World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய அமெரிக்கா, கரிபியன்

Castroite purge in Cuba as US slightly eases sanctions

அமெரிக்க பொருளாதாரத் தடைகளை சற்றே தளர்த்துகையில் காஸ்ட்ரோ அரசாங்கம் கியூபாவில் ஏராளமானவர்களைப் பதவியில் இருந்து அகற்றுகிறது

By Bill Van Auken
13 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

ஒரு தேசிய முதலாளித்துவ ஆட்சி ஆழ்ந்த நெருக்கடியில் இருப்பதின் அடையாளமாக கடந்த வாரம் கியூபாவில் மிகப் பெரிய அளவில் உயர்மட்ட அதிகாரிகள் அகற்றப்பட்டது அடையாளம் காட்டியது. இது கியூபா உழைக்கும் மக்களுடைய நலனுக்கு எதிரான சதியாகும்.

50 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக அதிக அகற்றுதல்களை இப்பொழுது காஸ்ட்ரோ அரசாங்கம் செய்துள்ளது. இதன் அடித்தளத்தில் இருக்கும் அரசியல் பிரச்சினைகள் பற்றி எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை.

10 மந்திரிகள் (கிட்டத்தட்ட அமைச்சரவையில் மூன்றில் ஒரு பகுதி), முக்கிய பொருளாதாரப் பிரிவு பதவிகளில் உள்ளோர் அனைவரும் அடங்கிய விதத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்டுவிட்டனர். பதவி நீக்கப்பட்ட அனைவருக்கும் பதிலாக மூத்த இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாதாரண கியூபா மக்களால் அரசாங்கம் அதிகரித்தளவில் இராணுவமயமாக்கப்படல் என்று அச்சத்துடன் கருதப்படுகிறது

இந்த அதிரடி அகற்றலில் அகப்பட்டவர்களுள் மிகவும் முக்கியமானவர்களில் கியூபாவின் சக்தி வாய்ந்த மத்திரிசபையின் செயலாளரும், அரசாங்கக் குழுவின் துணைத் தலைவருமான கார்லோஸ் லேக் (Carlos Lage) உம், கடந்த ஒரு தசாப்தமாக கியூபாவின் வெளியுறவுக் கொள்கையை இயக்கி வரும் நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலிப்பே பெரஸ் ரோக் (Felipe Perez Roque) உம் அடங்குவர்.

இருவருமே பிடெல் காஸ்ட்ரோவால் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர். பரந்த முறையில் நோய்வாய்ப்பட்டிருக்கும் தளபதி அதிகாரத்தை தன்னுடைய சகோதரர் ராவுலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கும் வரை 1959ல் காஸ்ட்ரோவை அதிகாரத்திற்கு கொண்டுவந்த கெரில்லா இராணுவத்தில் பங்கு பெற்றிராத "புதிய தலைமுறையில் இருந்து" வரக்கூடிய பின்தோன்றல்கள் என்று இவர்கள் கருதப்பட்டனர்.

57 வயதான லேக் ஒரு மருத்துவர் ஆவார்; இவர் சோவியத் ஒன்றியம் உடைந்ததற்கு பின் ஏற்பட்ட அழிவுகரமானகாலத்தில் கியூபாவின் பொருளாதாரத்திற்கு பொறுப்பு ஏற்றார். அந்நிகழ்வோ மாஸ்கோவில் இருந்து தீவின் பொருளாதாரத்தை தக்க வைக்க வந்து கொண்டிருந்த பல பில்லியன் உதவித் தொகைகள் நின்ற காலம் ஆகும். கியூப பாராளுமன்றம் ஒரு புதிய அரசாங்கக் குழுவை கடந்த ஆண்டு தேர்ந்தெடுத்தபோது, லேக், ராவுல் காஸ்ட்ரோவை தவிர மற்றவர்கள் அனைவரையும் விட கூடுதலான வாக்குகளை பெற்றார். ராவுல் தன் அண்ணனிடம் இருந்து அதிகாரத்தை முறையாகப் பெற்றுக் கொண்டார்.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழு உறுப்பினர்கள் அடங்கிய அரசியல்குழுவில் உள்ள மூன்று பொது மக்களில் லேக்கும் ஒருவர் ஆவார். கடந்த வாரம் வரை ஆயுதப் படைகள் அமைச்சரகத்தின் தலைவராக இருந்த மேஜர் ஜேனரல் ஜோஸ் அமோடோ ரிக்கார்டோ குயிரா இவருக்குப் பதிலாக பொறுப்பேற்றுள்ளார்.

43 வயதான பெரெஸ் ரோக்கும் அரசாங்கக் குழுவின் உறுப்பினராகவும் ஆளும் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தவர். இளைஞராக இருந்தபோது இவர் அரசாங்கம் நடத்திய மாணவர் அமைப்புக்களின் தலைவராக இருந்தார். பின்னர் பிடெல் காஸ்ட்ரோ இவரை தன்னுடைய தளபதிகளின் தலைவராக்கினார். இப்பதவியில் ஒரு தசாப்தம் இருந்தார். உத்தியோகபூர்வ செய்தித்தாள் Granma எழுதியுள்ளபடி 1999ல் அவர் வெளியுறவு மந்திரி பொறுப்பை ஏற்றபோது அவருடைய அடிப்படைத் தகுதி, "பிடெல் காஸ்ட்ரோவின் சிந்தனைகள் கருத்துக்களை முற்றிலும் அறிந்த ஒரு சிலரில் ஒருவர்" என்பதாக இருந்தது.

அரசாங்கக் குழு மார்ச் 2ல் வெளியிட்ட சுருக்க அறிக்கை ஒன்று எட்டு மந்திரிகளுக்கு பதிலாக பிறர் நியமிக்கப்பட்டது பற்றியும் பல அமைச்சரகங்கள் இணைக்கப்பட்டதையும் கூறியது. நாட்டின் பொருளாதாரக் கொள்கைக்கு பொறுப்பு உடைய லேக் மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை இயக்கிய பெரஸ் ரோக் ஆகியோர் பொறுப்புக்களில் இருந்து "விடுவிக்கப்பட்டதாக" அறிவிக்கப்பட்டது.

இத்தகைய வியத்தகு மாற்றங்கள் ஜனாதிபதி பதவியை முறையாக எடுத்துக் கொண்ட ஓராண்டிற்கு பின்னர் ராவுல் காஸ்ட்ரோ தனக்கு விசுவாசமானவர்களை பதவியில் இருத்தப்போவதாக ஊகங்கள் வெளிவந்த பின்னர் வந்தது. அவர்கள் அவர் ஐம்பது ஆண்டு காலம் தலைமை வகித்திருந்த இராணுவத்தில் இருந்து வரக்கூடும் என்றும் கூறப்பட்டதுடன், அவருடைய சகோதரர் பிடல் நியமித்திருந்தவர்களை அகற்றக்கூடும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அத்தகைய கருத்துக்களை அகற்றும் வகையில் கியூபாவின் செய்தி ஊடகம் அதன் முதல் பக்கங்களில் மார்ச் 4ம் தேதி வாடிக்கையான கட்டுரைகளில் ஒன்றை "சிந்தனைகள்" என்ற தலைப்பில் தன் நீடித்த நோயில் இருந்து மீளும் நிலையில் பிடலே கூறி பதிவு செய்யப்பட்டதை வெளியிட்டது. இது அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் "நலன் பயக்கும்" என்று கூறியுள்ளது.

தான் கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கையில் லேக் மற்றும் பெரஸ் ரோக் ஆகியோரை அவர்களுடைய பதவிகளில் நியமிப்பதில் தொடர்பற்று இருந்ததாக பிடெல் ஏற்கமுடியாத விதத்தில் எழுதியுள்ளார். ஆயினும்கூட அவர்கள் தேர்வு பின்னர் அகற்றல் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டதாக மக்களிடம் கூறியுள்ளார். "எந்த விதிப்படியும் இந்நிகழ்வு பற்றி அவருக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும், ஏற்கனவே நான் அதிகாரத்தின் சிறப்பு உரிமைகளை முன்னரே துறந்துவிட்டேன்" என்றாலும் இப்படி இது நிகழ்ந்தது என்றார் அவர்.

முன்னாள் கியூபா ஜனாதிபதி இரு மூத்த அதிகாரிகள் அகற்றப்பட்டுள்ளதற்கான முதலும் இதுவரை ஒரே தடவையாகவும் உள்ள அரசியல் நியாயப்படுத்துதலைக் கூறியுள்ளார்.

"அவர்களின் எவ்விதத் தியாகமும் இன்றிக் கிடைத்த அதிகாரத்தின் சுவையான பானம், அவர்களிடையே ஒரு நோக்கத்தை ஏற்படுத்தி ஒரு இழிவான பாத்திரத்தை வகிக்க செய்துவிட்டது. வெளி விரோதி அவர்கள் உதவியால் நம்பிக்கைகளைப் பெற தொடங்கினான்." என்று அவர் எழுதினார்.

இக்கட்டுரையை அடுத்து மறுநாள் Granma வில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கடிதங்கள் லேக், பெரஸ் ரோக்கில் இருந்து தங்கள் "பிழைகளை" ஒப்புக் கொண்ட கடிதம், தங்கள் நடவடிக்கைக்கு "பொறுப்பேற்றுக் கொண்டது" மற்றும் தங்களுக்கு எதிராகக் கூறப்பட்ட குறைகூறல்கள் "நியாயமானவை, ஆழ்ந்தவை" என ஒப்புக் கொண்டது வெளியிடப்பட்டது. தங்கள் விசுவாசத்தை தொடர்ந்து பிடலுக்கு கொடுக்கும் வகையில் கடிதம் முடிக்கப்பட்டிருந்தது. அக்கட்டுரையோ அவர்களை ஊழல் மிகுந்த, ஒருக்கால் காட்டிக் கொடுப்பவர்கள் என்றுகூட விவரித்து இருந்தது.

அவர்களுடைய "பிழைகள்" அல்லது நடவடிக்கை பற்றிய குறைகூறல்களை பற்றிய பொருளுரையோ, அவர்கள் கொண்டிருந்த "இழிந்த பங்கின்" தன்மை பற்றியோ, எந்தவிதத்தில் அவர்கள் வெளி விரோதிகளுக்கு நம்பிக்கை கொடுத்தனர் என்பது பற்றியோ பிடல் காஸ்ட்ரோவின் "சிந்தனைகளோ" அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய ஒப்புதல்களோ எந்தக் குறிப்பும் கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்த வாரத்தில் ஒரு சொல் கூட இதுபற்றி கியூபாவில் வெளிவரவில்லை.

The sickening characteristics of this episode are all too familiar. The ritualistic "criticism and self-criticism," echoing the odious methods of Stalinism, are designed to conceal the political content of the dispute from the masses, while simultaneously serving to intimidate them.

இந்த நிகழ்வின் அருவெறுப்பூட்டும் கூறுபாடுகள் முற்றிலும் தெரிந்தவைதான். "விமர்சனமும்", "சுயவிமர்சனமும்'' என்ற வழமையான நடைமுறைகள் ஸ்ராலினிசத்தின் இழிந்த நடைமுறைகளை எதிரொலிப்பதுடன், மக்களிடம் இருந்து முரண்பாடுகளின் அரசியல் உள்ளடக்கத்தை மறைக்கும் வடிவமைப்பைக் கொண்டதுடன், அதே நேரத்தில் மக்கள் மிரட்டவும் சேவை செய்கின்றது.

காஸ்ட்ரோ ஆட்சியின் வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் மிகவும் இழிந்தது 1989ல் தளபதி ஆர்னல்டோ ஒக்கோயா மீது தயாரிக்கப்பட்ட போலி போதை மருத்து குற்றச்சாட்டுக்கள் வந்தது ஆகும். முன்பு "புரட்சியின் தலைவன்" என்று தெற்கு ஆபிரிக்க மற்றும் CIA ஆதரவுடைய படைகளை 1980 களில் அங்கோலாவில் தோற்கடித்ததற்கு அவர் பெருமைப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் அவரும் அவருடன் மூன்று மற்ற அதிகாரிகளும் ஊழல்நிறைந்த விசாரணை ஒன்றில் தண்டனைக்குட்பட்ட மரணதண்டனை பிரிவினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பல தசாப்தங்களாக காஸ்ட்ரோயிசத்தை சோசலிசத்திற்கான ஒரு புதிய புரட்சிகரப் பாதை என்று சித்தரிக்க முற்பட்டவர்களும், குட்டி முதலாளித்துவ கெரில்லாவாதத்தை புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் உணர்மையான மற்றும் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலுக்கான சிறந்த மாற்று என்று கூறியவர்கள் சோசலிசத்தை அந்த வழிவகைகளுடன் ஒப்பிட்டு அதன் பெயரைக் கெடுக்கத்தான் உதவியுள்ளனர்.

காஸ்ட்ரோ ஆட்சியே அரசாங்கப் பெரும் மாற்றங்களுக்கு அரசியல் விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. அதன் இரு முக்கிய அதிகாரிகள் நீக்கப்பட்டது, இழிவாகப் பேசப்படுவது பற்றி ஏதும் விளக்கம் கொடுக்கவில்லை. இருந்தபோதிலும்கூட அதன் நோக்கங்கள் கியூபாவை பெருகிய முறையில் திகைப்புடைய நெருக்கடிக்கு நடுவே ஆழ்த்தும் புறநிலை சூழலில் கண்டறியப்பட வேண்டும்.

2008 இறுதியில் கியூபாவின் பொருளாதார மந்திரி ஜோஸே லூயிஸ் ரொட்ரிகஸ் அந்த ஆண்டு "சிறப்பு ஆட்சி தொடங்கியதில் இருந்து மிகக் கடுமையானதாகும்" என்றார். 1991ல் சோவியத் சரிவிற்குப் பிறகு கியூபா எதிர்கொண்ட பொருளாதாரப் பெரும் பள்ளத்தைப் பற்றி இவ்விதம் குறிப்பிட்டார். கடந்த வாரம் பதவியில் இருந்து அகற்றப்பட்ட 10 உயர் அலுவலர்களில் ரோட்ரிக்கஸும் ஒருவர் ஆவார். அவருக்கு பதிலாக ஒரு முன்னாள் இராணுவ தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

2009ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகளைப் பாதியாக குறைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கிறது. தீவின் தேவைகளுக்கு இறக்குமதிகளை 80 சதவிகிம் நம்பிருக்கும் நிலையில், கியூபா இறக்குமதி செலவினங்கள் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதைக் காண்கிறது. அதன் முக்கிய ஏற்றமதியான நிக்கல் உலக பொருளாதார நெருக்கடியின் பாதிப்பினால் விலையில் 41 சதவிகிதச் சரிவடைந்துள்ளது.

இதே போன்ற சரிவு எண்ணெய் விலையிலும் ஏற்பட்டுள்ளது. இது வெனிசூலாவின் ஹ்யூகோ சாவஸ் அரசாங்கம் அளிக்க வந்துள்ள உதவித் தொகையில் இருப்புத் தன்மையையும் வினாவிற்கு உட்படுத்தியுள்ளது. கியூபாவின் அரசாங்க வருமானத்தில் 2007ம் ஆண்டு இது அரைப்பங்கு இருந்தது.

இந்த நெருக்கடியை ஒட்டி ராவுல் காஸ்ட்ரோவின் அரசாங்கம் சிக்கன நடவடிக்கைளை சுமத்த மேற்கொண்டுள்ளது; அதே நேரத்தில் கியூபாவின் தொழிலாள வர்க்கம் உற்பத்தித் திறனை உயர்த்த வேணடும் என்றும் கூறுகிறது.

அதே நேரத்தில் அது கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்கள் இராஜதந்திர மற்றும் பொருளாதார முற்றுகை வாஷிங்டனால் சுமத்தப்பட்டதற்கு பின் புதிய இராஜதந்திர, பொருளாதார உறவுகளை அமெரிக்காவுடன் பிணைத்துக்கொள்ள தன் விருப்பத்தையும் அடையாளம் காட்டியுள்ளது. வாஷிங்டன் 1959 புரட்சியை தொடர்ந்து அமெரிக்க பெருநிறுவன சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவ்வாறு செய்தது.

இதே போல் ஒபாமா நிர்வாகமும் கியூபாவைப் பொறுத்தவரையில் மாற்று வழிவகைக்கான விருப்பத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க செனட் இயற்றி ஜனாதிபதி ஒபாமாவினால் கையெழுத்திடப்பட்டுள்ள $410 பில்லியன் மொத்தச் செலவுத் தொகுப்பில் கியூபாவிற்கு எதிராக புஷ் நிர்வாகம் சுமத்தியை கடுமையான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் செயல்படுவதால் குறையும் நிதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் வாழும் கியூபா மக்கள் தீவிற்கு செல்லுதில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான வரம்புகள் மற்றும் தீவிற்கு அவர்களுடைய உறவினர்களுக்கு அனுப்பக் கூடிய பணத்திற்கான வரம்புகள் ஆகியவை அடங்கியிருந்தன.

இத்தகைய அரைகுறை நடவடிக்கை காஸ்ட்ரோவிற்கு எதிராக இருக்கும் குழுவின் எரிச்சலை தூண்டியுள்ளது. நிதிய சட்ட வரைவு முழுவதுமே இதையொட்டி பாதிப்பிற்கு உட்பட்டது. அதற்குக் காரணம் நியூ ஜேர்சியின் ஜனநாயகக் கட்சி செனட்டரான ரோபர்ட் மெனென்டெஸ், ஒரு கடுமையான காஸ்ட்ரோ எதிர்ப்பாளராக இருந்ததுதான். இதற்கு விடையிறுக்கும் வகையில் ஒபாமா நிர்வாகம் வலதுசாரி கியூபா புலம் பெயர்ந்தோர் செல்வாக்குக் குழுவிற்கு வணிகத்தின் முக்கிய பொருளாதார தடைகள் தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்று கூறியுள்ளது.

ஆயினும்கூட, இந்தத் தடைகளும் வருங்காலத்தில் நிறுத்தப்படலாம் என்ற வாய்ப்புக்கள் உள்ளன. அத்தகைய விளைவு அமெரிக்க வணிகக் குழு மற்றும் தேசிய உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றால் கோரப்பட்டது. அவை கியூபாவில் பெரும் இலாபம் கிடைக்கும் என்று கருதுகின்றன. எனவே இது காஸ்ட்ரோ ஆட்சிக்கு தீவிர சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல தசாப்தங்களாக காஸ்ட்ரோயிசம் அதன் அரசியல் நியாயத்தன்மையை கியூபாவிற்குள் அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதார அழுத்தம் ஆகியவற்றின் இடைவிடாத் தன்மைக்கு எதிரான தேசிய விரோதப் போக்கில் அடித்தளத்தில் இருந்து பெற்றுக்கொண்டது. வாஷிங்டனுடன் உறவை சீராக்கிக் கொள்ளும் எந்த நடவடிக்கையும், அத்துடன் தீவின் பொருளாதாரத்தை வெளி முதலாளித்துவ முதலீட்டிற்கு அனுமதிக்கும் செயலும் தவிர்க்கமுடியாமல் கடுமையான அரசியல் மற்றும் சமூக பதட்டங்களுக்கு வகை செய்யும்.

பிடல் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இரு அதிகாரிகள் வெளி விரோதியின் நம்பிக்கைகளுக்கு ஊக்கம் கொடுத்தனர் என்று குற்றம் சாட்டியிருக்கையில், முக்கியமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த அதிர்ச்சி அகற்றல்களை அமெரிக்க கியூபா உறவுகள் நெருக்கமாவதற்குத் தயாரிப்பு என்றுதான் காண்கிறது.

வலதுசாரி கியூபா புலம் பெயர்ந்தோர் செய்தி ஊடகத்திற்கு வெளியே காஸ்ட்ரோவிய பதவி அகற்றல் பற்றி அதிக கண்டனம் ஏதும் பெருநிறுவன ஊடகத்தில் வரவில்லை. உண்மையில் அகற்றல் பற்றிய கட்டுரை ஒன்றில் Times சஞ்சிகை தன் ஒப்புதலைக் கொடுத்துள்ளது. கியூபாவின் புதிய வெளியுறவு மந்திரியும், முந்நாள் ஐக்கிய நாடுகள் சபை தூதவருமான ப்ரூனோ ரோட்ரிக்ஸை தன்னை ஒரு கியூபாவின் "தலிபானின்" ஒரு பகுதி என கூறுக்கொண்ட பெரஸ் ரோக்குடன் ஒப்பிட்டு எழுதியது.

வாஷிங்டனுக்கும் ஹவானாவிற்கும் இடையே சமாதான வாய்ப்புக்களைப் பற்றி குறிப்பிடுகையில், டைம்ஸ் "கியூபா தலிபான் இதுபோன்ற இராஜதந்திரரீதியான சவாலுக்கு உகந்தவர் அல்ல. ராவுல் கெட்டிக்காரர் என்றால், அவருடைய வெளியுறவு மந்திரி பெயரளவிற்கான ஒரு நபராகத்தான் தேர்ந்து எடுத்துள்ளார். ஒபாமா கெட்டிக்காரர் என்றால் வெள்ளை மாளிகை கியூபாவின் வெளியுறவு அமைச்சரக நபரிடம் தொடர்பு கொள்ளும்." என எழுதியது.

இதற்கிடையில், முக்கிய பொருளாதார, தொழில்துறை அமைச்சரகங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்திருப்பது, ஆழ்ந்த சிக்கன நடவடிக்கை, தீவிரச் சுரண்டல் மற்றும் தொழிலாளர்கள் நலன்கள் வெளிநாட்டு மூலதனத்திற்கு அடிபணியச்செய்யல் ஆகியவற்றை தவிர்க்க முடியாத வகையில் கியூபா தொழிலாளர்கள் எதிர்த்தால் எடுக்கப்பட வேண்டிய அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையைக் கொண்டுள்ளது.