ஐரோப்பா : பிரான்ஸ்
Paris meeting advances socialist program to end war in
Sri Lanka
இலங்கையில் போருக்கு முற்றுப் புள்ளி வைக்க பாரிஸ் கூட்டம் ஒரு சோசலிச
வேலைத்திட்டத்தை முன்வைக்கிறது
By Antoine Lerougetel
18 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும்
இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்று மார்ச் 15, ஞாயிறன்று பாரிசில் நடைபெற்றது. இது, உலக சோசலிச
வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் தீவின் வடக்கு கிழக்கு
பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்று என்ற உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
70,000 உயிர்களுக்கு மேலாக பலி வாங்கிவிட்ட 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்திற்கு
இக்கூட்டம் ஒரு சர்வதேச சோலிசத் தீர்வை முன்வைத்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளரான பீட்டர் சுவார்ட்ஸ் பாரிஸ்
கூட்டத்தில் பேசுகின்றார்
கூட்டத்திற்கான பிரச்சாரம் பாரிஸில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ சமூகத்தின் பரந்த
அடுக்குகளை சென்று அடைந்தது; WSWS
அறிக்கைகளின் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் ஆதரவாளர்களால் வினியோகிக்கப்பட்டிருந்தன. தமிழ் இன்டர்நெட்
வானொலி நிலையமான தமிழ் ஒலி இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் முக்கிய உறுப்பினரான மயில்வாகனம்
தேவராஜவுடனும் மற்றய WSWS
ஆதரவாளர்களுடனும், இரு மணி நேர விவாதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ் பிரிவினைவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் அமைப்பான
CCTF (Comite de Coordination
Tamoul-France) WSWS ஆதரவாளர்களை கூட்டத்திற்கு
ஆதரவு திரட்டுகையில் மிரட்ட முற்பட்டது. CCTF,
LTTE
இன் தேசியவாத திட்டம் பற்றிய எவ்வித விமர்சனத்தையும் ஒடுக்க முற்படுவதுடன், அது ஒன்றுதான் தமிழ் மக்களுக்காக
பேசும் உரிமை உடையது என்றும் வலியுறுத்துகிறது.
நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வெளியேயே கூட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சியும்
நடைபெற்றது. ஆனால் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த முற்பட்ட பல முயற்சிகளும் தோல்வியுற்றன. பெரும்பாலும்
பிரெஞ்சு தமிழ் சமூகத்தில் இருந்து 50 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிரெஞ்சு பல்கலைக்கழக மற்றும்
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள், தவிரவும் ஜேர்மனியில் இருந்தும்
இங்கிலாந்தில் இருந்தும் பயணித்து வந்திருந்த ஆதரவாளர்களும் பங்கு பெற்றனர்.
இக்கூட்டத்தில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் மயில்வாகனம் தேவராஜா,
மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளரான செயலாளரான பீட்டர் சுவார்ட்ஸ் ஆகியோர்
உரையாற்றினர்.
தொழிலாளர் வர்க்கத்திடையேயான ஐக்கியத்திற்கான போராட்டம் என்பதுதான்
போரை முடிப்பதற்கான தீர்வின் மையத்தில் உள்ளது என்று தேவராஜா கூறினார். பிரெஞ்சு, ஜேர்மனிய, ஆங்கில
மற்றும் தமிழ்த் தொழிலாளர்கள் கூட்டத்தில் இருப்பது தொழிலாள வர்க்கம் வகுப்புவாதம் மற்றும் போர், அதைத்
தோற்றுவித்த முதலாளித்துவ அமைப்புமுறை ஆகியவற்றை எதிர்த்து ஒன்றுபடும் வாய்ப்பு இருப்பதின் தோற்றத்தைக்
காட்டுகிறது என்றார்.
இலங்கையின் ட்ரொட்ஸ்கிசவாதி, சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான் போரை
எதிர்க்கும் கட்சியென்றும் அதே நேரத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஒரு சர்வதேச,
சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடுத்தப்பட வேண்டும் என்பதற்கும் போராடும் கட்சி என்று
சுட்டிக்காட்டினார். "இந்த முன்னோக்கின் அடிப்படையில் நாங்கள் மாகாணசபை தேர்தல்களில் நுவரெலியா மற்றும்
புத்தளத்தில் பெப்ருவரி 14 தேர்தல்களில் பங்கு கொண்டோம்; அச்சுறுத்தல்களும் தடைகளும் இருந்தபோதிலும்கூட
நாங்கள் எங்கள் வேலைத்திட்டத்தை, பொதுப் பிரச்சாரங்கள், கூட்டங்கள் மூலம் நூற்றுக்கணக்கான
தொழிலாளர்களுக்கு வழங்கினோம். ஏப்ரல் 25ம் தேதி கொழும்பில் நடக்க இருக்கும் மாகாணசபை குழு
தேர்தல்களிலும் 46 வேட்பாளர்களை நிறுத்தி வைக்க உள்ளோம்."
முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (UNP),
மக்கள் விடுதலை முன்னணி (JVP)
ஆகியவை போருக்கு முழு ஆதரவு தருகின்றன என்று தேவராஜா விளக்கினார்.
"ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP)
அரசாங்கக் கூட்டணியில் உள்ள லங்கா சம சமாஜக் கட்சி (LSSP),
ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,
மேல்மாகாண மக்கள் முன்னணி ஆகியவை "போரில் பங்காளிகள்" என்று விளக்கினார். "நவ சம சமாஜக் கட்சி (NSSP)
யின் முன்னாள் தீவிரவாதிகள் மற்றும் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியினரும்
UNP உடன்
சேர்ந்துள்ளனர்; அது போரை ஆதரிக்கிறது" என்றும் அவர் கூறினார்.
போரின் மிருகத்தனமாத பாதிப்பை விளக்குகையில் தேவராஜா கிட்டத்தட்ட பல
குழந்தைகள் உட்பட 50 தமிழ் மக்கள் இராணுவத்தால் அன்றாடம் கொல்லப்படுகின்றனர் என்றார்.
மருத்துவமனைகள் குண்டுவீச்சிற்கு உட்படுத்தப்படுகின்றன; வைத்தியர்கள் மற்றும் காயமுற்றவர்களுக்கு கொடுக்கப்பட
வேண்டிய மருத்துகள் தீவிரப் பற்றாக்குறையில் உள்ளன. "தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளை நடாத்திவரும்
அரசாங்கமானது தெற்கிலும் அரசியல் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இராணுவ வெற்றிகளை
பயன்படுத்திக்கொண்டு, யுத்தத்தின் பொருளாதார சுமையை தொழிலாளர்களினதும் , ஏழைகளின் முதுகில்
சுமத்தியுள்ளது. அரசாங்க, இராணுவ பிரிவின் ஆத்திரமூட்டும் தலையீடுகளால் முழுச்சமுதாயமுமே நாளாந்தம்
பயமுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களில் வரும் கொலைக்கும்பல்களால்
அரசியல்வாதிகள், செய்தியாளர்கள், வியாபாரிகள் கடத்துப்பட்டு, கொலைசெய்யப்படுகின்றனர்" என்றார் அவர்.
வடக்கில் ஒரு இராணுவ வெற்றி என்பது தமிழச் சிறுபான்மையின்மீதான
அடக்குமுறையைத் தொடர வைக்கும் என்பது மட்டும் இல்லாமல், "நாடு முழுவதும் இருக்கும் தொழிலாளர்
வர்க்கத்தின் மீதான தாக்குதல்களும் தீவிரப்படுத்த வழிவகுக்கும்" என்று தேவராஜா வலியுறுத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றுவிட்ட அரசியல் பார்வையைப் பற்றிக் கூறுகையில்
அவர்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய எவ்விதமான முன்னோக்கும் தமிழ் முதலாளித்துவ தட்டின் நலன்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முதலாளித்துவ அரசை ஸ்தாபிப்பதற்கு அச்சுறுத்தலானது என்றே நோக்கி வந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சாதாரண சிங்கள மக்களுக்கும் சிங்கள அரசியல் ஸ்தாபனத்திற்கும் இடையிலுள்ள
வேறுபட்டை பிரித்துகாண தவறுவதுடன், சாதாரண சிங்கள மக்கள் மீதான அவர்களின் தாக்குதல்கள் அரசாங்கத்தின்
தமிழர்விரோத நடவடிக்கைகளுக்கே சேவைசெய்துள்ளது என்றும் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இராணுவ
அடக்முறைக்கு ஒரு போலிக்காரணத்தைத் தருகிறது என்றும் தேவராஜா கூறினார்.
போர்தொடர்பாான வரலாற்றாய்வு, தெற்கு ஆசியாவில் உள்ள
காலாவதியாகிப்போன தேசிய அரசமைப்பு முறையின் விளைவு என்பதைக் காட்டுகிறது என்று தேவராஜா கூறினார்.
இதன் வேர்கள் இந்தியா, இலங்கை ஆகியவை 1947, 1948ல் சுதந்திரம் அடைந்ததிலும் பாக்கிஸ்தானில் குருதி
கொட்டிய வகைக்குப் பின் பிரிவினை வந்ததிலும் வேர்களைக் கொண்டது. சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி
அமைப்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL)
1968ல் அமைக்கப்பட்டது; லங்கா சமஜமாஜ கட்சியின் காட்டிக்
கொடுப்பிற்கு எதிராக அது அமைக்கப்பட்டது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உறுதியாக ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்
புரட்சிக் கோட்பாட்டை அடித்தளமாகக்கொண்டு தமிழ் வகுப்புவாதத்திற்கு எதிரான தமிழர்கள் பிரச்சனையில் ஒரு
புரட்சிகர முன்னோக்கை முன்வைத்தது."
"போருக்கு எதிரான போராட்டம் மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாள
வர்க்கத்தின் வேலையின்மை, சமூக நலன்கள் குறைப்பு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை பிரித்துக்
காணப்படக்கூடாது. ஒரு புதிய புரட்சிகர தலைமை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு கட்டமைக்கப்படுவதில்
உங்கள் ஒவ்வொருவரின் பங்கு பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்ளுகிறேன்." என்று
தேவராஜா முடிவுரையாகக் கூறினார்.
தன்னுடைய உரையில் பீட்டர் சுவார்ட்ஸ் இக்கூட்டம் 1930 களுக்குப் பிறகு உலக
முதலாளித்துவ முறையில் ஆழ்ந்த நெருக்கடிக்கு இடையில் நடைபெறுகிறது என்றும் உலக நிதிய முறையே பெரும்
சரிவிற்கு முடிவில்லாமல் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார். இரண்டாம் உலகப்
போருக்குப் பின் முதல் தடவையாக முழு உலகப் பொருளாதாரமும் 2009ம் ஆண்டில் சுருக்கம் அடையும் என்றார்
அவர்.
"தற்பொழுதைய நெருக்கடி ஒரு சுழற்சியானது அல்ல; இது ஓரிரு ஆண்டுகளில் மற்றொரு
பொருளாதார ஏற்றத்தைக் கொடுக்கும் மந்த நிலை அல்ல. இதன் மையம் உலக ஏகாதிபத்தியத்தின் இதயத்தானமான
அமெரிக்காவில் உள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகாலமாக அமெரிக்க முதலாளித்துவம் நீடித்த பொருளாதாரச் சரிவைக்
கண்டுவருவதின் விளைவுதான் இது." என்று சுவார்ட்ஸ் வலியுறுத்தினார்.
அமெரிக்க முதலாளித்துவம் அதன் இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி இச்சரிவை
ஈடுகட்டப் பார்க்கிறது என்றார் அவர். "அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் ஐரோப்பா, ஆசியா, உலகின் மற்ற
பகுதிகளிலும் உள்ள ஆளும் வர்க்கங்களும் பல தசாப்தங்களாக பொறுப்பற்ற ஊகத்தின்மூலம் குவித்துள்ள செல்வக்
கொழிப்பையும் சலுகைகளையும் இழக்கத் தயாராக இல்லை. இதற்காக அது தீவிர வர்க்கப்போர் மற்றும்
இராணுவவாதத்திற்கும் தயாராக உள்ளது."
தற்பொழுதைய நெருக்கடி "புரட்சிகர தாக்கங்களைக் கொண்டுள்ளது",
"அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா இன்னும் உலகம் முழுவதும் கடுமையான வர்க்கப்போராட்டங்களுக்கு
வழிவகுக்கும்" என்றார் அவர்.
இந்த நெருக்கடி உலகெங்கிலும் அரசியல் உறவுகளில் ஒரு மாற்றத்திற்கு வகை
செய்துள்ளது என்று சுவார்ட்ஸ் கூறினார். "அமெரிக்க மூலோபாய அக்கறையின் முக்கியமானதாக இந்தியப்
பெருங்கடலில் என உள்ளது" என்றார்; இங்கு ஒபாமா நிர்வாகம் இந்தியா மற்றும் சீனாவின் அதிகரித்துவரும்
கடற்படை சக்தியை பற்றி கவலை கொண்டுள்ளது; இப்பகுதியோ அதற்கு மூலோபாய முக்கியத்துவத்தை
கொண்டுள்ளது; அதற்குக் காரணம் அதன் வணிக பாதைகள் மற்றும் அண்மையில் உள்ள எரிபொருள் வழமான
பகுதியான மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவை ஆகும். இரு வாரங்களுக்கு முன்பு இலங்கை சண்டே டைம்ஸ்
பத்திரிகை அமெரிக்கத் தலைமையில் இராணுவ பணி ஒன்று தீவின் வடக்குப் போர்ப் பகுதியில் இராணுவத்திற்கும்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அகப்பட்டுள்ள சாதாரண மக்களை அகற்றும் நோக்கத்துடன் திட்டம்
இருப்பதாகக் கூறியுள்ளது.
இரு இடைத்தொடர்பு உடைய நிகழ்போக்குகள் தொடருகின்றன என்று சுவார்ட்ஸ்
விளக்கினார். முதலில் தீவிரமடைந்துவரும் உலக முதலாளித்துவத்தின் உலகளாவிய முரண்பாடுகள் சர்வதேச
தொழிலாள வர்க்கத்திற்கு வறிய நிலை, பாரிய ஒடுக்குமுறை மற்றும் பயங்கர இராணுவ மோதல்களை
தொடரவைக்கின்றது. இந்த நிலைமையை எதிர்கொள்ளும் வகையில், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும்
அரசியல் தீவிரமயமாக்கல் மற்றும் புரட்சிகர உணர்மையின் புதிய வடிவமைப்புக்களின் வளர்ச்சி ஆகியவை இருக்கும்.
"முடிவான வினா இந்த வழிவகைகளில் எது மேலோங்கி நிற்கும் என்பதுதான்?' என்றார் அவர்.
கூட்டத்தினருக்கு சுவார்ட்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இறுதி சொற்றொடரை
நினைவுபடுத்தினார்; இது 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது, "உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்"
என்று கூறியது; இந்தக் கோட்பாடு இரண்டாம் அகிலத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்டதுதான் முதல் உலகப்
போரின் ஏகாதிபத்தியப் படுகொலைகளுக்கு வழிவகுத்தது. "அக்காலத்திய புரட்சியாளர்களான லெனின்,
ட்ரொட்ஸ்கி, ரோசா லுக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இன்னும் பலரும் தொழிலாள வர்க்க சர்வதேசிய
முன்னோக்கின் காவலராக இருந்தனர். சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு அவர்கள் அழைப்புவிடுத்து
போரை ஒரு உள்நாட்டுப் போராக மாற்றினர். 1917 அக்டோபர் இல் லெனின், ட்ரொட்ஸ்கியின்
தலைமையிலான வரலாற்றின் முதல் வெற்றிகரமான தொழிலாள வர்க்கப் புரட்சி நிகழ்ந்தது இக்கொள்கையின்
விளைவினால் ஆகும்''.
ட்ரொட்ஸ்கியும் இடது அமைப்பும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் ஸ்ராலினின்
பேரழிகரமான தனிநாட்டு சோசலிசம் ஆகியவற்றிற்கு எதிராக போராடி, நான்காம் அகிலத்தை நிறுவினர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொழிலாள வர்க்க சர்வதேசியம் வெளியில் இருந்து மட்டும் இன்றி நான்காம்
அகிலத்திற்குள்ளும் தாக்குதலுக்கு உட்பட்டது என்று சுவார்ட்ஸ் கூட்டத்தினருக்கு கூறினார். ஒரு திருத்தவாதப்
போக்கு, மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையில் நடந்தது. அது ஸ்ராலினிசம்,
சீர்திருத்தவாதம் மற்றும் முதலாளித்துவ தேசியம் ஆகியவற்றிற்கு நிபந்தனையற்ற முறையில் அடிபணிந்தது.
" 1953 ல் நிறுவப்பட்ட நான்காம்
அகிலத்தின் அனைத்துலக் குழு இத்தகைய மார்க்சிச திருத்தவாதத்தை அழுத்தம் திருத்தமாக நிராகரிக்கிறது.
முதலாளித்துவத்தின் உறுதிப்பாடு ஒரு தற்காலிக நிகழ்வுதான் என்று அது வலியுறுத்தி முதலாளித்துவ முறையில்
அடிப்படை முரண்பாடுகள் கடக்கப்படவில்லை என்றும் கூறியது" என சுவார்ட்ஸ் கூறினார்.
1964 ல் லங்கா சமஜமாஜ கட்சி
இனவாதம் மற்றும் சிங்கள வெறிக்கு எதிராக அது கொண்டிருந்த கொள்கை அடிப்படையிலான எதிர்ப்பைக்
கைவிட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்தது. இக்காட்டிக்கொடுப்பு
பப்லோவாத ஐக்கிய செயலகத்தினால் மறைப்பிற்கு உட்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் அரசாங்கத்தில்
சேர்ந்து, பெளத்தத்தை நாட்டு சமயமாக ஆக்கியதில், லங்கா சமஜமாஜ கட்சி தொழிலாள வர்க்கத்தை
அரசியல் ரீதியாக ஆயுதமிழக்கச் செய்துவிட்டதுடன் மூன்று தசாப்தங்களாக நடக்கும் போருக்கு தளத்தையும்
தயாரித்தது; இப்போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், நாட்டின் உள்கட்டுமானம்
தகர்க்கப்பட்டுவிட்டது."
"இந்த நெருக்கடிக்கு ஒரு தேசியத் தீர்வு கிடையாது" என்று சுவார்ட்ஸ்
வலியுறுத்தினார்; "மேலும் முதலாளித்துவ அமைப்பு முறையின் வடிவமைப்பின்கீழ் தீர்வு ஏதும் கிடையாது. 1914,
1939ல் நடந்தது போல் முதலாளித்துவம் மனிதகுலத்தை மீண்டும் காட்டுமிராண்டித்தனம் அல்லது போரில் தள்ளும்;
அல்லது தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் ஐக்கியப்பட்டு, முதலாளித்துவ முறையை அகற்றி ஒரு சோசலிச
சமூகத்தைக் கட்டமைக்கும். வேறு மாற்றீடு ஏதும் இல்லை."
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியவாத மற்றும் பிற பிற்போக்குப் பார்வையை நிராகரித்த
விதத்தில் சுவார்ட்ஸ் சேர்த்துக் கொண்டார்: "ஒரு நாடு, ஒரு தீவு அல்லது தீவில் பாதி தன்னை உலகப்
பொருளாதாரத்தில் இருந்து பிரித்துக் கொண்டு தன் எல்லைகளுக்குள் தீர்வைக் கணாமுடியும் என்பது அபத்தமானதும்,
பிற்போக்குத்தனமானதும் ஆகும். அதன் பொருள் கடியாரத்தை பின்னோக்கி திருப்பி முதலாளித்துவத்திற்கு முந்திய
சகாப்தத்திற்கு கொண்டு சென்று மத்தியகாலத்திற்கு தள்ளுவது என்பதாகும். இதற்கு உற்பத்தி சக்திகள் மற்றும்
மனித உயிர்கள் மிகப் பெரியளவில் அழிக்கப்பட நேரிடும்."
ஏகாதிபத்தியத்தில் இருந்து சுயாதீனம் என்பது மட்டுமல்லாது, தமிழ் முதலாளித்துவம்
ஒரு முதலாளித்துவ நாடு என்ற கனவை அடைந்தால் அது சர்வதேச பெருநிறுவனங்களுக்கு ஒரு குறைவூதிய
தொழிலாளர் பிரிவை ஏற்படுத்துவதைத் தவிர வேறு ஏதும் செய்யாது; தொழிலாள வர்க்கம் அதையொட்டி மிருகத்தனமான
சுரண்டல் மற்றும் வறுமையைத்தான் எதிர்கொள்ளுவர்.
முன்னேற்றம் அடைந்த அல்லது அபிவிருத்தியடையாத முதலாளித்துவ நாடுகளில்
அமெரிக்க தொழிலாளர்களாயினும், ஐரோப்பியத் தொழிலாளர்களாயினும், சீனத் தொழிலாளர்களாயினும் மற்றும்
இலங்கை தொழிலாளர்களாயினும் அவர்களின் தலைவிதி பிரிக்கமுடியாமல் பிணைந்துள்ளது என்று சுவார்ட்ஸ்
வலியுறுத்தினார்.
" நான்காம் அகிலத்தின்
அனைத்துலக்குழு ஒன்றுதான் இந்த கிரகத்தில் அப்பழுக்கற்ற பதைகையை உடையது; அயராமல் சர்வதேசத்
தொழிலாள வர்க்க நலன்களை மிகக் கடுமையான, கடினமான நிலைமைகளிலும் பாதுகாத்துவருகிறது" என்று
முடிவுரையாக உறுதிப்படுத்தி அவர் முடித்தார். மக்கள் அனைவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழுவில் சேர
அழைப்புக் கொடுக்கும் விதத்தில், "அது பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் போருக்கும் ஸ்ரீலங்கா மக்களின்
கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திறவு கோல் கொடுக்கும். இது ஒன்றுதான் உலக அளவில் சோசலிசக்
கட்டமைப்பிற்கு கருவியாக இருக்கும்." என்றார்.
பேச்சாளர்களின் கருத்துக்கள் நல வரவேற்பைப் பெற்றன; கூட்ட முடிவில் இலங்கை
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருவதற்கு நூற்றுக்கணக்கான யூரோக்கள் நிதி
திரட்டப்பட்டது. |