World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
 

World Bank predicts first decline in global output since WWII

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக உற்பத்தியில் முதல் தடவையாக சரிவு என்று உலக வங்கி கணிக்கிறது

By Jerry White
10 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

ஞாயிறன்று வெளிவந்த அறிக்கை ஒன்றில் உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதல் தடவையாக சுருங்கும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகப் பொருளாதாரத்தில் பொதுவாக இயல்பான வளர்ச்சி விகிதம் எனக் கருதப்படும் நிலையில் இருந்து ஐந்து சதவிகிதப் புள்ளிகள் சரியும் என்று சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. இதில் தொழில்துறை உற்பத்தி 2008 மட்டங்களைவிட 15 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் பத்து வாரங்களுக்கு முன்பு முன்வைத்ததைவிட இந்த அறிக்கை இன்னும் மோசமான நிலையைத்தான் சித்தரிக்கிறது. முன்னர் அது உலகப் பொருளாதாரம் ஒரு சிறிய அளவு உயர்வான அரை சதவிகிதத்தை 2009ல் காணக்கூடும் என்று மதிப்பிட்டிருந்தது. வங்கி உலக மொத்த உள்நாட்டு உற்பத்திச் சுருக்கத்திற்கு குறிப்பான இலக்கு எதையும் கொடுக்கவில்லை.

வளரும் சந்தை மற்றும் வளர்ச்சியடையும் நாடுகள் எனக் கூறப்படுபவற்றிற்கான வருங்கால வளர்ச்சி தீவிரமாக மதிப்பிடப்பட்டு முன்னேற்றமடைந்துள்ள நாடுகளைப்போல்தான் சரிவைக் காணும் என்று உலக வங்கி கூறியுள்ளது. முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 6 சதவிகிதத்தில் இருந்தும் ஜப்பானில் 13 சதவிகிதச் சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வறிய நாடுகளில் இருக்கும் நெருக்கடி பெரும்பாலும் உலக வணிகச் சந்தையில் சரிவினால்தான் உருவாகியுள்ளது. வணிக நிதிக்கு கடன்கள் வற்றிப்போவதாலும், தொழில்வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் இருந்து ஏற்றுமதிகளுக்கான தேவை வலுவிழந்துள்ளதாலும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வறிய நாடுகள் பொருட்கள் விலைச் சரிவினாலும் பாதிக்கப்பட்டுள்ளன (எரிபொருள் தவிர மற்றப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டு இரண்டாம் பகுதயில் 38 சதவிகிதம் சரிந்தன); இதைத்தவிர நேரடி வெளிநாட்டு முதலீட்டு நிதியும் மிகப் பெரிய சரிவைக் கண்டது.

திங்களன்று வெளியிட்ட தனி அறிக்கை ஒன்றில் ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank- ADB), உலக நிதிய சொத்துக்களின் மதிப்பு, பந்திரங்கள், பங்குகள் நாணயங்கள் உட்பட, 2008ம் ஆண்டு $50 டிரில்லியனுக்கும் மேலாக சரிந்துள்ளது என்று கூறியுள்ளது. இது உலகின் ஓராண்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும். ஜப்பானைத் தவிர எஞ்சிய ஆசியா முழுவதும் கிட்டத்தட்ட $9.6 டிரில்லியனை இழந்தது. இலத்தீன் அமெரிக்கப் பகுதி நிதியச் சந்தைகளின் மதிப்பு கிட்டத்தட்ட $2.1 டிரில்லியன் இழப்பை கண்டது.

"இந்த நெருக்கடி மனிதகுல வரலாற்றில் உண்மையாகவே, முதல்தடவையாக எங்கும் படர்ந்துள்ள நெருக்கடி ஆகும்" என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான மிச்சேல் காம்டேசஸ் ஆசிய அபிவிருத்தி வங்கி அரங்கு ஒன்றில் திங்களன்று மணிலாவில் "எந்த நாடும் இதில் இருந்து தப்ப முடியாது. இது இன்னமும் முழுமையாகத் தீவிரம்கூட அடையவில்லை." எனத்தெரிவித்தார்.

உலக வணிகம் 80 ஆண்டுகளின் அதன் மிகப் பெரிய சரிவைக் காணும், 1982ல் இருந்து முதல் சுருக்கத்தைக் காணும் என்று உலக வங்கி கூறியுள்ளது. 2008 ஆண்டின் கடைசிக் காலாண்டு பற்றி கூறியுள்ள 51 நாடுகளில், 36 நாடுகளுடையவை இரட்டை இலக்க சரிவுகளை ஒப்புமையில் ஓராண்டிற்கு முன் இருந்த பெயரளவு ஏற்றுமதிகளில் சரிவு எனக் காட்டியுள்ளன. இங்கிலாந்து, ஸ்பெயின் உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் மற்றும் வளர்ச்சிறும் நாடுகள் இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஏற்றுமதிகளில் 20 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலான சரிவை பதிவு செய்துள்ளன.

இந்த அறிக்கை ஆசியா, இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடியின் பேரழிவு தரும் பாதிப்பை எடுத்துக்காட்டியுள்ளது. 116 அபிவிருத்தியடையும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 94 நாடுகளில் குறைந்துள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவு ஏற்றுமதி உந்துதல் இருக்கும் நாடுகள், வெளியாட்டு முதலீடுகளைப் பெரிதும் நம்பியிருக்கும் நாடுகள் ஆகியவை; அங்கு மில்லின் கணக்கான உள்கட்டுமான, சுரங்க, உற்பத்தி பிரிவுகளில் வேலைகள் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டன.

இந்நாடுகளில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மக்கள் 2009 ஐ ஒட்டி 46 மில்லியன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதற்கு முக்கிய காரணம் பெருகும் வேலையின்மையாகும். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கணிப்பான வேலை இழப்புக்கள் 51 மில்லியன் பேரைப்பாதிக்கக்கூடும், கிட்டத்தட்ட 30 மில்லியன் தொழிலாளர்கள் வேலையிழக்கக்கூடும் என்பதை இந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

சீனாவில் 20 மில்லியன் மக்கள் ஏற்கனவே தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். கம்போடியாவில் ஏற்றுமதி ஆடைகள் தொழிலில் 30,000 வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன. அது ஒன்றுதான் அந்நாட்டில் முக்கியமான ஏற்றுமதித் தொழில் ஆகும் அரை மில்லியன் வேலைகளுக்கும் மேல் இந்தியாவில் 2008ன் கடைசி மூன்று மாதங்களில் இழக்கப்பட்டுவிட்டன; இவற்றில் விலையுயர்ந்த கற்கள், ஆபரணங்கள், கார்த் தொழில்கள், ஜவுளிப் பிரிவுகள் அடங்கும்.

இதைத்தவிர, தங்கள் குடும்பங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொழிலாளிகள் அனுப்பும் பணவரவுகள் 2009ல் தீவிரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; ஏனெனில் அங்குள்ளவர்களும் தங்கள் வேலைகளை இழக்கக்கூடும், பலரும் தாய்நாட்டிற்குத் திரும்பிவிடுவர். இது அபிவிருத்தியடையும் நாடுகளுக்கு முக்கியமான வருமான இழப்பின் ஆதாரத்தை குறைத்துவிடும்; 2008ல் இந்தப் பணம் $305 பில்லியனாக இருந்தது.

நேரடி வெளிநாட்டு முதலீடும் பொருளாதாரத்தில் பெரும் தேக்க நிலைக்கு வந்துவிட்டது; அதுவும் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் அளிக்கக்கூடிய, அதிக கட்டுப்பாடுகள் அற்ற, குறைவூதியத் தொழிலாளர் இருக்கும் பொருளாதார வளர்ச்சி இருக்கும் நாடுகளில். இதைத்தவிர, 2008ல் ஆபிரிக்காவிற்கு கடன் வழங்குதல் என்பது கிட்டத்தட்ட நின்று போயிற்று; எந்த சர்வதேசப் பணப்பத்திரமும் ஆபிரிக்க நாடுகளால் வழங்கப்படவில்லை; 2007ல் $6.5 பில்லியனுக்கு அவை வந்திருந்தன.

இதனால் வளர்ச்சியுறும் நாடுகள் இறக்குமதி மற்றும் கடனுக்காக கொடுக்க வேண்டியவற்றின் இடைவெளியாக $270 க்கும் $700 பில்லியனுக்கும் இடையே கொடுக்க வேண்டியிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது; அதே நேரத்தில் உள்நாட்டு இருப்புக்களில் கால் பகுதிதான் வேலைகள் தோற்றுவித்தல், பாதுகாப்புவலைத் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் நெருக்கடியின் பாதிப்பை மழுங்க அடிக்க முயலும்.

ஒரு செய்திக் குறிப்பில் உலக வங்கியின் குழு தலைவர் ரோபர்ட் பி. ஜோல்லிக் இந்த வார இறுதியில் கலந்து கொள்ளும் G20 நிதி மந்திரிகள் கூட்டத்திற்கு வரும் அதிகாரிகளுக்கு முறையிடும் வகையில் அவசர நடவடிக்கைகள் "சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை" என்ற ஆபத்தைத் தடுப்பதற்குத் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். "இந்த உலக நெருக்கடிக்கு ஒரு உலகத் தீர்வு தேவை" என்று அவர் கூறினார்.

உலக வங்கி G20 நாடுகளை தங்கள் ஊக்கப் பொதிகளில் இருந்து 0.7 சதவிகிதத்தை ஒரு உலக ஆபத்துக்கால நிதியைத் தோற்றுவிக்ககுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இத்திட்டம் ஒரு சிறு அவசர முதலுதவி போன்ற பலனைத்தான் கொடுக்கும் என்றும், வறிய நாடுகளில் இருக்கும் சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புற வாழ் தொழில்முயல்வோருக்கு சிறு அளவு கடன் திட்டத்திற்கு பெருகிய முறையில் நிதியளிக்கத்தான் முடியும் என்றும் மிகக் குறைந்த உள்கட்டுமானத் திட்டங்களுக்குத்தான் உதவும் என்றும் கூறப்படுகிறது.

நிலைமையை உறுதிப்படுத்துவதற்கான திறவுகோல் உலக வணிகத்தின் வளர்ச்சியைப் புதுப்பித்தல் என்று உலக வங்கி கூறியுள்ளது. ஆனால், ஒரு ஒருங்கிணைந்த சர்வதேச விடையிறுப்பிற்குப் பதிலாக அரசாங்கங்கள் தேசிய அடித்தளத்திலான நிறுவனங்களுக்குத்தான் பொருளாதாரப் போட்டியாளர்களின் இழப்பில் ஊக்கம் கொடுத்த வளர்ப்பதாக உலக வங்கி புகார் கூறியுள்ளது.

"பெருகிய வணிக செயல்களுக்கு உள்ள பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்று பாதுகாப்பு வரிக் கொள்கை மற்றும் அண்டை நாட்டை பிச்சைக்கார நாடாக்குக என்ற கொள்கையும்தான், இவை உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும்" என்று அறிக்கை கூறுகிறது. மேலும் G20 நாடுகள் கடந்த ஆண்டு செயல்படுத்திய வணிகக் கட்டுப்பாடுகளையும் குறைகூறியுள்ளது; இதைத்தவிர மற்ற நாடுகள்மீது சுமத்தும் குறைந்த விலைக்கு பொருட்களை விற்றல், இறக்குமதிகளையும் உள்நாட்டு உரிமம் மற்றும் உற்பத்தி தரத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவருதல் மற்றும் உள்நாட்டு தொழில்கள் வங்கிகள் மற்றும் தொழில்களைக் பாதுகாப்பதற்காக பல ஊக்கப் பொதிகள் அளிக்கப்பட்டுள்து ஆகியவற்றையும் அது குறை கூறியுள்ளது.

அமெரிக்கா பெருகிய முறையில் சர்வதேசக் குறைகூறலை அதன் வங்கிகள் மற்றும் ஒதுக்கு நிதிகள் மீது சர்வதேசக் கட்டுப்பாடுகள் சுமத்தப்படுவதை எதிர்ப்பதற்காக காண்கிறது. அதே நேரத்தில் உலகில் கிடைக்கக்கூடிய கடனின் பெரும் பகுதியை அமெரிக்கா பயன்படுத்திக் கண்டு வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் டிரில்லியன்கள் மற்றும் ஊக்கப்பொதிகளின் செலவு ஆகியவற்றைப் பெறவும் முயல்கிறது.

திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது: "படர்ந்து வரும் நிதிய நெருக்கடியை கவலையுடன் எதிர்கொள்ளும் விதத்தில் உலகம் கவலையுடன் இருக்கையில், பணத்தை ஈர்ப்பதில் கணிசமாக எளிதில் இருக்கும் ஒரு இடம், இந்தத் தொந்திரவு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த இடம்தான் என்று சிதைந்த வகையில் அமெரிக்காவாகத்தான் உள்ளது.

அமெரிக்க முதலீட்டாளர்கள் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து நீங்கி அரசாங்கப் பத்திரங்களை வாங்குகின்றனர். அதே நேரத்தில், 2008ம் ஆண்டு கருவூலப் பத்திரங்களை வெளிநாட்டினர் வைத்திருப்பது $456 பில்லியன் என்று உயர்ந்துள்ளதாக மத்திய வங்கிக் கூட்டமைப்பு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில், தனியார் முதலீடுகள் எழுச்சி பெற்றுவரும் நாடுகளில் 2007ல் $926 பில்லியனில் இருந்து கடந்த ஆண்டு $466 பில்லியன் என்று குறைந்து இந்த ஆண்டு $165 பில்லியன் என்று சரியக்கூடும் என்று Institute of Inernational Finance கருதுகிறது.

இத்தகைய விளைவு சந்தைகளின் நடுநிலைச் செயல்பாடுகளினால் ஏற்பட்டது அல்ல; மாறாக தன்னுடைய வங்கி மீட்புத் திட்டங்களை அரசாங்கக் கடனை விற்பதின் மூலம் செயல்படுத்தலாம் என்ற நோக்கத்தைக் கொண்ட ஒபாமா நிர்வாகம் உறுதியாகத் தொடரும் கொள்கைகளின் விளைவு ஆகும்; உலக நாணயச் சந்தையில் அமெரிக்க டாலரின் சலுகைமிக்க நிலைமையை இது கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறது. இவ்வித்தில் செயல்படும்போது அமெரிக்கா நெருக்கடியை அதன் பொருளாதாரப் போட்டி நாடுகள் மற்றும் வறிய நாடுகளின் முதுகுகளில் சுமத்திவிடலாம் என்று நினைக்கிறது; பொருட்கள் விலைச் சரிவுகளினால் அந்நாடுகளின் நாணயங்கள் தாக்கப்பட்டு சிதைவிற்கு உட்படுகின்றன.

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என அழைக்கப்படுபவற்றில் நெருக்கடியின் பாதிப்பு பற்றி எடுத்துக்காட்டுகையில், உலக வங்கி வரலாற்று முன்னோடியில்லாத வகையில் உலக முதலாளித்துவ முறையில் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள முறிவு என்று விளக்கியுள்ளது. தற்போதைய நெருக்கடியின் சமூக மற்றும் அரசியல் விளைவுகள், இரண்டாம் உலகப் போரைத் தூண்டிவிட்ட பொருளாதாரக் கொந்தளிப்பு, புரட்சிகள் மற்றும் ஏகாபதிபத்திய பூசல்கள் இருந்த காலத்தில் இருந்ததைப் போல் வெடிப்புத்தன்மை உடையதாக இருக்கும் என்று கூறாமல் கூறுகின்றவகையில் அதன் அறிக்கை உள்ளது; அப்பொழுதுதான் உலகப் பொருளாதாரம் முழுவதுமே சுருக்கம் அடைந்திருந்தது.