ஐரோப்பா : பிரான்ஸ்
France: Protests continue against Sarkozy's university
reforms
பிரான்ஸ்: சார்க்கோசியின் பல்கலைக்கழக சீர்திருத்தங்களுக்கு எதிராக எதிர்ப்புக்கள்
தொடர்கின்றன
By Pierre Mabut
11 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
ஆசிரியர்கள் மதிப்பு மற்றும் உயர்கல்வியின் தரம் ஆகியவற்றை குறைக்க முற்பட்ட
அரசாங்க சீர்திருத்தங்களுக்கு எதிரான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஐந்து வார காலம் நடத்திய
வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் அவற்றின் உத்வேகத்தை நிலையிறுத்தியுள்ளன. உயர்கல்வித் துறை மந்திரி
Valerie Pecresse
சீர்திருத்தங்களின் தன்மையை குறைத்த போதிலும், தொழிற்சங்கங்கள் சில சிறிய சலுகைகளை உடன்பாட்டை
முன்வைத்தும்கூட இந்த நிலை தொடர்கிறது.
மார்ச் 5ம் தேதி 20,000 பல்கலைக்கழக ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள்
மற்றும் மாணவர்கள் பாரிசில் அணிவகுப்பு நடத்தினர். மற்றும் ஒரு 23,000 பேர் 20 நகரங்களில் குறிப்பாக
Lyon, Toulouse, Nantes, Rennes, Bordeaux, Strasbourg, Nancy, Brest,
Montpelier, Caen ஆகியவற்றில் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர்.
இரு வாரங்களுக்குள் வரலாற்றுப் புகழ்மிக்க பாரிஸ்
Sorbonne பல்கலைக்கழகம் 200 மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது;
பின்னர் அவர்கள் CRS
கலகப் பரிவு போலீசாரால் அகற்றப்பட்டனர். பாரிஸ் எதிர்ப்பில் இருந்து கோஷங்கள் மற்றும் பதாகைகளில்,
"பல்கலைக்கழகப் பிரிவினைகள், ஆய்வுகள் பிரிக்கப்படுதலுக்கு வேண்டாம் என்போம்.", "ஆசிரியர்கள் தகுதி
அழிப்பிற்கு வேண்டாம் கூறுவோம்", "ஆசிரியர் பயிற்சி தகர்ப்பிற்கு வேண்டாம் என்போம்,
Darcos/Pecresse
சீர்திருத்தங்களை திரும்பப் பெறுக" போன்றவை இருந்தன; கடைசி பதாகை உயர் கல்வி மற்றும் கல்வி மந்திரி சேவியர்
டார்கோஸ் பற்றிய குறிப்பு ஆகும்.
ஒரு அட்டையில், "எங்கு நோக்கினும்
Guadeloup
பொது வேலைநிறுத்தம்தான்"
என்று பிரான்ஸ் தீவின் 44 நாட்கள் வேலைநிறுத்தம் உயர்ந்த
விலைவாசிகளுக்கு எதிராக நடந்தது குறிக்கப்பட்டிருந்தது.
FSU (Federation Syndicate Unitaire
பெரும்பாலான மாணவர்களில் கல்விச் சங்கத்தின்) பொதுச் செயலாளரான
Gerard Aschieri
"Guadeloupe
இயக்கம், மக்களைத் திரட்டுவதிலும் பயனைப் பெறுவதிலும் வெற்றி அடைந்தது. இது நம்மையும் அணிதிரட்டுவதற்கு
உதவும்."
என அறிவித்தார்.
இத்தகைய கருத்துக்கள்
FSU நடவடிக்கைகளால் ஏமாற்றத்திற்குள்ளாகின்றன. ஏனெனில்,
மாணவர்களை தனித்துப் போராட விடுவது ஒருபுறம் இருக்க,
FSU தேசிய கல்வி
முறையில் இருக்கும் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் கடந்த ஆண்டு டார்க்கோசால் சுமத்தப்பட்ட
உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 13,500 பேர் வேலையிழப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க திரட்ட மறுத்துவிட்டது.
பல்கலைக்கழகங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள், ஆய்வுப்பிரிவு
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 67 பல்கலைக்கழகங்களில் இருந்து பிரதிபலிப்பது கடந்த வெள்ளியன்று எதிர்ப்பிற்கு
பின்னர் கூடியது அவர்கள் University Liberties
and Responsibiities Law (LRU) முற்றிலும்
அகற்றப்படவேண்டும் என்று உறுதி பூண்டனர். இது பல்கலைக்கழக தன்னாட்சி பற்றியது ஆகும். பிரதிநிதிகள்
அரசாங்கம் கொடுத்த சலுகைகளை "அக்கிரமமான முறையில் போதாதவை" என்று நிராகரித்ததுடன், "ஆசிரியர்
பயிற்சி பழக்கத்திற்கு பதிலாக வந்துள்ள முதுநிலைப் பட்டத்தின் மூலம் எதுவும் கிடைக்காது என்றும் ஆசிரியர்
தேர்வு, தேர்வுகள் பற்றிய சீர்திருத்தம் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களைத்தான் பொறுத்துள்ளது" என்றும் கூறியது.
இந்த நிலைப்பாடு
Sgen-CFDT, (Sup
Echerche Unsa, Autonome Sup, Force Ourvriere)
ஆகிய ஆசிரியர்கள் சங்கத்திற்கு எதிராக உள்ளது;
Sgen-CFDT பிரதிநிதி
Thierry Cadart
இவை அரசாங்கத்துடன் "ஒருமித்த உணர்வை" அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
Snesup-FSU
பேச்சுவார்ததைகளில் பங்கு பெறவில்லை என்றாலும், "அரசாங்கத்தை சந்திக்கத் தயார்" என்று அறிவித்தது.
ஐந்து வாரங்களுக்கு முன்பு பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஒரு புதிய அந்தஸ்து
கொடுக்கும் ஆணையை அறிமுகப்படுத்த முயன்றபோது அரசாங்கம் தான் தனிமைப்படுத்தப்பட்டதை அறிந்தது. அந்த
கட்டம் வரை தொழிற்சங்கத் தலைவர்களும் மாணவர் சங்கமான
UNEF ம்
(சோசலிஸ்ட்
கட்சிக்கு நெருக்கமானது) 2007ல் இயற்றப்பட்ட LRU
சட்டத்தை ஏற்றிருந்தன. ஆசிரியர்களுடைய எழுச்சி பல்கலைக்கழக தலைவர்களுக்கு புதிதாக கொடுக்கப்பட்ட
அதிகாரங்களை மையமாகக் கொண்டது; ஒவ்வொரு ஆசிரியருக்கும் எந்த அளவிற்கு கல்வி கற்பித்தல் மற்றும் ஆய்வு
வேலை கொடுக்கப்பட வேண்டும் என்பதை செய்துகாட்டிய தகவல்படி அறிந்து நிர்ணயிக்கும் உரிமை அவருக்குக்
கொடுக்கப்பட்டது. இதன்பின்னர் பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் கல்வி மந்திரி
Valerie Pecresse
இடம் அந்த ஆணையை "முற்றிலும் மாற்றி எழுதுமாறு" கூறினார்.
ஆசிரியர்களின் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு மார்ச் 6ம் தேதி "ஆணையை
மாற்றி எழுதுதல் ஏற்கத்தக்கது அல்ல; ஏனெனில் இது முதல் பொருளுரையில் இருந்த கருத்தை அப்படியே
வைத்துக்கொண்டுள்ளது" என்று கூறியது. மேலும் மார்ச் 11ம் தேதி பெரும் எதிர்ப்பிற்கு அழைப்பு விட்டது. அதே
போல் மழலைகள் பள்ளிகளில் இருந்து பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களும் தொடர்பு
கொள்ளும் பெரும் அணிதிரளலுக்கும் அழைப்பு விடுத்தது.
கல்விப்பணி மற்றும் ஆய்வுப்பணிக்கும் இடையே வேலைப்பகுப்பு முறை
பல்கலைக்கழகங்களில் சுமத்தப்படமாட்டாது, அதையொட்டிய கால அட்டவணை தயாரிக்கப்பட மாட்டாது என்று
அரசாங்கம் ஒப்புக் கொண்டது; ஆனால் பணி பற்றிய மதிப்பீடு தேசிய முறையில் இருக்கும், சக ஆசிரியர்களால்
நடத்தப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டாலும், ஆசிரியரின் "விருப்பம்" தேவை என்பதையும் ஒப்புக்
கொண்டது. ஆனால் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களை இணைத்த பிரச்சினை புதிய ஆசிரியர் பயிற்சிக்கான
தகுதிகளும், ஆரம்ப, இடைநிலை பள்ளி கல்வியில் நுழைய இருக்கும் பயிற்சி ஆசிரியர் அந்தஸ்து பற்றியதும் ஆகும்.
தொழிற்சங்கங்கள் இந்த புதிய கருத்துக்கள் செயல்படுத்தப்படுவது ஓராண்டு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று
கேட்டுக் கொண்டுள்ளன.
இப்புதிய பயிற்சி பாடத்திட்டம் "தேர்ச்சி பெறுதல்" என்று குறிப்பிடப்படுகிறது.
ஆனால் இது புதிய ஆசிரியர்களின் வேலை அந்தஸ்து மற்றும் வேலைப் பாதுகாப்பில் அதுவும் சமீபத்திய பெரும்
வேலையின்மை பின்னணியில் சரிவைத்தான் ஏற்படுத்தும். மரபார்ந்த வகையில் பயிற்சி ஆசிரியர்களின் அந்தஸ்து,
அரசாங்க ஊழியர்கள் என்ற முறையில், வாழ்நாள் முழுவதும் வேலைப் பாதுகாப்பு என்பது இப்பொழுது
இல்லாதொழிக்கப்படுகிறது. நிரந்தரப் பணிகளின் எண்ணிக்கை, அரசாங்க ஊழியர்கள் அந்தஸ்த்துடன் என்பது,
பாதியாக்கப்பட்டு விட்டது. முதுநிலைப் பட்டங்கள் பெற்றவர்கள் கற்பிக்கத் தகுதி உடையவர்கள் என்று கருதப்பட்டு
ஆசிரியர்கள் இருப்பு தொகுப்பில் குறைந்த உரிமைகள் உடையவர்காளக சேர்க்கப்படுவர்; இவர்கள் குறுகிய கால
ஒப்பந்தங்களைத்தான் பெறுவர்; வேலைப்பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கிடையாது. முன்பு மாணவர்கள் இளநிலைப்
பட்டம் பெற்ற பின்னர் பயிற்றுவிக்கும் தகுதியைச் கொண்டிருந்தனர்.
ஆசிரியர் பயிற்சிக்கான திட்டங்கள்,
URL ல்
இருப்பவை, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு (IUFM)
முற்றுப்புள்ளி வைத்துவிடும். தற்பொழுது பயிற்சி பெறுபவர்கள் ஓராண்டு காலம் பல்கலைக்கழக ஆசிரியர் தேர்விற்கு
தயார் செய்து பின்னர் ஆசிரியர் பயிற்சிக்கான ஓராண்டு படிப்பையும் மேற்கொள்ளுவர். ஆனால் இந்தத்
திட்டத்தின்படி, முழு ஊதியம் கொடுக்கும் பணி அகற்றப்படுகிறது; அதற்கு பதிலாக எந்த ஊதியமும் இல்லாமல் இரு
ஆண்டுகள் முதுநிலைப்பட்டம் கற்க வேண்டும்.
பல்கலைக்கழக ஆசிரியர் வேலை வெட்டுக்களும் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன.
அரசாங்கம் இப்பொழுது வேலைக்குறைப்புக்கள் 2011 வரை நிறுத்தி வைப்பதாக உறுதி கூறினாலும், ஏற்கனவே
இந்த ஆண்டு 1,000 வேலைகள் அகற்றப்பட்டு விட்டன.
CNRS எனப்படும்
National Council for Scientific Reseasrch
கிட்டத்தட்ட 800 ஆராய்ச்சி மற்றும் பொறியியல் பிரிவு வேலைகளை இழக்க உள்ளது. வேலைகள் மற்றும் ஆசிரியர்
பயிற்சிகளில் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் காண தொழிற்சங்கங்கள் முற்புகின்றன; ஆனால் பல்கலைக்கழக
தன்னாட்சியில் LRU
சட்டத்தை எதுவும் செய்ய விரும்பவில்லை (இது ஒருவித ஊர்ந்து வரும் தனியார்மயமாக்கல் ஆகும்). இது இந்த
ஆண்டு பிரான்ஸில் இருக்கும் 83 பல்கலைக்கழகங்களில் 23ல் நடைமுறைக்கு வருகிறது. பல்கலைக்கழக
தலைவர்களுக்கு இசசட்டம் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் அதிகாரங்களை கொடுப்பதுடன், தனியார் நிதியை
நாடுவற்கும் பல்கலைக்கழகச் சொத்துக்களை விற்பதற்கும் அதிகாரத்தைக் கொடுக்கிறது.
LRU விற்கு மாணவர்கள் எதிர்ப்பு
உறுதியாக உள்ளது; ஆனால் கடந்த ஆண்டு இருந்த மகத்தான ஆதரவு இல்லை. தற்பொழுது 25
பல்கலைக்கழகங்கள் மாணவர் வேலைநிறுத்தம், எதிர்ப்புக்கள், பாடங்கள் புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிப்பிற்கு
உட்பட்டுள்ளன. முக்கிய மாணவர் சங்கமான UNEF
அரசாங்கத்திற்கு எதிராக எந்த அரசியல் போராட்டத்தையும் எதிர்த்துள்ளது.
UNEF தலைமை
18 மாதங்களுக்கு முன்பு LRU
விற்கு எதிரான மாணவர்கள் திரட்டை பல மாதங்கள் போராட்டத்திற்கு பின்னர் திரும்ப பெற்றது. அப்பொழுது
அதன் தலைவராக இருந்த Bruno Julliard
"வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் முடிவிற்கு வரவேண்டும்... மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள
நலன்கள் இதற்குக் காரணம்" என்று அழைப்பு விடுத்தார். இப்பொழுது அவர் சோசலிஸ்ட் கட்சியின் கல்வி பற்றிய
செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
Solidarity, Unity, Democracy
எனப்படும் SUD
தொழிற்சங்கத்தின் மாணவர் பிரிவு அரசாங்கத்தின் இலக்கான "பல்கலைக் கழகங்களையும் அவற்றிற்கு இடையே
போட்டி என்ற தர்க்கத்திற்கு உட்படுத்தி அவை தனியார் நிதியைப் பெறுமாறு செய்தலை" ஏற்றது. ஆனால் இந்த
அணிதிரளல் அதிகரித்து அரசாங்கத்தை பின்வாங்க வைக்க வேண்டும் என்று கூறுகிறது
UNEF
போராட்டம், தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தனிமைப்படுத்தப்படுதல் பற்றி ஏதும் கூறவில்லை.
சார்க்கோசி அரசாங்கம் அதன் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு மற்றும் பிரெஞ்சு மேற்கு
இந்திய தீவான ஆன்டைல்ஸில் இருந்து பிரான்சிற்கு சமூக எழுச்சி பரவுமோ என்ற அச்சம் ஆகியவற்றால் பெரிதும்
வலுவிழந்துள்ளது. தொழிற்சங்கங்களும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகளும்தான் (சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட்
கட்சி/PCF)
அரசாங்கத்தை பதவியில் இருத்தி வைத்துள்ளன. ஒலிவியே பெசன்சநோவினால்
தோற்றுவிக்கப்பட்ட புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி வேலைகள், ஊதியங்கள் ஆகியவற்றில் அரசாங்கம் தன்
கொள்கைகளை பின்வாங்க வைக்க ஒரு பொது வேலைநிறுத்தம்தான் தேவை என்று அறிவித்துள்ளது. ஆனாலும் அதன்
நோக்கம் தொழிலாளர்களுடைய விதியை தொழிற்சங்கங்களுடன் பிணைத்து வைத்தல் ஆகும்; அவை மார்ச் 19 அன்று
ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன; இது ஜனவரி 29 ல் சார்க்கோசியின் சிக்கன கொள்கைகளுக்கு
எதிராக ஜனவரி 29ல் நடத்தப்பட்ட ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு ஏழு வாரங்களுக்கு பின் வரவிருக்கிறது; அப்பொழுது
3 மில்லியன் மக்கள் எதிர்ப்புக்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் பங்கு பெற்றனர்.
தொழிற்சங்கங்களை நம்பி சார்க்கோசியின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து
அவருடைய சமூகப் பிற்போக்குத்தன திட்டங்களின் அடிப்படையில் இருந்து பின்வாங்க வைப்பது என்பது போலித் தோற்றமாகத்தான்
போயுள்ளது. இந்த அமைப்புக்கள் மற்றும் அவற்றின் இடது வக்காலத்து வாங்குபவர்கள் இடம் இருந்து ஒரு பிரிந்து
தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு சுயாதீன போராட்ட அமைப்பு, சோசலிச வகையில்
பொருளாதாரம் மறுசீரமைக்கப்ப வேண்டும் என்ற விதத்தில் கட்டமைக்கப்பட்டால்தான் உண்மையான சமூக நலன்களின்
பாதுகாப்பு நிலைக்கும். |