World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா
 

ASEAN summit: amid talk of cooperation, economic rivalry on the rise

ஆசியான் உச்சிமாநாடு: ஒத்துழைப்பு பற்றிய பேச்சுக்கிடையில் பொருளாதாரப் போட்டி எழுகிறது

By John Chan
5 March 2009

Back to screen version

பாங்காக்கில் கடந்த வாரம் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ASEAN) வருடாந்த உச்சிமாநாட்டில் வழமைாக உயர்மட்ட சர்வதேசக் கூட்டங்களில் காணக்கூடிய வடிவமைப்பை பின்பற்றியதை காணலாம். 10 அங்கத்துவ நாடுகளிலும் தீவிர சரிவு இருக்கையில், ASEAN தலைவர்கள் தத்தம் நாடுகளில் பாதுகாப்புவரி நடவடிக்கைகளையும் பொருளாதார போட்டியை அதிகரிக்கையிலும் தாம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தடையற்ற சந்தைக்கு உறுதியளித்துக்கொண்டனர்.

உச்சி மாநாட்டின் அறிக்கை ASEAN உடைய ஒற்றைச் சந்தைக்கான திட்டங்களை, ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல் 2015க்குள் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி, தடைற்ற வணிகத்தை வரவேற்று பொருட்கள், மூலதனம் மற்றும் உழைப்பு தடையற்ற முறையில் இடம் பெயரும் வாய்ப்பு வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. தற்போதைய உலக மந்த நிலைக்கு முன்பும் கூட பல பகுப்பாய்வாளர்கள் ASEAN உறுப்புநாடுகளுக்கு இடையே இருக்கும் பெருத்த வேறுபாடுகளால் அத்தகைய காலக்கேட்டிற்குள் அடையமுடியாதது என்றுதான் நம்பினர்.

உச்சி மாநாட்டின் தலைவரான தாய்லாந்து பிரதம மந்திரி அபிசித் வெஜ்ஜஜீவா எல்லா உறுப்பினர்களும் பாதுகாப்புவரி முறையை எதிர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த வகையில், "இப்பொழுதில் இருந்து நாம் குழுவாகவும் பரந்த ஆசியப் பகுதியின் ஒரு பகுதி என்ற முறையிலும் கடுமையான சோதனைக்கு உட்படுவோம்." என்றார். ஆயினும்கூட தலைவர்கள் தடையற்ற சந்தைக் கோட்பாட்டிற்கு உதட்டளவு மரியாதை கொடுத்தாலும்கூட, பாதுகாப்புவரி நடவடிக்கைகள் ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிகின்றன.

உதாரணத்திற்கு, மலேசியப் பிரதம மந்திரி அப்துல்லா அஹ்மத் படாவி உச்சிமாநாட்டில் "நாம் அனைவரும் ஒருமுகமாக பாதுகாப்புவரிக்கு எதிராக உள்ளோம். பாதுகாப்புவரி முறையை எந்த நாடாவாது பின்பற்றுகிறது என்று நாம் அறிந்தால் அந்நாட்டிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்." எனக் கூறினார். ஆனால் அவருடைய அரசாங்கம் ஏற்கனவே உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆதரவுடன் "மலேசியப் பொருட்களை வாங்குக" பிரச்சாரத்தை தொடக்கிவிட்டது.

உச்சிமாநாட்டிற்கு வெளியே படாவி பாங்காக் போஸ்ட்டிடம் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவது முற்றிலும் இயல்பான செயல்தான் என்று கூறினார். "எமது தொழில்களுக்கு நாமே ஆதரவு கொடுத்து எமது பொருட்களையும் சேவைகளையும் வாங்கவில்லை என்றால் அதையொட்டி தீவிர பிரச்சினை ஏற்படும்." என்றார்.

ASEAN உறுப்பு நாடுகளுக்கு இடையை தங்கள் சந்தையை திறப்பதில் தயக்கம் இருப்பதைக் குறித்த விதத்தில் பிலிப்பைன் வணிக மந்திரி பீட்டர் பவிலியா அசோசியேட் பிரஸ்ஸிடம் சில மந்திரிகள் கூட்டத்தை ஒட்டி நடக்கம் உத்தியோகபூர்வமற்ற விவாதங்களில் உலக வீழ்ச்சியை அடுத்து உள்ளூர் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினர். பிலிப்பைன்ஸில் வணிகக் குழுக்கள் அரசாங்கத்தை "பினாய் வாங்குக, உள்ளுர்ப் பொருட்களை வாங்குக" என்ற சொற்களை திட்டமிட்ப்பட்டிருக்கும் ஊக்கப் பொதியின் ஒரு விதியாகச் சேர்க்குமாறு அழுத்தம் கொடுக்கின்றன.

Last month, the Indonesian trade ministry issued an order to all civil servants to support Indonesian businesses by buying locally-made food, beverages, footwear, clothing and even music.

கடந்த மாதம் இந்தோனிசிய வணிக அமைச்சரகம் அனைத்து அரசாங்க ஊழியர்களும் இந்தோனிசிய வணிகங்களுக்கு ஆதரவு கொடுக்கும்வகையில் உள்ளூரில் தயாரிக்கப்படும் உணவு, பானங்கள், காலணிகள், உடைகள் மற்றும் இசையைக்கூட வாங்குமாறு ஆணையை வெளியிட்டது.

ASEAN உறுதிமொழிகள் தடையற்ற முறையில் உழைப்பு இடம்பெயர்தல் இருக்கவேண்டும் என்றபோதிலும்கூட, அரசாங்கங்கள் தேசியவெறி உணர்வை தூண்டும் வகையில் குடியேறும் தொழிலாளர்கள் உள்ளூர் வேலைகளை திருடுகின்றனர் எனக் குற்றம் சாட்டினர். மலேசியாவில், மொத்த தொழிலாளர் பிரிவில் ஐந்தில் ஒரு பகுதியான குடியேறுபவர்களாக இருக்கையில், அரசாங்கம் 100,000 இந்தோனேசிய தொழிலாளர்களை நாடுகடத்தி உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் தாய்லாந்து அதிகாரிகள் சாங்மாயில் ஒரு கற்பழித்தல் வழக்கை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பர்மியத் தொழிலாளர்களை நாடு கடத்தினர்.

ASEAN தடையற்ற சந்தைத் திட்டம் தொடக்கத்தில் இருந்தே உருப்பெறாமல் இருந்தது. வணிக வரத்துக்கள் தென் கிழக்கு ஆசியாவிற்குள்ளிருந்து என்று முக்கியமாக இல்லை; மாறாக இப்பகுதிக்கு வெளியே இருக்கும் நாடுகளுக்கு என்று உள்ளது. ASEAN உறுப்பு நாடுகள் வெளி மூலதனம் சந்தை ஆகியவற்றிற்கு போட்டியிடுபவை; போட்டி என்பது தவிர்க்க முடியாமல் உலக நெருக்கடி தீவிரமாகும்போது அதிகமாகும்.

ASEAN உறுப்பு நாடுகள் தம்மை குறைவூதியத் தொழிலாளர் அரங்கங்களாக வளர்த்துக் கொண்டிருக்கின்றன; முக்கியமாக ஜப்பானிய மூலதனத்தை நம்பியும், ஐரோப்பிய அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதியையும் நம்புகின்றன. 1997-98 நிதிய நெருக்கடிக்கு பின்னர், ஏற்றுமதிகளில் நம்பிக்கை அதிகமாகிவிட்டது; ஏனெனில் அவை அதிக அளவு வெளிநாட்டு நாணய இருப்புக்களை சேமிக்க விரும்புவதுடன் மற்றும் ஒரு நிதிய அதிர்ச்சியில் இருந்து அதுதான் தங்களைக் காப்பாற்றும் என்றும் நினைக்கின்றன.

ASEAN நாடுகள் இப்பொழுது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானில் மக்கள் விரும்பும் பொருட்களை ஏற்றுமதி செய்வதைத்தான் முற்றிலும் நம்பியுள்ளன. ஆனால் அந்நாடுகள் அனைத்தும் மந்த நிலையில் உள்ளன. ASEAN உறுப்பு நாடுகள் இடையே பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியாதான் 2001ல் இருந்ததைவிட தற்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த ஏற்றுமதி விகிதத்தைக் கொண்டுள்ளன. உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ASEAN முழுவதும் இரு மடங்கு அதிகமாக ஏற்றுமதியைத்தான் நம்பியுள்ளது.

1997-98 நிதியக் நெருக்கடியை அடுத்து சீனா முக்கிய குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு அரங்காமாயிற்று; ASEAN நாடுகள் உதிரிபாகங்கள் மற்றும் மூலப் பொருட்களை சீன ஆலைகளுக்கு அனுப்புகின்றன. ஆனால் சீனாவே அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவிற்கு செய்யும் ஏற்றுமதிகளை நம்பியிருப்பதால் அதன் பொருளாதார வளர்ச்சி 2007ல் இருந்து பாதியாகப் போய்விட்டது; ASEAN ஏற்றுமதியில் அதன் தேவை விரைவாகச் சரிந்துவருகிறது.

சீனாவில் மிகப்பெரிய ஊக்கப்பொதி நடவடிக்கைகள் மற்ற ஆசிய பொருளாதாரங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருந்தால் அது பொருந்தாது. Fitch Rating உடைய ஆசிய பிரிவுத் தலைவர் James McCormack, பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்: "சீனா தொடர்ந்து ஒப்புமையில் விரைவாக வளர்ந்தால் ஆசியாவின் மற்ற பகுதிகளும் நலனடையும் என்ற கருத்தில் பொருள் உள்ளது... சீனா இப்பொழுது பல ஆசிய ஏற்றுமதி சார்பு உடைய பொருளாதாரங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தை ஆகும்; ஆனால் சீனாவின் பொருளாதார ஊக்கப் பொதித் திட்டம் உள்நாட்டு மூலதனத்தைத்திற்குத்தான் ஆதரவு கொடுக்கும்; அது இறக்குமதித் அதிகரிப்பை கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை."

இன்னும் மோசமான பொருளாதாரத் தகவல்கள் ASEAN பொருளாதாரங்கள் கடுமையான சரிவை எதிர்கொள்ளுகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன. வணிகத்தை முற்றிலும் நம்பியிருக்கும் சிங்கப்பூர், ஏற்கனவே மந்த நிலையில் உள்ளது; 2008 கடைசிப் பகுதியில் ஆண்டு விகிதமாக்கப்பட்ட சுருக்கம் 16.4 என்று உள்ளது.

ASEAN ல் மிகப் பெரிய பொருளாதாரமான இந்தோனேசியா 22 ஆண்டு காலத்தில் அதன் மிக மோசமான ஏற்றுமதிச்சரிவை ஜனவரியில் பதிவு செய்தது--கடந்த ஆண்டை விட 35.5 சதவிகிதம் குறைவாகும். இந்தோனேசியப் பொருட்களுக்கு மிகப் பெரிய சந்தையான ஜப்பானில் இருந்து தேவை குறைந்துள்ளது ஒரு பெரும் காரணியாகும். உத்தியோகபூர்வ வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதம் ஆகும்; இது 2008ல் 6.1 என்று இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையும் நம்பத்தகுந்தத் அல்ல; ஏனெனில் ஆசிய அரசாங்கங்கள் சற்றே கூடுதலான நம்பிக்கை உணர்வுடன் கொடுத்த புள்ளிவிவரங்கள்தாம் இவை.

இந்தோனேசிய ரூபாவின் மதிப்பு டாலருக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களில் 23.7 சதவிகிதம் சரிந்துவிட்டது தென் கொரியாவின் வொன்னை விட இது மோசமான ஏசியன் நாணயத்தின் செயற்பாடு ஆகும். ஆனால் இந்த ரூபாவின் குறைமதிப்பு ஏற்றுமதிக்கு உதவி செய்யவில்லை; ஆனால் இறக்குமதி செய்யப்படும் கோதுமை, எரிபொருள், கார் பாகங்கள் ஆகியவற்றின் விலையை அதிகரித்து விட்டது. உலக நெருக்கடியின் தன்மை அரசாங்கத்தின் பிரச்சினைகளை அதிகமாக்கிக் கொண்டு வருகிறது. கடந்த வாரம் இந்தோனேசியா மிக உயர்ந்த வட்டி விகிதமான 11.75 சதவிகிதத்தை கொடுத்து அமெரிக்க $2 பில்லியனை சர்வதேச பத்திரச் சந்தைகளில் வாங்க நேர்ந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65 சதவிகிதத்திற்கும் மேலாக ஏற்றுமதி என்று உள்ள தாய்லாந்து 11 ஆண்டுகளில் மந்ந நிலையை முதல்முறையாக அடைகிறது. கடந்த காலாண்டில் ஆண்டு சுருக்கம் 4.3 சதவிகிதம் என்று ஆனபின்னர் இந்நிலை வந்துள்ளது. தாய்லாந்து ஏற்றுமதிகள் ஆண்டுக்கணக்கில் ஜனவரியில் 26.5 சதவிகிதம் சரிந்தன. உத்தியோகபூர்வ கணிப்பு 2009 ஆண்டிற்கு 4 சதவிகித வளர்ச்சி என்பதில் இருந்து 1 சதவிகித சுருக்கம் என்று உள்ளது. வேலையின்மை ஏப்ரல்-மே மாதத்தில் 1 மில்லியன் என்ற உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2008 எண்ணிக்கையை விட இரு மடங்கு ஆகும். பாங்காக் $56 பில்லியன் ஊக்கப் பொதியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திட்டம் இட்டுள்ளது; ஆனால் ஏற்கனவே $2 பில்லியனை உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட எதிர்பார்க்கிறது.

மலேசிய நிதி மந்திரி நஜிப் ரஸாக் முந்தைய கணிப்பான 2009 வளர்ச்சி விகிதம் 3.5 என்பது விரைவில் திருத்தப்படும் என்று கூறியுள்ளார். சில பகுப்பாய்வாளர்கள் 1998க்குப் பின்னர் முதல்தடவையாக மந்தநிலை வரும் என்று எச்சரித்துள்ளனர். 2008 கடைசி காலாண்டின் வளர்ச்சி விகிதம் 0.1 தான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் உற்பத்திப் பிரிவு இதே காலாண்டில் 8.8 சதவிகிதம் சுருங்கியது; 26 காலாண்டுகளில் இது முதல் தடைவையாக ஏற்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணம் ஏற்றுமதியில் 13.4 சதவிகிதம் குறைந்தது ஆகும். பணிநீக்கங்கள் அதிகமாகிக் கொண்டுவருகின்றன; அவை வேலையின்மை 2010க்குள் இரு மடங்காக அதிகரித்து 6 சதவிகிதமாகலாம் என்ற அச்சத்தைக் கொடுத்துள்ளன.

2009ம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ கணிப்பு பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தில் 3.7 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு இருந்த 4.4 சதவிகிதத்தில் இருந்து இது குறைவு ஆகும். ஆனால் வெளிநாடுகளில் வேலைசெய்யும் பிலிப்பினியர்கள் தங்கள் வேலைகளில் தொடர்ந்து இருந்து வீடுகளுக்கு பணத்தை அனுப்பவர் என்ற எதிர்பார்ப்பில் இந்த புள்ளிவிவரம் உள்ளது. மேலும் வணிக வெளிச்செல்லல், குறிப்பாக அழைப்பு மையங்கள் தொடர்ந்து விரிவடையும் என்ற எதிர்பார்ப்பிலும் இப்புள்ளி விவரம் உள்ளது. வேலையின்மை ஏற்கனவே 6.8 சதவிகிதம் என்று உள்ளது தென் கிழக்கு ஆசியாவிலேயே இது அதிகம் ஆகும்; விரைவில் இரட்டை இலக்கை அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. National Economic and Development Authority அதிகாரியான Ralph Rectof செய்தியாளர்களிடம் பெப்ருவரி மதம் கிட்டத்தட்ட 200,000 தொழிலாளர்கள் இவ்வாண்டு பணிநீக்கம் பெறலாம் என்று தெரிவித்தார்.

குறைவூதியத் தொகுப்பிற்கு முக்கிய அரங்காக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் வியட்நாமில் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 ல் இருந்து 4.5 சதவிகிதமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008ல் இதே காலத்தில் 7.4 சதவிகிதத்துடன் இது ஒப்பிடத்தக்கது. 2009ன் முதல் இரு மாதங்களில் ஏற்றுமதி கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 5 சதவிகிதம் குறைந்தது. ஆனால் ரப்பர் பொருட்களின் ஏற்றமதி 50.5 சதவிகிதம் சரிந்தது; மின்கம்பிகள் 45 சதவிகிதம், மரச்சாமான்கள் 26.3 சதவிகிதம், ஆடைகள் 12 சதவிகிதம், கணினிகள், பாகங்கள் 13.7 சதவிகதம் மற்றும் கடல்பொருட்கள் 6 சதவிகிதம் என்று குறைந்துள்ளன. 2009ல் வேலை இழப்புக்கள் 400,000 என்ற எண்ணிக்கையை அடையலாம்; இது கடந்த ஆண்டை விட ஐந்து மடங்கு அதிகம் ஆகும்.

ASEAN வணிகமுகாம் அமைப்பதற்கான முக்கிய அழுத்தங்கள் பிராந்திய சக்திகளான ஜப்பான் மற்றும சீனாவிடம் இருந்து வருகினற்ன; அவை இப்பகுதியில் தங்கள் அமெரிக்க ஐரோப்பியப் போட்டியாளர்களுக்கு எதிராகத் தங்கள் ஆதிக்கத்தை பெறும் வழிவகையாக இதை காண்கின்றனர். ASEAN அங்கத்துவ நாடுகள் அனைத்தும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதப்படி பெரும் கடனைக் கொண்டுள்ளதுடன் இப்பகுதிக்கு வெளியே இருந்து வரும் மூலதனத்தைப் பெரிதும் நம்பியுள்ளன. ASEAN உச்சிமாநாட்டிற்கு முன்னால் நடந்த ASEAN +3 (சீனா,ஜப்பான் தென்கொரியா) கூட்டம், பிராந்திய நிதியைப் பெரிதுபடுத்தி உள்ளூர் நாணயங்கள் $80 பில்லியனில் இருந்து $120 பில்லியன் வரை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டன; இதில் பெருந்தொகை ஜப்பான், சீனாவிடம் இருந்து வந்தது ஆகும்.

ஆனால் ASEAN உட்பூசல்கள் நிறைந்துள்ள நிலையில், ஜப்பானும் சீனாவும் அரசியல், மூலோபாய மற்றும் பொருளாதார செல்வாக்கை தெற்கு ஆசியாவிற்குள் கொள்ளும் போட்டியில் தீவிரமாக உள்ளன. 2015க்குள் பகுதியை ஒருங்கிணைத்தல் என்பதற்கு பதிலாக, கடந்த தசாப்தத்தில் ஆசிய தடையற்ற வணிக சந்தை நிறுவுவதற்கான எடுத்த சிறிய நடவடிக்கைகள் கூட காலதாமதப்படும் அல்லது உலக நெருக்கடி தீவிரமாகையில் முற்றாக சரிந்துகூடப் போய்விடலாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved