World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain's Socialist Party government suppresses torture probe of Bush officials

ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் புஷ் அதிகாரிகள் சித்திரவதை விசாரணையை மறைத்து வைக்கிறது

Paul Mitchell
25 April 2009

Back to screen version

ஒபாமா நிர்வாகமும் ஸ்பெயின் சோசலிசக் கட்சி (PSOE) அரசாங்கமும் இணைந்து செயல்பட்டு உயர்மட்ட புஷ் அதிகாரிகள் குற்ற விசாரணைக்கு உட்படுவதை தடுக்க முயல்கின்றன.

ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் பிரதம மந்திரி ஜோஸ் லூயி ஸபத்தேரோவும் ஈராக் போருக்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பு, மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் சட்டவிரோத காவல், சித்திரவதை போன்றவற்றின் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பின் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். மாறாக அவர்கள் இக்குற்றங்களை செய்தவர்களை காப்பாற்றுவதற்கு உலகளாவிய முயற்சியில் ஒத்துழைக்கின்றனர்.

ஸ்பெயினின் தலைமை வக்கீல் கான்டிடோ கோண்டே-பும்பிடோ, இம்மாத தொடக்கத்தில் புஷ் நிர்வாகத்தின் ஆறு அதிகாரிகள்மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற முறையீட்டு மறுத்திருந்தார். அந்த முடிவு ஸ்பெயினின் சோசலிசக் கட்சி அரசாங்கம் அதன் முக்கிய சட்டநிபுணராக நியமித்திருந்தவரால் எடுக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெள்ளை மாளிகையின் முன்னாள் வக்கீலும் பின்னர் நாட்டின் தலைமை வக்கீலுமான ஆல்பெர்ட்டோ கோன்சலேஸ், முன்னாள் துணை தலைமை வக்கீல் ஜே பைபீ, முன்னாள் துணை உதவி தலைமை வக்கீல் ஜோன் யூ, முன்னாள் பாதுகாப்புத் துறை தலைமை வக்கீல் வில்லியம் ஹேன்ஸ், முன்னாள் பாதுகாப்புத்துறை உதவிச் செயலர் டுக்லஸ் பீத் மற்றும் முன்னாள் தலைமை அலுவலரும் துணை ஜனாதிபதி டிக் சென்னியின் சட்ட ஆலோசகருமான டேவிட் அடிங்டன் ஆகியோர் ஆவர்.

அவர்களுக்கு எதிரான வழக்கு கைதிகளின் தகுதிகளுக்கான அமைப்பால் (Association for the Dignity of Prisoners) தொடுக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் ஒரு கொள்கையை சட்டபூர்வமாக இயற்றியதற்கு பொறுப்பு என்றும் அந்தக் கொள்கை ஆறு ஸ்பெயின் நாட்டுக் குடிமக்களை குவாண்டநாமோ வளைகுடாவில் சித்திரவதைக்கு உட்படுத்தியது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது. அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சமீபத்தில் வெளியிடப்பட்ட 9/11க்கு பின்னர் தயாரிக்கப்பட்ட இரகசியக் குறிப்புக்கள் உள்ளன. இவை அமெரிக்க நீதித்துறை சட்டவிரோத மற்றும் தவறான விசாரணை முறைகளுக்கு ஒப்புதல் கொடுத்த விவரங்களை காட்டுகின்றன. அவற்றில் நீரில் மூழ்கடித்தல் போன்றவை அமெரிக்காவினால் பிடிக்கப்பட்டிருந்த அல் குவைதா செயலர்கள் எனக் கூறப்பட்டவர்கள்மீது நடத்தப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி பால்டசால் கார்சான் வழக்கை ஏற்று ஸ்பெயினுடைய தேசிய நீதிமன்றத்தில் உள்ள குற்றப்பிரிவு வக்கீல்களுக்கு வழக்கைத் தொடரலாமா என கருத்தே கேட்டு அனுப்பி வைத்திருந்தார். கோண்டே-பும்பிடோ குறுக்கிட்டு வழக்கை மூடிவிட்டார். "இவர்களுக்கு எதிராகப் புகார் பதிவு செய்யக் காரணம் உள்ளது என்றால், அது அதிகார வரம்புடைய உள்ளூர் நீதிமன்றங்களில், அதாவது அமெரிக்காவில்தான் செய்யப்பட வேண்டும்" என்று அவர் கூறிவிட்டார்.

சேர்பியத் தலைவர்களை குற்றவிசாரணைக்கு உட்படுத்திய வரம்பை இவர் தலைகீழாக மாற்றினார். அதில் முன்னாள் யூகோஸ்லேவிய ஜனாதிபதி சுலோபோடான் மிலோசுவிக் பால்கன் போரில் நிகழ்ந்த குற்றங்களில் "கட்டுப்பாட்டு பொறுப்பை கொண்டிருந்ததற்காக" விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் "போர் கைதிகளை தவறாக நடத்தும் குற்றம் பற்றி விசாரணை என்றால், அதை செய்தவர்கள்மீது நேரடியாக புகார் பதிவு செய்யப்பட வேண்டும்" என்று கூறப்பட்டது.

ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் உலகரீதியாக நீதிக்குட்படுத்தும் கொள்கையை தடுக்கும் வகையில் அழுத்ததை அதிகரித்துள்ளது. அதனால், மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டிற்கு உட்படும் உயர்மட்ட அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வது என்பது தொடக்கத்திலேயே தடைக்கு உட்பட்டுவிடும்.

ஸபாத்தோரோ அரசாங்கம் இதைப் பொறுத்த வரையில் உள்நாட்டு கவலைகளையும் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு தளபதி பிரான்ஸிஸ்கோ பிராங்கோவின் பாசிச ஆட்சிக்கு எதிராக மரண தண்டனைகள், அடக்குமுறை பற்றிய விசாரணைகளைக் கைவிட நேர்ந்தது. அப்பொழுதும் இதே போன்ற குறுக்கீடு கோண்டே பும்பிடோவினால் செய்யப்பட்டது; அவர் சர்வாதிகாரியின் மரணத்திற்கு பின்னர் பாராளுமன்ற காலத்திற்கு மாற்றம் நடந்தபோது கடைபிடிக்கப்பட்ட "மெளன உடன்பாட்டை" குறைமதிப்பிற்கு உட்படுத்துவது என்பது அரசியல்ரீதியாக வெடிப்பு தன்மையை கொடுத்துவிடும் என்ற அச்சத்தால் உந்துதல் பெற்று நிறுத்தினார்.

ஆனால் புஷ் அதிகாரிகள் மீதான குற்றவிசாரணையை நிறுத்தும் முடிவிற்கு முக்கிய உந்துதல் சக்தி அமெரிக்க அரசாங்கம் செலுத்திய அழுத்தும் ஆகும். ஸபாத்ரோவிற்கும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் இடையே ஈஸ்டரை ஒட்டி பல தொடர்ந்த பேச்சுக்கள் நடைபெற்றன. அப்பொழுது வாஷிங்டன் ஐயத்திற்கு இடமின்றி புஷ் அதிகாரிகள், CIA விசாரணை நடத்தியவர்கள்மீது குற்றச்சாட்டைத் தடுக்க வேண்டும் என்ற தன்னுடைய முடிவைத் தெளிவாக்கியிருந்தது.

ஜனாதிபதி புஷ், துணை ஜனாதிபதி சென்னி, தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ், பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட், வெளிவிவகார செயலாளர் கொலின் பெளல் மற்றும் CIA சித்திரவதை உத்திகளுக்கு ஒப்புதல் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை கூடாது என்பதால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளைக் குறைக்க ஒபாமா அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது என்ற செய்தி ஊடகத் தகவல்கள் வரும்போது, ஸ்பெயினின் வக்கீல்கள் ஏதேனும் செய்ய நினைத்தால் அம்முயற்சிகளும் அகற்றப்பட வேண்டும்.

CNN Espanol பேட்டியாளர் Juan Carlos Lopez, புஷ் அதிகாரிகளை நீதிக்கு முன் நிறுத்துவது பற்றிய முயற்சிகள் ஸ்பெயினில் நடைபெறுவது பற்றிய வினா ஒன்றிற்கு விடையிறுக்கையில் ஒபாமா பதில் கூறினார்: "பின்னோக்கிப் பார்க்கக் கூடாது, முன்னோக்கிப் பார்க்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன்." என்றார்.

ஸ்பெயின் அரசாங்கத்துடன் இப்பிரச்சினைகள் பற்றி "நேரடி உரையாடல்களில்" ஈடுபடவில்லை என்ற கூறினாலுர் ஒபாமா அவருடைய குழு பேசி வருகிறது என்பதை ஒப்புக் கொண்டார். அமெரிக்க வெளிவிவகாலத்துறை இவ்வழக்கு பற்றி ஸ்பெயின் அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாக தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.

கைதிகளின் தகுதிகளுக்கான அமைப்பு தங்கள் வழக்கை மார்ச் 17ல் தொடக்கியபின், மாட்ரிட்டில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் தேசிய நீதிமன்றத்தின் தலைமை வக்கீல் Javier Zaragoza வை அழைத்து குற்றச்சாட்டுக்களின் தன்மையை விளக்குமாறும் அவை இதுவரை ஏன், எப்படி அனுமதிக்கப்பட்டன என்பதை விளக்குமாறும் கோரப்பட்டார்.

தனக்கு முன்பு பதவியில் இருந்தவர் செய்த அரசாங்கக் குற்றங்களை, உள்நாட்டில் சட்டவிரோத ஒற்றுவேலை, சித்திரவதை, கடத்தல்கள் மற்றும் கால வரையற்று காவலில் வைத்தல் ஆகியவற்றை மூடிமறைக்கும் ஒபாமாவின் முயற்சிகளுக்குப் பின்னணியில் புஷ் ஆண்டுகளின் ஒருதலைப்பட்சநிர்வாக அதிகாரத்தின் பரந்த விரிவாக்கத்தை நிலைநிறுத்தும் விருப்பமும் உள்ளது. இரகசிய குறிப்புக்களின் தளத்தில் இருந்த சர்வாதிகார கருத்துக்களின் இதயத்தானத்திலும் இதே உணர்வுதான் இருந்தது. ஒபாமா, அவருடைய ஆலோசகர்கள் மற்றும் அவர்கள் வழிபடும் இராணுவ-உளவுத்துறை அமைப்பு ஆகியவை அடக்குமுறைக் கட்டமைப்புக்கள் மற்றும் சட்டங்கள் என்று புஷ் அமெரிக்க சமூகத்திற்குள் உருவாகி வந்த வெடிப்புத்தன்மை அழுத்தங்களுக்கு எதிராக இயற்றியவற்றை தக்க வைக்க விரும்புகின்றன. இன்னும் கூடுதலான வகையில், பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையின்போது, ஜனநாயக வடிவமைப்புக்கள் சமூகச் சமத்துவமின்மை பெரும் அதிர்ச்சி தரக்கூடிய நிலையில் செயல்பட முடியாது என்றுள்ள நிலையில், அரசியல் அதிகார ஏகபோக உரிமை நிதியப் பிரபுத்துவத்தால் இரு ஊழல் மிகுந்த, அடிபணிந்து நிற்கும் கட்சிகள் மூலம் செலுத்தப்படும்போது இந்த நிலைதான் இருக்கும்.

இதே அடிப்படை கருத்துக்கள்தான் ஸபடேரோ அரசாங்கத்தின் செயல்களுக்குப் பின்னும் உள்ளன. ஸ்பெயின் சோசலிசக் கட்சி ஒரு மகத்தான போர் எதிர்ப்பு உணர்வை அடுத்து 2004ம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்தது. அதற்கு காரணம் மக்கள் கட்சி அரசாங்கம் மாட்ரிட்டில் நடந்த குண்டுவீச்சுக்களுக்கு பாஸ்க் பிரிவினைவாதிகள் மீது(ETA) பொறுப்பு எனக்கூறிய முயற்சியினால் வந்த சீற்றம் ஆகும். அது ஈராக் போரில் ஸ்பெயின் பங்கிற்கும் குண்டுவீச்சுக்களுக்கும் இடையே உள்ள தொடர்பை மறைக்கப்பார்த்தது.

அந்த வாக்கு புஷ், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் ஸபடேரோவிற்கு முன்பு பதவியில் இருந்த Jose Maria Aznar ஆகியோருடைய போர் வெறிக்கு பரந்த, ஆழ்ந்த, தீவிர மககள் எதிர்ப்பைத்தான் வெளிப்படுத்தியது. அந்நேரத்தில் ஸபடேரோ அனைத்து ஐரோப்பியத் தலைவர்களையும் விட இடதுசாரி மற்றும் போர் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினார். ஈராக்கில் இருந்து ஸ்பெயின் படைகள் 1,300 உடனே திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார்.

ஈராக் போர் ஒரு பேரழிவு எனக் கருதப்பட்டாலும்,ஸ்பெயின் சோசலிசக் கட்சி அமெரிக்க இராணுவவாதத்தை எதிர்க்கும் விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆப்கானிஸ்தானத்தில் தன்னுடைய துருப்புக்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இது கடந்த மாதம் இன்னும் 1,000 உயர்த்தப்பட்டுள்ளது.

புஷ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை தடுத்தல் என்றும் முடிவு ஏகாதிபத்திய அரசியலின் யதார்த்தங்களாக வரும்போது ஜனநாயக நெறிகளுக்கான தமது வனப்புரையான கடமைப்பாட்டை கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதைத்தான் நிரூபணம் செய்கிறது. இது முதலாளித்துவ அரசாங்கம் அப்பொழுது எப்படிப்பட்ட அரசியல் வண்ணத்தைக் கொண்டிருந்தாலும் நிகழ்வதுதான்.

ஸபாதேரோ அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முக்கியமாக இருப்பது வாஷிங்டனுடன் அரசிசயல் உறவுகளை மீட்பதின் தேவை மட்டும் அல்ல. ஸ்பெயினின் முதலாளித்துவமுறை பெரும் திகைப்பு நிலையில் இருக்கும் போது, சமூக அழுத்தங்கள் மிகவும் அதிகமாக உள்ள நேரத்தில், ஆளும் உயரடுக்கு தன்னுடைய உலக விழைவுகளை அதிகப்படுத்தும் எவ்வித முயற்சிகளுக்கும், இராணுவப் பயன்பாடு உட்பட, தடை வந்தால் அது பொறுத்தக் கொள்ள முடியாதது ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் நடைமுறை மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் சட்டத் தடைகள் அல்லது ஜனநாயகப் பொறுப்பு ஆகியவற்றில் இருந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். அதுவும் தங்கள் அடக்குமுறை நடவடிக்கைகள் காக்கப்பட வேண்டும் என்றால்.

இராணுவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கான போராட்டத்திற்கு ஒரே அடிப்படை மூலதனத்தின் அனைத்துவித பிரதிநிதிகளுக்கும் எதிராக தொழிலாளர் வர்க்கம் அனைத்தும் சுயாதீன அரசியல்ரீதியாக, சர்வதேச அளவில் திரட்டப்படுவது ஒன்றுதான். மூலதனப் பிரதிநிதிகள் என்று கூறும்போது வலதுசாரிகள் மட்டுமல்லாது உத்தியோகபூர்வ "இடதுகள்" மற்றும் அனைத்தும் அடங்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved