WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
The collapse of General Motors
ஜெனரல் மோட்டார்ஸின் வீழ்ச்சி
By Jerry White
6 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
கணக்கு பரிசோதனை நிறுவனமான
Deloitte & Touche
வியாழனன்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்று சமீபகாலம் வரையில் உலகின் மிகப் பெரிய கார்த் தயாரிப்பு நிறுவனமாக
இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் அதன் செலுத்துமதிகளைக் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் திவாலின்
விளிம்பில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.
2008 ல் $30.9 பில்லியன், மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் $72 பில்லியன்
என ஜெனரல் மோட்டார்ஸ் இன் தொடர்ந்த இழப்புக்கள் மற்றும் நிறுவனத்தின் எதிர்மறை நிகர மதிப்பு மற்றும்
வணிகம் நடத்தத் தேவையான ரொக்கத்தை தோற்றுவிக்கு முடியாத நிலையையும் சுட்டிக்காட்சி கணக்கு பரிசோதனையாளர்கள்
அரசாங்க கடன்களில் இன்னும் சில பில்லியன்கள் கிடைத்தால் ஒழிய ஒரு "இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமாக" ஜெனரல்
மோட்டார்ஸ் தொடர்வது "கணிசமான சந்தேகத்தில்தான் உள்ளது" என்று கூறுகின்றனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, 16 மாதங்களுக்கு முன்பு $43 என விற்றுவந்த ஜெனரல்
மோட்டார்ஸின் பங்கு தீவிரமாக சரிந்த $1.86 என்று முடிவிற்கு வந்தது. நிறுவனத்தில் மூலதன இருப்பு
கிட்டத்தட்ட $1 பில்லியனில் பெருமந்த நிலைக் காலத்திற்குப் பின்னர் மிகக்குறைந்த அளவு என்று உள்ளது. "ஜெனரல்
மோட்டார்ஸின் பங்கு மதிப்பற்றது; அரசாங்கத்திடம் இருந்து கூடுதலான நிதியைப்பெற்றாலும் அல்லது திவால் பதிவு
செய்தாலும் நிலைமை இதுதான்" என்று கடந்த மாதம் முதலீட்டாளர்களிடன்
Bunckingham Research
பகுப்பாய்வாளர் ஜோசப் அமடுரோ கூறினார்.
ஜெனரல் மோட்டார்ஸ் ஏற்பாடு செய்திருந்த கணக்கு பரிசோதனையாளர்கள்
பாதுகாப்பு மற்றும் பத்திரங்கள் குழுவில் பதிவு செய்யப்பட்டது, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில்
இன்னும் கூடுதலான ஊதியம், பிற நலன்கள் குறைப்பை பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் இருந்து பெற
அழுத்தம் கொடுத்த வகையில் பகிரங்கமாயிற்று. நிறுவனம் அதே நேரத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் ஓய்வு பெற்றவர்கள்
அவர்களைச் சார்ந்தவர்களுடைய ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதாரக் காப்பு நலன்களையும் அச்சுறுத்தியுள்ளது.
உலகெங்கிலும் 47,000 பணிநீக்கங்களை செய்வதாக ஜெனரல் மோட்டார்ஸ்
உறுதி கூறியுள்ளது; மேலும் இன்னும் 14 ஆலைகளை வட
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒபாமா நிர்வாகத்திற்கு அளித்துள்ள "மறு
சீரமைப்பு" திட்டத்தின் பகுதியாகச் செய்வதாக உறுதியளித்துள்ளது. இதைத்தவிர, நிறுவனம் பத்திரங்களை
வைத்திருப்பவர்களுக்கும் விநியோகத்தர்களுக்கும் தான் கொடுக்க வேண்டிய பணத்தை குறைக்கும் வகைகளை
நாடுவதுடன் ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் வெளி அரசாங்கங்களிடம் இருந்து பில்லியன் கணக்கில் உதவியை நாடுகிறது.
எதிர்வரவுள்ள வீழ்ச்சியைப் பெற்றி எச்சரிக்கைகள் ஒன்றும் இன்னும் அதிக
விட்டுக்கொடுப்புகளை எதிர்பார்த்து விடப்படும் வெற்று அச்சுறுத்தல்கள் அல்ல. கார்த் தொழிலாளர்கள் மிகப்பெரியளவு
வாழ்க்கைத் தரங்களை எதிர்பார்க்கும் அளவிற்கு குறைத்துக்கொள்ள தயாராக இருந்தாலும், பல அரசாங்கங்களும்
பொது நிதியில் இருந்து பல பில்லியன்களை உதவியாகக் கொடுத்தாலும், கார்த் தயாரிப்பாளர் இன்னமும் அழிவைத்தான்
எதிர்பார்க்க நேரிடும் அல்லது தன்னுடைய நிலையை விட மிகக்குறைந்த ஒரு நிழல் போன்ற நிலைக்கு
குறைந்துபோகத்தான் வேண்டியிருக்கும்.
தொழிலாளர்களின் பெரும் இழப்பில் நிறுவனத்தின் திவால்தன்மையை தவிர்க்க முயலும்
முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது, முதலாளித்துவ அமைப்புமுறை உலகம் முழுவும் நிலைமுறிந்துள்ள
உண்மையாகும். இது கடன் சந்தைகள் உறைந்துள்ளதுடன் வங்கி முறை உதவுமுடியாத ஒரு நிலையில் வேலையின்மைக்கு
உந்துதல் கொடுத்து கார் விற்பனையையும் பெரிதும் குறைத்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸின் வீழ்ச்சி என்பது இலாப முறை முழுவதின் நெருக்கடி பற்றிய
ஒருமுகப்படுத்தப்பட்ட வெளிப்பாடு ஆகும். உலகச் சரிவுநிலை
GM நிர்வாகம்
எதிர்பார்த்ததை விட மிக அதிகமான முறையில் கார்கள் விற்பனையை குறைத்துவிட்டது; அதைக் கருத்தில் கொண்டு
நிர்வாகம் அரசாங்கத்திற்கு மறுகட்டமைப்புத் திட்டங்களைக் கொடுத்திருந்தது. விரைவில் பொருளாதார மீட்பு
ஏற்படக்கூடும் என்ற கருத்தை நிராகரித்த முறையில் கணக்கு பரிசோதகர்கள் "உலக கார் சந்தை மீளும் என்றோ
இன்னும் மோசமான சரிவைக் காணது என்பதற்கோ எந்தவித உத்தரவாதமும் இல்லை."
என எழுதியுள்ளனர்.
உலகத்தின் மிகப் பெரிய கார் சந்தையான அமெரிக்காவில் விற்பனை கடந்த 30
ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்த தரத்திற்கு சரிந்துவிட்டது. தசாப்தத்தின் பெரும் பகுதியில் ஆண்டு ஒன்றுக்கு
16 முதல் 17 மில்லியன் வாகனங்களை சராசரியாக விற்பனை செய்யப்பட்ட பிறகு, அமெரிக்க கார் விற்பனை
2008ல் 13 மில்லியன் என சரிந்தது; இந்த ஆண்டு இன்னும் சரிந்து 9 மில்லியன் என்று ஆகக்கூடும். கடந்த மாதம்
சீனாவில் கார் விற்பனை முதல் தடவையாக அமெரிக்க விற்பனையை விட கூடுதலாகப் போயிற்று.
உலகம் முழுவதும் முன்னோடியில்லாத வகையில் கார் விற்பனையில் சுருக்கம்
ஏற்பட்டுள்ளது; இது ஜப்பான், ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் முன்பு விரைவாக வளர்ந்து
கொண்டிருந்த சீன, ஜப்பானிய சந்தைகளையும் பாதித்துள்ளது. உலக கார் பெருநிறுவனங்களான டோயோடா,
நிசான், வோல்க்ஸ்வாகென் ஆகியவை உற்பத்தி வெட்டுக்கள், பெரும் பணி நீக்கங்கள் ஆகியவற்றை அறிவித்துள்ளதுடன்
தொழிலாளர்களிடம் இருந்து பெரும் தியாகங்களையும் எதிர்பார்க்கின்றன. இதற்கிடையில் தொழில்துறை
பகுப்பாய்வாளர்கள் திவால் அலைகள், நிறுவன இணைப்புக்கள் என்று கார் மற்றும் அதனுடன் தொடர்புடைய
நிறுவனங்களில் இருக்கும் என்றும் இது உற்பத்தி திறன் "மிகப் பெரிய அளவிற்கு" இருப்பதை அகற்ற வரும் என்றும்
கூறுகின்றனர்.இந்த நிகழ்போக்கானது பலமில்லியன் வேலைகளைத் அழித்துவிடும்.
ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கார்த் தொழில் முழுவதின் நெருக்கடியும்
முதலாளித்துவ முறையில் அராஜகத்தன்மையையும் மற்றும் பகுத்தறிவற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கடந்த ஆண்டு இருந்ததைவிட கார்களுக்கும் டிரக்குகளுக்கும் இந்த ஆண்டு ஒன்றும் தேவை குறைந்துவிடவில்லை.
அதேபோல் சுற்றுச் சூழலுக்கு உகந்த, அனைவரும் வாங்கக் கூடிய முறையில் தயாரிக்கப்படும் கார்களுக்கு
தேவையான தொழில்நுட்பம், அறிவியல் உணர்வு மற்றும் தேவையான தொழிலாளர் பிரிவினர் ஆகியவற்றிற்கும் குறைவு
ஒன்றும் இல்லை.
ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையின்கீழ் உற்பத்தி மனிதத் தேவைகளுக்கு என்று
இல்லாமல் தனியார் இலாபமுறைக்காகத்தான் செயல்படுகிறது. மேலும் உலகளாவிய முறையில் பரந்திருப்பதுடன்
சர்வதேச நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள உற்பத்தி மற்றும் விநியோக வலைப்பின்னலானது போட்டி
தேசிய அரசுகளின் பொருளாதாரரீதியாக அழிவுகரமானதும், தடைக்குட்பட்டுமுள்ள கட்டமைப்பினுள்
அகப்பட்டுக்கொண்டுள்ளது. அவர்களுடைய உழைப்பில் வந்த பொருட்கள் உலகெங்கிலும் ஆலைகளிலும், ரயில்வே
மேடைகளிலும், துறைமுகங்களிலும் குவிந்து கிடக்கையில், இதன் விளைவாக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள்
முற்றிலும் வறிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
நவீன பெரும் உற்பத்தி நிறுவனம் என வரையறுக்கப்பட்ட 101
ஆண்டான தொழில்துறை பெருநிறுவமான ஜெனரல் மோட்டார்ஸின்
வீழ்ச்சி -அமெரிக்க முதலாளித்துவ முறை வரலாற்றுச் சரிவிற்கு அடையாளம் ஆகும். பல தசாப்தங்கள் அமெரிக்கப்
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இது உயர்த்திக்காட்டுகிறது; நாட்டின் உற்பத்தித் தளம் முறையாக
ஆதாரங்களை இழந்து பெரிதும் தகர்க்கப்பட்ட நேரத்தில், பரந்த செல்வக்குவிப்பு ஒரு நிதிய பிரபுத்துவத்தால்
கடன் உந்துதல் பெற்ற ஊக முறையில் குவிந்ததையும், உற்பத்தியின் உண்மை மதிப்பிற்கும் தொடர்பில்லை என்று
ஏற்பட்ட நிலையையும் கண்ணுற்றது.
ஒரு சில புள்ளிவிவரங்கள் இந்த நிகழ்போக்கினை நிரூபிக்கின்றன. 1950ம் ஆண்டில்,
ஜெனரல் மோட்டார்ஸ் உலகின் கார்களில் 40 சதவிகிதத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தபோது,
அமெரிக்காவில் அனைத்து பெருநிறுவன இலாபத்தில் 60 சதவிகிதம் உற்பத்தி முறை மூலம் வந்தது; நிதிய
நடவடிக்கைகள் 10 சதவிகிதம்தான் இருந்தன. 2004ம் ஆண்டில் இந்த விகிதம் தலைகீழாயிற்று; நிதியப் பிரிவு
பெருநிறுவன இலாபங்களில் 45 சதவிகிதத்தை கொண்டது, உற்பத்தித் துறையோ 6 சதவிகிதம் என்றுதான்
இருந்தது.
உலக முதலாளித்துவ முறையின் நெருக்கடி ஒருமுகப்படுத்தப்பட்டவகையில்
வெளிப்பாடாக வந்த அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு, சந்தைகள் முறிந்து போதல், நுகர்வோர் தேவை
சரிந்து போதல் மற்றும் உலகின் உற்பத்தி சக்திகளின் பெரும் பிரிவுகள் அழிக்கப்படல் ஆகியவற்றைக் காண்கிறது.
அமெரிக்காவின் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள்
நெருக்கடிக்கு தீர்வு எதையும் கொடுக்கவில்லை. அவர்களுடைய முன்னோக்கிற்கும் பெருநிறுவன நிர்வாகத்தின்
முன்னோக்கிற்கும் இடையே அடிப்படை வேறுபாடு ஏதும் இல்லை.
UAW தலைவரான
ரோன் கெட்டில்பிங்கர் நிர்வாகத்தின் கூற்றுக்களைப் பிரதிபலித்த வகையில்தான் தொழிலாளர்கள் பல தலைமுறைகள்
போராடிப் பெற்ற சமூக நலன்களை இழக்க வேண்டும் என்று கூறுகையில் தெரிவிக்கிறார். இன்னும் புதிய
இழப்புக்களுக்காக பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தொழிற்சங்கம் முயல்கிறது; 2007ல்
விட்டுக்கொடுக்கப்பட்டதற்கும் மேலானதாக இவை இருக்கும்; அப்பொழுதே புதிய தொழிலாளர்களுக்கு ஊதியங்கள்
அரைவாசிதான் கிடைத்தது. தொழிற்சங்கம் கூறும் நோக்கம் அதன் உறுப்பினர்களுடைய ஊதியங்களும் நலன்களும்
டோயோடா இன்னும் பிற வெளிநாட்டுத் தளங்கள் கொண்ட நிறுவனங்கள் செயல்படுத்தும் அமெரிக்கா ஆலைகளில்
இருக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களற்ற தொழிலாளர்களின் நிலைமையைப் போல்தான் இருக்கும் என்பதாகும்.
உலகம் முழுவதும் இருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இதே உண்மைதான் பொருந்தும்.
கனடிய கார்த் தொழிலாளர்கள் அமைப்பு (The
Canadian Auto Workers), கனடாவில் இருக்கும்
ஜெனரல் மோட்டார்ஸ் ஆலைகளில் "போட்டித்தன்மை நலன்களுக்காக"
அமெரிக்கக் கார்த் தொழிலாளர்கள் சங்கம் கொடுக்கும்
இழப்புக்களுக்கு ஒப்பான, அல்லது கூடுதலான இழப்புக்களை தரத்தயார் என்று உறுதி கூறியுள்ளது. ஜேர்மனியில்
GM ன்
ஓபெல் பிரிவுகள் நிறுவனத்தை ஐரோப்பிய நிர்வாகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்காக
இலாபகரமாக இருப்பதற்கு, எத்தகைய தொழிலாளர் செலவினக் குறைப்புக்களையும் அது சுமத்தலாம் என்றும்
தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
கார்த்தயாரிப்பு நிறுவனங்கள், முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனக்
கட்டுப்பாட்டில் உள்ள செய்தி ஊடகங்களைப் போலவே தொழிற்சங்கங்களும் வறுமைத் தர ஊதியங்கள் மற்றும்
பாரிய வேலை இழப்புக்கள் ஆகியவற்றை ஏற்பதைத் தவிர தொழிலாளர்களுக்கு வேற வழியில்லை என்று கூறுகின்றன.
இது ஒரு தவறான கருத்தாகும். இதற்கு ஒரு மாற்றீடு உள்ளது. முற்போக்கான
பாதை என்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் எல்லைகளை நிராகரித்து, ஒரு திட்டமிட்ட, சமத்துவம் நிறைந்த,
சர்வதேச மறுசீரமைப்பு பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்படதலில் இருக்க வேண்டும்; அது மக்களில்
பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு ஏற்ப உற்பத்தியைக் கொள்ளுமே ஒழிய
செல்வ உயரடுக்கின் நலன்களுக்காக அல்ல.
ஒரு பாதுகாப்பான வேலை, வீடு, சுகாதாரப் பாதுகாப்பு கல்வி போன்ற
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை வழங்குதல் என்பது தொழிலாளர்களால் உற்பத்திமுறை, பங்கீட்டு முறை
இவற்றைப் பயன்படுத்தித் தோற்றுவிக்கப்படும் செல்வம் மக்களில் ஒரு மிகச் சிறிய பிரிவின் இலாப உந்துதலுக்கு
தாழ்த்தப்படும் வரை இயலாதது ஆகும். மில்லியன் கணக்கான தொழிலாளிகள், பொறியியலாளர்கள்,
வடிவமைப்பவர்கள், கணக்காயர்கள் போன்றவர்களுடைய கூட்டு முயற்சியில் நடக்கும் கார்த் தொழில் பெருநிறுவன
தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் செல்வம் படைத்த முதலீட்டாளர்களின் கரங்களில் விடப்படக்கூடாது;
அவர்களுடைய முழு நோக்கமும் "பங்குதாரர் மதிப்பை" அதிகப்படுத்துதல், தங்களுடைய செல்வத்தைப் பெருக்குதல்
ஆகும்; இவைதான் தொழில்துறையை தரைமட்டத்திற்கு கொண்டுவந்துள்ளன.
கார்த் தொழில் தேசியமயமாக்கப்பட்டு, பொது பயன்பாட்டு அமைப்பாக
மாற்றப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். சிறு முதலீட்டாளர்களின்
சொத்துக்கள் காக்கப்பட வேண்டும்; ஆனால் பெருநிறுவன நிர்வாகிகள் பெரிய முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு
இழப்புத் தொகை ஏதும் கொடுக்கப்படக்கூடாது.
நிர்வாகத் தேர்வு உட்பட அனைத்து முடிவுகள், ஊதியங்கள், பணி நேரம், பணி
நிலைமைகள் பற்றிய விஷயங்கள் ஆகியவை ஆலைக் குழுக்களால் நிர்ணயிக்கப்பட வேண்டும். இக்குழுக்களில்
தொழிலாளர்களும், தொழிலாளர்கள் மற்றும் சமுதாயத்தின் நலனுக்கு தங்கள் உழைப்பை அர்ப்பணிப்பு செய்யும் மற்றைய
திறமையான பணிகளைச் செய்பவரும். ஊதிய இழப்பு இல்லாமல் வாராந்த வேலைநேரம் குறைக்கப்பட்டு,
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைகள் உத்தரவாதமாக இருக்கும்.
கார்த் தொழில் தேசியமயமாக்கப்பட்டு தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவரப்பட வேண்டும் என்பது முழுப் பொருளாதாரத்தின் சோசலிச மறு அமைப்புமுறையின் அடிப்படைக் கூறுபாடு
ஆகும்; இதில் வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களும் கொண்டுவரப்படும்; அதையொட்டி நிதிய இருப்புக்கள் இலாபத்திற்கு
என்று இல்லாமல மனிதத் தேவைக்கு என்று ஒதுக்கப்பட முடியும்.
அமெரிக்கத் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை ஒரு தொழிற்துறையினுள்
அல்லது ஒரு நாட்டிற்குள் தீர்க்கப்பட முடியாதவை ஆகும். தற்கால உலகப் பொருளாதாரத்தின் சவால்கள் தேசிய
எல்லைகளைத் தகர்ப்பதின் மூலம்தான் தீர்க்கப்பட முடியும்; இதுதான் தொழிலாளர்களை ஒருவர்க்கு ஒருவர் எதிரக
நிறுத்தி வணிக மற்றும் இராணுவப் பூசல்களை ஏற்படுடத்துகிறது; அவை இரு உலகப் போர்களுக்கு கடந்த நூற்றாண்டில்
வழிவகை செய்து வெடிக்க வைத்தன. மாறாக தொழிலும் நிதிமும் ஒரு சர்வதேசத் திடடத்தின் அடிப்படையில்
மறுசீரமைக்கப்பட வேண்டும்; அது உலக உற்பத்தியாளர்கள் அனைவருடைய ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றின்
மூலம் நடத்தப்பட வேண்டும்.
அமெரிக்காவில் இந்த முன்னோக்கிற்கான போராடடத்திற்கு பெரு வணிகத்தின் இரு
கட்சிகளுடனான அரசியல் உடைவும், அதே போல் ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டமும், அரசியல்
அதிகாரத்திற்கான அதனது போராட்டத்திற்காக தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி ஒரு சுயாதீன அரசியல்
சக்தியாக ஒழுங்கமைப்பதும் தேவை. |