WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Oppose LTTE campaign of threats and violence against
SEP supporters in Europe!
ஐரோப்பாவில் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிரான தமிழீழ விடுதலைப்
புலிகளின் அச்சுறுத்தல்கள், வன்முறை நடவடிக்கைகளை எதிர்த்திடுங்கள்!
9 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக்
கட்சியானது, தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் உட்பட, ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
எனக் கருதுபவர்கள் அனைவரையும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக ஐரோப்பாவில் செயற்படுபவர்களுக்கு,
ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும்
வன்முறைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என உத்தரவிடுமாறு கோரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
பேர்லின், லண்டன் மற்றும் பாரிசில் பெப்ருவரி 4ம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும்,
பெப்ருவரி 7ம் திகதி அன்று ஸ்ருட்கார்ட்டில் நடந்த எதிர்ப்புக் கூட்டத்திலும்,
SEP ஆதரவாளர்கள்
துண்டுப்பிரசுரங்களை வழங்குவதை நிறுத்தி கூட்டத்தை விட்டு அகலுமாறு கூறப்பட்டனர்; மேலும் அவர்கள் மோதித்
தள்ளப்பட்டதுடன் வன்முறை பயன்படுத்தப்படும் என்ற எச்சரிக்கையையும் பெற்றனர்;
TCC எனப்படும்
Comité de coordination tamoul en
France, மற்றும்
British Tamil Forum
ஆகியவை உள்ளிட்ட, பல
LTTE ஆதரவு அமைப்புக்களின்
மேற்பார்வையாளர்களால் சிங்கள எதிர்ப்பு இனவெறி அவமதிப்பு சொற்களுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
இதேபோல், SEP
ஆதரவாளர்கள் பெப்ருவரி 6ம் திகதி பாரிஸின் La
Chappelle பகுதியில் --இலங்கையில் 25 ஆண்டுகளாக தமிழர்கள்
மீது நடக்கும் ஒடுக்குமுறை, உள்நாட்டுப்போர் ஆகியவைகளுக்கு முடிவுகட்டும் ஒரு சோசலிச தீர்வினை முன்வைக்க
இருக்கும் மார்ச் 15 பொதுக்கூட்டத்திற்காக பிரச்சாரம் செய்தவர்களின் துண்டுப் பிரசுரங்கள் பறிக்கப்பட்டு,
TCC
ஆதரவாளார்களால் அழிக்கப்பட்டதை காண நேர்ந்தது.
TCC நடவடிக்கையாளர்கள்
தங்களின் அனுமதி உடையவர்கள் மட்டுமே
La Chapelle
ல் வாழும் தமிழர்களிடம் அரசியல் பற்றி பேச அனுமதிக்கப்படுவர் என்று எச்சரித்தது.
இத்தகைய ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின்
உத்தரவின் பேரில் செயற்பட்டவர்களாவர்.
பல தசாப்தங்கள் நீடித்த, இகழ்வுற்ற தமிழ் அரசியல் எதிராளிகளுக்கு எதிராக
கொலைகாரத்தனமான வன்முறையை பிரயோகிக்கும் வரலாற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டுள்ளது. இதன்
ஜனநாயக எதிர்ப்பு வழிவகைகள், படுகொலைகள் உட்பட, தமிழ் மக்களின் ஜனநாயக விழைவுகளை முற்றிலும் மீறிய
வகையில் உள்ளன; இவை தமிழ் மக்களுக்கு எதிரான அதன் போரில் இலங்கை பிற்போக்கு அரசை பலப்படுத்தி
இருக்கின்றன.
ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை பெருகிக் கொண்டு வருகிறது.
கடந்த சனியன்று, ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனதிபதி நிக்கோலோ சார்க்கோசி,
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் புகைப்படங்களை ஏந்தியவண்ணம் வந்த 75 அல்லது அதற்கு அதிகமான
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து
தமிழ் மற்றும் பிரெஞ்சு இடது குழுக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை உடைக்க முற்பட்டனர். எங்களைத்
தவிர, நீங்கள் எவரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அல்லது கூட்டங்களை நடத்த அனுமதி கிடையாது" என்று ஒரு
LTTE
முரடன் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினான்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஐரோப்பிய முகவர்கள் நடத்தும் இத்தகைய மிரட்டல்
பிரச்சாரம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அத்துமீறலான தாக்குதல் ஆகும்; இது கடுமையாக எதிர்க்கப்பட
வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியை
தமிழீழ விடுதலைப் புலிகள் இலக்கு வைப்பது குறிப்பிடத்தக்க
வகையில் மட்டுமீறிய வன்முறையாகும்; ஏனெனில் தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு போராடும் சோசலிச
சமத்துவ கட்சியின் தொடர்ச்சியான நடவடிக்கைச் சான்று நன்கு அறியப்பட்டதாகும்.
அரசின் தாக்குதல்கள் மற்றும் சிங்கள பேரினவாத வன்முறையை எதிர்கொண்ட
வகையில், பிற்போக்கு சிங்கள உயரடுக்கு மேலாதிக்கம் செய்யும் முதலாளித்துவ அரசைத் தூக்கி வீசவும் அனைவரது
ஜனநாயக உரிமைகளையும் அடிப்படை சமூகத் தேவைகளையும் உத்தரவாதப்படுத்தும் ஒரு சிறீலங்கா, ஈழம் ஐக்கிய
சோசலிச அரசுகளை நிறுவுவதற்கும், தொழிலாள வர்க்கம், விவசாயிகள், சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும்
முஸ்லிம்களை ஐக்கியப்படுத்துவதில் முக்கிய முதற்படியாக, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்து இலங்கை
துருப்புக்களும் உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக்
கட்சியானது தொடர்ச்சியாக கோரிவருகிறது.
அரசியல் விமர்சனங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் விடையிறுக்க முடியாததால்
வன்முறையில் இறங்குகிறது; அதன் வலதுசாரி அரசியலுக்கு பெருகி வரும் எதிர்ப்பைக் கண்டும், தமிழ்
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே அதன் ஜனநாயக விரோத வழிமுறைக்கு எதிரான சீற்றத்தைக்
கண்டும் அஞ்சுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடைய அரசியலும் செயற்பாடும் தமிழ் வணிக சமூகத்தினுள் இருக்கும்
உள்ளூர் முகவர்களின் வணிக நலன்களுடன் பெரிதும் பிணைந்துள்ளது என்பதும் கூறப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் பற்றிய அதன் திமிரான
உறுதிப்பாடு, அமெரிக்கா, பிரிட்டன், ஏனைய மேலை நாடுகள், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின்
அரசாங்கங்களுக்கு தமிழ் மக்களைக் "கப்பாற்ற வேண்டும்" என்று பரிதாபமாக மற்றும் கெஞ்சும் வகையில்
வேண்டுகோள்கள் விடுப்பது கோரமாக மாறுபட்ட வகையில் உள்ளது. அதன் சோசலிச எதிர்ப்பாளர்களை தமிழீழ
விடுதலைப் புலிகள் கடுமையாகச் சாடுகிறது; அதே நேரத்தில் சிங்கள முதலாளித்துவம் தமிழ் மக்களுக்கு எதிரான
அதன் இனவாத போருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் ஏகாதிபத்திய அரசுகளின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை
வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியவாத அரசியல் கொள்கைகள் மற்றும் ஜனநாயக
விரோத தந்திரோபாயங்கள் ஆகியவை ஒரே தன்மையில்தான் உள்ளன. வடக்கு - கிழக்கில் ஒரு முதலாளித்துவ
அரசை பிரித்துக் கொள்ள வேண்டும் என்னும் அதன் விழைவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய சக்திகளின்
ஆதரவை இதற்காக நாடும் அதன் மூலோபாயமும், அவர்கள் வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஆயினும் சரி, அல்லது
வன்னியில் நீண்டகாலமாக அது நடத்திவரும் அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாழும் தமிழ் மக்களாயினும் சரி, தமிழீழ
விடுதலைப் புலிகள் எந்த அளவிற்கு தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என்பதை
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோக்கின் திவால்தன்மை மற்றும் தமிழ் மக்களின்
உண்மையான ஜனநாயக, சகோதரத்துவ அபிலாசைகளுடன் அதன் பொருந்தா தன்மையும் முற்றிலுமாக நிரூபணம் ஆகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடைய அதிகாரத்தை மிரட்டுதல், வன்முறை மூலம் தக்க வைத்துக் கொள்ள மூர்க்கத்தனமாய்
முற்படுகிறது. இத்தகைய வழிவகைகள் கட்டாயம் எதிர்க்கப்பட வேண்டும், அவை கண்டனம் செய்யப்பட வேண்டும்.
ஜனநாயக உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று விரும்பும் அனைவரும், தமிழீழ விடுதலைப்
புலிகளை தமிழ் சமுதாயத்திற்குள் நடக்கும் அரசியல் விவாதத்தை அடக்கும் அதன் முயற்சிகளை உடனடியாக நிறுத்த
வேண்டும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை அச்சுறுத்தல், மிரட்டுதல்
போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்றும் கோர வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை எதிர்த்து, அவைகள் உடனடியாக முடிவிற்குக்
கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரும் கடிதங்களை கீழ்க்கண்ட முகவரிகளுக்கு அனுப்பவும்:
Comité de coordination tamoul en France
341, rue des Pyrénées
75020 - Paris, France
Fax : + 33 1 435 8119
ஜிணீனீவீறீ சிஷீஸீயீமீபீமீக்ஷீணீtவீஷீஸீநிமீக்ஷீனீணீஸீஹ்
Postfach 340251
51601 Gummersbach
Germany
British Tamils Forum
165 The Broadway
Wimbledon, London
SW19 1NE
United Kingdom
E-mail: admin@tamilsforum.com
உங்களுடைய கடிதங்களின் நகல்களை உலக சோசலிச வலைத் தளத்திற்கும் தயவு செய்து
அனுப்பி வைக்கவும். |