World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Origins and consequences of the 1989 Tiananmen Square massacre

1989 தியனன்மென் சதுக்க படுகொலைகளின் தோற்றங்களும் விளைவுகளும்

பகுதி 3

By John Chan
6 June 2009

Back to screen version

ஒரு மூன்று பகுதிக் கட்டுரையில் இறுதிப் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ஜூன் 18இலும், இரண்டாம் பகுதி ஜூன் 24 இலும் பிரசுரிக்கப்பட்டன.

ஜூன் 3, 1989 ஐ ஒட்டி, ஸ்ராலினிச ஆட்சிக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையே மோதலுக்கான அரங்கு அமைந்தது. மாநிலங்களில் இருந்து நடவடிக்கைக்கு தயாராக கொண்டுவரப்பட்டிருந்த மக்கள் விடுதலை இராணுவத்தை தியனன்மென் சதுக்கத்தை ஆக்கிரமித்திருக்கும் எதிர்பாளர்களை எவ்விதத்திலும் அகற்றிவிடுமாறு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) உத்தரவிட்டது. தொடர்ச்சியான பல இரத்தம் சிந்திய மோதல்கள் தொடர்ந்தன. நிராயுதபாணிகளான தொழிலாளர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் நகர மையத்தின் முக்கிய சாலைகளில் தானியங்கி துப்பாக்கிகளுடன் ஆயுதம்தரித்து, டாங்கிகளின் ஆதரவுடன் இருந்த படையினரிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள தடுப்புக்களை நிறுவினர்.

மக்கள் விடுதலை இராணுவத்தின் தாக்குதல் உத்தியோகபூர்வ ஆவணமாக உள்ளது. இராணுவச் சட்டக் கட்டுப்பாடுக்குழு கொடுத்துள்ள அறிக்கை ஜூன் 3, 1989 மாலையில் பெய்ஜிங்கில் உள்ள Muxidi பகுதியில் பெரும் இரத்தம் சிந்திய காட்சிகளில் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

"இரவு 9.30 க்கு இத்துருப்புக்கள் கிழக்கே சதுக்கத்தை நோக்கி முன்னேறத் தலைப்பட்டு Gongzhufen என்னுமிடத்தில் முதல் தடையை எதிர்கொண்டனர். அங்கு மாணவர்களும் குடிமக்களும் தடுப்பு ஒன்றை அமைத்திருந்தனர். கலக எதிர்ப்பு பிரிவுப்படை கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களால் மக்களை நோக்கி சுட்டனர். முதலில் மக்கள் பின்வாங்கினர். ஆனால் அதன் பின் அவர்கள் கலையவில்லை. கலக எதிர்ப்பு பிரிவு முன்னேறத் தொடங்கி இன்னும் அதிகமாக கண்ணீர்ப்புகை குண்டுகளாலும் ரப்பர் தோட்டாக்களாலும் சுட்டது. மீண்டும் கூட்டம் சற்று பின்வாங்கினாலும் உடனே நின்றுவிட்டது. துருப்புக்கள் எச்சரிக்கை குண்டுகளை வானை நோக்கி தொடர்ந்து சுட்டன. ஆனால் மக்கள் பய உணர்வு எதையும் காட்டவில்லை. Gongzhufen ல் இருந்து Beifengwo தெருவில் உள்ள இராணுவ அருங்காட்சியகம் மற்றும் Muxidi வரையில் உள்ள தூரம் இரு கிலோமீட்டர்களுக்கு குறைவு ஆகும். ஆனால் மக்களின் குறுக்கீட்டினால் துருப்புக்களால் விரைவாக முன்னேற முடியவில்லை.....

"துருப்புக்கள் உயிரைப் பறிக்கும் வெடிமருந்துகளை பயன்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் குடிமக்கள் அதிகரித்தளவில் தைரியமுற்றனர். இரவு 10.10க்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் Beifengwo தெருவில் மனிதச் சுவர் போல் நின்று துருப்புக்களை தடுத்தனர். இரு திறத்தாரும் ஒருவரை ஒருவர் இருபது அல்லது முப்பது மீட்டர் தூரத்தில் எதிர்கொண்டனர். குடிமக்கள் சிலர் தொடர்ந்து கற்களையும் மற்ற பொருட்களையும் வீசி எறிந்தனர். மின் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அதிகாரி குடிமக்களையும், மாணவர்களையும் படைகள் கடப்பதற்காக அகன்றுவிடுமாறு வலியுறுத்தினார். இந்த நடவடிக்கையும் தோற்றபின், படையினர் இலக்கினை நேரத்தில் அடைவதற்காக பலாத்காரத்தை பயன்படுத்த அவர் முடிவெடுத்தார். தரைப்படையினர் வழியேற்படுத்தும் விதத்தில் வானில் சுட்டனர். இதன் பின்னர் முதல் இரு வரிசைகள் முழங்காலில் நின்றநிலையில் அவர்களுக்கு பின்னால் நின்ற நிலையில் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கூட்டத்தின் மீது இலக்கு வைத்தனர். கிட்டத்தட்ட 10.30 க்கு கல் வீச்சுக்களை எதிர்கொண்ட விதத்தில் துருப்புக்கள் சுடத் தொடங்கின." எதிர்ப்பாளர்கள் உண்மையான வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து விரைவாக Muxidi பாலத்தின் பக்கம் அடுத்த சுற்று தாக்கதலுக்காக பின்வாங்கினர். [13]

அரசாங்கப் பாதுகாப்பை அமைச்சரகத்தின் மற்றொரு அறிக்கை தொடர்கிறது: "Muxidi பாலத்தில் துருப்புக்கள் மீண்டும் அவை புறப்படத் தயாராக இருந்தபோது குடிமக்களும் மாணவர்களும் கற்களை வீசியபோது நின்றுவிட்டன. துருப்புக்களின் ஒரு சில டஜன் கைத்தடி ஏந்திய கலக எதிர்ப்புப் பிரிவினர், பாலத்தின் மீது சூறாவளியெனப் புகுந்தனர். அங்கு மழைபோல் கற்களை எதிர்கொண்டனர். இந்தப்பிரிவு பின்வாங்க நேர்ந்தது. அதன் பின் வரிசை வரிசையாக வழமையான துருப்புக்கள் பாலத்தை நோக்கிப் பாய்ந்து வந்து....தங்கள் ஆயுதங்களை மக்கள் பால் இயக்கத் தலைப்பட்டன. ஆகாயத்தை நோக்கிச் சுடுவதும் மக்களை நோக்கிச் சுடுவதுமாக மாறி மாறி துருப்புக்கள் சுட்டன. மக்கள் தரையில் சரிந்தனர். குண்டுவெடிப்புச் சத்தம் வரும்போதெல்லாம், மக்கள் கீழே சரிந்தது, துப்பாக்கிச் சத்தம் கேட்காதபோது எழுந்து நின்றனர். துருப்புக்களால் மெதுவாக விரட்டியடிக்கப்பட்டாலும் இடத்தை விட்டு அசையாமல் அவ்வப்பொழுது "பாசிஸ்ட்டுகள்", "குண்டர்களின் அரசாங்கம்" "கொலைகாரர்கள" என்று கூவினர். [14]

பாலத்தைக் கடந்த பின், துருப்புக்கள் தொடர்ந்து எதிர்ப்பை எதிர்கொண்டனர். "படையினர் மின்சார பஸ்கள் மற்றும் பிற சாலை தடுப்புக்களை அகற்றினர், பின்னர் எதிர்ப்பாளர்களை நோக்கி ஆயுதங்களை மீண்டும் திருப்பினர். சில படையினர் கற்களால் அடிக்கப்பட்டபோது சுய கட்டுப்பாட்டை இழந்து எவர் "பாசிஸ்ட்டுக்கள்" என்று கூவினாலும், கற்களை எறிந்தாலும், அவர்களைப் பார்த்துச் சுட்டனர். குறைந்தது நூறு குடிமக்களும் மாணவர்களும் நிலத்தில் குருதி வெள்ளத்தில் விழுந்தனர். அவர்களில் பலரும் அருகில் இருந்த Fuxing மருத்துவமனைக்கு மற்ற மாணவர்கள், குடிமக்களால் எடுத்துச் செல்லப்பட்டனர்.

"தலைக்கு மேலே ஹெலிகாப்டர்களின் ஓசையும் மற்றும் துப்பாக்கிச்சூடும் Fuxingmenwei Boulevard ல் வசித்த மக்களை தங்கள் ஜன்னல்கள் அருகே கொண்டு வந்தன. அவர்கள் படையினரை சபித்து கிடைத்த பொருட்களை அவர்கள்மீது எறிந்தனர். துருப்புக்கள் பதிலக்குச் சுட்டன. கட்டிடங்கள் மீது தோட்டாக்கள் ஏவப்பட்டன. Muxidi மற்றும் அனைத்துச் சீன தொழிற்சங்கக் கூட்டமைப்பு தலைமையகத்திற்கும் இடையே இருந்த 500 மீட்டர்களிலும் இவ்வித தோட்டாச் சத்தங்கள் எதிரொலித்தபடி இருந்தது. "[15]

தரைப்படை சாலைத்தடுப்புக்களை அகற்றியபின், இராணுவ வாகனங்களும் கவச வண்டிகளும் அதிக துருப்புகளுடன் தியனன்மென் சதுக்கத்தை நோக்கி நகர்ந்தன. புதிய சாலைத் தடுப்புக்களை நிறுவ முற்பட்ட எதிர்ப்பாளர்கள்மீது துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தின. "பாலத்தின் இறுதியில், நிலத்தடி இரயில் நிலயத்திற்கு அருகே 12 சதைப் பிண்டங்கள், இரத்தம் மற்றும் எச்சசொச்சங்கள் நிறைந்திருந்தன. இறந்தவர்கள், காயமுற்றவர்களின் உடல்கள் புக்சிங் மருத்துவமனைக்கு தொடர்ந்து கொண்டுவரப்பட்டன. ... கிட்டத்தட்ட மருத்துவமனையில் ஒவ்வொருவரும் "பாசிஸ்டுக்கள்!", "மிருகங்கள்", "இரத்தம்சிந்தும் படுகொலைகள்" என்று சபித்துக் கொண்டிருந்தனர்." [16]

இறுதியில் ஜூன் 4ம் தேதி காலை 5.40 க்குள் இராணுவம் தியனன்மென் சதுக்கத்தில் இருந்து அனைவரையும், பல்லாயிரக்கணக்கான தடுக்கும் எதிர்ப்பாளர்களையும் அகற்றியது. ஒரு சிறப்புப் படை பிரிவு தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பை இலக்கு வைத்து அங்கிருந்த 20-30 பேரைக் கொன்றது. இதன் பின் டாங்குஙகள் வேகமாக தப்பிக்க முடியாத எதிர்ப்பாளர்கள் மீது ஏற்றப்பட்டு அவர்களை நசுக்கிக் கொன்றன.

இரத்தம் சிந்தி அடக்கப்பட்டதில் சீற்றம் கொண்ட தொழிலாளர்களும் மாணவர்களும் 63 நகரங்களில் தன்னியல்பான ஆர்ப்பாட்டங்களுடன் பதிலளித்தனர். அடுத்த ஐந்து நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் 181 நகரங்களுக்கு பரவின. தொழிலாளர்ககள் இராணுவத் தாக்குதலை எதிர்பார்த்து சாலைத் தடுப்புக்களை அமைத்தனர். ஜூன் 5ம் தேதி ஷங்காயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது; 1200 பஸ்கள் மற்றும் வாகனங்கள் 122 முக்கிய சாலைச் சந்திப்புக்களில் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. "புறநகர்ப்பகுதிகளில் மூன்றில் ஒரு பங்குத் தொழிலாளர்கள்தான் வேலைக்கு வந்தனர். இரயில் நடடிக்கைகள் ஐந்து தடுப்பிற்குட்டபட்ட பகுதிகளில் நின்றுபோயின." என்று ஷங்காய் அரசாங்கம் பெய்ஜிங்கிற்கு அனுப்பிய குறிப்பு ஒன்றில் கூறியது. நகரத்திற்குள் இராணுவம் அனுமதிக்கப்பட மாட்டாது என்று பகிரங்கமாக உறுதியளித்த விதத்தில் தொழிலாளர்களை ஷங்காய் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். [17]

அதன் பின்னர் நடந்தவை

நிலைமையின் அழுத்தம் அரசாங்கத்தை ஆரம்பத்தில் குடிமக்கள் கொல்லப்படவில்லை என்று கூறவைத்தது. உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை இன்னும் 241 என்றுதான் உள்ளது. இதில் படையினரும் அடங்குவர். ஆனால் இந்த எண்ணிக்கை நம்பகத்தன்மை உடையது அல்ல. சுயாதீனப் பகுப்பாய்வாளர்கள் குறைந்தது 7,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பீடு செய்துள்ளனர். உண்மை எண்ணிக்கை ஒருபோதும் தெரியப்போவது இல்லை. படுகொலையை தொடர்ந்து குறிப்பாக தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய தலைவர்களுக்கும் எதிராக நாடு முழுவதும் தேடுதல்கள் நடந்தன. 40,000 என்று மதிப்பிடப்பட்ட நடவடிக்கையாளர்கள் ஜூன், ஜூலையில் மட்டும் கைது செய்யப்பட்டனர். டஜன் கணக்கானவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இன்றும் சிலர் சிறையில் உள்ளனர்.

இத்தோல்வி சீனாவிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு நீண்டகால விளைவுகளை அளித்தது. உலகத்தின் முக்கிய குறைவூதிய தொழிலாளர் அரங்காக சீனா மாற்றப்பட்டது. 1949 புரட்சிக்கு பின்னர் கிடைத்த சமூக நலன்களில் எஞ்சியவையும் பறிக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான அரசாங்க நிறுவனங்கள் விற்கப்பட்டன அல்லது மூடப்பட்டன. பொதுத்துறை வீடுகள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்விக்கான வாய்ப்புக்களுக்கு பதிலாக சந்தை கொள்கையான ''காசு கொடுத்து பயன் பெறுக" என்பது நடைமுறைக்கு வந்தது. இன்று சீனா உலகின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதன் பாதிப்பு சீன எல்லைகளில் இருந்து மிகத் தொலைவிற்கும் சென்றது. சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச தலைமைகளின் சந்தைச் சார்பு செயல்பட்டியலுக்கான தொழிலாள வர்க்க எதிர்ப்பு படுகொலைக்காலத்தில் ஏற்கனவே வளர்ச்சியடைந்து விட்டது. ஜூலை 1989ல் சோவியத் சுரங்கத் தொழிலாளர்கள் வீழ்ச்சியடைந்துவிட்ட வாழ்க்கைத் தரங்கள் பெரஸ்ட்ரொய்கா கொள்கைகளால் ஏற்பட்டது அலையென வேலைநிறுத்த வெடிப்பைத் தூண்டியது. சீனாவின் நிகழ்வுகளில் இருந்து கோர்பஷேவ் முதலாளித்துவ மீட்பு வியத்தகு முறையில் விரைவுபடுத்தப்பட வேண்டும், இல்லாவிடில் சோவியத் அதிகாரத்துவமும் அதன் தொழிலாள வர்க்க எழுச்சியை சந்திக்க நேரிடும் என்ற முடிவிற்கு வந்தார். பின் 1989ல் பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. இது கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. 1991ல் சோவியத் ஒன்றியமே உடைந்து முதலாளித்துவ மறுசீரமைப்பு ஏற்பட்டது.

முன்னேறம் அடைந்த முதலாளித்துவ முறை நாடுகள் அனைத்திலும் 1980களின் தொடக்க ஆண்டுகளில், பிரிட்டனின் மார்கிரெட் தாட்சர் மற்றும் அமெரிக்காவின் ரொனால்ட் றேகன் புகழப்பட்ட தடையற்ற சந்தை செயற்பட்டியல் தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தூண்டியது. ஸ்ராலிசத் தலைமைகள் வெளிப்படையாக "தடையற்ற சந்தை" கொள்கையைத் தழுவியது மேலை அரசாங்கங்களுக்கு அரசியலில் பெரும் ஊக்கத்தை கொடுத்தது. அவை பெருகிய முறையில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டுவந்தன. அனைத்து அரசியல் பிரிவுகளையும் சேர்ந்த முதலாளித்துவ வர்ணனையாளர்கள் சோசலிசத்தின் முடிவு வந்துவிட்டதாகவும் முதலாளித்துவச் சந்தைக்கு மாற்றீடு ஏதும் கிடையாது என்றும் வெற்றிப் பெருமிதத்துடன் அறிவித்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டும்தான் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி வழிவகை மூடப்பட்டிருந்த, தனித்தியங்கிய சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய, சீனப் பொருளாதாரங்களை இல்லாதொழித்ததுடன் தேசிய அடித்தளமுடைய சீர்திருத்தத் திட்டங்களுக்கு முடிவு வரும் என்று கூறி முதலாளித்துவம் வேருன்றியுள்ள தேசிய அரசு அமைப்புமுறை அனைத்திலும் ஆழ்ந்த நெருக்கடி வரும் என்று கூறியது.

தியனன்மென் சதுக்கப் படுகொலைகளுக்கு பின் மேற்கு அரசியல் தலைவர்களும் செய்தி ஊடகமும் முதலைக் கண்ணீரை எதிர்ப்பாளர்களுக்காக சிந்தி பல முறையும் சீன "கம்யூனிஸ்ட்டுகள்" ஜனநாயக இயக்கத்தை அடக்கிவிட்டதாகவும் கூறினர். இவ்விதத்தில் "கம்யூனிச" சீனாவின் குறைவூதிய தொழிலாளர் பிரிவை அதிக இலாபத்திற்கு முக்கிய ஆதாரம் என்று உலக முதலாளித்துவம் தழுவிக்கொண்ட நிலையில் பெய்ஜிங்கில் ஸ்ராலினிச ஆட்சியை சோசலிசம் மற்றும் கம்யூனிசத்துடன் தவறாக அடையாளம் காண்பது நகைப்பிற்கு உரியதாகப் போயிற்று.

உண்மையில், மிகப் பெரிய அமெரிக்க மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் தியனன்மென் சதுக்கத்தில் நடந்த இரத்தம் சிந்தல் பற்றிய தங்கள் களிப்பை மறைக்க முடியவில்லை. இது தங்கள் முதலீட்டை பாதுகாக்க இரக்கமற்ற போலீஸ் அரசாங்க வழிவகைகள் பயன்படுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் என்று அவை உணர்ந்தன. 1990 களில் வெளிநாட்டு மூலதனம் வெள்ளமென, பல பில்லியன்கள் ஆண்டுதோறும் என்று சீனாவிற்குள் வந்து நாட்டை உலகின் முக்கிய குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு உடைய உற்பத்தி மையாமாக மாற்றியது. சீனா, இந்தியா, கிழக்கு ஐரோப்பா, முன்னாள் சோவியத் ஒன்றயம் ஆகியவை திறக்கப்பட்டது உலக தொழிலாளர் தொகுப்பை நான்கு பில்லியன் என்று இருமடங்காக உயர்த்தி உலக ஏகாதிபத்தியத்திற்கு புதிய உபரிமதிப்பிற்கான பாரிய புதிய மூலவளங்களை கொடுத்தது. அதே நேரத்தில் இந்த மிக அதிக குறைவூதிய, கட்டுப்பாடுடன் கூடிய தொழிலாளர் தொகுப்பு பெருநிறுவனங்களுக்கு மேற்கில் இருக்கும் தொழிலாளர்கள் நிலைமையை தாக்குதலுக்கு உட்படுத்த உதவின.

ஆரம்ப அரசியல் உறுதியற்றதன்மை இருந்ததால் ஒரு குறுகிய காலம் 1989க்குப் பின் சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்கள் தேக்கம் அடைந்தன. 1992ல் டெங் உறுதியாகத் தலையிட்டு (சோவியத் ஒன்றிய சரிவிற்கு பின்) வளர்ச்சி பெறும் தெற்கில் உள்ள சிறப்பு பொருளாதார பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தார். இது ஆட்சி முதலாளித்துவத்திற்கு முழு ஆதரவு என்பதைச் சுட்டிக்காட்டியது. பொருளாதாரப் புள்ளி விவரங்களே இதைத் தெளிவாக்குகின்றன. 1992ல் சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 12 சதவிகிதம் அதிகரித்தது. இது 1993ல் 14 சதவிகிதம் உயர்ந்தது, 1994ல் 12 சதவிகிதம் உயர்ந்தது. 1994ல் சீனா அமெரிக்க $34 பில்லியனை நேரடி வெளிநாட்டு முதலீடாக (FDI) பெற்றது. இது 1978 ல் சந்தைச்சீர்திருத்தம் தொடங்கிய முதல் தசாப்தம் முழுவதும் வந்த பணத்தைவிட அதிகமாகும். 1996ல் இருந்து சீனா உலகில் வேறு எந்த வளர்ச்சி பெறும் நாடும் பெறாத அளவிற்கு நேரடி வெளிநாட்டு மூலதனத்தைப் பெற்றது.

2002ல் சீனா உலகின் மிக அதிக அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு பெறும் நாடாயிற்று. வோல் ஸ்ட்ரீட் நிதிய மூலதனத்தின் பெரும் வரத்துக்களை ஈர்க்கத் தொடங்கியபோது அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் இரண்டாம் இடத்திற்கு வந்தது. 1997 ஐ ஒட்டி சீனா உலகின் ஏழாம் பெரிய பொருளாதார நாடாயிற்று. ஒரு தசாப்தத்திற்கு பிறகு அது ஜேர்மனியையும் கடந்து மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரம் ஆயிற்று. இதற்கு முக்கிய காரணம் கடன்களின் உந்துதல் கொண்ட அமெரிக்கா சீன ஏற்றுமதிகளுக்கான தேவையைக் கொண்டிருந்தது. சீனத் தொழிலாள வர்க்கம் இந்த மகத்தான விரிவாக்கத்திற்கு கொடுத்த விலை 1997ல் இருந்து 2007 வரையிலான காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு ஊதியத்தில் 13.7 சதவிகிதம் குறைந்தது என்பதின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அதே காலத்தில் பெருநிறுவன இலாபங்களுக்கு செல்லும் பங்கு 10.1 சதவிகிதம் அதிகரித்தது.

தியனன்மென் சதுக்கப் படுகொலையைப் பற்றிக் குறிப்பிடுகையில் மே 29ம் தேதி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது: "உண்மையில் 1989 தான் சீனா பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு பெரும் பாதையின் துவக்கத்தைக் கண்டதை குறிப்பிடுகிறது. இதன் விளைவுகள் மகத்தானவை. உலகப் பொருளாதாரத்தில் இரண்டாம் தூணாக சீனா உள்ளது. அமெரிக்கா தடுமாறும் நிலையில் பெருகிய முறையில் முக்கியத்துவத்தை பெறும்." செய்தித்தாள் அமெரிக்க, சீன பொருளாதாரங்கள் இப்பொழுது நெருக்கமாகப் பிணைந்துள்ளன என்றும் இது அமெரிக்காவிற்கு அதிக கடனைக் கொடுத்துள்ளது சீனா என்பதில் இருந்து நிரூபணம் ஆகியுள்ளது என்றும் அமெரிக்காவின் பரந்த சந்தைக்கு உற்பத்தி ஏற்றுமதிகளை நம்பியிருக்கும் சீனாவின் நிலைமையில் இருந்தும் நிரூபணம் ஆகியுள்ளது'' என விளக்கியுள்ளது.

சீனாவில் இருந்து மலிவான ஏற்றுமதிகள் உலகப் பணவீக்கத்தை அடக்க உதவி அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பை தொடர்ந்து அதன் குறைந்த வட்டிக் கொள்கையைத் தொடருமாறு செய்தது. அதே நேரத்தில் சீனாவின் மகத்தான வணிக உபரிகள் அமெரிக்க நிதியச் சந்தைகளில் மீண்டும் கொண்டவரப்பட்டன. அதற்குக் காரணம் இருக்கும் டாலர்-யுவான் மாற்று விகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ளுதல் ஆகும். சீனாவிடம் இப்பொழுது $1.5 டிரில்லியன் மதிப்புள்ள அமெரிக்கச் சொத்துக்கள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட $760 பில்லியன் அமெரிக்க கருவூலப் பத்திரங்களிலும் $490 பில்லியன் அரசாங்க ஆதரவு பெற்ற அடைமானக் கடன் கொடுப்போர் பத்திரங்களிலும் உள்ளன. இந்த நிகழ்வுப்போக்குகள் முன்னோடியில்லாத வகையில் வோல் ஸ்ட்ரீட் நிதிய ஊகத்தை விரிவாக்கச் செய்தது. அது 2008ல் வெடித்து 1930களுக்கு பின்னர் மோசமான உலகப் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

இதில் இருந்து தப்பித்துள்ளது என்பதற்கு முற்றிலும் மாறாக, அதன் ஏற்றுமதிகளுக்கான சந்தைகள் வரண்டு போகும்போது இந்த பொருளாரப் பேரலைகளால் சீனா சூழப்பட்டுள்ளது. சீனாவின் பரந்த குறைவூதிய தொழிலாளர் அளிப்பின் "ஆதாயங்கள்" அனைத்தும் திடீரென ஆட்சியாளர்களுக்கு தீய கனா போல் வந்துவிட்டது. 20 மில்லியன் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், பெரும்பாலும் ஏற்றுமதித் தொழில்களில் இருப்பவர்கள், தங்கள் வேலைகளை இழந்து விட்டனர். சில கல்வியாளர்கள் குடிபெயரும் தொழிலாளர்களிடையே வேலை இழப்புக்கள் 2009 இறுதிக்குள் 50 மில்லியனை அடையும் என்று எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு தேறிய ஒரு மில்லியன் கல்லூரிப் பட்டதாரிகள் இன்னமும் வேலை கிடைக்காமல் உள்ளனர். இன்னும் 6 மில்லியன் பட்டதாரிகள் தொழிலாளர் சந்தையில் சேருவர். பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கான தேவை மறைந்து கொண்டிருக்கிறது.

மேலை பெருநிறுவனங்கள் சீனத் தொழிலாளர்களை சுரண்டுவது அவர்கள் நாடுகளில் ஊதியங்களைக் குறைப்பதற்கு மட்டும் இல்லாமல், நிர்வாகத்தையும் அரசாங்கங்களையும் சவாலுக்கு உட்படுத்தும் தங்கள் தொழில்துறை பலத்தினை பயன்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் மற்றும் பிற இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நெருக்கமாக திரண்டிருப்பதையும் முறிப்பதற்குத்தான். ஆனால் அவர்களுடைய செயற்பட்டியல் சீனாவில் மகத்தான தொழிலாள வர்க்கத்தை தோற்றுவித்துள்ளது. கணக்கிலடங்கா ஆலைகளில் இவர்கள் கூடியுள்ளனர். அந்த ஆலைகள் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை உருவாக்கியுளள்ளதுடன், அவை சில நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இப்பொழுது உலகின் மிக அதிக, மிகுந்து திரண்டுள்ள தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளுகிறது; அவற்றின் புறநிலை சமூக வலிமை ஆட்சியின் போலீஸ் அரசாங்கக் கருவியைவிட மிக அதிகம் ஆகும்.

1989 வெடிப்பிற்கு வழிவகுத்த அனைத்து சமூக முரண்பாடுகளும் இன்று மீண்டும் மிக உயர்ந்த அளவில் வெளிப்பட்டுள்ளன. சமூக அளவின் இறுதியில் 400 மில்லியன் தொழிலாளர்கள் வறுமைத் தர ஊதியங்களில் கடின சூழ்நிலையில், நிரந்தர நிதிய பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு உழைக்கின்றனர். இவற்றுடன் உயரும் தனி சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் வீடுகளுக்கான செலவுகளும் சேர்ந்து கொள்ளுகின்றன. கிராமப்புறத்தில், சந்தை உறவுகள் நூறாயிரக்கணக்கான மில்லியன் வறியவர்கள் பிரிவை ஏற்படுத்தியுள்ளன. இவர்களில் பலர் நகரங்களில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனுப்பும் பணத்தை நம்பியுள்ளனர். மறுபுறத்திலோ இணையற்ற செல்வக்கொழிப்பு ஒரு சிறிய உயரடுக்கினால் குவிக்கப்படுகிறது. அது நெருக்கமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டதாகும். உலகில், அமெரிக்காவை தவிர, சீனாவில்தான் மிக அதிக டாலர் பில்லியனர்கள் உள்ளனர். இவர்களில் பலரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது அவர்களுடைய உறவினர்கள் ஆவர்.

உலக முதலாளித்துவம் வரலாற்று நிலைமுறிவில் ஆழ்கையில், சீனாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பு தவிர்க்க முடியாதது ஆகும். பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறை சீனத் தொழிலாளர்களை இதற்கு முன் இல்லாத தன்மையில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஒருங்கிணைத்துள்ளது. பல நேரமும் இவர்கள் அதே அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பிய நாடுகடந்த பெருநிறுவனங்களால் சுரண்டப்படுகின்றனர். அதே நேரத்தில் சீனத் தொழிலாளர்கள் இணையதளம் மற்றும் மின்னியல் தொடர்புகள் என்னும் சக்தி வாய்ந்த புரட்சிகரக் கருவிகளைக் கொண்டுள்ளனர். இவை இவர்களை சர்வதேச வர்க்கச் சகோதர, சகோதரிகளுடன் தொடர்பற்று தனிமைப்படுத்திய ஸ்ராலினிச ஆட்சியின் பல தசாப்தங்கள் நீடித்துவரும் முயற்சிகளை நேரடியாக அகற்றிவிடும்.

ஆனால் இந்தப் புறதுநிலை போக்குகள் சீனத் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள அரசியல் பிரச்சினைகளை தானே தீர்த்துவிட முடியாது. 1989ல் ஏற்பட்ட பெரும் தோல்வி உட்பட இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளை அனைத்தும் நன்கு உய்த்து உணர்ந்த விதத்தில்தான் இயலும். அதைச் செய்வதற்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்(ICFI) சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை பற்றிக் கொண்டு சீனத் தொழிலாள வர்க்கத்தினுள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவை கட்டமைக்கப் போராட வேண்டும்.

முற்றும்.

Notes:

13. The Tiananmen Papers, p.373

14. ibid, p.374

15. ibid, p.374

16. ibid, p.375

17. ibid, p.398


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved