WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
Avigdor Lieberman: Israel's fascist face to the world
அவிக்டர் லிபர்மன்: உலகிற்கு இஸ்ரேலின் பாசிச முகம்
Jean Shaoul
18 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில், வலதுசாரி லிகுட் கட்சியின் தலைவரான
பென்யாமின் நேடன்யாகு, ஐந்து மந்திரிசபை பதவிகள் வழங்கப்படவுள்ள தீவிர வலதுசாரி
Yisrael Beiteinu
கட்சியுடன் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார். கட்சித் தலைவர் அவிக்டர் லிபர்மன் இஸ்ரேலின் வெளியுறவு
மந்திரியாக வரவிருக்கிறார்.
பெப்ருவரியில் நடைபெற்ற தேர்தல்களில் லிகுட் 27 இடங்களில் வெற்றி பெற்றது;
இது கடிமா பெற்றதைவிட ஒரு எண்ணிக்கை குறைவாகும். ஆனால் நேடன்யாகு அரசாங்கத்தை அமைக்குமாறு கோரப்பட்டார்;
ஏனெனில் வலதுசாரி கட்சிகள் மொத்தத்தில் 120 உறுப்பினர் இருக்கும் பாராளுமன்றத்தில் (Knesset)
65 இடங்களைக் கொண்டுள்ளன.
இன்னும் கூடுதலான அரசியல் பேரம் நடத்தினால்தான் சிறிய வலதுசாரி கட்சிகளான
Shas,
Jewish Home, United Torah
Judaism
ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள முடியும். ஆனால் நேடன்யாகு வெற்றி பெற்றால் அவருடைய அரசாங்கம் இஸ்ரேலின்
வரலாற்றிலேயே மிகத் தீவிர வலதுசாரி அரசாங்கமாக இருப்பதுடன், ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருக்கும் யூதக்
குடியேற்றவாசிகளுக்கு கட்டுப்படும் மற்றும் இனச்சுத்திகரிப்பிற்கு இனவாதரீதியில் வாதிடுவோரின் சர்வதேச
பிரதிநிதிகளின் அரசாங்கமாகவும் இருக்கும்.
அவர் ஐந்தாம் படையினர் என்று தான் கருதும் இஸ்ரேலிய அரபு மக்களை பாலஸ்தீனிய
பகுதிகளுக்கு "மாற்ற வேண்டும்" என்ற உரத்த குரல் கொடுப்பவர் லிபர்மனாகும். "இரு நாடுகள்" என்ற தீர்வின்
அடித்தளமான "சமாதானத்திற்கு நிலம்" என்ற கருத்தை அவர் எதிர்க்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்
எகிப்தின் அஸ்வான் அணை குண்டுவீசித் தகர்க்கப்பட வேண்டும், எகிப்து வெள்ளக்காடாக வேண்டும் என்று கூறினார்.
சமீபத்தின் காசாப் பகுதியில் அணுசக்தி பயன்படுத்தி ஹமாசை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று கோரினார்;
மேலும் ஈரான்மீது குண்டுவீச்சு நடத்தப்பட வேண்டும் என்பவர். முற்றிலும் ஊழல் நிறைந்த நபரான இவர் வரி ஏமாற்று,
ஊழல், கறுப்புபண மாற்றல் ஆகியவற்றிற்காக விசாரணையில் உள்ளார்.
இக்கட்டம் வரை, கடிமா மற்றும் தொழிற்கட்சி அத்தகைய கூட்டணியில் சேர
மறுத்துள்ளன. ஆனால் Yisrael Beiteinuவுடன்
நேடன்யாகு கொண்டுள்ள உடன்பாடு கடிமாவின் Tzipi
Livniஐ,
அவர் கூட்டணியில் சேர்ந்தால் வெளியுறவு மந்திரி பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்கு இன்னும் சாத்தியப்பாட்டை
வழங்கியுள்ளது.
ஆயினும்கூட இத்தகைய ஆத்திரமூட்டும், போர்வெறியரை வெளியுறவு மந்திரியாக
கொண்டுவரும் திறன் இருப்பது சியோனிசத்தின் அரசியல் மற்றும் சமூக வீழ்ச்சியின் மற்றொரு இழிந்த கட்டம் ஆகும்.
முக்கியமானவராக இவர் பெற்றுள்ள உயர்வு உத்தியோகபூர்வ இஸ்ரேலிய அரசியல் முழு பிரிவுகளும் வலதுசாரி
பக்கம் பாய்வதின் உச்சக்கட்டத்தை பிரதிபலிக்கிறது.
லிபர்மான் ஆதரவின் தளம் இஸ்ரேலின் 1.25 மில்லியன் ரஷ்ய யூதர்கள் ஆவர். இவர்
தன்னுடைய அரசியல் வாழ்வை Rabbi Meir Kahane
உடைய Kach
கட்சியில் தொடங்கினர். இது 1980களில் வன்முறை, இனவெறி ஆகியவற்றிற்காக தடை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இவருடைய பிந்தைய போக்கு உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வின் மையத்தில் இருந்தது.
Histadrut
வணிக ஒன்றியக் கூட்டமைப்பின் ஜேருசலம் கிளையின் செயலாளராக பணிபுரிந்து, பின்னர் லிகுட்டிற்கு சென்றார்;
1993 முதல் 1996 வரை இயக்குனர் தலைவராகவும் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த பென்மின்
நேடான்யாகுவின் அலுவலகத் தலைவராகவும் பின்னர் ஓராண்டு இருந்தார்.
1999ல் இவர் Yisrael
Beiteinu கட்சியை நிறுவி அதன் தலைவராகவும் விளங்கினார்.
இக்கட்சி தொடக்கத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த மதசார்பற்ற யூதர்களைப் பிரதிபலித்தது; பின்னர் பரந்த
தளத்தை ஈர்த்து 1999ம் ஆண்டு பாராளுமன்றத்திலும் நுழைந்தது. ஏரியல் ஷரோனின் அரசாங்கங்களில் இவர் பணி
புரிந்தார்; ஆனால் 2004ல் காசாப்பகுதியில் இருந்து யூதக் குடியேற்றங்களை திரும்பப் பெறுவதை எதிர்த்தற்காக
பதவியில் இருந்து அகற்றப்பட்டார். பின்னர் எகுட் ஒல்மெட்டின் கடிமா அரசாங்கத்தில் துணை பிரதமர்களில்
ஒருவராகச் சேர்ந்து, அக்டோபர் 2006ல் மூலோபாய விவாகாரங்களின் மந்திரியானார். ஆனால் 2008
ஜனவரி மாதம் அமெரிக்க ஆதரவு பெற்ற அன்னாபோலிஸ் பேச்சுவார்த்தைகளின் கீழ் பாலஸ்தீனியர்களுடன்
பேச்சுவார்த்தைக்கு ஆதரவு கொடுத்த மறுத்ததால் இராஜிநாமா செய்தார். இவருடைய கட்சி 15 தொகுதிகளில்
சமீபத்திய தேர்தல்களில் வென்றது; இஸ்ரேலை தோற்றுவித்த தொழிற்கட்சியை இது நான்காம் இடத்திற்குத்
தள்ளியது.
பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலிய அரபு மக்களுக்கு எதிரான கடின நிலைப்பாட்டை
லிபர்மன் கொண்டிருப்பது இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குபர்கள் குறிப்பிடுவது போல் ஒரு சிதைவு அல்ல.
உண்மையில் வெளியுறவு மந்திரி பதவிக்கு அவர் தகுதி உடையவர் எனக் கருதப்படுவதே எந்த அளவிற்கு அவருடைய
கொள்கைகள் இஸ்ரேலிய ஆளும் வட்டங்களின் முக்கிய நிலைப்பாட்டை ஒத்துள்ளன என்பதின் அடிப்படையில்தான்.
அரசாங்கத்தின் மிக உயர்ந்த இடங்களுக்கு இவருடைய ஏற்றம், இஸ்ரேலின்
கொலைகாரத் தாக்குதல்களினால் தயாரிக்கப்பட்டது ஆகும். அது முதலில் லெபனான் மற்றும் காசா மீது 2006ல்
நிகழ்ந்தது. பின்னர் இந்த ஆண்டு காசாவின் மீது நடந்தது. கடைசித்தாக்குதல் 1,300 ஆண்கள், பெண்கள்,
குழந்தைகளைப் பலி வாங்கியுள்ளது. இது கடிமா மற்றும் தொழிற்கட்சியின் தூண்டுதலில் நடைபெற்றது. இவை
இரண்டும்தான் இப்பொழுது மற்றபடி தீவிர வலதாக இருக்கும் அரசாங்கத்தில் நிதானப்போக்கு உடையவை எனக்
கருதப்படுகின்றன. இதைத்தவிர, நேடான்யாகுவும் லிவ்னியும் குறிப்பாக அரபு மக்கள் இஸ்ரேலுக்கு விசுவாச
உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கூண்டோடு வெளியேற்றப்படுவர் என்ற கருத்திற்கு ஆதரவு
கொடுத்துள்ளனர்.
சமூக பாகுபாடு, அநீதி, அடக்குமுறை ஆகியவை இராது எனக் கூறுப்படும் மற்றும்
யூதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று சியோனிஸ்ட்டுக்கள் கூறும் இஸ்ரேலில் உண்மையில் சமூக மற்றும் அரசியல்
அழுத்தங்கள் நிறைந்துள்ளது. சட்டவிரோதமாக இது பாலஸ்தீனியர்களின் இடங்களை ஆக்கிரமித்து அவர்களை அடக்கி
வருவதுடன், காசாவில் பெரும் மனிதாபிமானமற்ற அழிவைத் தோற்றுவித்துள்ளது. இஸ்ரேலிய அரபு மக்களுக்கு எதிராக
இவர்கள் கொண்டுள்ள பாகுபாடு சமூக சமத்துவமின்மையின் மிகக் கோரமான தன்மையின் அப்பட்டமான வெளிப்பாடு
ஆகும் அதையொட்டிய அழுத்தங்கள் இஸ்ரேலைப் பெரிதும் பாதித்துள்ளன. இஸ்ரேலிய மக்கள் 7 மில்லியன் பேரில்
1.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உள்ளனர்; இதில் 800,000 குழந்தைகளும், மூன்றில் ஒரு பகுதியினர்,
அடங்குவர். வேலை செய்யும் வறியவர்கள் (working
poor) கிட்டத்தட்ட மொத்த வேலைக்கு செல்பவர்களில் 45
சதவிகிதம் என்று உள்ளனர்; ஆனால் நிகரவருமானப்படி உலக சராசரியை விட இஸ்ரேலிய மில்லியனர்களின்
எண்ணிக்கை இரு மடங்கு உள்ளனர்.
லிபர்மன் ரஷ்ய யூதர்கள் மற்ற இளைஞர்களில் ஒரு பிரிவினர் மத்தியில் இந்த சமூக
மற்றும் அரசியல் பிளவுகளை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளார். இது அரேபிய எதிர்ப்பு இனவெறியுடன் வேலையின்மையை
சமாளிக்கும் பொதுப்பணித்திட்டத்திற்கான வார்த்தை ஜால அழைப்புக்களின் அடிப்படையிலானதாகும்.
இந்த அரசியல் அரங்கில் ஜேர்மனியில் 75 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்திற்கு வருவதற்காக
ஹிட்லர் மற்றும் நாசிகள் பயன்படுத்திய அரசியல் சிந்தனைப்போக்கிற்கான வெறுப்புமிக்க அரசியல் அடித்தளத்தின்
தவிர்க்கமுடியாத எதிரொலியை காணலாம். இத்தகைய நபர் உலகிற்கு இஸ்ரேலின் முகம் எனக் காட்டப்பட
தேர்ந்தெடுக்கப்பட்டது முழு சியோனியத் திட்டத்தினதும் இழிவுகரமான தீர்ப்பாகும்.
உண்மையில் போர், அடக்குமுறை, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் பெரும்பான்மை
மக்கள் மீது சமூக சமத்துவமின்மையை கோரமான தரத்திற்கு சுமத்தும் தன்மை இவற்றைக் கொண்டு ஒரு மக்களை
இடம்பெயரச்செய்து ஒரு நாட்டை உருவாக்கியதன் தவிர்க்க முடியாத விளைவுதான் லிபர்மன் ஆவார். வலதுசாரி
குண்டர்களான நேடான்யாகு மற்றும் போர்க்குற்றவாளிகளான ஏரியல் ஷரோன் போன்ற வலதுசாரிகளின்
வழித்தடத்தைத்தான் இவர் பின்பற்றுகிறார்.
வரவிருக்கும் வெளியுறவு மந்திரி இஸ்ரேலிய மக்களை முட்டுச்சந்திக்கு இட்டுச்சென்ற
சியோனிசத்தின் தனிப்பட்ட மொத்த உருவகம் ஆவார். இத்தகைய பாதை அரேபிய, யூத தொழிலாளர்கள்
முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டம் நடத்தவும் மத்திய கிழக்கு முழுவதும் ஒரு சோசலிச
சமூகத்தை கட்டமைக்க அரசியல் ஒற்றுமை பாதுகாப்பதன் மூலம்தான் கடக்கப்பட முடியும். |