:ஆசியா
: பாகிஸ்தான்
Pakistan's government suppresses opposition protests
எதிர்க்கட்சி எதிர்ப்புக்களை பாக்கிஸ்தான் அரசாங்கம் அடக்குகிறது
By Keith Jones
13 March 2009
Use this version to
print | Send
this link by email | Email
the author
முன்பு அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷாரப் பயன்படுத்திய
ஜனநாயக விரோத நடவடிக்கைகளைப் போலவே பாக்கிஸ்தான் அரசாங்கம் முக்கிய எதிர்க்கட்சி மற்றும் வக்கீல்கள்
குழுக்கள் தொடங்கியுள்ள போராட்டத்தை அடக்குவதற்கான நடவடிக்கைகளை பயன்படுத்துகிறது.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பிரிட்டிஷ் குடியேற்ற
காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டத் தொகுப்பின் கடுமையான பிரிவைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்கள்,
அணிவகுப்புக்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு எதிரான தடைகளைச் சுமத்தியுள்ளது.
புதனன்று போலீசார் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தொண்டர்கள் நூற்றுக்
கணக்கானவர்களை தடுப்புக் காவலில் வைத்தனர்; அதே போல் நவம்பர் 2007ல் முஷாரப் பதவியில் இருந்த
அகற்றிய உயர்நீதி மற்றும் தலைமை நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் இருத்த தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள
வக்கீல்களையும் தடுப்புக் காவலில் வைத்தனர். மார்ச் 16 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள பாராளுமன்றத்திற்கு
முன்னால் ஒரு காலவரையறையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பிக்க ஆதரவுதிரட்டுமுகமாக வியாழக்கிழமை
ஆரம்பமாக திட்டமிடப்பட்டுள்ள ''நீண்ட நடைப்பயணம்'' எனப்படும் நாடுதழுவிய கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும்
தடைசெய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
நேற்று கைத்தடிகள் ஏந்திய போலிசார் கராச்சியில் நீண்ட நடைபயண ஆர்ப்பாட்டக்காரர்களை
தாக்கி ஏராளமான மக்களை கைது செய்தனர். இராணுவத் துருப்புக்களும் எதிர்ப்புக்கள் அதிகமானால் அவற்றை
சமாளிக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நீண்ட நடைபயணத்தின் முக்கிய நோக்கம் நீதிபதிகளை பதவியில் மீண்டும் இருத்த
வேண்டும் என்பதாகும். ஆனால் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சிக்கு
இடையே அரசியல் போராட்டம் தீவிரமாகியிருக்கையில், இது முன்னாள் பிரதம மந்திரி நவாஸ் ஷரிப் அவரையும்
அவருடைய கட்சியையும் ஒதுக்கி வைக்கும் உறுதியான ஜனநாயக விரோத அரசாங்கத்தின் தொடர்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைத் திரட்டுவது என்று உள்ளது.
முதலில் பாக்கிஸ்தான் ஜனாதிபதியும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான ஆசிப்
அலி ஜர்தாரி தலைமை நீதிமன்றத்தை ஷரிப் மற்றும் அப்பொழுது பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த அவருடைய
சகோதரர் இருவரும் பொது பதவிக்கு தகுதியற்றவர்கள் என தீர்ப்பளிக்கும்படி அழுத்தம் கொடுத்தார். இது
தயாரிக்கப்பட்ட குற்றவியல் தண்டனைகள் அவர்களுக்கு எதிராக முஷாரப்பினால் கொடுக்கப்பட்டு அவர்
பாக்கிஸ்தானின் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷரிப்பை 1999ல் அகற்ற உதவியது என்பது கருத்திற்
கொள்ளப்பட வேண்டும். இதையடுத்து ஜர்தாரி தலைமை நீதிமன்றத் தீர்ப்பை ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தி
பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்கும் (நவாஸ்-PML(N)
அரசாங்கத்தை பஞ்சாபில் இருந்து அகற்ற பயன்படுத்தி, "ஆளுனர் ஆட்சி" அகற்றப்பட்டபின் பாக்கிஸ்தான் மக்கள்
கட்சி அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க உறுதி கொள்ளும் என்றார். அம்மாநிலத்திலோ பாக்கிஸ்தானின் மொத்த
170 மில்லியன் மக்கள் தொகையில் 60 சதவிகிதம் இருக்கின்றனர்.
இந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சில காலமாகத் தயாரிப்புக்கள்
நடைபெற்றன. கடந்த மாத இறுதியில், நிர்வாகத் திறமை என்ற பெயரில் ஒரு ஜனாதிபதி ஆணையை வெளியிட்டு
நடமாடும் நீதிமன்றங்களை நிறுவினார் இந்த நடவடிக்கை 1919ல் பிரிட்டிஷாரல் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக
மக்கள் தீவிரமாகப் போராடியபோது பயன்படுத்தப்பட்டிருந்தது. இறுதியில் பாராளுமன்றம் தொடரில் இல்லாத
காலத்தில்தான் ஜனாதிபதி ஆணைகளை வெளியிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார் என்று சுட்டிக்
காட்டப்பட்டபோது, இது கைவிடப்பட்டது.
இந்த வாரத் துவக்கத்தில் உள்துறைப் பிரிவில் பிரதமருக்கு ஆலோசகராக இருக்கும்
ரெஹ்மான் மாலிக் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஷரிப் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்படலாம் என்றும்
வன்முறை ஏதேனும் நிகழ்ந்தால் நீண்ட நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ள தலைவர்கள் மீது அதற்குப் பொறுப்பு
ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஷரிப்பின் உரைகள் பலவற்றை மேற்கோளிட்ட மாலிக்
PML(N) தலைவர்
போலீஸ் உட்பட அனைத்து மக்களையும் அரசாங்கத்திற்கு கீழ்ப்படியக்கூடாது என்று கூறுகிரார்; "மக்களை
கீழ்ப்படியாமல் இருக்குமாறு தூண்டுவது தேசத்துரோக குற்றம் ஆகும்" என்று அறிவித்த மாலிக், "இதற்கு ஆயுள்
தண்டனை கொடுக்கபடலாம்" என்றார்.
சமீப காலமாக ஷரிப் ஜர்தாரியைப் பற்றி மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்;
முஷாரப்பின் "விசாரணையற்ற நீதிமன்றங்களை" (kangaroo
courts) அவர் தக்க வைக்க விரும்புவதாகவும், குற்றம்
சாட்டியுள்ளார்; பகிரங்கமாக அகற்றப்பட்ட நீதிபதிகள் மீட்கப்படுவர், அரசியலமைப்பு திருத்தப்பட்டு முஷாரப்
மற்றும் முந்தைய இராணுவ சர்வாதிகாரி ஜியாவுல் ஹக் ஆகியோர் ஜனாதிபதி பதிவிக்கு கொடுத்திருந்த பரந்த
அதிகாரங்கள் அகற்றப்படும் ஆகியவற்றைக் கைவிட்டுவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரிவுகள் தன்னைப் படுகொலை செய்யத் தீவிரமாக
இருப்பதாகவும் ஷரிப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். "உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளிடம் என்னுடைய உயிரிற்கு
ஆபத்துக்கள் இருந்து வருகின்றன என்று எனக்குத் தகவல்கள் வந்துள்ளன."என்றார்.
திங்களன்று ஒரு கூட்டத்தில் பேசி ஷரிப், "பாக்கிஸ்தானைக் காப்பாற்ற
இஸ்லாமாபாத்திற்கு நீண்ட நடைபயணத்திற்கு எழுச்சி பெற்று சேருமாறு" மக்களை வலியுறுத்தியுள்ளார். "இங்கு
நான் காணும் உணர்ச்சி ஒரு புரட்சிக்கு முன்னோடி போல் உள்ளது என்று
PML(N) தலைவர்
கூறினார்.
வியாழனன்று இரு நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை ஜனாதிபதியுடன் எந்த பேச்சிற்கும்
இடமில்லை என்று ஷரிப் தெளிவாக்கியுள்ளார்: நீதிபதிகள் பதவியில் மீண்டும் இருத்தப்பட வேண்டும், பெப்ருவரி 25ம்
தேதி தலைமை நீதிமன்றம் அவரையும் அவருடைய சகோதரர் ஷபஸ் ஷரிப்பையும் தேர்தலில் நிற்க மற்றும் பொது
பதவி வகிப்பதைத் தடை செய்யும் தீர்ப்பு அகற்றப்படல் என்பவையே அவை.
PML(N) தலைவர்கள் வக்கீல்களின்
இயக்கத்தின்போது பல மூத்த போலீஸ் அதிகாரிகள் கட்சி ஆதரவாளர்களுக்கு உதவியதாகக் கூறி பதவியில் இருந்து
நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்; பல தலைவர்கள் தவிர்க்க முடியாமல் கைது செய்யப்படுவர் என்ற
எச்சரிக்கைக்கும் ஆளாகியுள்ளனர்.
அமெரிக்காவின் பங்கு
பாக்கிஸ்தானின் இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போராட்டம்
பாக்கிஸ்தானிய உயரடுக்கு மற்றும் மேலைத் தலைநகரங்களில் நாட்டின் முக்கிய அரசாங்க அமைப்புக்கள் பற்றி
கவலையைத் தூண்டிவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு கூடுதலாக பாக்கிஸ்தான்
உதவ வேண்டும் என்றும் அமெரிக்க அழுத்தம், பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் வாடிக்கையாக
இருக்கும் என்பது உட்பட, மக்களிடையே வாஷங்டனுக்கு எதிர்ப்பு உணர்வைத்தான் அதிகரித்துள்ளது. சாதரண மக்கள்
இந்த ஆட்சியை பாக்கிஸ்தானின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளின் தொடர்ச்சி என்றுதான் காண்கின்றனர்.
இதற்குச்சிறிதும் குறையாத வகையில்தான் உலகப் பொருளாதார நெருக்கடியின் சீர்குலையவைக்கும் பாதிப்பும்
உள்ளது. சமீபத்தில் பாக்கிஸ்தான் $7.6 பில்லியனை கடனாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றது.
அதற்கு ஈடாக அபிவிருத்திக்கான செலவினங்களைக் குறைத்துள்ளதுடன், எரிபொருளுக்கான மானியத்தொகைகள்
குறைக்கப்பட்டு, வட்டிவிகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே பாக்கிஸ்தானின் பொருளாதாரநிலைமை
தடுமாற்றத்தில் உள்ளது; அரசாங்கம் இன்னும் அதிக சர்வதே நாணய நிதியத்தின் ஆதரவை நாடியுள்ளது.
வியாழன்று, "அமெரிக்க, பிரிட்டிஷ் தூதர்கள் சமீப நாட்களில் இரு கட்சி
தலைவர்களுடனும் பேசி வன்முறை, குழப்பங்களைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்று
The Dawn
பத்திரிகை அறிவித்துள்ளது. பாக்கிஸ்தானிய இராணுவத் தலைவர்களும் திரைக்குப் பின்னால் தீவிரமாக
செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
பின்னர் வியாழனன்று பாக்கிஸ்தானில் அமெரிக்கத் தூதராக இருக்கும் ஆனி பாட்டர்சன்
ஷரிப்பையும் அவருடைய சகோதரர் ஷகாபாஸ் மற்றும் சில உயர்மட்ட
PML(N)
தலைவர்களையும் ஷரிப்பின் வீட்டில் சந்தித்தார். சில மணி நேரத்திற்குப் பிறகு அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான்,
பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கு சிறப்பு தூதரான ரிச்சர்ட் ஹோல்ப்ருக் பாட்டர்சன் மற்றும் ஜர்தாரியுடன் ஒரே
நேரத்தில் மூவர் பங்கு பெறும் தொலைபேசியில் பேச்சுக்கள் நடத்தினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
செய்யப்பட்டது பற்றி ஹோல்ப்ரூக் கவலை கொண்டுள்ளதாகவும் ஜர்தாரி எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டம்
என்றும் கூறியதாக Dawn
இடம் அடையாளம்காட்டவிரும்பாத ஆதாரங்கள் தெரிவித்தன.
இந்த நெருக்கடிக்குக் காரணம்
PML(N) உடைய
பிடிவாதப் போக்குத்தான் என்று ஜனாதிபதி குறைகூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் கொந்தளிப்பு
பாக்கிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமெரிக்க எதிர்ப்பு எழுச்சி சக்திகளுக்கு தைரியம் கொடுக்கும் அல்லது அவற்றை
அடக்கும் பாக்கிஸ்தானிய முயற்சிகளுக்குத் தடை கொடுக்கும் என்னும் ஹோல்புரூக்கின் கவலை பற்றி ஜர்தாரி
தன்னுடைய அரசாங்கம் பாக்கிஸ்தானுக்குள் தலிபானுடன் தோழமையுள்ள இயக்கங்களை முற்றிலும் அகற்றப் பாடுபடும்
என்று உறுதியளித்தார்.
இன்றுவரை ஒபாமா நிர்வாகத்தின் உறுப்பினர் எவரும் பகிரங்கமாக, மிகக் குறைந்த
அளவில்கூட, பாக்கிஸ்தான் அரசாங்கம் அரசியல் எதிர்ப்புக்களுக்கு விதித்துள்ள தடை பற்றியோ முக்கிய
எதிர்க்கட்சியை ஒதுக்கி வைக்கும் வெளிப்படையாக முயற்சிகள் பற்றியோ குறைகூறவில்லை. அமெரிக்கா இழிந்த
முறையில் பல தசாப்தங்கள் நீடித்துள்ள பாக்கிஸ்தானிய மக்களின் ஜனநாயக உரிமைகள் இஸ்லாமாபாத்தால்
முறையாக மீறப்படுதலுக்கு உடந்தையாகத்தான் இருந்து வந்துள்ள சான்றைக் கொண்டுள்ளது.
புதன்கிழமை அமெரிக்க வெளிவாவகார அமைச்சின் செய்தி ஊடகத்திற்குக் கொடுத்த
தகவலில், துறையின் செய்தித்தொடர்பாளர் ரோபர்ட் வூட் பாக்கிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி
தொடர்ச்சியான வினாக்களுக்கு அதிகம் விடை கொடுக்காமல் விட்டவிட்டார். தடையற்ற பேச்சு, கூடும் உரிமைக்
கொள்கைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை அறிவித்தாலும், வூட் இவற்றை பாக்கிஸ்தான் அரசாங்கம் மீறுவது பற்றி
உறுதியாகக் குறைகூற மறுத்துவிட்டார்.
பல மில்லியன் பணம் உடைய தொழில்துறை நிர்வாகியான ஷரிப் தன்னுடைய அரசியல்
வாழ்வை ஜியாவுல் ஹக்கிற்கு வேண்டப்பட்டவர் என்று துவங்கி சவுதி முடியாட்சியுடன் நெருக்கமான தொடர்பையும்
கொண்டுள்ளார். ஆயினும்கூட அவர் வாஷிங்டனால் எச்சரிக்கையுடன்தான் பார்க்கப்படுகிறார்; இதற்குக் காரணம்
அவர் இஸ்லாமிய அடிப்படைவாத வலதுகளுடன் கொண்டுள்ள நட்பு உறவுகள் ஆகும். 2007ல் புஷ் நிர்வாகம் முஷாரப்பின்
ஆட்சி சிதைந்துகொண்டிருப்பதைப் பார்த்த போது, தளபதிக்கும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் அப்பொழுதைய
தலைவராக இருந்த பெனாசீர் பூட்டோவிற்க்கும் இடையே சமரசத்தைக் கொண்டுவர முற்பட்டது. அந்த உடன்பாட்டில்
ஷரிப் எரிச்சலடையும்வகையில் ஒதுக்கப்பட்டிருந்தார்.
அதற்குப் பின் அவர் தன்னுடைய கணிசமான அரசியல் சக்தியைப் பயன்படுத்தி
முஷார்ப்பின் வளைந்து கொடுக்காத விரோதி என்று காட்டிக்
கொண்டு, மக்களுடைய அமெரிக்க எதிர்ப்பு உணர்விற்கும் உறுதியான அழைப்புவிட்டார். அதே நேரத்தில் ஷரிப்
பலமுறையும் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றும் தன் விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி
மற்றும் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்கும்(நவாஸ்)
PML(N) இரண்டும்
நீண்ட கால விரோதத்தன்மை உடையவை ஆகும். 1990 களில் ஷரிப் பல முறையும் இராணுவம், அதிகாரத்துவம்
ஆகியவற்றுடன் சேர்ந்து பாக்கிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்கங்களைக் கவிழ்த்துள்ளார். துவக்கத்தில் 1999
ம் ஆண்டு முஷாரப் ஷரிப்பை அகற்றியதை வரவேற்றார். 2007ல்
அவர் அமெரிக்க ஆதரவுடன் அதிகாரப் பகிர்வு உடன்பாட்டை தளபதியுடன் காண தயாராக இருந்தார். இதற்கு
அவரையும் ஜர்தாரியையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும்,
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்க செயற்பாடுகளில்
இருந்தும், அகற்றும் விதத்தில் ஜனாதிபதி ஆணை ஒன்றுதேவைப்பட்டது. ஆனால் அது ஷரிப்பை அரசியலில் பங்கு பெற
முடியாதவராகச் செய்துவிட்டது.
ஜர்தாரி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது, வெளிப்படையாக நீதிமன்றங்களையும்
ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களையும் பயன்படுத்தி
PML(N) இனை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது ஆகியவை
நீண்டகாலமாக இரு கட்சிகளிடையே அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியாகும். இது
விருப்பப்படி பதவிகளையும் பிற சலுககைகளையும் விரும்புவருக்குக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு உடந்தை ஆகும்.
ஆனால் ஜர்தாரி விரைவில் முஷாரப் போல் செயல்பட விரும்பும் தன்மையை எடுத்துக் கொண்டுள்ளது,
பாக்கிஸ்தானிய முதலாளித்துவத்தின் சார்பில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு மற்றும் சமூக
விரோத சர்வதே நாணய நிதியத்தின் மறுசீரமைப்புத்திட்டத்தைச் செயல்படுத்துவது போன்ற அவர் தொடரவிருக்கும்
மக்கள் ஆதரவற்ற கொள்கைகளை செயல்படுத்துவதின் ஒரு கூறுபாடுதான்.
கருத்துக் கணிப்புக்கள்படி, பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான
அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த தேர்தல்கள் நடந்து ஓராண்டிற்குப் பின்னர், முஷராப்பிற்குப் பதிலாக
ஜர்தாரி ஜனாதிபதியாக வந்த ஆறு மாதங்களுக்குப்பிறகு, கடந்த ஆண்டு தளபதி பதவியில் இருந்தபோது இவருக்குக்
கிடைத்த ஆதரவு சதவிகிதம்தான் இப்பொழுதும் உள்ளது.
பாக்கிஸ்தானின் இரு முக்கிய கட்சிகள் இராணுவத்துடன் நீடித்த மோதல் கொண்டால்
விளையக்கூடிய பாதிப்பு பற்றி வாஷிங்டன் குறிப்பாக கவலை கொண்டுள்ளது. தன்னுடைய ஓய்வு காலத்திலும்
அரசியலில் தீவிரமாக இருக்கும் முஷாரப் இராணுவம் ஆதரவு கொடுத்திருந்த பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக்(Q)ஐ
பாக்கிஸ்தான் மக்கள் கட்சிக்கு பின் திரண்டு வருமாறு மக்களிடம் கோரியுள்ளார் இது சர்வாதிகாரத்திற்கு ஒரு
சிவிலிய மூடுதிரையை கொடுத்திருந்தது.
இதற்கிடையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அமைப்பான பாக்கிஸ்தானின் முன்னாள்
இராணுவத்தினரின் அமைப்பு, நீண்டகாலமாக தலைமை நீதிபதி இப்திகார் செளதாரி இன்னும் பல நீக்கப்பட்ட
நீதிபதிகள் மறுபடியும் பதவியில் இருத்த வேண்டும் என்றும் வக்கீல்கள் போராட்டத்தில் தீவிரப் பங்கைக்
கொண்டுள்ளது. ஒரு ஓய்வு பெற்ற இராணுவ தளபதியும் முக்கிய இராணுவ பாதுகாப்புப் பகுப்பாய்வாளரும்
பென்டகனுடன் நெருக்கத் தொடர்பு உடைய தலத் மசூட், வாஷிங்டன் போஸ்ட்டிடம் இந்த வாரம் "இது மனத்தைக்
கலக்க அடிக்கக்கூடியது. அரசாங்க செயல்களை பேரம் பேசி முடிவெடுக்கலாம் என்று ஜர்தாரி நினைக்கிறார்;
தன்னுடைய ஆதவாளர்களுக்கு நலன்களைக் கொடுத்து எதிரிகளைத் தண்டிக்க விரும்புகிறார். அவர் சர்வாதிகாரியாக
இருக்க விரும்பினால், பெரும் தவறு அது; ஏனெனில் இராணுவம் அவருக்கு ஆதரவாக இருக்காது. தற்கொலை
செய்து கொள்ளும் பணியில்தான் அவர் ஈடுபட்டுள்ளார்." எனக்கூறினார்.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சிக்கும் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்கிற்கும்(நவாஸ்) இடையே
நடக்கும் மோதல் பாக்கிஸ்தானிய உயடுக்கிற்குள் இருக்கும் பிராந்திய வேற்றுமைகளை அதிகரிக்கும் ஆபத்தையும்
கொண்டுள்ளது. பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) முக்கியமாக ஒரு பஞ்சாபியக் கட்சி ஆகும். பாக்கிஸ்தான்
மக்கள் கட்சி என்பது மரபார்ந்த வகையில் புவியியல்ரீதியாக பரந்த ஆதரவைத் தளத்தைக் கொண்டிருந்தாலும் அது
பாக்கிஸ்தானின் இரண்டாம் பெரிய மானிலமான சிந்த் உடன் அடையாளம் காணப்படுகிறது (பூட்டோக்கள் சிந்து
மானிலத்தின் பெரும் நிலச்சுவான்தார் குடும்பங்களின் ஒன்றாவர்--ஜர்தாரி கொலையுண்ட பெனாசீர் பூட்டோவின்
கணவராவார்.)
பாக்கிஸ்தானின் உழைக்கும் மக்கள் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியுடைய அதிகாரத்தைக்
கைப்பற்றுதல், அடிப்படை ஜனநாயக உரிமைகளை அகற்றுதல் போன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டும். இன்று
PML(N)
இன் வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் சிறு வணிகர்கள்,
தொழில்திறமை உடையவர்கள் மற்றும் மத்தியதர வகுப்பு மாணவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஜனநாயக
விரோத நடவடிக்கைகள் இன்னும் கடுமையான முறையில் தொழிலாளர் வர்கக்த்தின் எந்த இயக்கத்திற்கும் எதிராக
முறையாக சுமத்தப்படும்.
அதே நேரத்தில் பெருவணிக
PML(N) க்கு
எந்த வித அரசியல் ஆதரவும் கொடுக்கப்படக்கூடாது. முன்னாள் இராணுவத்தினரின் அமைப்பு மற்றும் நாட்டின்
மிகப்பெரிய இஸ்லாமிய அடிப்படைக் கட்சியான ஜமாத்-எ-இஸ்லாமி உட்பட வலதுசாரி சக்திகள் அனைத்தும்
பிரச்சாரத்தில் அகற்றப்பட்ட நீதிபதிகளுக்கு ஆதரவு கொடுக்க நுழைந்துள்ளன.
பாக்கிஸ்தானில் ஜனநாயகத்தை நிறுவுவதற்கு நீதிபதிகள் மறுபடி பதவியில் இருத்தப்பட
வேண்டியது முக்கியம் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. இவர்கள் அனைவரும் முஷாரப்பின் சர்வாதிகாரத்திற்கு
விசுவாசமாக பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள் அனைவருமே பாக்கிஸ்தானின் பெரும் சமத்துவமற்ற சமூக ஒழுங்கை
நிலைநாட்ட, ஒப்புதல் அளிக்கும் சட்டங்களைத்தான் செயல்படுத்தினர்.
முஷாரப்புடன் தனிப்பட்ட முறையில் கணக்குத் தீர்க்க ஷரிப் விரும்பினாலும் (அவர்தான்
தொடக்கத்தில் இவரைத் தூக்கிலிட விரும்பியது என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும்) ஜர்தாரி மற்றும் பாக்கிஸ்தான்
மக்கள் கட்சி
தலைமையைப் போல் இவரும் பென்டகன்-பாக்கிஸ்தான் இராணுவ அச்சிற்கு
ஆதரவு கொடுத்து அதிகாரிகள் வர்க்கம் சலுகையுடன் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவதற்கும் ஆதரவு கொடுக்கிறார்.
இதேபோல் அவருடைய அரசாங்கங்களே சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன
நடவடிக்கைகளை 1990களில் கடைபிடித்த ஷரிப்பிற்கும் தற்பொழுதைய பாக்கிஸ்தான் மக்கள் கட்சி
ஆட்சியின் வலதுசாரி சமூகப் பொருளாதார கொள்கைகளுடன்
கணிசமான முறையில் வேறுபாடு ஏதும் கிடையாது.
கடந்த ஆண்டுகளில் பாக்கிஸ்தானின் நன்கு அறியப்பட்ட ஜனநாயக மக்கள் ஆட்சி
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது பாக்கிஸ்தானிய வெற்று முதலாளித்துவக் கட்சிகளுடன் உடன்பாடு அல்லது
அவற்றினாலேயே செயல்படுத்தப்பட முடியாது என்பதையும் தொழிலாளர் வர்க்கம் உழைக்கும் மக்கள் தலைமையில்
திரண்டு அவர்களுக்கு எதிராக இரக்கமற்ற அரசியில் போராட்டம் நடத்துவதின்மூலம்தான் முடியும் என்பதைக்
காட்டியுள்ளது.
அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம், மதத்தை அரசிலிருந்து
பிரிக்கப்படுதல், பாக்கிஸ்தானிய-அமெரிக்க மூலோபாயக் கூட்டை உடைத்தல் மற்றும் பரந்த பாக்கிஸ்தானிய
இராணுவ அமைப்பை முதலாளித்துவ சமூக ஒழுங்கில் இருந்து அகற்றுதல், அனைவருக்கும் வேலைகள், நிலங்கள் மற்றும்
அடிப்படை பொதுப் பணிகளைக் கொடுக்கக்கூடிய அரசாங்கத்தை அமைக்கக்கூடிய தொழிலாளர்கள், விவசாயிகளின்
ஒன்றுபட்ட போராட்டம் தேவையாகும். |