World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Hillary Clinton reprises "peace process" fraud

ஹில்லாரி கிளின்டன் "சமாதான வழிவகை" மோசடியை மீண்டும் முன்வைக்கிறார்

By Bill Van Auken
3 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெளிநாட்டு அமைச்சர் என்ற முறையில் மத்திய கிழக்கிற்கான முதல் விஜயத்தில், ஹில்லாரி கிளின்டன் புதிய அமெரிக்க நிர்வாகம் "இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வாக இரு நாடுகள் தீர்வு" என்பதை வலியுறுத்த உறுதியாக இருக்கிறது என்று கூறினார்.

ஆனால் பல தசாப்தங்களாக இரு நாட்டு தீர்வு என்ற அமெரிக்க, இஸ்ரேலியக் கொள்கைகள் என்பது பாலஸ்தீனிய மக்களின் ஜனநாயக, சமூக விருப்புகளை தீர்க்காததுடன், மற்றும் இஸ்ரேலுக்குள்ளேயே இருக்கும் யூத உழைக்கும் மக்களுக்கு இறுதியில் பேராபத்தை கொடுக்கும் இஸ்ரேலிய அரசின் முடிவிலா இராணுவாதத்திற்கு முற்றுப்புள்ளியும் வைக்காது என்பதை நன்கு தெளிவாக்கியுள்ளன.

பல தசாப்தங்களாக இருக்கும் ஆழ்ந்த, இழிவுற்ற "சமாதான வழிவகை" மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கிளின்டன் குரலை உயர்த்தியுள்ளார்; எகிப்திய சுற்றுலாத் தலமான Sharm el-Sheikh இல் அழிவிற்குட்பட்டுள்ள காசா பகுதியை மீண்டும் கட்டமைக்க நிதி எழுப்பும் சர்வதேச நன்கொடையாளர்கள் கூட்டத்தின் பின்னணியில் அவர் இதைக் கூறியுள்ளார்.

23 நாட்கள் காசா மீது இஸ்ரேலியரின் இடைவிடாத் தாக்குதலின் இறுதியில், 1,300 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு, பல ஆயிரக்கணக்கானோருக்கு அதிமானவர்கள் காயமுற்று, அரை மில்லியனுக்கும் மேலானவர்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டும் உள்ளனர். மனிதாபிமான வகையில் இது மிகப் பெரிய அழிவு ஆகும்; பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வீடுகளை இழந்த நிலையில், குளிரில் கூடாரங்களில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், போதுமான உணவு இல்லை, குடிநீர், வடிகால் நீர் உள்கட்டமானத் தகர்ப்பினால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அடிப்படைப் பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் விதமாக இஸ்ரேல் காசா பகுதிகள் மீது கடுமையான தடையை தொடர்கின்றது.

அவருடைய பகிரங்க அறிக்கைகளில், கிளின்டன் நம்ப முடியாத அளவிற்கு இஸ்ரேலிய இராணுவம் நிகழ்த்தியுள்ள பேரழிவு பற்றி ஒரு குறிப்பையும் கூறவில்லை; ஒரே ஒரு முறை "காசாவில் நெருக்கடி" என்று மொட்டையாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதே நேரத்தில் அவர் பலமுறையும் காசாவில் இருந்த வந்த ராக்கெட் தாக்குதல்களைக் கண்டித்து, அவை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரவில்லை என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை.

ஜெருசெலம் மற்றும் ரமல்லாவிற்கும் செல்ல இருக்கும் கிளின்டனுடைய மத்திய கிழக்கு பயணத்திற்கு சற்று முன்னதாக, ஐக்கிய நாடுகள் ஆதரவில் நடத்தப்படும் இனவாதத்திற்கு எதிரான மாநாட்டைத் தான் புறக்கணிப்பதாக வாஷிங்டன் அறிவித்துள்ளது. மாநாட்டின் வரைவு ஆவணம் காசா மற்றும் மேற்குக்கரை தொடர்பான பாலஸ்தீன கொள்கையில் இஸ்ரேல் "சர்வதேச மனித உரிமைகளை மீறுகிறது, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், தற்காலத்து நிறவெறிப் பாகுபாட்டு வடிவமைப்பு" என்று விவரித்திருந்தது.

அமைதிக்கு காப்பாளர் என்று கூறிக்கொள்ளும்போது அது முன்பும் இப்பொழுது ஒபாமா நிர்வாகத்தின் கீழும் இக்குற்றங்களுக்கு தவிர்க்க முடியாத பங்காளியாக இருக்கிறது என்பதுதான் வாஷிங்டனுடைய பிரச்சினை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று காசாவில் படுகொலை செய்யப்பட்ட ஆயுதங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

அமெரிக்க Sharm el-Sheikh ல் காசாவின் மறு கட்டமைப்புக்கு உறுதி கொடுத்தள்ள மொத்த பணம் $300 மில்லியன் ஆகும். இவ்விடத்தைத் தாக்குவதற்கு இஸ்ரேல் ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்க கொடுத்த பணத்தின் மதிப்போடு ஒப்பிடும்போது இது அற்பத்தொகை ஆகும். 2002ல் இருந்து வாஷிங்டன் இஸ்ரேலிய நாட்டிற்கு $21 பில்லியனை இராணுவ உதவியாகக் கொடுத்துள்ளது; அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஒரு 10 ஆண்டுகால உடன்படிக்கையில் $30 பில்லியன் கொடுப்பதற்கும் கையெழுத்திட்டுள்ளது.

ஒபாமா நிர்வாகம் இந்த உதவியைத் தொடரும். எகிப்தில் கிளின்டனின் செயற்பாடு தெளிவாக்கியுள்ளதைப் போல், வாஷிங்டன் உத்தரவின் பேரில் நடக்கும் "சமாதான வழிவகை" என்பது கடந்த காலத்தைப் போலவே இஸ்ரேலின் கோரிக்கைகளுக்கு பணிந்து நிற்கும்படி பாலஸ்தீனியர்கள் மீது அமெரிக்க கொடுக்கும் அழுத்தமாக இருக்கும்.

Sharm el-Sheikh ல் கிளின்டன் கூறியுள்ளது போல் இந்த வழிவகைக்கு பாலஸ்தீனியர்கள் "நிராகரித்தல், எதிர்ப்பு" என்ற தொடர்ச்சியான தடைகளை கைவிட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது; அதாவது அவர்கள் இஸ்ரேல் கூறுவதை ஏற்று பணிந்து நிற்க வேண்டும்.

இப்படி அமெரிக்க மத்திய கிழக்கில் இராஜதந்திர முறையில் மீண்டும் மீண்டும் நடந்து கொள்ளுவது ஒன்றை தசாப்தத்திற்குமே மேலாக, ஜனநாயக, குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இரண்டின் கீழும் தொடர்கிறது. வெள்ளை மாளிகையில் ரோஜா மலர் தோட்டத்தில் யாசர் அரபாத் திருமதி கிளின்னுடைய கணவர் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் யிட்ஷாக் ராபின்னுடன் 1993ல் தோன்றியதில் இருந்து 1998 ல் Wye River மாநாடு, 2000 Camp David மாநாடு, 2007 Annapolis மாநாடு ஆகியவை வரை இது தொடர்கிறது.

"இரு நாடுகள் தீர்வு'' என அழைக்கப்படும் ஒரு நிலைமையை இது உருவாக்கியதுடன், இன்று நடைமுறையில் சாத்தியப்பட முடியாதது ஆகும்.

கிளின்டனால் முன்வைக்கப்பட்டு பின்னர் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷால் தொடரப்பட்ட பாலஸ்தீனிய அரசு என்பது, ஜனாதிபதி மஹ்முத் அப்பாசின் பாலஸ்தீனிய அதிகாரத்துவத்தின் கோரமான வடிவமைப்பு முறையைத்தான் கண்டிருக்கிறது; இது ஊழல் மற்றும் இயலமையின் மொத்த உருவமாக உள்ளது. அதனது ஆளும் உரிமை மேலைக்கரையில் பரந்துகிடக்கும் பாலஸ்தீன சிதைந்த சிறுநகரங்கள் மீது மட்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரங்கள் இஸ்ரேலிய குடியிருப்புக்களும் இராணுவப் பிரதேசங்களால் ஒன்றிலிருந்து மற்றையது துண்டிக்கப்பட்டுள்ளன. காசா பகுதியில் இருந்து இது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலிய முற்றுகைக்கு உட்பட்ட அப்பகுதிகள் இஸ்லாமிய ஹமாஸ் இயக்கத்தின் ஆட்சியில் உள்ளன.

பாலஸ்தீனியர்கள் தொடர்பான அமெரிக்கக் கொள்கை அடிப்படையில் அப்பாஸ் ஆட்சிக்கு உறுதி கொடுத்தல், அதன் படைகளை அப்பகுதியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு பாதுகாப்பு சக்தியாக இருந்து ஹமாஸை அடக்கப் பயன்படுதும் முயற்சியாக உள்ளது. திங்களன்று நன்கொடையாளர்கள் மாநாட்டில் கிளின்டனும் மற்ற அமெரிக்க அதிகாரிகளும் இரும்புப்பிடி போன்ற உத்தரவாதங்களில் வலியுறுத்தியது என்னவெனில் அமெரிக்க நிதியில் இருந்து ஒரு சென்ட் கூட காசாவில் இருக்கும் ஹமாஸ் நிர்வாகத்திற்கு செல்லக்கூடாது. அத்தகைய நிபந்தனை மறுகட்டமைப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

கிளின்டன் பயணத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், இஸ்ரேலிய சமாதானம் இப்பொழுது இயக்கம் (Israeli Peace Now Movement) இஸ்ரேலிய அரசாங்கம் குறைந்தது 70,000 புதிய வீடுகளை மேலைக்கரையில் யூதக் குடியேறுபவர்களுக்காக கட்டும் திட்டத்தைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியது. இது ஆக்கிரமிப்புப் பகுதியில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக ஆக்கும் சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது. இந்த மக்கள் தொகை ஏற்கனவே ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது நான்கு மடங்கு அதிகம் ஆகும். இதன் தொடர்ச்சியான விரிவாக்கம் மற்றும் இஸ்ரேலிய இராணுவப்பிரிவு, பாதுகாப்புசாலை வலைப்பின்னல் உள்ளடங்கலாக மேற்குக்கரையில் 40 சதவிகித நிலப்பகுதியை எடுத்துக் கொண்டு விடுகின்றன.

பாலஸ்தீனிய நாடு என்பது புவியியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் முற்றிலும் இஸ்ரேலைத்தான் நம்பியிருக்க வேண்டும். அதன்மூலம் அமெரிக்காவைத்தான் நம்பியிருக்க வேண்டும். அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய அதிகாரம் பாலஸ்தீனிய மக்களை கண்காணிப்பதையும் மக்கள் எதிர்ப்பை அடக்கவும்தான் பயன்படுத்தப்படும்.

கிளின்டன் கொண்டுவர முற்படும் கொள்கை புஷ் நிர்வாகம் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்திருந்த கொள்கையின் அடிப்படைத் தொடர்ச்சியைத்தான் காட்டுகிறது. இதன் நோக்கம் மத்திய கிழக்கில் "சமாதானம்" அல்ல; மாறாக இப்பகுதியின்மீதும் இதன் பரந்த எண்ணெய் இருப்புக்களின்மீதும் அமெரிக்க மேலாதிக்கத்தை வளர்ப்பதும்தான்.

60 ஆண்டு கால இஸ்ரேலிய பாலஸ்தீனிய மோதலுக்கு உண்மையான தீர்வு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலமோ அப்பகுதியை இரு பிரிவுகளாக மத, இன வழியில் நாடுகளாகத் துண்டாடுவதின் மூலமோ ஏற்படாது. அதற்கு அரபு மற்றும் யூத தொழிலாளர் மக்கள் ஒரு மதசார்பற்ற, சர்வதேச, சோசலிச முன்னோக்கை ஜியோனிசம், ஏகாதிபத்தியம் மற்றும் அரபு நாடுகளின் ஆளும் உயரடுக்குகளுக்கு எதிராக மத்திய கிழக்கில் ஒரு சோசலிசக் கூட்டமைப்பைக் கட்டமைக்கும் ஒரு பொதுப் போராட்டம் தேவையாகும்.