World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Laying the foundations for a socialist movement

உலக சோசலிச வலைத்தள பிராந்திய மாநாடுகளில் பங்கு பெறுக!

ஒரு சோசலிய இயக்கத்திற்கான அஸ்திவாரங்களை அமைத்தல்

David North and Joseph Kishore
12 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளம், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூகச் சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்புடன் இணைந்து "உலகப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவத்தின் தோல்வி மற்றும் சோசலிசத்திற்கான வாதம்" பற்றிய தொடர்ச்சியான மாநாடுகளை அமெரிக்காவில் நடத்தவுள்ளது.

இந்த மாநாடுகள் 1930 களுக்கு பின்னர் உலக முதலாளித்துவம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியின் பிடியில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நடைபெறுகின்றன.

உலக உற்பத்தி மற்றும் வணிகம் வியத்தகு அளவில் சரிந்து கொண்டிருக்கின்றன. உலக மொத்த உள்நாட்ட உற்பத்தி 2009ம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல்தடவையாக சுருக்கம் அடையும். கிட்டத்தட்ட $50 டிரில்லயின் சொத்து மதிப்புக்கள் உலகச் சந்தைகளில் அழிக்கப்பட்டுவிட்டன; இந்த எண்ணிக்கை முழு உலகின் ஓராண்டு உற்பத்திக்கு அண்ணளவானதாகும். அமெரிக்காவில் பொருளாதாரம் வருடாந்த 6 சதவிகிதத்திற்கும் மேலாக சுருக்கம் அடைந்து வருகிறது. தொழிற்துறை உற்பத்தி இந்த ஆண்டு 15 சதவிகிதத்திற்கும் மேலாகச் சரியும்.

பொருளாதாரச் சரிவின் மிக முக்கியமான விளைவு மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் அது கொண்டுள்ள பாதிப்பு ஆகும்.

இந்த ஆண்டு உலகில் வேலையின்மை குறைந்தது 50 மில்லியனுக்கு உயரும். டிசம்பர் 2007ல் மந்த நிலை தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் 4.4 மில்லியன் வேலைகள் அகற்றப்பட்டுவிட்டன. உத்தியோகபூர்வ அரசாங்க வேலையின்மை புள்ளிவிவரம் 8.1 சதவகிதமாக உள்ளது; இது வேலையில்லாத அல்லது குறைந்த வேலையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தற்கால "ஏழ்மை குடியிருப்புகள்", கூடார நகரங்களும் வசதியற்ற சேரிகளும் நாடு முழுவதும் வெளிப்பட்டு வருகின்றன; காரணம், பல நூறாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கையிட அடிப்படைத் தேவைகளை விலைகொடுத்து வாங்கும் திறன் இல்லாமல் போய்விட்டது.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள் திறமையற்று மட்டும் இல்லாமல் பிற்போக்குத்தனம் நிறைந்தும் உள்ளன. கடந்த மூன்று சதாபத்ஙகளில் நிதிய ஒட்டுண்ணித்தனத்தில் பங்கு கொண்டு பெரும் இலாபம் அடைந்த பல வோல் ஸ்ட்ரீட் பிரமுகர்களை உள்ளடக்கிய இவருடைய நிர்வாகம், பெருநிறுவன உயரடுக்கின் சக்தி, நலன்களை சவாலுக்கு உட்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்வைக்கவில்லை.

ஒபாமாவின் "நம்பிக்கை", "மாறுதலுக்கான விருப்பம்" என்ற கோரிக்கைகளைச் சுற்றியிருந்த பரபரப்புக்கள் ஒருபுறம் இருக்க, அவருடைய கொள்கைகள் அனைத்து அடிப்படைகளிலும் புஷ் நிர்வாகத்தின் தொடர்ச்சியாகத்தான் உள்ளன. கடந்த ஆண்டு வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுக்க செலவழிக்கப்பட்ட பல டரில்லியன் டாலர்கள் புது நிர்வாகத்தின் இன்னும் அதிகமாகியுள்ளன. ஒபாமாவின் இரத்தச்சோகை பிடித்த "ஊக்க" திட்டங்கள் வேலைகள் தகர்ப்பு என்றும் பெரும் சேதத்தை நிறுத்தப் போவதில்லை; நிர்வாகமோ இன்னும் அதிக தாக்குதலை சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களில் கொண்டுவரத் தீவிரமாக உள்ளது. மேலும் ஈராக் ஆக்கிரமிப்பு தொடர்கிறது; பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்படுகின்றன. புஷ் நிர்வாகத்தின்கீழ் துவங்கிய ஜனநாயக உரிமைகள் மீதான அடிப்படைத் தாக்குதல்களான சித்தரவதை, காலவரையற்ற காவலில் வைத்தல், இராணுவ, உள்நாட்டு ஒற்று வேலைகளில் மிகப் பெரிய விரிவாக்கம் போன்றவை சற்றும் மாறாமல்தான் நடைபெற்று வருகின்றன.

இந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ முறையின் வரலாற்றுரீதியான தோல்வியைப் பிரதிபலிக்கிறது. "தடையற்ற சந்தைகள்" பிழையற்றவை என்று கூறப்பட்ட கணிப்புக்கள், "தனியார் முயற்சிகள்" பற்றிய புகழாரங்கள்" மற்றும் செல்வந்தர்களின் வாழ்க்கை முறை பற்றிப் பெரிதும் எங்கும் கூறப்பட்ட பாராட்டுக் கருத்துக்கள் அனைத்தும் அறிவார்ந்த முறையிலும், அறநெறி வகையிலும் முற்றிலும் திவால்தன்மை உடையவை என நிரூபணம் ஆகியுள்ளன.

பெருநிறுவன உயரடுக்கு மற்றும் அதன் செய்தி ஊடக வக்காலத்து வாங்குபவர்களின் தனக்கு உகந்த கூற்றுக்களுக்கு மாறான வகையில் இந்த நெருக்கடி "எதிர்பார்க்க முடியாதது" என இருந்ததில்லை; அதே போல் இது ஒன்றும் பல ஊழல் நிறைந்த தனிநபர்களின் செயல்பாடுகளின் விளைவும் அல்ல. அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவத்தின் நீண்ட காலமாக வளர்ச்சி பெற்றுவரும் முரண்பாடுகளின் விளைவுதான் இது. இந்த முரண்பாடுகளின் அடிப்படைத்தன்மையான உற்பத்தி வழிவகைகளை தனியார் உடைமை கொண்டிருக்கும் முறையில் வேறூன்றியுள்ளதும், தொழிலாளரை இலாபம் மற்றும் தேசிய அரசமைப்பு முறைக்காக சுரண்டுவது என்பவை நீண்டகாலமாக மார்க்ஸிஸத்தால் பகுத்தாய்வு செய்யப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டும் உள்ளன.

இந்த முரண்பாடுகள் ஒரு பொருளாரச் சரிவை மட்டும் ஏற்படுத்தவில்லை; இந்தச் சரிவு முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே இருக்கும் மோதலை பாரிய முறையில் தீவிரப்படுத்தியுள்ளது, ஒரு புதிய காலனித்துவ வகையிலான குற்றங்களுக்கும், உலகப் போர் என்ற ஆபத்திற்கும் வழிவகுக்கிறது.

தற்பொழுதைய நெருக்கடி சோசலிச முன்னோக்கின் உண்மையை உறுதிப்படுத்துகிறது. அதாவது மனிதகுல நாகரிகம் தப்பிப் பிழைத்தல், அதன் எதிர்காலம் ஆகியவற்றிற்கு பெருவணிகத்தின் அரசியல் மற்றும் நிதிய சர்வாதிகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், சமூகத்தின் உற்பத்தி சக்திகள் தனியார் உடைமையில் இருப்பது அகற்றப்பட வேண்டும் மற்றும் ஜனநாயகக் கட்டுப்பட்டிற்குள் உலகந்தழுவிய திட்டமிட்ட பொருளாதாரம் தோற்றுவிக்கப்பட வேண்டும், அதை இலாப முறைக்கு என்று இல்லாமல் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்ய அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பவையே அவை.

இம்மாநாடுகள் தற்போதைய நெருக்கடியில் வரலாற்றுத் தன்மை நிறைந்த தொடக்கங்கங்களை ஆராய்ந்து தொழிலாள வர்க்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடைமுறைத் திட்டங்களை வளர்க்கும். இத்திட்டம் சர்வதேச சோசலிசத்தில் வேர்களைக் கொண்டிருக்கும்; அது உலக சமூகத்தை மாற்றுவதற்காக ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாளர்கள் நலன்களுடைய ஒற்றுமையில் இருந்து செயல்படும்.

புறநிலை நெருக்கடியில் இருந்தே எழும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி நிகழ்ச்சிநிரலில் உள்ளது. சோசலிஸ்ட்டுக்களின் நோக்கம் ஒரு அரசியல் முன்னோக்கு அளித்து புதிய புரட்சி சகாப்தத்தின் சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்ளும் தலைமையைக் கட்டமைப்பது ஆகும். நம்முடைய வாசகர்கள் அனைவரையும் இம்மாநாடுகளில் பங்கு பெறுமாறும் இந்த மிக முக்கியமான பணியில் முழு ஈடுபாடு கொள்ளுமாறும் வலியுறுத்துகிறோம்.

மிச்சிகன் ஆன் ஆர்பரில் (ஏப்ரல் 25), நியூ யோர்க்கில் (மே 3), கலிபோர்னியா லொஸ் ஏஞ்சல்ஸ் (மே 10) ஆகிய இடங்களில் நடக்கும் நாடுகளில் பங்கு பெறப் பதிவு செய்ய இங்கே "அழுத்தவும்". இம்மாநாடுகளில் உங்களால் பங்க பெற முடியவில்லை என்றால், அதே நேரத்தில் SEP யில் சேர்வது பற்றி கூடுதலாக அறிய விரும்பினால், இங்கு "அழுத்தவும்''.