World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

"We're concerned about the security of our assets"

China premier warns of potential dollar collapse

"எங்கள் சொத்துப் பாதுகாப்பு பற்றி கவலை கொண்டுள்ளோம்"

சீனப் பிரதமர் டாலரின் வீழ்ச்சியின் சாத்தியப்பாடு பற்றி எச்சரிக்கிறார்

By Patrick Martin
16 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க அரசாங்கத்தின் திவால்தன்மை பற்றி வினாக்களை எழுப்பும் பகிரங்க அறிக்கை ஒன்றில் சீனப் பிரதமர் வென் ஜியபோ வெள்ளியன்று, அமெரிக்க கருவூலப் பத்திரங்களை மிக அதிகம் வைத்திருக்கும் சீனா "எங்கள் சொத்து பற்றி கவலை கொண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

சீனப் பாராளுமன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தொடரை அடுத்து வென்னின் கருத்துக்கள் வெளிவந்தன. அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி கருத்து தெரிவித்த வென் "ஜனாதிபதி ஒபாமாவும் அவருடைய புதிய அரசாங்கத்தினரும் நிதிய நெருக்கடியை சமாளிக்க தொடர்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் விளைவுகள் பற்றி எங்களுக்கு எதிர்பார்ப்புக்கள் உள்ளன. நாங்கள் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய நிதியை கடனாகக் கொடுத்துள்ளோம். எங்கள் சொத்துக்களின் பாதுகாப்பு பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம். உண்மையில், நான் சற்று கவலைப்படுகிறேன்." என்று கூறினார்.

அமெரிக்கா "தன் மதிப்பை தக்கவைத்துக் கொண்டு, அதன் உறுதிமொழிகளை மதித்து சீனச் சொத்துக்களின் பாதுகாப்பிற்கு உறுதி கொடுக்க" அழைப்புவிடுவதாக அவர் கூறினார்.

கடந்த மாதம் ஒபாமா நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட மதிப்பீடு அடுத்து நான்கு ஆண்டுகளில் அமெரிக்க அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை சமாளிக்க தேவைப்படும் நிதியான கிட்டத்தட்ட $5 டிரில்லியன், உலக கடன் சந்தைகளில் வாங்கப்படும் மிகப் பெரிய நிதியாக இருக்கும் என கூறுகிறது. இது டாலரின் மதிப்பில் ஒரு சரிவிற்கு வகை செய்யும் என்று சீன அதிகாரிகள்அஞ்சுகின்றனர்.

பெய்ஜிங் இப்பொழுது கிட்டத்தட்ட $1 டிரில்லியன் பணத்தை டாலர் சொத்துக்களாகக் கொண்டிருக்கிறது; இதில் கிட்டத்தட்ட $700 பில்லியன் அமெரிக்கக் கருவூலப்பத்திரங்களாக உள்ளது; அமெரிக்க நாணயச் மதிப்பின் சரிவு என்பது சீனாவைக் கடுமையாகப் பாதிக்கும்.

டாலர் இருப்புக்களின் பாதுகாப்பு பற்றி கவலை கொண்டாலும், பெய்ஜிங், "அதே நேரத்தில் சர்வதேச நிதிய உறுதித்தன்மையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் இவை இரண்டும் இடைத் தொடர்புடையவை." என்று வென் கூறினார். இது சீன ஆட்சியின் பழைமைவாத பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அது உலக முதலாளித்துவத்தின் பாதுகாப்பை தன் கொள்கையின் மையத்தில் வைத்திருக்கின்றது.

அமெரிக்க அதிகாரிகள் டாலர் மதிப்பு பற்றி பலமுறையும் உத்தரவாதம் கொடுத்த வகையில் இதை எதிர்கொண்டதுடன், சீனா இன்னும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் டாலர் தொடர்புடைய பத்திரங்களில் பாதுகாப்பு பற்றியும் உறுதியளித்துள்ளனர்.

வெள்ளை மாளிகைப் பொருளாதார ஆலோசகர் லோரன்ஸ் சம்மர்ஸ் அமெரிக்கக் கருவூலம் கடன் வாங்குதலுக்கு ஆதரவு கொடுத்தவிதத்தில் வெள்ளியன்று டாலர் இருப்பு வைத்திருப்பவர்கள் முழுஅளவிலான பணமற்ற நிலை ஏற்பட்டாலும் மற்றும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முற்றுமுழுதான சரிவானால்தான் பாதிப்புறும் நிலையை அடைவர் என்றும் கூறினார்.

ஒரு நிதியமைச்சரக செய்தித் தொடர்பாளர், "அமெரிக்க கருவூலச் சந்தை ஆழ்ந்த முறையில் *திரவத்தன்மையுள்ள சந்தையாக (liquid market) உலகில் உள்ளது" என்று அறிவித்தார். வெள்ளை மாளிகையின் செய்திப்பிரிவு செயலர் ரோபர்ட் கிப்ஸ், "உலகில் அமெரிக்காவை விட பாதுகாப்பான முதலீட்டிற்கான இடம் இல்லை" என்று கூறினார்.

சனிக்கிழமையன்று பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இன்னாசியோ லூலா டா சில்வா உடன் வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டு செய்தி ஊடகத் தோன்றலில் ஒபாமா, "சீன அரசாங்கம் மட்டும் இல்லை, ஒவ்வொரு முதலீட்டாளரும் அமெரிக்க முதலீட்டின் உறுதித்தன்மையில் முழு நம்பிக்கை கொள்ளலாம்" என்று அறிவித்தார்.

அமெரிக்காவிற்குள் டாலர்களின் உள்பாய்ச்சலை ஒபாமா அமெரிக்க முதலாளித்துவத்தின் வருங்கால நல்வாய்ப்புக்கள் பற்றிய ஒப்புதலாகும் என்று சித்தரித்தார். "இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு நடுவில்கூட அமெரிக்காவிற்குள் முதலீட்டு வரவுகளில் உண்மையான பெருக்கம் உள்ளது என்பதற்குக் காரணம் உண்டு." என்று அவர் கூறினார். "எமது பொருளாதார முறையின் மீது உறுதி என்ற உணர்வு மட்டும் இல்லாமல் நம்முடைய அரசியல் அமைப்பிலும் நம்பிக்கை உள்ளது; இது அசாதாரணமானது என நான் நினைக்கிறேன்." என்று அவர் கூறினார்.

இப்படி முதலீட்டு வரவிற்கான உந்துதல் சக்தி உண்மையில் நம்பிக்கை என்பதைவிட அச்சம் என்று கூறலாம். கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்கா போன்ற பலவீனமான பகுதிகளில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். அதேபோல் பத்திரங்கள், பங்குகள் என்று அமெரிக்க வங்கிகள் பெருநிறுவனங்கள் வெளியிடுவதை வாங்குவதில் இருந்தும் நழுவுகின்றனர்; அவை இப்பொழுது பெரும் அவநம்பிக்கையுடன் காணப்படுகிறது; அதற்குப் பதிலாக அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களைத்தான் வாங்குகின்றனர்.

அமெரிக்க நிதியப் பற்றாக்குறை காளான் போல் வளர்ந்துவிட்டது. 2009 நிதி ஆண்டில் (அக்டோபர் 2009 -பெப்ருவரி 2009) கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டம் முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைப் போல் மூன்று மடங்கு அதிகமாகி, $265 பில்லியனில் இருந்து $764 பில்லியன் என்று இதுகாறும் இல்லாத அளவிற்கு அதிகமாகிவிட்டது. ஐந்துமாத கால பற்றாக்குறை ஏற்கனவே 2008 நிதியாண்டின் முழுப் பற்றாக்குறையான $459 பில்லியனைவிட 70 சதவிகிதம் அதிகமாகும்.

மார்ச் 12 அன்று பைனான்சியல் டைம்ஸில் எழுதிய யேல் பல்கலைக்கழகப் பேராசரியரும் பெரிய சக்திகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் (The Rise and Fall of the Great Powers) என்ற நூலின் ஆசிரியருமான பெளல் கென்னடி, ஒபாமாவின் ஊக்கப்பொதித் திட்டம் உலக நிதியச் சந்தைகளில் உறுதியைக் குலைக்கும் விளைவை ஏற்படுத்தும் என்று வாதிட்டுள்ளார்: "இந்த ஆண்டு சந்தைக்கு வரவிருக்கும் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்கள் $1,750 பில்லியனை எவர் வாங்குவர் என்று எவரும் கேட்கவில்லை. அது ஆசிய நான்கு நாடுகளான சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியாவா (அவை அனைத்துமே உற்பத்திப்பிரிவில் பேரழிவில் உள்ளன), அல்லது அமைதியற்ற அரபு நாடுகளா (ஆம், ஆனால் நமது தேவையில் பத்தில் ஒரு பங்குதான்), அல்லது கிட்டத்தட்ட திவாலாகிவிட்ட ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளா? எதுவாக இருந்தாலும் நல் வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு பாரிய காகிதம் வாங்கப்பட உள்ளது என்றால், 2010, பின் 2011லும் கருவூலப் பத்திரங்களை வாங்க எவரிடம் ரொக்கம் இருக்கும்; அப்பொழுது அமெரிக்க டாலர் கடன் தரத்தில் சரிந்துவிடும்; ஸ்பெயின் நாட்டின் இரண்டாம் பிலிப்பின் சான்று கூட மிகச்சிக்கன் நடவடிக்கை என்று ஒப்புமையில் கூறப்பட்டுவிடும்?"

மெரில் லிஞ்ச் மதிப்பீடு ஒன்றின்படி அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் சீன முதலீட்டாளர்களுக்கு இந்த ஆண்டு 2.7 சதவிகித இழப்பைக் கொடுத்துள்ளது; அதாவது யுவான் என்னும் சீன நாணய மதிப்புப்படி. அதன் பாரிய டாலர் இருப்புக்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால் பெய்ஜிங் ஒரு முன்னேற்றமில்லா பாதையில் நிற்க நேரிடும்; ஏனெனில் அத்தகைய நடவடிக்கை ஒரு நிதியப் பீதியை தூண்டிவிடும், அதன் பேரழிவு தரங்கூடிய விளைவுகள் டாலர் தொடர்புடைய பத்திரங்களின் மதிப்பில் பாதிப்பு ஏற்படுத்தும்; சீனாவின் முதலீடுகளுக்கும் அந்த நிலைமை வரும்.

ஆனால், பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனுக்கு இடையே இருக்கும் நீண்டகால தொடர் உறவுகளை புறநிலை நிகழ்போக்குகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. அமெரிக்கச் சரிவு சீனப் பொருட்களை வாங்குவதில் பாரிய குறைவை ஏற்படுத்தியுள்ளது. பெப்ருவரி மாதம் சீனாவின் ஏற்றுமதிகள் 25.7 சதவிகிதம் சரிந்தன; நாட்டின் வணிக எஞ்சிய நிதியை $39.1 பில்லியலில் இருந்து $4.8 பில்லியனுக்கு கொண்டு வந்து விட்டது. இந்தப் போக்கு தொடர்ந்தால் சீனா அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு குறைவான டாலர்களைத்தான் கொண்டிருக்க முடியும்.

இரு பெரிய சக்திகளிடையே பெருகும் பூசல்கள் நிதியத் தரத்தில் மட்டுமின்றி இராஜதந்திர, பாதுகாப்புப் பிரச்சினைகளிலும் எழுந்துள்ளன. டாலர் பற்றிய வென்னின் கவலை கொண்ட அறிக்கை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஹைனன் தீவில் கடற்படைக் கப்பல்களுக்கு இடையே மிக அதிக அளவு வெளிப்படுத்தப்பட்ட மோதலுக்கு சில நாட்ககளுள் வந்தது. சீனக் கப்பல்கள் USNS Impeccable என்னும் அமெரிக்கக் கப்பலை கடலோரப்பகுதியில் இருந்து 75 மைலகளை அப்பால் செல்லுமாறு கட்டாயப்படுத்தின; அங்கு அது சீனாவின் மிகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தளத்திற்கு வந்து, போகும் கப்பல்கள் பற்றி வேவு வேலை பார்த்து வந்தது.

ஜனாதிபதி ஒபாமா தென் சீனக் கடலுக்கு நீருக்கடியாலான ஏவுகணைகளினதும், ஏவுகணைகளினதும் துணைமூலம் வழிகாட்டப்படும் தகர்க்கும் கப்பலை Impeccabe பாதுகாப்பிற்கு வியாழனன்று அனுப்பி வைத்தார். அது தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒபாமா பின்னர் சீன வெளியுறவு மந்திரி யாங் ஜீச்சியை வெள்ளை மாளிகையில் பார்த்தார்.

இதற்கு அடுத்த நாள் வென்னுடைய டாலர் பற்றி அறிக்கை வந்துள்ளது; அதற்கும் மறுநாள் ஒரு சீனக் குழுமம் $3.2 பில்லியன் எரிவாயு உடன்படிக்கையை ஈரானுடன் கையெழுத்திட்டது. ஈரானிய ஆட்சியை பொருளாதார ரீதியாக குழிபறிக்கும் புஷ்ஷால் விரிவாக்கப்பட்டு ஒபாமாவால் தொடரப்படும் அமெரிக்கக் கொள்கையை திறமையுடன் பெய்ஜிங் ஏற்காமல் போயிற்று. மூன்று ஆண்டு உடன்படிக்கை பரந்த அளவில் சீன பொறியியல் உதவியை பாரசீக கடலடிப் பகுதியில் தெற்கு பார்ஸ் வயலின் வளர்ச்சிக்கு வழங்கும். அதற்குப் பதிலாக சீன வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோக்கிக்கப்படும்.

*Liquid market-திரவச்சந்தை- சொத்துக்களை பணமாக மாற்றக்கூடிய சந்தை