World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

EU summit rejects US demand for increased stimulus packages

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு அமெரிக்காவின் கூடுதல் ஊக்கப் பொதிகள் கோரிக்கையை நிராகரிக்கிறது

By Stefan Steinberg
23 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கடந்த வாரம் இரு நாள் உச்சி மாநாட்டில் இருந்து வெளிவந்த வண்ணம் இருந்தார்கள். கூடியிருந்த அரசாங்க, நாட்டுத் தலைவர்கள் 27 பேர் பெருகிவரும் சர்வதேச நிதியப் பொருளாதார நெருக்கடிகளுக்கு விடையிறுக்கும் வகையில் அவர்கள் பல நடவடிக்கைகள் பற்றி ஒருமித்த முடிவிற்கு வரமுடிந்ததாக அறிவித்தனர்.

ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் தலைமையில் ஜேர்மனிய பிரதிநிதிகள் கொடுத்த வழிவகையை உச்சிமாநாடு பின்பற்றி இன்னும் கூடுதலான ஊக்கப் பொதிகளை கோரிய அமெரிக்காவின் கருத்துக்களை நிராகரித்து அதற்கு மாறாக நிதியச் சந்தைகளில் புதிய வகை கட்டுப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்தது.

இங்கிலாந்தில் மார்ச் 14.15 தேதிகளில் G20 நிதி மந்திரிகள் ஆரம்ப மாநாடு நடைபெற்றது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே விரிசல்களும் அழுத்தங்களும் பெருகிவருவதைக் காட்டியது. பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டம் ஏப்ரல் மாதம் லண்டனில் நடக்க இருக்கும் உலகத் தலைவர்களின் G20 மாநாட்டிற்கு தயாரிப்பு செய்வது ஆகும்; இது அணுகுமுறைகள் கடினமாக்கப்பட்டதைத்தான் எடுத்துக் காட்டியது. குறிப்பாக ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியம் G20 உச்சிமாநாட்டில் ஒரு ஐக்கிய முன்னணியாக செயல்பட்டு அமெரிக்க அழுத்தமான உலகப் பொருளாதாரத்தில் கூடுதலான நிதியை உட்செலுத்த வேண்டும் என்பதை எதிர்க்க வேண்டும் என்று விரும்புகிறது.

கடந்த வாரம் நடந்த பல நிகழ்வுகள் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உள்ளங்கள் குவிப்புக் காட்ட உதவியது மற்றும் அவர்கள் ஜேர்மனிய பேராளர் குழுவினால் செய்யப்பட்ட முன்மொழிவுகளின் பின்னே அணியினரை நெருங்கிச்செல்லுமாறு வழிநடத்திச்செல்ல வைத்தது.

கடந்த வாரம் ஐரோப்பிய பொருளாதாரக் கீழ்நோக்குச் சரிவின் பரப்பிலும் விரைவிலும் புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்பட்டன. HSBC Global Research கருத்தின்படி, யூரோப் பகுதியின் நான்கு பெரிய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றின் மொத்த பட்ஜெட் பற்றாக்குறை, 2008 ல் 2.0 சதவிகிதம் மட்டும் ஆகும் மற்றும் இந்த ஆண்டு 5.8 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், 2010ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவிகிதமாக உயரும் என்று கூறுகிறது. இதே நான்கு நாடுகளின் பொதுக் கடன் கிட்டத்தட்ட இந்த ஆண்டு 79 சதவிகிதம், 2008ன் 71 ஆகியவற்றில் இருந்து 89 சதவிகிதம் உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனி குறிப்பிடத்தக்க வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்றுமதித் தொழில் இப்பொழுது பெரும் சரிவில் உள்ளது; நாட்டில் வேலையின்மை விரைவாகப் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Financial Times Deutschland கடந்த வார பதிப்பின்படி, "பொருளாதார நெருக்கடி மிக மோசமான கணிப்பையும்விட அதிகரித்து, கீழ்நோக்குச் சரிவு தொடர்கிறது. ஜேர்மனிய நிறுவனங்கள் 2007 நடுப்பகுதியில் பெற்ற வணிக எதிர்பார்ப்புக்களைவிட 37 சதவிகிதம் குறைந்ததாகத்தான் பெற்றுள்ளன. இந்தத் திறனில் நிறுவனங்கள் உழைத்தால் அவற்றிற்கு இப்பொழுதுள்ள ஊழியர்களின் முழு எண்ணிக்கை தேவைப்படாது."

வேலையின்மையில் விரைவான ஏற்றம் என்பது "ஒரு சமூக மற்றும் உளரீதியான பேரழிவைக் கொடுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்" என்று ஏடு எச்சரிக்கை கொடுத்து முடிக்கிறது.

தொழில்துறை உற்பத்திச் சரிவு பற்றிய தகவல்கள் மற்றும் ஜேர்மனியில் வேலைகளுக்குப் பெருகும் அச்சம் ஆகியவை பிரிட்டனில் இருந்து வந்துள்ள எண்ணிக்கையோடு தொடர்ந்து வந்துள்ளன; பிரிட்டனில் வேலையின்மை 2 மில்லியனுக்கும் அதிகமாகிவிட்டது; 2010ல் இது 3மில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஏற்கனவே பலமுறை அதிக வேலையின்மையினால் ஏற்படக்கூடிய வெடிப்புத்தன்மை நிறைந்த சமூக விளைவுகளைப் பற்றி எச்சரித்துள்ளனர். அவர்களுடைய அச்சங்கள் கடந்த புதனன்று நடைபெற்ற மிகப் பெரிய ஆர்பாட்டத்தால் வலுப்பெற்றுள்ளன; அதில் 2 முதல் 3 மில்லியன் எதிர்ப்பாளர்கள் பங்கு பெற்றிருந்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாம் முக்கிய வளர்ச்சி அமெரிக்க பெடரல் ரிசேர்வ், 300 பில்லியன் அமெரிக்க டாலரை கருவூலப்பத்திரங்களில் வாங்குதலுடன், 850 பில்லியன் அமெரிக்க டாலர் மற்ற கடன்களையும் எடுத்துக் கொண்டு தேக்கநிலையில் உள்ள அமெரிக்க பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளித்தல் என்பதாகும். பெடரலின் இந்த முடிவு அடிப்படையில் கூடுதலான நாணயத்தை அச்சடித்து வங்கிகளிலும் பொருளாதாரத்திலும் உட்செலுத்துதல் என்பாதகும்; இத்தகைய நடவடிக்கைள்தான் சமீபத்தில் பாங்க் ஆப் இங்கிலாந்து, மற்றும் பாங்க் ஆப் ஜப்பான் ஆகியவை செய்துள்ளதாகும்.

அமெரிக்க பெடரல் ரிசேர்வின் முன்முயற்சியின் உடனடி விளைவு யூரோவே கிட்டத்தட்ட 4 சதவிகிதம் டாலருக்கு எதிராக உயர்த்தியது ஆகும் --ஒரு நாளில் இவ்வளவு பெரிய உயர்வு இதுவரை வந்தது கிடையாது; இது முக்கிய ஐரோப்பிய ஏற்றுமதி நாடுகாளான ஜேர்மனி போன்றவற்றிற்கு கூடுதல் பிரச்சினைகளைக் கொடுக்கும்; ஐரோப்பிய மத்திய வங்கிக்கும் பெருகிய முறையில் இதேபோல் நடவடிக்கை எடுத்து பொருளாதாரத்தில் பணத்தை உட்செலுத்த அதிக அழுத்தம் கொடுக்கும். ECB ஒன்றுதான் மிக அதிக பணத்தை மூலதனமாக வாடியிருக்கும் நிதிய பொருளாதாரச் சந்தைகளில் உட்செலுத்தும் பிரதான மத்திய வங்கி ஆகும்.

ஜேர்மனியின் முக்கிய நாளேடுகள் பெடரல் ரிசேர்வின் நடவடிக்கைகளை எச்சரிக்கையுடன் எதிர்கொண்டுள்ளன; அரசாங்கம் காகித நாணயத்தை அச்சடித்து நெருக்கிடியைத் தீர்க்க முற்பட்டால் மிகப் பெரிய பணவீக்கம் என்றும் ஆபத்து வரும் என்பதை எச்சரித்துள்ளன.

ஐரோப்பிய உச்சிமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக லுக்சம்பேர்க்கின் பிரதம மந்திரியும் யூரோக் குழுவின் தலைவருமான Jean Claude Juncker, "ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் விருப்பமான இன்னும் அதிக பொருளாதார மீட்புப் பொதியை எதிர்கொள்ளும் விதத்திற்கு நான் உடன்படவில்லை" என்றார்.

அதே நேரத்தில் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஜேர்மனிய பாராளுமன்றத்தில் கூறினார்: "இன்னும் அதிக வளர்ச்சி நடவடிக்கைகளுக்கான நேரம் இல்லை இது. அத்தகைய கருத்தை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். இருக்கும் நடவடிக்கைகள் ஒழுங்காகச் செயல்பட வேண்டும், அவை நன்கு வளர அனுமதிக்கப்பட வேண்டும்."

அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கை பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டு மேர்க்கெல் தொடர்ந்தார்: "ஒருவரை ஒருவர் விஞ்ச வேண்டும் என்னும் போட்டி, உறுதி மொழிகள் அளிப்பதில், நிலைமையை அமைதி உடையதாக ஆக்காது." அட்லான்டிக் பெருங்கடல் கடந்து வந்துள்ள திட்டங்கள் நெருக்கடியைத் தீர்ப்பதில் "ஆபத்துக்களைத்தான்" கொடுக்கும் என்றார்.

ஜேர்மனிய அரசாங்கம் போதுமான அளவு அதன் ஊக்கப் பொதிகளை கொடுத்துவிட்டதாக அறிவித்த மேர்க்கெல் கூறினார்: "லண்டனுக்கு உளரீதியாக நல்ல அடையாளங்களை நாம் அனுப்ப வேண்டும்; தேவையற்ற நடைமுறைக்கு உதவாத வளர்ச்சிப் பொதிகளில் போட்டியில் ஈடுபடக்கூடாது. நம்முடைய பங்கை நாம் செய்து முடித்துவிட்டோம்."

இதே கருத்துதான் சற்று அப்பட்டமாகவே ஒரு ஐரோப்பிய குழு அதிகாரியால் கூறப்பட்டதாக கார்டியன் ஏடு தெரிவிக்கிறது; "அமெரிக்கர்கள் தாங்கள் நிறைய செய்துவிட்டதாகக் கூறுகின்றனர். நீங்கள் ஒன்றும் எங்களுக்கு உபதேசம் செய்யத் தேவையில்லை என்று நாங்கள் அமெரிக்கர்களுக்கு சொல்லுகின்றோம்."

உச்சிமாநாட்டிலேயே முக்கிய ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் இருந்து மிரட்டும் செயல் எனக் கருதுப்படுவதற்கு பெருகிய எதிர்ப்பு தெரிந்தது; அது ஆஸ்திரிய நிதி மந்திரியினால் சுருக்கமாக உரைக்கப்பட்டது: "பணத்தால் சந்தையை நிரப்புதல்--அது எங்கு முடியும்?"

உச்சி மாநாட்டில் பல நாடுகளுக்கு இடையே பிளவுகள், பேரங்கள் என்று இருந்தபோதிலும்கூட --குறிப்பாக கிரேட் பிரிட்டன் நிதியச் சந்தைகள் கட்டுப்படுத்தப்படுவதற்கான திட்டங்களை நீர்க்கப் பார்த்தது-- ஜேர்மனிய பிரதிநிதிகள் குழு அதன் கோரிக்கைகள் பலவற்றை அனைவரையும் ஏற்க வைக்க முடிந்தது. உச்சிமாநாட்டில் இருந்து வெளிவந்த உடனடி ஊக்கப் பொதித் திட்டம் ஒன்று ஒப்புமையில் குறைவான 5 யூரோ பில்லியன் முதலீடு இணையதள தொழில்நுட்பம் மற்றும் விசைத்திட்டங்களுக்குத்தான்.

அதே நேரத்தில் கூடியிருந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடி நிதியை 25 யூரோ பில்லியனில் இருந்து 50 யூரோ பில்லியன் என இருமடங்காக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நிதியின் நோக்கம் திவால்தன்மையை எதிர்நோக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு பிணை கொடுப்பது ஆகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் International Monetary Fund க்கு கொடுக்கும் நிதியையும் 75 பில்லியன் யூரோக்கள் உயர்த்துவது என ஒப்புக் கொண்டனர்--ஆனால் அந்தப் பணம் வாடும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கியமான முடிவின்படி, ஐரோப்பிய ஒன்றியம் முறையாக கிழக்கு பங்காண்மை (Eastern Partnership) என்பதை அறிவித்துள்ளது; இதன் நோக்கம் முன்னாள் ஆறு சோவியத் நாடுகளான ஆர்மீனியா, அஜர்பைஜன், பேலரஸ், ஜோர்ஜிய, மோல்டோவோ மற்றும் உக்ரைய் ஆகிய நாடுகளுக்கு இடைய நெருக்கமான அரசியல், வணிக தொடர்புகளை கொண்டுவருதல் ஆகும். அஜர்பைஜனும் ஜோர்ஜியாவும் ஐரோப்பா விரும்பும் மாற்றீட்டு எரிபொருள், எண்ணெய் இறக்குமதி வழிகள் காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து வருவதற்கு முக்கியாமானவை ஆகும். பேலரஸ் இதே போல் ஒரு முக்கிய எரிவாயு குழாய்த் திட்டத்தைக் கொண்டுள்ளது. ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரவ் ஐரோப்பிய ஒன்றிய முடிவுகளுக்கு சீற்றத்துடன் விடையிறுக்கையில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் "மிரட்ட முற்பட்டுள்ளனர்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஜேர்மனிய செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் உச்சிமாநாட்டின் விளைவுகள் பற்றி சற்றும் மறைக்காத களிப்பைக் காட்டின. Spigel Online கருத்தின்படி, மேர்க்கெல் "ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடி செயல்பட்டியலை உறுதிப்படுத்தினார்... பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களால் உடன்பாட்டிற்கு உட்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ள இறுதி ஆவணம் ஜேர்மனியில் விருப்பப்பட்டியல் போல் உள்ளது. அதிபர் மேர்க்கெல் ஐரோப்பிய ஒன்றியத்தை நிதிய சந்தைக் கட்டுப்பாட்டிற்கு குவிப்புக் காட்டவேண்டும் என்று நம்பவைத்துள்ளார்--அதேபோல் புதிய ஊக்கத் திட்டங்களை எதிர்க்கவும் தயாரித்துள்ளார்."

உச்சிமாநாட்டின் பரந்த அரசியல் உட்குறிப்புக்கள் Suddeutsche Zeitung தலையங்கம் ஒன்றில் சுருக்கமாகக் கூறப்பட்டது; பேர்லின் சுவர் விழுந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர், இரண்டாம் உலகப் போரின் அடிப்படையான வெளிப்படைக் கருத்துக்களில் ஒன்று உண்மையினால் கடக்கப்பட்டது--"அதாவது, அமெரிக்கா நெருக்கடியில் இருந்து நம்மைக் காப்பாற்ற வகை செய்யும் எனக் கூறப்பட்டதை. பல ஆண்டுகள் மேற்கு ஐரோப்பியர்கள் அட்லான்டிக் கடந்து தங்கள் சார்பை அமெரிக்க மாதிரியில்தான் கொண்டிருந்தனர். இப்பொழுது இந்த முன்மாதிரி செயல்படவில்லை. புதிய அமெரிக்க அரசாங்கம் நெருக்கடி பற்றி வலுவற்ற முறையில் எதிர்கொண்டதின் விளைவாக ஐரோப்பியர்கள் திடீரென இதுவரை முன்பு செய்யாததை தைரியமுடன் செய்ய முன்வந்துள்ளனர்."

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸின் கடந்த வார இறுதியில் காட்டிய ஒற்றுமை உண்மையில் மிகவும் நலிந்ததாகும் ஐரோப்பாவில் அரசியல் உறவுகள் உறுதியற்று இருப்பது ஹங்கேரிய பிரதமர் Ferenc Gyurscany உச்சிமாநாடு முடிந்த மறுநாள் இராஜிநாமா செய்யத் தயார் என்று கூறியதில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. நாடு திவாலாகும் தன்மையை எதிர்நோக்கும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஹங்கேரியும் ஒன்றாகும்; உலக நெருக்கடி ஆழ்வதால் ஏற்படும் விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆயினும்கூட ஐரோப்பிய நாடுகள் ஜேர்மனி முன்னணியில் இருக்கையில், அமெரிக்காவில் இருந்து வரும் பெருகிய பொருளாதார அரசியல் அழுத்தத்திற்கு விடையிறுக்கும் வகையில் உலகின் தலைமைக்கு தங்கள் உரிமையை முன்வைத்துள்ளன. அமெரிக்கா அதன் அரசியல் சக்தி மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஐரோப்பாவை நெருக்கடியின் சுமையில் பங்கு கொள்ள வற்புறுத்துகையில், ஜேர்மனியும் பிரான்ஸும் லண்டனில் வரவிருக்கும் G20 மாநாட்டிற்கு தங்கள் கோரிக்கை செயல்பட்டியலை கருவியாகக் கொண்டு செல்கின்றன.

அதே நேரத்தில், ஜேர்மனிய அதிபர் தன்னுடைய அரசாங்கம் பெருகிய முறையில் வாஷிங்டனை மீறுவது என்பது ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் நெருக்கடிக்கான விலையைக் கொடுக்கும் நோக்கத்தில் சமரசமற்ற, கடினக் கொள்கையை நோக்கமாகக் கொண்டதுடன் இணைந்தது என்றும் கூறியுள்ளார்.

உச்சி மாநாட்டின் இறுதியில், Jean-Claude Juncker பெருகும் வேலையின்மையின் விளைவாக "ஒரு சமூக நெருக்கடி" வரக்கூடிய எச்சரிக்கையை விடுத்தார்; பிரான்ஸில் சமீபத்திய பெரும் மக்கள் எதிர்ப்புக்களுக்கு இதுதான் தூண்டுதல் கொடுத்துள்ளது என்றார். ஜங்கரினட் கருத்துக்களை உதறித்தள்ளிய வகையில் அதிபர் மேர்க்கெல் ஐரோப்பிய தலைவர்கள் ஒரு இருண்டு சித்திரத்தைக் கொடுப்பதில் போட்டி போடக்கூடாது என்றும் "பிரான்சில் வேலைநிறுத்தம் நடப்பது இது ஒன்றும் முதல் தடவை அல்ல" என்றும முடிவாகக் கூறிவிட்டார்.