WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
A specter haunts the ruling elite
ஆளும் உயரடுக்கை ஓர் பேயுரு அலைக்கழிக்கிறது
By Joseph Kishore
9 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
சோசலிசம் பற்றிய பேயுரு ஒன்று அமெரிக்க ஆளும் உயரடுக்கை அலைக்கழிக்கிறது.
சோசலிசத்தின் வருங்காலம் பற்றிய குறிப்புக்கள் பெருகிவருவதை செய்தி ஊடகத்தில்
ஒருவர் காணலாம். முதலாளித்துவத்தின் பல்வேறு பிரிவுகள் ஒன்றையொன்று சோசலிச போக்குகளைக்
கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகினறன; அதே நேரத்தில் தத்தம் தடையற்ற தொழில்முயற்சி பற்றிய கோட்பாடுகளுக்கு
கொண்டிருக்கும் உறுதியான உடன்பாட்டையும் வலியுறுத்துகின்றன.
ஞாயிறன்று பேச்சு நிகழ்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கிய தலைப்புக்களில்
ஒன்று ஒபாமாவின் கொள்கை ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் போல் உள்ளது என்ற குடியரசுக் கட்சியின் குற்றச்சாட்டு
ஆகும். ABC News
ல் "இந்த வாரம் George Stephanopoulos
உடன்" என்ற நிகழ்ச்சியில் கூடியிருந்த வாடிக்கையான விமர்சகர்கள்,
E.J.Dionne, David Brooks, George Will,
Cokie Roberts ஆகியோர் இப்பிரச்சினையை விவாதித்தனர்.
NBC இள் "பத்திரிக்கை
சந்திப்பு'' ("Meet the Press")
நிகழ்ச்சியில் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினரான சார்ல்ஸ் ஷ்யுமெரும்
குடியரசுக் கட்சி செனட்டர் லிண்டே கிரகாமும் வங்கிகள் அரசாங்க உடைமையாகும் வாய்ப்பு பற்றி விவாதித்தனர்.
ஷ்யுமெர், கிரகார் இருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் தேசியமயமாதலுக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால்
இருவருமே "மோசமான தேசியமயம்" அதாவது அரசாங்கம் வங்கிகளை தனி நபர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளுவதற்கும்
"நல்ல தேசியமயம்", அதாவது "சொத்தைப் பராமரிக்க நியமிக்கப்படல்" என்று அழைப்பது சிறந்தது என்று அவர்கள்
கூறுவதற்கும் இடையே வேறுபடுத்திக்காட்ட அவசரப்பட்டனர்; பிந்தையது வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்பை சரி செய்த
பின்னர் விரைவில் அவற்றை தனி முதலீட்டாளர்களுக்கு விற்றுவிடும் என்று கூறப்பட்டது.
சோசலிசத்தை பற்றிய பல குறிப்புக்களில் மிக அசாதாரணமான குறிப்பு ஒன்று ஜனாதிபதி
பராக் ஒபாமாவிடம் இருந்தே வந்தது. நியூ யோர்க் டைம்ஸுக்கு வெள்ளியன்று கொடுத்த பேட்டியில்
ஒபாமா குடியரசுக் கட்சியின் சில பிரிவுகள் அவரை ஒரு சோசலிஸ்ட் என்று குற்றம் சாட்டியுள்ளதற்கு விடையிறுக்குமாறு
கோரப்பட்டார். இந்த வினா பற்றி ஒபாமா திடுக்குற்றார்; ஆனால் சிரித்தபடி ஒரு எளிமையான விடையாக, "இதற்கு
விடை இல்லை" என்று கூறினார்.
பேட்டியை அடுத்து ஒபாமாவும் அவருடைய ஆலோசகர்களும் இப்பிரச்சினை பற்றி விவாதித்திருக்க
வேண்டும்; 90 நிமிஷங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி டைம்ஸ் நிருபரான
Jeff Zeleney
ஐ அழைத்துப் பேசும் அசாதாரண நடவடிக்கையை எடுத்தார். இந்த வினாவின்
உட்குறிப்பு பற்றி வெளிப்படையாக பதட்டமுற்ற ஒபாமா சோசலிசத்திற்கு தன்னுடைய எதிர்ப்பை விளக்கி குற்றச்
சாட்டை எதிர்ப்புறத்தில் வைக்க முயன்றார். "சிலர் இத்தகைய சொற்களைக் கூறும்போது, அதுவும் நாங்கள் தடையற்ற
சந்தைக் கொள்கைகளுடன் முற்றிலும் இயைந்த வகையில் செயல்பட்டு வரும் நேரத்தில் கூறும்போது, சோசலிசம்
என்ற சொல்லையே வேறுவிதமாகக் கூறுபவர்களிடம் இருந்து அத்தகைய சொற்கள் வருவது சரியல்ல என்பது குறிப்பிடத்
தக்கது ஆகும்."
சமூக அமைதியின்மை தோன்றக்கூடும் என்ற செய்தி, ஊடகங்களில் விவாத்திற்கு உரிய
தலைப்பாக அடிக்கடி வருகிறது. ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸிTM "Subprime
Europe" என்ற தலைப்பில் லியாகத் அஹ்மது ஒரு கருத்துரையில்,
அப்பகுதியில் பொருளாதாரச் சரிவை மேற்கோளிட்டார்; அதை 1931 ஆஸ்திரிய வங்கி
Creditanstalt
-சரிந்ததுடன் ஒப்பிட்டார். அந்த நிகழ்வு ஐரோப்பாவில் நிதிய பீதியை ஏற்படுத்தியது, பெருமந்த நிலை
துவக்கத்தை ஏற்படுத்தியது.
கிழக்கு ஐரோப்பாவில் பொருளாதாரக் கரைப்பு என்பது "சமூக அமைதியின்மையை
தூண்டுகிறது" என்று அஹ்மத் எழுதினார். அமெரிக்காவின் உட்குறிப்புக்கள் பற்றி எச்சரித்த அவர், "அமெரிக்க துணை
முக்கிய பிரிவு கடன் வாங்கியவர்கள், தங்கள் வீடுகள் முன்கூட்டி விற்றவர்கள் குறைந்தபட்சம் இதுவரை தெருக்களில்
ஒன்றும் கலகம் செய்துவிடவில்லை. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்."
Times இன்
இதே பக்கத்தில் மற்றொரு விமர்சனத்தில் பிரெடெரிக் மோர்ட்டோன் 1913ல் ஆஸ்திரியா பற்றிய நிலைமையுடன்
ஒரு ஒப்புமை வரைந்துள்ளார். தன்னுடைய விமர்சனத்தை கார்ல் கிராஸின் மேற்கோளுடன் முடித்துள்ளார்; பிந்தையவர்
ஆஸ்திரியாவை "எதிர்ப்புக் கருத்துக்களின் சோதனைக்கூடம்" என்று குறிந்திருந்தார். மோர்ட்டன் வினவுகிறார்: "அவர்
இன்றைய அமெரிக்கா பற்றி என்ன கூறுவார்?"
சமீபத்தில் MSNBC
ல் தோன்றிய ஜிம்மி கார்ட்டரின் முன்னாள் தேசிய ஆலோசகரான
Zbigniew Brezezinski
"வர்க்கப் பூசல்கள் மீண்டும் தோன்றக்கூடிய நிலை பற்றி கவலைப்பட்டுள்ளார்.
சோசலிசம் பற்றிய இத்தகைய விவாதம் ஒரு அரசியல் மற்றும் செய்தி ஊடக உயரடுக்கு,
பல தசாப்தங்களாக கம்யூனிச, சோசலிச எதிர்ப்பை அரச மதம் போலவே வளர்த்தவர்களிடம் இருந்து வெளிப்படுவது
விந்தையே ஆகும். அரசியல் நடைமுறையின் எந்தப் பிரிவும் முதலாளித்துவத்தை அல்லது நிதிய அடுக்கின் நலன்களை
எவ்விதத்திலும் சவால்விடும் கொள்கையை முன்வைக்கவில்லை. அதேபோல் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிச
இயக்கமும் இன்னமும் தோன்றவில்லை.
ஆனால், இந்த அடுக்கில் பெருகிய நரம்புத் தளர்ச்சி முதலாளித்துவ நெருக்கடி மற்றும்
ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான பரந்தமக்களின் சமூக எதிர்ப்புத் திறன் ஆகியவற்றின் உட்குறிப்புக்களை
பற்றி உள்ளது. இதுவரை அமெரிக்காவில் அரசியல் விவாதம் என்பது ஒரு மிகச் சிறிய வடிவமைப்பிற்குள்
கட்டுண்டுள்ளது. செய்தி ஊடகத்தில் மாறுபட்ட கருத்துக்கள் வருவதும், பேச்சு நிகழ்வுகளில் மாற்றுக் கருத்துக்கள்
பலவிதத்தில் வெளிப்படுவதும் மக்களின் உயர்மட்ட ஒரு சதவிகிதத்தினுள் இருக்கும் செல்வம் கொழிக்கும் பிரிவின்
பலதரப்பட்ட கருத்துக்கள் ஆகும்.
ஆயினும்கூட இந்த வளர்ச்சிகளிலும் ஒரு பொதுநிலைத் தர்க்கம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட
காலத்தில் --பின்னர் என்பதை விட முன்னதாகவே-- இக்கொள்கை பற்றிய விவாதம் அவர்களுடைய கடுமையான
பிடியில் இருந்து தப்பிவிடும். உலக மந்த நிலையால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதில் தொடர்பு
கொள்ளத் தலைப்படுவர்.
ஆளும் வர்க்கத்திற்குள்ளேயே ஒரு பெரும் சீற்றம் கட்டமைக்கப்படும் உணர்வு
வந்துள்ளது; அது கட்டவிழ்க்கப்பட்டால் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற வகையில் நிதிய உயரடுக்கின்
செல்வம் மற்றும் சலுகைகளுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு தோன்றும். அதன் பின் சோசலிசம் ஒரு வெறும் பேயுரு
போல் வளர்ந்து உலவாது என்றும் ஒரு உயிர்த்த அரசியல் இயக்கமாக மில்லியன் கணக்கான மக்ளின் நனவில்
இயைந்து வெளிப்படும் என்றும் கவலைப்படுகின்றனர். அவர்கள் கவலைப்படுவதும் மிகவும் சரியே. |