத்திவருகிறது. எப்பொழுதும் போல் தொழிலாளர்களுக்கு இவ்விவாதங்கள் பற்றி ஏதும் கூறப்படுவது இல்லை. இப்பொழுது நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் UAW ஆகியவை திவால் தன்மை அச்சுறுத்தல் மூலம் அழுத்தம் கொடுத்து கிறைஸ்லர் தொழிலாளர்களை வேலைகள், ஊதியங்கள், நலன்கள் ஆகியவற்றை இழக்கக்கூடிய கையெழுத்தை இடுவதற்கு நம்பிக்கை கொண்டுள்ளன. தொழிலாளர்களுக்கு செவ்வாயன்று ஒப்பந்தம் கொடுக்கப்படும், 24 மணி நேரத்திற்குள் அவர்கள் அதன் உட்பொருள் குறித்து முடிவெடுக்க வேண்டும்.

கிறைஸ்லர் தொழிலாளர்கள் இயன்றளவு இதைப்பற்றி இருட்டில் வைக்கப்படுகையில், புதிய சலுகைகளின் உட்பொருள் பற்றி சந்தேகம் உடையவர்கள் GM உடைய தலைமை நிர்வாகி Fritz Henderson அறிக்கையை பார்த்தால் போதும். 23,000 மணிநேர ஒப்பந்த வேலைகளை அகற்றுவதற்கு GM திட்டங்களை வெளியிட்டது; இது மொத்த தொழிலாளர் தொகுப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான எண்ணிக்கை ஆகும், இதைத்தவிர 16 ஆலைகளையும் மூடத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது! வோல் ஸ்ட்ரீட்டிற்கு அதிக இலாபம் வரவேண்டும் என்பதற்காக, நிதிய உயரடுக்கு நிறுவனங்களை மறுகட்டமைக்கும் திட்டத்தில், இதுதான் கிறைஸ்லர் மற்றும் கார்த் தொழில் முழுவதும் பயன்படுத்துவதற்கு தயாராய் வைக்கப்பட்டுள்ளது.

கிறைஸ்லர் தொழிலாளர்கள் இந்தக் காட்டிக் கொடுப்பிற்கு எதிராக பெருமளவில் வாக்கு அளிக்க வேணடும். தொழிலாளர்களிடம் சங்கம் கூறுவது அனைத்தும் பொய்தான். இப்புதிய உடன்பாடு, இடைவிடாமல் சலுகைகளை இழக்க வைப்பதில், ஊதியங்களை குறைப்பதில், பணி நிலைமைகளை தகர்ப்பதில், ஓய்வுதியங்களை அழிப்பதில் வரவிருக்கும் நடவடிக்கைகளில் முதலாவதுதான். மற்றவற்றுடன், தொழிலாளர்களை ஆயிரக்கணக்கில் வெளியேற்ற நிறுவனம் தயார் செய்கையில் துணை வேலையின்மை நலன்களும் குறைக்கப்படும்

ஞாயிறன்று கனேடிய கார்த் தொழிலாளர்கள் கனடாவில் இருக்கும் கிறைஸ்லர் தொழிலாளிகள் மகத்தான இழப்புக்களை பெறும் வகையில் கையெழுத்திட்டனர்; இவற்றில் ஊதிய, பிற நலன் இழப்புக்கள் கனேடிய $19 ஒரு மணிநேரத்திற்கு ஒரு தொழிலாளிக்கு என்று ஏற்படும். இதற்கு மறுநாள் GM தானும் அதன் கனேடியத் தொழிலாளர் தொகுப்பை பாதிக்கும் மேலாக தகர்க்க இருப்பதாக, அதாவது 6,000 வேலைகளை அழிப்பதாக அறிவித்தது.

இதில் எந்தத் தவறுக்கும் இடமில்லை: தங்களுடைய வேலைகள், ஊதியங்கள் மற்றும் நலன்களை இழப்பதற்கான உடன்பாட்டில் தொழிலாளர்கள் கையெழுத்திடுமாறு கோரப்படுகிறார்கள். இந்தக் காட்டிக் கொடுப்பிற்கு ஈடாக UAW கிறைஸ்லரில் பங்குகளில் 55 சதவிகிதத்தை பெற்றுக் கட்டுப்பாட்டதை கொள்ளும்; சங்க அதிகாரத்துவத்தினருக்கு நிறுவனத்தின் பெரும் பங்கு உரிமையாகும். இதற்காகத்தான் UAW எந்த விவாதமும் இல்லாமல் கிறைஸ்லர் ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்த விரும்புகிறது.

கார்த் தொழிலாளர்கள் மீதான இத்தாக்குதலுக்கு பராக் ஒபாமா அரசாங்கத்தின் முழு ஆதரவு இருக்கிறது. கடந்த மாதம் நிர்வாகம் கிறைஸ்லர் மற்றும் GM ன் மறுகட்டமைப்புத் திட்டங்களை நிராகரித்தது. நிர்வாகமும் அதன் கார்த் தொழில் செயல்பிரிவுக் குழுவும் --வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர் Steven Rattner தலைமையில்-- இன்னும் இழப்புக்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என விரும்பின. ஒபாமா ஏப்ரல் 30 இறுதிநாள் என்ன கெடுவை வைத்தார்; அதற்குள் UAW உடன் ஒப்பந்தம் வேணைடும், நிறுவனத்தின் பத்திர உரிமையாளர்கள் இத்தாலிய கார்த் தயாரிப்பாளர் பியட்டுடன் இணைய வேண்டும் என்று. GM க்கு ஜூன் 1 வரை அதன் வேலைகள், ஊதியக் குறைப்புக்கள் பற்றி முடிவு எடுக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்று பெரிய கார்த் தொழிற்சாலை தொழிலாளிகள் மட்டும் இல்லாமல், தொழிலின் கணிசமான பிரிவுகளும், உதிரி பாகங்கள் கொடுப்பவர்கள், விற்பனையாளர்கள் போன்றவர்களும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளனர். திங்கள் அறிவிப்பின் ஒரு பகுதியாக GM நாடு முழுவதும் இருக்கும் 2,600 விற்பனைப் பிரிவுகளை மூடிவிடப்போவதாகக் கூறியுள்ளது.

கிறைஸ்லர் தொழிலாளர்கள் ஒப்பந்தத் திருத்தத்தை ஒப்புக் கொண்டாலும், உடனடியான திவாலை அது தடுக்க முடியாமல் போகக்கூடும். திவால் நீதிமன்றங்கள் இருக்கும் கடைமைகளை முற்றிலும் அகற்றி ஒப்பந்தங்களை தகர்க்க பெரிதும் விரும்பப்படும் கருவியாகத்தான் நிர்வாகங்களால் காணப்படுகின்றன. ஆனால் அரசாங்கமும், பத்திர உரிமையாளர்களும்--வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் JP Morgan Chase உட்பட--கிறைஸ்லர் தொழிலாளர்களிடம் திவால்தன்மைக்கான வழிவகை தொடங்கும் முன்பே ஒப்புதலைப் பெற முற்படுகளின்றனர்.

சலுகைககள் இழப்பிற்கு "வேண்டாம் வாக்கு அளியுங்கள்

கிறைஸ்லர் தொழிலாளர்கள் பல தசாப்தங்களாக செய்து வரும் UAW க்கு சரண் என்ற நிலைமையை மாற்றும் விதத்தில் புதனன்று "வேண்டாம்" வாக்களிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக் கொள்கிறது. பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கு ஏற்கனவே கார்த் தொழிலாளர்கள் மீது போர் தொடுத்து விட்டன. இந்த உண்மையை அறிந்து, தக்க முடிவுகளை எடுக்க வேண்டும்.

பெருநிறுவனங்கள் மற்றும் UAW வின் நோக்கம் கிறைஸ்லர் தொழிலாளர்களை GM தொழிலாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது ஆகும். இந்த மூலோபாயம் நிராகரிக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க அனைத்துக் கார்த் தொழிலாளர்களும் ஒன்றுபட்ட போராட்டத்தில் முழு தொழிலாள வர்க்கத்துடன் இறங்கும் தேவை வந்துள்ளது. கார்த் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் இதே போன்ற தாக்குதல்களை நாடு மற்றும் சர்வதேச முழுவதும் நடத்துவதற்கு முன்னோடியாக இருக்கும்.

எப்பொழுதும் போல் UAW அதன் உறுப்பினர்களிடம் இந்த இழப்புக்கள் "வேலைகளை காப்பாற்றத் தேவை" என்று கூறுகிறது. இது ஒரு பொய். கடந்த மூன்று தசாப்தங்களாக தொழிற்சங்கம் மேற்கொண்ட ஒவ்வொரு உடன்பாட்டை அடுத்தும் அதிக இழப்புக்கள், அதிக வேலைக்க உறைப்புக்களும் ஏற்பட்டுள்ளன. நூறாயிரக்கணக்கான வேலைகள் கார்த் தொழிலில் கடந்த ஆண்டு அகற்றப்பட்டு விட்டன. ஊதியங்கள் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன; பணி விதிகள் தூக்கி எறியப்பட்டு சுரண்டுதல் பெருகிவிட்டது; அதே போல் சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் இன்னும் பல நடைகள் அகற்றப்பட உள்ளன.

UAW உடன் முறித்துக் கொள்ளவும்; சுயாதீனமான காரியாளர்கள் குழுக்களை அமைத்திடுக!

பெருநிறுவனங்கள் தொழிலாள வர்க்கம்தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று உறுதியாக உள்ளன. தொழிலாளர்கள் இத்தாக்குதலை எதிர்க்க வேண்டும் என்றால், அவர்கள் இன்னும் கூடுதலான உறுதியைக் காட்ட வேண்டும். இதில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் போன்றவை இருக்க வேண்டும்.

அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஒரு நீண்டகால வர்க்கப் போராட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது; அதில் 1936-37 Flint ல் மகத்தான உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் என கார்த் தொழிலாளர்கள் நடத்தியதும் அடங்கும். தொழிலாள வர்க்கம் பெற்ற நலன்கள் அனைத்தும் பாடுபட்டுப் பெறப்பட்டவை ஆகும். இத்தகைய பெரும் போராட்ட மரபுகள் இன்று புதுப்பிக்கப்பட வேண்டும்.

எதிர்ப்பு அமைப்பு UAW, AFL-CIO மற்றும் Change to Win Coalition ஆகியவற்றுடன் முற்றிலும் முறித்தல் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த அமைப்புக்கள் --பெயரளவில் மட்டுமே தொழிற்சங்கங்களாக இருப்பவை-- தொழிலாள வர்க்கத்தின் காவலாக பெருநிறுவனம் கொண்டுள்ள கருவிகள் ஆகும்.

UAW கார்த் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக இது தீவிரமாக நிறுவனங்களுடனும் அரசாங்கத்துடனும் செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்க அதிகாரிகளின் பணப் பையை கனப்படுத்துவதைத் தவிர அவர்களுடைய முக்கியநோக்கம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் எதிர்ப்பை அடக்குவதும் ஆகும். தொழிற்சங்கத்தில்தான் உறுதியான விரோதி இருப்பதை தொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்றனர்.

Chrysler உடன் கொண்ட உடன்பாட்டின்படி UAW அதன் ஓய்வூதிய அறக்கட்டளை நிதிக்கு வர வேண்டிய $10 பில்லியனுக்கும் மேலான பணத்திற்கு பங்குகளை பெறும். இதையொட்டி UAW கிறைஸ்லரின் பங்குகளில் 55 சதவிகித்தை கட்டுப்படுத்தும். பியட் 35 சதவிகிதத்தைப் பெறும், அரசாங்கம் மற்றும் பத்திரச் சொந்தக்காரர்கள் எஞ்சிய 10 சதவிகிதத்தை பெறுவர். இதே போன்ற உடன்பாடுதான் GM உடனும் கருதப்படுகிறது; அது தொழிற்சங்கத்தை நிறுவனத்தின் பங்குகளில் 39 சதவிகிதத்தை பெறும்படி செய்யும். இந்த இரு உடன்பாடுகளிலும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் நேரடியாக கார்த் தொழிலாளர்களைக் கூடுதலாக சுரண்டுவதில் அதிக நலன்களைப் பெறுவர்.

வெகுஜன எதிர்ப்பிற்கான அமைப்புமுறைக்கு புதிய அமைப்புக்கள் தேவைப்படுகின்றன--சுயாதீனமாக தொண்டர்கள் குழுக்கள், தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் அமைக்கப்பட வேண்டும்.

ஜனநாயக, குடியரசுக் கட்சிகளிடம் இருந்து முறித்துக் கொள்ளவும்!

குடியரசுக் கட்சியை விட சிறிதும் குறையாத வகையில்தான் ஜனநாயகக் கட்சியும் பெரிய வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் நலன்களுக்குப் பாடுபடுகிறது. இது ஒபாமா நிர்வாகத்தின் அப்பட்டமான இரட்டை தரம் கார்த் தொழிலைப் பொறுத்த வரையில் காட்டுவதில் மிகவும் தெளிவாக தெரிகிறது.

எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வங்கிகளுக்கும் நிதிய அமைப்புக்களுக்கும் கொடுக்கப்படுகின்றன அவைதான் பொருளாதார நெருக்கடிக்கே பொறுப்பு ஆகும். ஆனால் கார்த் தொழிலுக்குக் கொடுக்கப்படும் கடன்களும் நிபந்தனைகள், அதுவும் செலவினங்களைப் பெரிதும் குறைக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் வேண்டும் என்ற விதத்தில் கூறப்படுகின்றன. வங்கி நிர்வாகிகளுடன் கொண்டுள்ள ஒப்பந்தங்களை மீறுவதில்லை; அதே நேரத்தில் தொழிலாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் கிழித்து எறியப் படுகின்றன அல்லது ஒரு கண முன்னறிவிப்பில் மறு பரிசீலனைக்கு வருகின்றன.

UAW ஒபமா தங்கள் நலன்களுக்கு புஷ்ஷை விட பரிவுணர்வு காட்டுவார் என்று தொழிலாளர்கள் நம்புவதற்கு ஊக்கம் அளித்தது. இதுவும் ஒரு பொய்தான். பல தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் ஜனநாயகக் கட்சியுடனும் அமெரிக்க இரு கட்சி முறையுடனும் தொழிலாளர்களைப் பிணைக்கும் முயற்சியில்தான் உள்ளன. இது தொழிலாளர்களை எந்த அரசியல் குரலும் இல்லாமல் செய்துவிட்டது; மேலும் தொழிலாளர்களை அரசாங்க ஆதரவு பெற்ற வேலைகள் ஊதியங்கள் தாக்குதலுக்கு எதிராக ஆயுதங்கள் ஏதும் இல்லாமலும் செய்துவிட்டன.

கார்த் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்

தொழிலாளர்களின் போராட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்கள் ஒரு புதிய அரசியல் மூலோபாயத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். கார்த் தொழிலாளர்கள் ஒரு நிறுவனம் அல்லது ஒரு தொழில்துறையின் நெருக்கடியை மட்டும் எதிர்கொள்ளவில்லை; முழு சமூக முறை, அதாவது முதலாளித்துவ முறையின் தோல்வியை எதிர்கொள்ளுகின்றனர். தனியார் இலாபத்தின் நலன்களுக்கு அனைவரின் பொருளாதார வாழ்வை தாழ்த்துதலும் நிதிய உயரடுக்கின் செல்வக் குவிப்பும்தான் இப்பேரழிவிற்கு வகை செய்துள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் அடிப்படைத் தேவைகள் கிடைக்கப்பெறுவதற்கு இத்தகைய பகுத்தறிவற்ற, அழிவைத் தரும் சமூக அமைப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்தல் இன்றியமையாதது ஆகும். இதன் பொருள் வங்கிகள் மற்றும் பெரு நிறுவனங்களைப் பொதுப் பயன்பாட்டு வசதிகளாக மாற்றி அவை தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். உலகப் பொருளாதாரம் ஒரு சில பண வெறி பிடித்த நிதியப் பிரபுத்துவத்தின் மிரட்டலுக்கு இனியும் கீழ்ப்பணிந்து செயல்படக்கூடாது.

அமெரிக்காவில் இருக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாளர்களுடன் இணைந்து ஒன்றுபட்ட முறையில் போராட்டம் நடத்தினால் ஒழிய தங்கள் நலன்களைக் காக்க முடியாது. பெருநிறுவனங்களும் அவற்றின் அதிகாரத்துவங்களும் தொழிலாளர்களை ஒருவர்க்கு ஒருவர் எதிராக ஏவிவிட்டு வலுவிழக்கச் செய்வதில் ஈடுபட்டுள்ளன. இந்த தேசியவாத முன்னோக்குகள் தொழிலாளர்களுக்கு என்று இல்லாமல் பெருநிறுவனங்களுக்குத்தான் நலன் கொடுக்கும்; மேலும் அவை புதிய சுற்றுத் தாக்குதல்களுக்கும் வழிவகுக்கும். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாளருக்கும் பெருநிறுவன-நிதிய உயரடுக்கு என்ற பொது விரோதிகள்தான் உள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான எதிர்ப்பிற்கு தலைமைதாங்கி, நெறிப்படுத்தி அதற்கு அரசியல் தலைமை அளிப்பதாகும். அமெரிக்கா மற்றும் சர்வதே அளவில் இருக்கும் தொழிலாளர்களை சோசலிசத்திற்கான பொதுப் போராட்டம் நடத்துவதற்கு ஒன்றுபடுத்த விழைகிறோம் --அதாவது சமத்துவத்திற்கும் இவ்வுலகில் இருக்கும் செல்வம் பகுத்தறிவார்ந்த, ஜனநாயக முறையிலான பயன்பாட்டை அடைவதற்கும் ஆகும்.

அனைத்துத் தொழிலாளர்களும் தங்கள் வேலைகளையும் வாழ்க்கைத் தரங்களையும் காக்க இன்றே போராட்டத்தைத் ஆரம்பிக்குமாறு நாம் வலியுறுத்துகிறோம். சலுகைகள் இழப்பை எதிர்க்கவும்! கீழ் மட்ட அணியின் குழுக்களை அமைக்கவும்! சோசலிச சமத்துவக் கட்சியின் சேருக!

SEP உடன் தொடர்பு கொள்ள, இங்கு 'கிளிக்' செய்யவும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved