World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காWall Street hysterics over the AIG bonus bill AIG போனஸ் சட்டம் பற்றி வோல் ஸ்ட்ரீடின் உளக்கொதிப்புBy Joe Kishore அமெரிக்க இன்டர்நாஷனல் க்ரூப் (AIG) நிர்வாகிகளுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் (Bonus) ஒரு நேரியக் கூறுபாடு உண்டு என்றால், அது அமெரிக்க சமூகம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் குணநலன் பற்றிய திரையை இன்னும் அகற்றியதுதான். அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரத்தை இறுக்கமாகக் கொண்டுள்ள நிதிய நெருக்கடியில் AIG ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த நிறுவனம் கடன் தவணை மாற்றங்களில் முக்கிய விற்பனைகளை நடத்தியது. அவைதான் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களால் அவற்றின் அடைமான ஆதரவுப் பத்திரங்கள் மற்ற ஊக முதலீடுகளுக்கு உதவும் தனியார் முதலீட்டு நிதியாகப் பயன்படுத்தியவை ஆகும். வீடுகள் மற்றும் கடன் குமிழ்கள் வெடித்தவுடன், AIG அதன் கடமைப்பாடுகளை செயல்படுத்த முடியவில்லை. இது பல நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், பல டிரில்லியன் பாதுகாப்பு உடைய நிறுவனங்களின் திவால் தன்மைக்கு அச்சுறுத்தல் கொடுத்தது. அமெரிக்க அரசாங்கம் அதன் சரிவைத் தடுக்க குறுக்கிட்டு, அதற்கு $173 பில்லியனை பிணை எடுப்புத் தொகையாக கடன்கள், ரொக்கம் ஆகியவற்றில் கொடுத்தது. இதில் பெரும்பகுதி அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் பெரிய வங்கிகளின் இருப்புநிலைக் கணக்குகளை நிவர்த்தி செய்ய பயன்பட்டது. இம்மாத தொடக்கத்தில் நிறுவனம் $165 மில்லியனை மேலதிக கொடுப்பனவாக தற்போதைய நிதியப் பேரழிவிற்கு உதவிய நபர்களுக்கே பெரும் தொகையாக அளித்தது. தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மக்கள் சீற்றம் ஒபாமா நிர்வாகத்தின் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பின் அடுத்த கட்டத்தை கடினமாக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தில் விரைவில் செயல்பட்டு ஒரு சட்டத்தை இயற்றி மேலதிக கொடுப்பனவுகள் மீது 90 சதவிகிதம் வரிகள் சுமத்தப்படும். அரசாங்க நிதிகள் $5 பில்லியனுக்கும் மேல் பெறும் வணிக நிறுவனங்கள் தன் நிர்வாகிகளுக்குக் கொடுப்பதில் இருந்து, இதல் AIG யும் அடங்கும் என்று கூறியது. செனட் இதே போன்ற நடவடிக்கையை இந்த வாரத் தொடக்கத்தில் கொண்டுவரலாம். இச்சட்டவரைவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஒரு சிறு நிறுவனங்களின் குழுக்களுக்குத்தான் பொருந்தும். இருந்தும்கூட, இந்த நடவடிக்கை வோல் ஸ்ட்ரீட்டில் இருந்து சீற்றமான பிரதிபலிப்பை தூண்டியுள்ளது. நிதிய உயரடுக்கிற்கு இங்கு ஒரு அடிப்படைக் கொள்கை ஆபத்தில் உள்ளது, அந்தக் கொள்கைக்கு எவ்வித வன்முறையாலும் மீறப்பட கூடாது, அதாவது அதன் தனிச் சொத்துக் குவிப்பு என்னும் உரிமைக்கு எவ்விதத் தடையும் கூடாது என்பதே அதுவாகும். சனிக்கிழமை அன்று பைனான்சியல் டைம்ஸ் அரைகுறை உச்சவெறி சூழ்நிலை பல மில்லியன்களை கொண்ட நிர்வாகிகளிடம் இருந்து புறப்பட்டதை எடுத்துக்காட்டியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் அடையாளம் காட்ட விரும்பாத வங்கியாளர்களையும் மேற்கோளிட்டது. அவர்களுள் ஒருவர் இந்தச் சட்டம் "நான் பார்த்ததிலேயே முற்றிலும் ஆழ்ந்த அமெரிக்க விரோத நடவடிக்கையாகும்" என்றார். ஒரு நிர்வாகி புதிய சட்ட நடவடிக்கை "அமெரிக்காவை கற்காலத்திற்கு இட்டுச் செல்லும்" என்றார். உலோகக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வேலைகள் இழக்கும்போது, நிதிய உயரடுக்கு தன் பரந்த செல்வங்களை இன்னும் குவித்து வைத்துக் கொள்ளுதலை மனிதகுலத்தின் முன்னேற்றமாக எடுத்துக்காட்ட முயலுகின்றது. நியூ யோர்க் டைம்ஸ் ஒரு AIG நிர்வாகி இந்த நிலைமை "மக்கார்த்தியிசத்தைப் (McCarthyism) போல் மோசமானது, இல்லாவிடின் அதையும்விட மோசமானது எனலாம்" என்று வலியுறுத்தியதாக கூறுகிறது. இத்தகைய மக்கார்த்தியிசம் போன்றது என்னும் கூற்றச்சாட்டு அபத்தமானது, இழிவானது. 1950 களில் இருந்து மக்கார்த்தியிசம் அமெரிக்க ஆளும் வர்க்கம் அனைத்து சோசலிச, இடதுசாரி சிந்தனைகளையும் அரக்கத்தனாமாக சித்தரித்தது. அது சோசலிஸ்ட்டுக்கள் குற்றவாளிகள் என்று கருதப்பட்ட ஒரு பொய்யின் அடிப்படையில் வந்தது. இப்பிரச்சாரம் பல தொழிலாளர்கள், புத்திஜீவிகளினதும் வாழ்வை அழித்து, தொழிற்சங்கங்கள், செய்தி ஊடகம், பல்கலைக்கழகங்கள் என்று அமெரிக்க சமூகத்தின் பல அமைப்புக்களுக்கும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக நோக்கங்களுக்கும் முற்றாக அடிபணிந்து நிற்கவைக்கும் உந்துதலாகும். நிதிய நிர்வாகிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகள் கொடுப்பது பற்றி மக்கள் சீற்றம், இதற்கு முற்றிலும் மாறான வகையில் நியாயமானதே ஆகும். இந்தத் தனிநபர்கள் தங்கள் செல்வக் கொழிப்பை திரட்டியது ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊகத்தின் அடிப்படையில் ஆகும். இப்பொழுது சீட்டுக் கட்டு வீடு சரிந்துவிட்ட நிலையில் அவர்கள் பொது கருவூலம் அச்செலவை ஏற்க வேண்டும் என்று கோருவதுடன் தங்கள் வாழ்க்கைத் தரங்களிலும் எந்தவித குறைவுகளும் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் வலியுறுத்துகின்றனர். வங்கியாளர்கள் சீற்றத்தை எதிர்கொள்கையில் ஒபாமா நிர்வாகம் மேலதிக கொடுப்பனவுகள் சட்டத்தை சற்று பலமிழந்த முறையில் செய்தல் அல்லது முற்றாக கைவிட விரும்பியது. கடந்த வாரம் மக்கள் சீற்றம் அதிகரித்த நிலையில் நிர்வாகம் பாசாங்குத்தன மிரட்டல் முறையை மேற்கொண்டது. மேலதிக கொடுப்பனவுகள் பற்றி தன்னுடைய "சீற்றத்தை" ஜனாதிபதி வெளியிட்டார். ஆனால் அதற்கு முன்பு காங்கிரஸின் வங்கிகள் பிணை எடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊக்கப் பொதி நடவடிக்கைகளின் போதும் அவர் தனது நிர்வாகத்தின் கீழ் ஊதியத்தின் மீதான தடைகளுக்கு எதிராகத்தான் அவர் பிரச்சாரம் செய்திருந்தார். நிர்வாக அதிகாரிகள் AIG மேலதிக கொடுப்பனவுகளை திரும்பபெற்றுவிட முயல்வதாக வலியுறுத்திவந்தனர். ஆனால் கடந்த வார இறுதியில் நிர்வாகம் போக்கை மாற்றத் தலைப்பட்டது. துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கு பொருளாதார ஆலோசகரான Jared Bernstein ஞாயிறன்று சட்டமன்றத்தில் இருக்கும் வரைவு "அளவுக்கதிகமாக போயிருக்கக்கூடும்" என்ற கருத்தைத் தெரிவித்தார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சனிக்கிழமை அன்று நிர்வாகம் செனட்டிடம் சட்டத்தை சற்று "மிருதுவாக்கும்படி" பிரச்சாரம் செய்துவருவதாக எழுதியது. CBS தொலைக்காட்சிக்கு கொடுத்த "60 நிமிஷங்கள்" ஞாயிறு மாலைப் பேட்டியில் ஒபாமா தான் மன்ற சட்டவரைவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதைத் தெளிவு படுத்தினார்.AIG மேலதிக கொடுப்பனவுகள் பிரச்சினையின் விளைவு அமெரிக்கச் செய்தி ஊடகம் நிதிய உயரடுக்கிற்கு வாதிடும் பங்கையும் அம்பலப்படுத்தியுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் கூறியபடி, செய்தி ஊடகம் மேலதிக கொடுப்பனவுகள் பற்றி மக்கள் சீற்றத்தைத் தாக்கியவிதத்தில் மடை திறந்தாற்போல் எதிர்க்கருத்துக்களை கொடுத்தது. வாதங்கள் வேறுபட்டாலும் அடிப்படை ஒன்றுதான்: இந்த தனிமனிதர்களின் சொத்துக்களுக்கு ஆபத்து வரக்கூடாது.நியூயோர்க் டைம்ஸின் "Week in Review" ஞாயிறு பதிப்பில் மேலதிக கொடுப்பனவுகள் பற்றி வந்ததில் இன்னும் ஆத்திரமூட்டும் வாதங்களில் இருக்கும் கூற்று என்னவெனில், "இது ஒரு அரசியல் திசை மாற்றம்" எனக் கூறப்பட்டிருப்பது ஆகும். அமெரிக்க மக்கள்பால் சிறிதும் மறைவில்லாத இகழ்வுடன், டைம்ஸின் Sheryl Gay Stolberg மேலதிக கொடுப்பனவுகள் பிரச்சினை "எளிமையானது, தெளிவானது", "அதிர்ச்சி அழைப்பை" கொண்டது என்றார். அரசாங்க திட்டங்களில் பல டிரில்லியன் செலவுகளுடன் ஒப்பிடுகையில் AIG நிர்வாகிகளுக்கான $165 பில்லியன் மேலதிக கொடுப்பனவுகள் என்னும் பிரச்சினை "ஒரு சில்லறை விஷயம் ஆகும்" என்று அவர் எழுதியுள்ளார். AIG மேலதிக கொடுப்பனவுகள் உதாரணம் காட்டுவது, இந்நெருக்கடியின் மையத்தில் உள்ள அமெரிக்க சமூகத்தின் அடிப்படைக் கூறுபாடு பற்றியது ஆகும். பொருளாதாரத்தை நிதிய உயரடுக்கு கொள்ளையடித்தல் என்பதே அது. கடந்த மூன்று தசாப்தங்களாள சமூக சமத்துவமின்மை பாரியளவில் அதிகரித்துள்ளது. ஒரு நிதிய பிரபுத்துவமுறை பெருகிய முறையில் ஊகம், மோசடி ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு அதன் செல்வத்தை பொருளாதாரத்தின் உற்பத்தி அஸ்திவாரங்களை தகர்த்த முறையில் கட்டமைத்து, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களையும் தாக்கியுள்ளது.இந்த வழிவகையில் குவிக்கப்பட்ட பணம் ஒன்றும் சிறிய தொகையல்ல. உலகின் பில்லியனர்களுடைய மொத்த நிகர மதிப்பு $2.4 டிரில்லியன் ஆகும். அதாவது அமெரிக்காவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகாமானது ஆகும். இது 2008 ல் $2 டிரில்லியன் குறைப்பிற்குப் பின் உள்ள நிதியாகும். அமெரிக்காவில் உயர்மட்ட ஒருசதவிகிதத்தின் செல்வம் 90 சதவிகித கீழ்மட்டத்தைவிட அதிகம் ஆகும். நிதியப் பிரபுத்துவம் மற்ற பொருளாதார அரசியல் வாழ்க்கையின் மீது கொண்டிருக்கும் குரல்வளைப்பிடி பொருளாதார நெருக்கடிக்கு பகுந்தறிவார்ந்த தீர்வைக் காண்பதற்கு முக்கிய தடையாகும். நிதிய உயரடுக்கு பொருளாதாரத்தை திவாலாக்கினாலும் ஆக்குமே ஒழிய தன் சொந்த சொத்தை இழக்கத் தயாராக இருக்காது. சமூக இருப்பு சமூக உணர்மையை நிர்ணயிக்கிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு ஒத்த சமூக உளவியலைத் தோற்றுவித்துள்ளது. அது ஆழ்ந்த முறையில் ஜனநாயக விரோதப் போக்கைக் கொண்டுள்ளது. பிரபுத்துவ சமூக அடுக்கு சமூகத்தைக் காணும் விதம் அதன் ஒட்டுண்ணித்தனத்தை வளர்த்து அச்சமும் விரோதப் போக்கும் கலந்த பார்வையைத்தான் அதற்குக் கொடுக்கும். அது அமெரிக்க அரசியல் அமைப்பு முறையில் இருப்பது போன்ற முற்றிலும் அரிக்கப்பட்டுவிட்ட நிலையில் உள்ள ஜனநாயக அமைப்புகளை கூட இகழ்வுடன் பார்க்கின்றது. இவை அதன் தனிப்பட்ட தனிச்சலுகைகளுக்கு தேவையற்ற தடைகளைக் கொடுப்பதாக நினைக்கிறது. இறுதியில், வோல் ஸ்ட்ரீட் அச்சங்கள் வாஷிங்டனில் இருக்கும் அது ஊதியமளிக்கும் பிரதிநிதிகளின் பரிதாபத்தினை காட்டிக் கொள்ளும் தோற்றம் அல்ல. மாறாக அமெரிக்க சமூகத்தின் மீது கட்டமைப்பதற்கு இன்னும் உணர்மையுடன் சுயாதீன தொழிலாள வர்க்க திட்டம் என்ற விதத்தில் வெளிப்பட்டிராத மக்களுடைய சீற்றம் பற்றிய நினைப்புதான். அரசியல் மாற்றீடுகள் ஒன்றுக்கொன்று நேராக முன்வைக்கப்பட்டுள்ளன. அவையாவன, நிதிய உயரடுக்கின் தொடர்ந்த மேலாதிக்கமும் மற்றும் மக்களின் தொடரும் வறிய நிலை அல்லது நிதிய பிரபுத்துவத்தின் செல்வம் எடுத்துக் கொள்ளப்பட்டு தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றி கொள்ளுவது என்பதாகும். முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் பொது சொத்துக்களாக்கப்பட்ட அமைப்புகளாக மாற்றப்படுதல், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்படுதல் மற்றும் உலகப் பொருளாதாரம் சோசலிச வகையில் மறுகட்டமைப்பு பெறுதல் என்பதுதான் நடைமுறைத் தேவையாக முன்வைக்கப்படுகின்றது. |