World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: Millions strike and march against austerity பிரான்ஸ்: சமூக வெட்டுகளுக்கு எதிராக இலட்சக்கணக்கானோர் வேலைநிறுத்தம் By Antoine Lerougetel பல மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பிரான்ஸ் முழுவதும் உள்ள 213 நகரங்களிலும் சிறு நகர்களிலும் தெருக்களுக்கு வந்து பெருகும் வறிய நிலை, வேலையின்மை மற்றும் சமூக பணிகளில் குறைப்பை ஏற்படுத்தும் அரசாங்க சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். கருத்துக் கணிப்புக்கள், நடவடிக்கை தினம் பற்றிய ஒப்புதல் சதவிகிதம் 72ல் இருந்து 78 வரை பிரெஞ்சு மக்களுடைய ஆதரவிருந்ததாக காட்டுகின்றன. 1930 களுக்கு பின்னர் உலகின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி, மந்த நிலை இவற்றிற்கு இடையே இந்த நடவடிக்கை நடந்தது. இது பிரான்சின் பொருளாதாரத்தையும் வேலை நிலைமையையும் இன்னும் அதிக அளவில் பாதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. 2009ல் வேலை இழப்புக்கள் பற்றிய கணிப்புக்கள் 400,000க்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறுகின்றன. வணிக ஏடான Les Echos இன் நேற்றைய பதிப்பில் முக்கிய பொருளாதார வல்லுனரான Pierre Ferracci, "வேலையின்மை அதிகரிப்பு என்பது இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம். இரண்டாம் காலண்டில் நாம் கவனமாக இல்லை என்றால் மிகப் பெரிய வேலைகள் இழப்புக்கள் அலையென வரும்" என்று எச்சரித்தார். வழக்கம்போல் போலீஸ் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றவர்கள் பற்றிக் கொடுத்த எண்ணிக்கையில் பரந்த வேறுபாடுகள் இருந்தன. ஆனால் பொதுவான உடன்பாடு ஜனவரி 29ம் தேதி தெருக்களுக்கு வந்த ஏராளமான மக்களை விட அது அதிகமானது என்பதுதான். பொதுப் பணிப்பிரிவுகளில் இருந்து சற்று குறைந்த அளவில் உறுப்பினர்கள் வந்தாலும், பொதுவாக எதிர்ப்பிற்கு ஆதரவு மகத்தானதாக இருந்தது. CGT தொழிற்சங்கம் பாரிசில் 350,000 மக்கள் குழுமினர் என்று மதிப்பிட்டது; போலீசாரோ 85,000 பேர் கூடினர் என்றனர். Marseille ல் 320,000 (போலீஸ், 30,000); Grenbole ல் 60,000 (போலீஸ், 34,000); Angouleme 25,000 (போலீஸ் 14000). தொழிற்சங்கங்கள் பிரான்ஸ் முழுவதிற்கும் நேற்று வந்ததாகக் கொடுத்த மொத்த எண்ணிக்கை 3 மில்லியன் ஆகும் (போலீசார் 1.2 மில்லியன்); ஜனவரி 29ல் 2.5 மில்லியன் என்று இருந்தது.நிர்வாகத்தின் எண்ணிக்கை 5.2 மில்லியன் பொதுப்பணி தொழிலாளர்களுக்கு: EDF மின்இணைப் பயன்பாடு 17.5 சதவிகிதம், SNCF பொது ரயில்வேக்கள் 35.9; அஞ்சல் துறை 20 சதவிகிதம்; ஆரம்பக் கல்விப் பிரிவு 35 சதவிகிதம், இடைநிலைக் கல்வி 24.5 சதவிகிதம். மாணவர்களும் ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும், அல்லது ஆக்கிரமிப்பில் அல்லது தடுப்பில் ஈடுபட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பிரான்ஸ் முழுவதும் மூடப்பட்டுள்ளன. மாணவர் சங்கம் UNEF மார்ச் 11 அன்று 70 பல்கலைக்கழகங்கள் வேலைநிறுத்தத்தில் இருப்பதாகவும், 25 முழுமையாக அல்லது பகுதியாக முற்றுகைக்கு உட்பட்டுள்ளன என்றும் தகவல் கொடுத்துள்ளது. பல பொதுக்கூட்டங்கள் அங்கு வளாகங்களை நேற்று மூட முடிவெடுத்தன. மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறும் மற்றும் மிக அதிகம் சுரண்டப்படும் சில்லரை விற்பனைத் தொழிலாளர்கள் திரட்டப்படுதல் மற்றும் கல்வி, சுகாதாரப் பணி தொழிலாளர்கள் ஆலைத் தொழிலாளர்களுடன் திரட்டப்படுதல் என்றது பெருகிய நிகழ்வாகிக் கொண்டுவருகிறது. நேற்று பாரிசில் மக்டோனால்ட் தொழிலாளர்கள் தங்கள் பணி நிலைமைகளை எதிர்த்து, அதிக ஊதியம் கோரியவர்கள் கைகளில் "நாங்கள் ஒன்றும் அரைக்கப்பட்ட இறைச்சி அல்ல" என்ற அட்டைகளை வைத்திருந்தனர். இத்தகைய அணிதிரளல் தொழிலாளர்களின் உறுதிப்பாடு வேலைகள் மற்றும் சமூகத் திட்டங்கள் தாக்குதலை எதிர்த்து இருக்கும் என்பதற்கு சான்றாக உள்ளது. ஆனால் எதிர்ப்பை ஏற்பாடு செய்த தொழிற்சங்கங்கள் ஆலைகள் மூடல், பணிநீக்கங்கள், வேலையில் இருந்து அகற்றப்படுதல் என தொடராக நடக்கும் நிகழ்ச்சிகளைத் தடுக்க எந்தக் கொள்கையையும் முன்வைக்கவில்லை. குறிப்பாக கார்த் தொழிலிலும் அதன் விநியோக ஆலைகளிலும் (Continental, Dunlop-Firestone இன்னும் மற்றவற்றில்) எதையும் முன்வைக்கவில்லை. அவை முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாப்பதால் அரசாங்கத்திடம் இன்னும் சலுகைகளைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதுடன் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவையும் கொடுக்கின்றன. பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் ஏற்கனவே கொடுத்த அவசர பொதியான 2.6 பில்லியனைத் தவிர ஒரு சென்ட் கூட தருவதற்கில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார். இது தொழிற்சங்கங்களினால் போதாது என்று முற்றிலும் நிராகரிக்கப்பட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்த இப்பணத்தால் முடியாது என்று கூறிவிட்டன. மார்ச் 16 பதிப்பில் Le Figaro குறிப்பிட்டதாவது: "தொழிற்சங்கங்களின் பொறுப்புணர்வையும் நிதானமான கோரிக்கைளையும் நிர்வாகம் நம்பியிருந்ததால், அதிக உள்ளூர்ரீதியான எழுச்சிகளின் தோற்றத்தால் அவற்றின் கவலை வேறு பரிமாணத்தை எடுத்துள்ளது." ஜனவரி 29 அன்று நடந்த முந்தைய வேலைநிறுத்தம் போலவே, சோசலிசக் கட்சி மார்ச் 19 ஆர்ப்பாட்டங்களுக்கு சிறிய அளவு உறுப்பிர்களை திரட்டியிருந்தது. முன்னாள் சோசலிச கட்சி ஜனாதிபதி வேட்பாளர் செகோலீன் ரோயால், சார்க்கோசியின் பிடிவாதத்தை கண்டு இகழ்வது போல் காட்டிக் கொண்டவித்ததில் கூறினார்: "இன்று மிகவும் பொறுப்பான தொழிற்சங்கத் தலைவர்களை கொண்டிருக்கிறோம்." தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று WSWS பேட்டி கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை தினத்தின் திறமை பற்றி நம்பிக்கைற்று இருந்தனர்; அதேபோல் நெருக்கடிக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடும் திறன் பற்றியும், இதைத் தோற்றுவித்த முதலாளித்துவ முறைக்கு எதிராக அவற்றின் நிலைப்பாடு பற்றியும் அவநம்பிக்கையுடன்தான் உள்ளனர். |