WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Further protest letters against LTTE
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேலும் கண்டனக் கடிதங்கள்
12 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
"ஐரோப்பாவில்
சோ.ச.க. ஆதரவாளர்களுக்கு எதிரான புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகளை எதிர்த்திடுங்கள்"
என்ற தலைப்பில் மார்ச் 9 வெளியான அறிக்கையின் பிரதிபலனாக உலக சோசலிச வலைத் தளத்துக்கு
மேலும் பல கடிதங்கள் கிடைத்துள்ளன. தமிழ சமுதாயததின் மத்தியில் அரசியல் கலந்துரையாடல்களை நசுக்க எடுக்கும்
முயற்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எதிரான அனைத்து
அச்சுறுத்தல்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளை கோரி கண்டனக் கடிதங்களை
அனுப்பி வைக்குமாறு நாம் எமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளரகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். (முன்னைய
கடிதங்களை இங்கு காணலாம்.)
அன்பின் ஐயா,
நான் இலங்கையின் கொழும்பில் பயிற்சிபெறும் ஒரு சட்டத்தரணி ஆவேன். நான்
பிறப்பில் தமிழன். எனது தாய் மொழி தமிழ். எனது முழு இளைமை வாழ்க்கையும், உள்நாட்டு யுத்த நிலமை மற்றும்
குறிப்பாக தமிழ் பேசும் மக்களை அடக்கும் அரச படைகளின் அதிகரித்துவரும் அழுத்தத்தின் கீழேயே கழிந்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள ஏனைய தமிழ் பேசும் மக்களைப் போலவே, நானும் உள்நாட்டு யுத்தத்தின் கீழ் இடைவிடாமல்
அதிகரித்த தொடர்ச்சியான இழப்புக்கள், அநியாயம் மற்றும் பாரபட்சங்களை தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும்
அனுபவித்துள்ளேன்.
குறிப்பாக அதன் காரணமாகவே, யுத்தத்துக்கும் தமிழ் பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கும்
மற்றும் பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய ராச்சியம் அல்லது வேறெங்கேனும் வாழும் ஏனைய உழைக்கும் மக்கள் மீதான
அடக்குமுறைகளுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வேலைத் திட்டத்தையும்
முன்நோக்கையும் முன்வைப்பதில் இருந்து சோ.ச.க. உறுப்பினர்களை தடுப்பதன் பேரில், புலிகளின் ஆதரவாளர்கள்
அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு சரீர பலாத்காரத்திலும் ஈடுபட்டது பற்றிய தகவலை அறிந்து நான் கடுமையாக கவலையடைந்தேன்.
சோ.ச.க. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க
நின்றுவருவதோடு தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை ஆக்கிரமிப்புப் படைகளை திருப்பியழைக்குமாறு
நீண்டகாலமாக இடைவிடாமல் கோரிக்கை விடுத்துவந்துள்ளதை நான் அறிவேன். கடந்த கால் நூற்றாண்டு காலமாக
இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் போது, சோ.ச.க. அரச படைகள் மற்றும் சிங்கள மேலாதிக்கவாத
குழுக்கள் மற்றும் அரச சார்பு துணைப்படைகள் அதே போல் புலிகளிதும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
சோ.ச.க. இன்றும் இந்தக் கோரிக்கைக்காக பிரச்சாரம் செய்கின்றது.
மேல் மாகாண சபைக்கான தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தக்
கட்சி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இருநுத இலங்கை படைகளை திருப்பியழைக்க போராடாவிட்டால், தமது
ஜனநாயக உரிமைகள் அல்லது வாழ்க்கைத் தரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக வெற்றிகரமாக எதிர்த்து நிற்பது
சாத்தியமற்றது என இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கும் வறியவர்களுக்கும் விளக்கிக்கொண்டிருக்கின்றது.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற புலிகளின் உரிமை
கோரல் போலியானது. தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்காத ஆனால் பெருமளவு துன்பங்களை கொண்டுவந்த
அரசியல் இயக்கம் விடுதலைப் புலிகளே. ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் தமக்கென்று ஒரு தனியான
ஆட்சியதிகாரத்தை பெறும் புலிகளின் திட்டம் உழைக்கும் மக்களுக்கு ஒரு பொறி என்பதை அனுபவங்கள்
ஒப்புவித்துள்ளன. பெரும் வல்லரசுகள் அவைகள் சுய நலன்களுக்காகவே சேவையாற்றுகின்றன. அவர்களுக்குப்
பின்னால் செல்லும் எவரும், அவர்களால் ஆடப்படும் சதுரங்கக் காய்களாவர்.
சிங்கள மேலாதிக்கவாத அடக்குமுறையின் தாக்குதலை தாங்கிக்கொண்டிருக்கும்
மக்களுக்கு எதிரியிடம் இருந்து விடுபடுவது எவ்வாறு என கலந்துரையாடும் உரிமை உண்டு. மக்களை இருட்டில்
வைத்திருப்பதன் மூலம் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்க முடியாது. தேசிய ஒடுக்குமுறையில் இருந்து சுதந்திரம்
பெற முன்செல்வதற்கு முடிவெடுக்க ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் சுதந்திரமான கலந்துரையாடல் இடம்பெற
வெண்டும்.
சோசலிசத்தின் ஊடாக மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களால் விடுதலையையும்
சமத்துவத்தையும் பெற முடியும், மற்றும் உண்மையான சகோதரத்துவத்துவ சோசலிசமே உத்தரவாதமாகும் என்ற
சோ.ச.க. யின் முன்நோக்கை நான் மதிக்கின்றேன். தசாப்த காலங்களாக அதன் கொள்கைகளுக்காக
தயக்கமின்றி போராடும் ஒரே கட்சி இதுவேயாகும். ஒரு தூர நோக்குள்ளபோராட்டத்தை சோ.ச.க.
பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஆயினும், நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரே வழியும் அதுவே. மக்கள் கடுமையாக
கவனம் செலுத்த வேண்டியவை நிறையவே அவர்கள் கூறுவதில் உண்டு. புலிகள் உட்பட எவருக்கும், தமது சொந்த
போராட்டத்துக்கான முன்நோக்கைப் பற்றிய கலந்துரையாடும் மக்களின் உரிமையை பறிக்கும் உரிமை கிடையாது.
நான் ஐரோப்பாவில் சோ.ச.க. உறுப்பினர்கள் மீதான புலிகளின் தாக்குதலை
கண்டனம் செய்வதோடு, அரசியல் பிரச்சினைகள் பற்றிய ஒரு தீர்க்கமான கலந்துரையாடலை முன்கொண்டுவர
சோ.ச.க. எடுக்கும் முயற்சிகளை தடுப்பதை உடனடியாக நிறுத்துமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
ஜி. சேனாதிராஜா, சட்டத்தரணி
கொழும்பு,
இலங்கை.
மார்ச் 11ம் திகதி, ஆஸ்திரேலியாவில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின்
ரோயல் மெர்போர்ன் கல்வி நிலையத்தில், சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள்
(ISSE)
அமைப்பால் நடத்தப்பட்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும்
ஆதரவாளர்களுக்கும் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளாலும் அவர்களின் முகவர்களாலும் ஐரோப்பாவில்
மேற்கொள்ளப்பட்ட குண்டர் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களை நாம் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.
இலங்கை இராணுவத்தின் கொடூரங்களை கண்டித்து பெப்பிரவரி மாதம் பேர்லின்,
லண்டன் மற்றும் பாரிஸிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள் துண்டுப்
பிரசுரங்களை விநியோகிக்கும் போது, பலவித புலி ஆதரவு அமைப்புக்களின் கையாட்கள் பிரசுரம் விநியோகிப்பதை
நிறுத்துமாறு கூறி, வன்முறையுடன் கூடிய அச்சுறுத்தல் விடுத்ததோடு சிங்கள-விரோத இனவாத வார்த்தைகளாலும்
திட்டினர். இதே போல, 25 ஆண்டுகால யுத்தத்துக்கும் இலங்கை தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கும்
முடிவுகட்டும் ஒரு சோசலிசத் தீர்வை கலந்துரையாடுவதற்காக, பாரிசில் மார்ச் 15 நடக்கவுள்ள கூட்டத்துக்கு
சோ.ச.க. ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போதும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு
(CCT)
என்ற புலிகளுக்கு சார்பான குழுவின் ஆதரவாளர்களால் துண்டுப் பிரசுரங்கள் பறிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகளை மீறுவதாகும். இவை இலங்கையில்
புலிகள் அமைப்பு தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் உட்பட
அது தசாப்தகாலங்களாக மேற்கொண்ட வன்முறைகளின் வரலாற்றை நினைவூட்டுகின்றன.
ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக அபிலாஷைகளை
காப்பதில் நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒரு சவால் செய்யமுடியாத
சாதனை உண்டு. சிங்கள முதலாளித்துவ தட்டின் மேலாதிக்கத்திலான எதிர்ப்போக்கு முதலாளித்துவ அரசை
தூக்கிவீசவும் மற்றும் சகலரதும் ஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை சமூகத் தேவைகளை உறுதிப்படுத்தும்
ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிக்கவும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள
வர்க்கத்தையும் விவசாயிகளையும் ஐக்கியப்படுத்துவதற்கான தீர்க்கமான முதல் படியாக, வடக்கு மற்றும் கிழக்கில்
இருந்து இலங்கை துருப்புக்கள் அனைத்தையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்குமாறு சோ.ச.க.
கோருகின்றது. புலிகளின் வன்முறையும் அச்சுறுத்தல்களும், அவர்களின் முதலாளித்துவ தேசியவாத முன்நோக்கின்
வங்குரோத்தையே பிரதிபலிக்கின்றது. இந்த முன்நோக்கின் இலக்கு, ஏதாவது ஒரு ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன்
தங்கியிருக்கும் ஒரு முதலாளித்துவ தமிழ் அரசை ஸ்தாபிப்பதாகும்.
ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அரசியல்
கலந்துரையாடலை தடுக்க எடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறும் சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும்
ஆதரவாளர்கள் மீதான சகல அச்சுறுத்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் நாம் புலிகளுக்கும் மற்றும் அவர்களின்
துணை அமைப்புக்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.
RMIT ISSE
***
பிரித்தானிய தமிழர் பேரவை, ஜேர்மனி தமிழர் கூட்டமைப்பு மற்றும் பிரான்ஸ்
தமிழர் ஒத்துழைப்புக் குழுவுக்கும்:
சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிரான
புலிகளின் நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களை கண்டனம் செய்வதற்கே நான் இதை எழுதுகிறேன்.
அத்தகைய பண்பற்ற மற்றும் துணிவிழந்த அரசியலானது புலிகளின் தேசியவாத
முன்நோக்கின் வரலாற்று வங்குரோத்து நிலைமையின் இன்னுமொரு வெளிப்பாடு மட்டுமே.
தீவு பூராவும் தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்தை சோ.ச.க.
எதிர்க்கின்றது. இலங்கையில்/ஈழத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தலைவிதி பற்றி உண்மையாகவே
கவலையடைபவர்கள், சோ.ச.க. யில் ஒரு தலைமைத்துவத்தை காண்பர். சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான
போராட்டத்தை முன்னெடுப்பதில் சிறைவைப்பு, உயிர் மற்றும் உடல் உறுப்புக்களையும் பணையமாக வைத்து
சளைக்காமல் தசாப்த காலமாக போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.
மறுபுறம், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவத்தை பிரதியீடு
செய்யும் தமிழ் முதலாளித்துவ தட்டு நிச்சயமாக தாம் சோ.ச.க. வேலைத்திட்டத்திற்கு எதிராக நிற்பர்.
சிங்கள முதலாளித்துவத்தைப் போல் ஸ்ரீலங்காவில்/ஈழத்தில் மற்றும் தெற்காசியா
பூராவும் சோசலிச ஐக்கியத்துக்கான ஒவ்வொரு முயற்சியையும் எதிர்க்கும் அமைப்பான புலிகளின் முன்நோக்கும்
அத்தகையதே ஆகும்.
வன்முறை அச்சுறுத்தல்கள் மூலமாக ஐரோப்பாவில் உள்ள தெற்காசிய முன்நாள்
பிரஜைகள் மத்தியில் சோசலிசத்தை கொண்டு செல்வதை தடுக்க புலிகள் மேற்கொள்ளும் கோழைத்தனமான
முயற்சிகள், பயன்படப் போவதில்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களும் சோ.ச.க.
ஆதரவாளர்களுமாகிய நாம், தெற்காசிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முன்நிலையில் புலிகளை
சளைக்காமல் அம்பலப்படுத்துவோம். அவநம்பிக்கை நிலையும் வன்முறை நடவடிக்கைகளும் தொழிலாளர்களின்
கண்களின் முன்னால் புலிகளுக்கு மேலும் அவப்பேறு பெற்றுத்தரவே சேவை செய்யும்.
உண்மையுள்ள,
தோமஸ் மக்மன்,
வரலாற்றுத் துறை,
இலிநொயிஸ் பல்கலைக்கழகம், அர்பனா-கெம்பெயின்
***
அன்பின் ஐயா,
நான் எம்.ஜி. கிரிபண்டா, மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (ம.வ.ஊ.ச.)
தலைவராகிய நான், ஐரோப்பாவில் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்ளை
புலிகளின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தி தாக்கியதைப் பற்றி எனது ஆழமான கவலையை வெளிப்படுத்துவதோடு
அத்தகைய அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை தாக்குதல்களை நிறுத்துமாறு ஐரோப்பாவில் தமது ஆதரவாளர்களுக்கும்
உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்துமாறும் புலிகளுக்கு அழைப்புவிடுக்கின்றேன்.
பெப்பிரவரி 4, பேர்லின், லண்டன், மற்றும் பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும்
பெப்பிரவரி 7 ஸ்டுட்கார்ட்டில் நடந்த எதிர்ப்புக் கூட்டத்திலும் இடம்பெற்ற பல சம்பவங்கள் பற்றி எமக்கு
தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து
வெளியேறுமாறு சோ.ச.க. ஆதரவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். துண்டுப் பிரசுரம்
விநியோகித்துக்கொண்டிருந்த சோ.ச.க. உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சுற்றிவளைத்த புலிகள் சார்பு
கைக்கூலிகள், அவர்களுக்கு எதிராக வன்முறையுடன் கூடிய அச்சுறுத்தல் விடுத்ததோடு சிங்கள-விரோத இனவாத
வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களைத் தூற்றியுள்ளனர்.
பெப்பிரவரி 6 அன்று, பாரிசுக்கு அயலில் உள்ள லா சப்பலில் நடந்த கூட்டத்தில்
சோ.ச.க. ஆதரவாளர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரங்களை புலி-சார்பு முகவர்கள் பறித்து அவற்றை
நாசமாக்கியுள்ளனர்.
நாங்களும் வாசித்த அந்த துண்டுப் பிரசுரங்கள், 25 ஆண்டுகால உள்நாட்டு
யுத்தத்துக்கும் இலங்கை தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டவும் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ்
மக்களின் ஜனநாயக உரிமைகளை வெற்றிகொள்ளவும் புலிகளிடம் ஒரு வேலைத்திட்டமோ முன்நோக்கோ
இல்லாததால் அவர்களை விமர்சிப்பதோடு, சோசலிச தீர்வின் ஊடாகவே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்
எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
தமிழர்கள் மீதான இலங்கை அரச அடக்குமுறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து சில
தமிழ் மற்றும் இடதுசாரி பிரெஞ்சுக் குழுக்கள் செய்த ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்கு 75 பேர் அல்லது அதற்கும்
மேலானவர்கள் அடங்கிய புலி ஆதரவாளர்கள் குழுவொன்று முயற்சித்தது.
தம்மிடம் அனுமதி பெற்றவர்களை மாத்திரமே லா சப்பலில் வாழும் தமிழர்கள்
மத்தியில் அரசியல் பேச அனுமதிக்க முடியும் என புலிகளின் ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்தமை, அவர்களின்
எதேச்சதிகாரமான ஜனநாயக விரோத பண்பை வெளிக்காட்டுகிறது.
அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாததால் புலிகள் வன்முறையை
நாடுவதோடு புலிகளின் வலதுசாரி கொள்கைகள் மற்றும் அவர்கள் ஜனநாயக விரோத வழிமுறைகளை
பயன்படுத்துவது தொடர்பாக புலம்பெயர் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் குவிந்துவரும்
எதிர்ப்பையிட்டும் அவர்கள் பீதிகொண்டுள்ளனர்.
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை இடைவிடாது காப்பதில் சோ.ச.க. வெற்றிகொண்டிருக்கும்
நிலையில், புலிகள் சோ.ச.க. யை இலக்குவைப்பது குறிப்பாக அசாதாரணமானதாகும்.
சிங்கள தட்டின் மேலாதிக்கத்திலான முதலாளித்துவ எதிர்ப்போக்கு அரசை தூக்கிவீசவும்,
சகலரதும் ஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய
சோசலிச அரசை ஸ்தாபிக்கவும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும்
ஐக்கியப்படுத்துவதற்கான தீர்க்கமான முதற் படியாக, அரச தாக்குதல்கள் மற்றும் சிங்கள பேரினவாதிகளின்
வன்முறைகளையும் சந்தித்தவாறு சோ.ச.க. இடை நிறுத்தாமல் யுத்தத்தை எதிர்ப்பதோடு இலங்கையின் வடக்கு
மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கக் கோருகிறது.
புலிகளின் அரசியல் மற்றும் வன்முறைகளும், இலங்கை முதலாளித்துவ அரசின் ஒடுக்குமுறைக்கு
உள்ளான தமிழ் வெகுஜனங்களின் நலன்களுக்கு முற்றிலும் நேர் எதிரானதாகும். ஒரு முழுமையான ஜனநாயகப் பூர்வமான
கலந்துரையாடலின் ஊடாக மட்டுமே, வெகுஜனங்களால் ஆளும் வர்க்கத்துக்கு எதிராக தமது உரிமைகளைக் காக்கும்
வழியை ஏற்படுத்த முடியும்.
சோசலிச சமத்துவக் கட்சி மீதான தாக்குதல்களையும் தமிழ் மக்களினதும்
தொழிலாள வர்க்கத்தினதும் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் ஏனைய அரசியல் இயக்கங்கள் மீதான
தாக்குதல்களையும் நிறுத்துமாறு நாம் புலிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம். உண்மையில், தமிழ் மக்களின்
உண்மையான ஜனநாயக மற்றும் சரநிகர் அபிலாஷைகளுடன் புலிகளின் வேலைத்திட்டம் முரண்படுவதையே அவர்களது
நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.
எம்.ஜி. கிரிபண்டா,
தலைவர்,
மத்திய வங்கி ஊழியர் சங்கம்
|