WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan SEP to hold election meeting in Colombo
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பில் தேர்தல் கூட்டத்தை நடத்தவுள்ளது
18 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மார்ச் 24 அன்று பொதுக்
கூட்டமொன்றை நடத்தவுள்ளது. மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும்
சோ.ச.க. அதன் பிரச்சாரத்தின் ஒரு பாகமாகவே இந்தக் கூட்டத்தை நடத்துகிறது.
தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்துக்கு
முடிவுகட்டுவது எப்படி, ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத்
தரங்கள் மீதான முடிவற்ற தாக்குதலுக்கும் முடிவுகட்டுவது எப்படி, என்பன போன்ற உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும்
பிரதான பிரச்சினைகளை பற்றி பேச்சாளர்கள் உரையாற்றுவர்.
வடக்கில் இராணுவத்தின் இடைவிடாத யுத்தத்தால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்
கொல்லப்படும் அதே வேளை, தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்கள் வேலை இழப்பு, அத்தியாவசிய சேவைகள்
வெட்டு, சம்பளம் மற்றும் நிலைமைகள் சீரழிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். யுத்தத்தாலும், 1930களுக்கு
பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார பின்னடைவாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆழமடைந்துவரும்
பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதில் அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும்
உடன்பாடு கொண்டுள்ளன.
எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கு பொலிஸ் ஆட்சி முறையை பயன்படுத்துவது
அதிகரித்து வருகின்றது. அரசாங்க சார்பு கொலைப் படைகளால் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்
உட்பட நூற்றுக்கணக்கான மக்களும் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்யும்
மாணவர்களும் வேலை நிறுத்தும் செய்யும் தொழிலாளர்களும் எதிரிகளாக நடத்தப்படுகின்றனர். கடந்த 25
ஆண்டுகால யுத்தத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான அரச ஒடுக்குமுறை இயந்திரங்கள் சமூக
அமைதியின்மையை நசுக்க தயார் செய்யப்படுகின்றன.
முதலாளித்துவத்தாலும் அதன் அரசியல்வாதிகளாலும் உருவாக்கப்ட்டுள்ள பீதிகளுக்கு
எதிராக சோ.ச.க. அதன் சோசலிச அனைத்துலகவாத பதிலீடு பற்றி தெளிவுபடுத்துவதோடு பொருளாதார
மற்றும் அரசியல் நெருக்கடிகளின் வரலாற்று வேர்களையும் வெளிக்கொணரும். இந்தக் கூட்டத்திற்கு வருகைதருமாறு
நாம் அனைத்து தொழிலாளர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் மற்றும் எமது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு
விடுக்கின்றோம். தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்க்காமன பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட இந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு நாம் இளைஞர்களுக்கு விசேட அழைப்பு விடுக்கின்றோம்.
இடம்: பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு 7.
காலம்: வியாழன், மார்ச் 24 மாலை 4 மணி. |