ஐரோப்பா
:
பிரான்ஸ்
France offers the United Arab Emirates nuclear
protection
பிரான்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு அணுவாயுதப் பாதுகாப்பை அளிக்க முன்வருகிறது
By Peter Schwarz
19 June 2009
Use this version
to print | Send
feedback
மே 26ம் தேதியன்று அபு தாபியின் பிரான்ஸ் அதன் இராணுவத் தளத்தை நிறுவிக்
கொண்டது.(See "பாரசீக
வளைகுடாவில் முதல் நிரந்தர இராணுவத் தளத்தை பிரான்ஸ் திறக்கிறது")
இப்பொழுது பிரெஞ்சு நாளேடு
Le Figaro
பாரிஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு (UAE)
அணுவாயுதங்கள் உட்பட "அனைத்தும் கிடைக்கும் இராணுவ நடவடிக்கைகள் மூலமும்" அதை பாதுகாக்க உத்தரவாதம்
அளித்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளது.
ஜூன் 15ம் தேதி கன்சர்வேட்டிவ் ஏடான
Le Figaro
எழுதியது: "பாரிஸுக்கும் அபு தாபிக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் முடிந்த ஒப்பந்தத்தின் இரகசிய
விதிகளின்படி, ஒரு தாக்குதல் ஏற்பட்டால் அதில் இருந்து
UAE ஐப் பாதுகாப்பதற்கு அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும்
தான் எடுக்கும் என்று பிரான்ஸ் உத்தரவாதம் அளித்துள்ளது. அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்பதற்கு பொருள்
அவசியமானால் அணுவாயுதங்களும் பயன்படுத்தப்படும் என்பதாகும்."
Le Figaro வில் வந்துள்ள
தகவல், பெயரிடப்படாத உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தூதர்கள் இந்த ஒப்பந்தத்தின் வாசகம் பற்றி நன்கு அறிந்தவர்கள்
கொடுத்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. "அணுசக்தி" என்னும் சொல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை
என்று செய்தித்தாள் கூறுகிறது; இதற்குக் காரணம் "எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு குறைவாகப் பேசுவதை அடிப்படையாகக்
கொண்ட, தடைசெய்தல் என்ற என்ற தத்துவத்தை மறுத்துப் பேசுவதாகிவிடும்; அது பயன்படுத்துதல் கோட்பாட்டைப்பற்றி
மிகக் குறைவாகக் கூறும் தன்மையை உடையது". ஆனால் இந்த ஒப்பந்தம் வட அட்லான்டிக் ஒப்பந்தத்தின் 5வது
விதியை விட "இன்னும் கடுமையான விதத்தில் இயற்றப்பட்டுள்ளது; அதன்படி நேட்டோ உறுப்பினர்களுக்கு தாக்குதல்
வந்தால் ஒருவருக்கு ஒருவர் இராணுவ ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
அபு தாபியில் எந்த அணுசக்தி ஆயுதங்களும் நேரடியாக இருத்தப்பட மாட்டாது; ஆனால்
பிரான்ஸ் அணுவாயுதங்கள் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டுள்ளது; அவை நிரந்தரமாக ரோந்து
சுற்றிக் கொண்டிருக்கின்றன; இதைத்தவிர விமானத் தளத்தைக் கொண்டுள்ள
Charles de Gaulle
கப்பலையும் கொண்டுள்ளது; அதில் அணுவாயுதங்களை இயக்கக் கூடிய போர் விமானங்கள் வந்து செல்ல முடியும்.
நீர்மூழ்கிக் கப்பல்களும் விமானத்தளம் கொண்ட கப்பல்களும் வளைகுடா பகுதிக்கு எந்த நேரத்திலும் செல்ல
முடியும்.
பிரான்ஸ் ஏற்கனவே 1995ல்
UAE உடன் ஒரு
பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடித்துள்ளது; அதன் பொருளுரை இரகசியமாகவே உள்ளது.
Le Figaro
கருத்தின்படி, பழைய ஒப்பந்தத்தில் இராணுவக் குறுக்கீடு என்பது "தெளிவற்ற, உறுதியற்ற வகையில்" இருந்தது.
புதிய ஒப்பந்தம் மற்றும் ஒரு பிரெஞ்சு இராணுவத் தளம் நிறுவப்பட்டுள்ளதும் நிலைமையை வியத்தகு முறையில்
மாற்றிவிட்டன. இவை கணிசமாக "இருதரப்பு ஒப்பந்தத்தை தானியக்க முறையில் செயல்படுத்தும், ஏனெனில்
ஈரானால் ஏற்படும் தாக்குதல் இப்பொழுது முக்கிய பிரெஞ்சு நலன்களுக்கு எதிரான அத்துமீறல் என்று விளக்கப்பட
முடியும்." இந்த காரணத்தை ஒட்டி, Le Figaro
கருத்தின்படி, ஈரானுடன் மோதல் ஏற்பட்டால் பிரான்ஸ் தன்னை "முன்னணியில்" நிறுத்திக் கொள்ளும்.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் பதவியை பொறுப்பேற்றதில் இருந்து ஜனாதிபதி
நிக்கோலோ சார்க்கோசி பிரான்சின் பாதுகாப்பு கொள்கை பற்றி ஒரு ஒழுங்கு முறையான திருத்தங்களை
செய்துள்ளார்.
ஓராண்டிற்கு முன்பு அவர் பாதுகாப்பு பற்றி ஒரு வெள்ளை அறிக்கை அளித்தார்: அது
நாட்டின் மூலோபாய சார்பு பற்றி மறு வரையறை செய்துள்ளது. வெள்ளை அறிக்கையில் உள்ள புவியியல் பரப்பு
"மத்தியதரைக்கடல் வழியே அரேபிய-பாரசீக வளைகுடா மற்றும் இந்திய பெருங்கடல் வரை அட்லான்டிக்கின்
குறுக்கே ஒரு அச்சை" கொண்டுள்ளது. இந்த அச்சு "பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் மூலோபாய நலன்கள் மிக
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை உள்ளடக்குகிறது" என வெள்ளை அறிக்கை அறிவிக்கிறது.
UAE ஹோர்முஸ்
நீரிணையில் அமைந்துள்ள இந்த அச்சில் மையத் ஸ்தானத்தைக் கொண்டுள்ளது; அந்த நீரிணை மூலம்தான் உலகின்
எண்ணெய் தேவைகளில் 40 சதவிகிதம் அனுப்பி வைக்கப்படுகிறது; மேலும் அது ஈரானுக்கு மிக அருகில் உள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரான்ஸ் நேட்டோ தலைமைக் கட்டுப்பாட்டிற்கு மீண்டும்
திரும்பியது; 1966ம் ஆண்டு ஜனாதிபதி டு கோலின் கீழ் இது அதைவிட்டு நீங்கியிருந்தது. மேல்தோற்றத்தில்
அமெரிக்காவிற்கு அருகே செல்லுதல் போல் தோன்றுவது, உண்மையில் அதற்கு முற்றிலும் மாறாகத் திரும்பியது.
German Foundtion Science and Politics (SWP), " பிரான்சின்
புதிய நேட்டோ பாதை"
என்ற தலைப்பில் மேற்கொண்ட முழு ஆய்வு, "பிரான்சின் அட்லான்டிக் கடந்த கொள்கையில் விசாலமான மாற்றம்
என்ற பேச்சு இருக்க முடியாது" என்று முடிவுரையாக கூறியுள்ளது.
NATO விற்கு
மீண்டும் வந்தவுடன், சார்க்கோசி "பிரான்சிற்கு அட்லான்டிக் ஒப்பந்தத்தில் இன்னும் அதிக செல்வாக்கை
தொடர்வதற்கு பதிலாக, தன் நாட்டின் நடவடிக்கைக்கான சர்வதேச செயல் பரப்பை அதிகரித்திருக்கிறார்."
இரண்டாவதாக, ஐரோப்பிய காப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் இராணுவத் தன்னாட்சி மெதுவாக ஆனால்
தெளிவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தார்; ஏனெனில்
ESDP உடைய
தன்னாட்சி அமெரிக்க எதிர்ப்பில் முன்னேற்றுவிக்கப்பட முடியாது என்று அவர் கருதினார்."
SWP ஆய்வு சுருக்கத்தை
தெரிவிக்கிறது: "இவ்விதத்தில் இந்நாடு அட்லான்டிக் கூட்டுடன் இராணுவ ஒருங்கிணைப்பிற்கு மீண்டும் வந்துள்ளது,
பிரான்சின் சர்வதேச கெளரவத்தை தக்க வைத்துக் கொள்ள வேணடும் மற்றும் கொள்கையை நிர்ணயிக்க வேண்டும்
என்ற பகுத்தறிவார்ந்த கணிப்பை தளமாகக் கொண்டுள்ளது; அதே நேரத்தில்
ESDP வளர்ச்சிக்கும் ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று
உள்ளது."
பிரான்சும் UAE
உம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் இந்தப் பகுப்பாய்வை உறுதிபடுத்துகிறது. இந்த உடன்பாடு இருதரப்பு அளவில்
மற்றும் இரகசிய விதிகளை அடக்கியுள்ளதாய் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கதாய் உள்ளது. கடந்த 50
ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில், இரு பெரிய போர்களை அமெரிக்க நடத்திக்
கொண்டிருக்கும் பகுதியில் --ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும்-- பிரான்ஸ் தன்னுடைய நடவடிக்கைகளை
NATO,
அமெரிக்காவுடன் ஒருங்கிணைத்துக் கொள்ளமால் ஒரு நாட்டிற்கு அணுவாயுதப் பாதுகாப்பைக் கொடுக்க
முன்வந்துள்ளது. இப்பகுதியில் பிரான்ஸ் ஒரு சுயாதீன பங்கை வருங்காலப் போர்களில் கொள்ளும் என்பதற்கு
இதைவிடத் தெளிவாக சார்க்கோசி அடையாளம் காட்டியிருக்க முடியாது.
தன்னுடைய பங்கிற்கு UAE,
பிரான்சுடனான தனது கூட்டை அமெரிக்காமீது அது தற்பொழுது தங்கியிருக்கும் தன்மையை வலுவிழக்கச் செய்யும் வாய்ப்பாக
காண்கிறது. Le Figaro
கூறுகிறது: "அபு தாபியில் ஒரு பிரெஞ்சு தளத்தை நிறுவ நிக்கோலோ சார்க்கோசியை கேட்டுக் கொண்ட
அளவில், அவர்கள் தங்கள் உடன்பாடுகளை பலவித்தில் கொள்ள முற்படுவதுடன் முற்றிலும் அமெரிக்க நண்பர்களையே
நம்பியிருக்க வேண்டிய தேவையில்லை என்பதையும் உறுதிபடுத்துகின்றனர்."
இரகசிய விதிகளை அடக்கியுள்ள இத்தகைய இருதரப்பு உடன்பாடு, உலகை மறுபங்கீடு
செய்வதற்கான போராட்டம் இறுதியில் முதலாவது உலக யுத்தத்திற்கு வழிவகுத்த பொழுதான, கடந்த நூற்றாண்டின்
ஆரம்பத்தில் பெரும் சக்திகளுக்கு இடையே வளர்ச்சியுற்ற மோதல்களைத்தான் நினைவிற்கு கொண்டு வருகிறது. பிரான்ஸ்
ஒரு அணுசக்தியாக வளைகுடா பகுதியில் வெளிப்படுவது இந்த வெடிப்புத் தன்மை மிகுந்த பகுதியில் அழுத்தங்களை
அதிகரிக்கத்தான் செய்யும்; மேலும் பூசல்கள் கட்டுக்கடங்காமல் போனால் அணுவாயுதப் போருக்கு இட்டுச்
செல்லும் ஆபத்தையும் கணிசமாகப் பெருக்கும்.
Le Figaro வில் வந்துள்ள
கட்டுரை பிரான்சில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அனைத்து அரசியல் கட்சிகளும்
--சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட-- பிரான்சின் வெளியுறவுக் கொள்கையில் இருக்கும் ஏகாதிபத்திய
நோக்கங்களுக்கு தயக்கமின்றி ஆதரவைக் கொடுக்கின்றன. இது குறிப்பாக பிரான்சின் அணுவாயுதத் திறனுக்குப்
பொருந்தும்; அதுதான் 1960 களில் ஜனாதிபதி டு கோலால் ஆரம்பிக்கப்பட்டது; அதற்குக் காரணம் அவர் பிரான்சின்
பெரும் சக்தி என்ற அதிகாரத்தை மீட்டு அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலையைக் குறைக்க விரும்பியதுதான்.
புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக்கட்சி
(NPA),
Lutte Ouvrière, உட்பட பல தீவிர குழுக்களும்
அணுவாயுதத் திறன் பற்றி வரும்போது எச்சரிக்கையான வகையில் மெளனத்தை கடைப்பிடிக்கின்றன. வெளியுறவுப்
பிரச்சினைகளை ஒட்டி ஏனைய கட்சிகளில் தங்களுடன் உடன்பாடு செய்துகொள்ளக் கூடியவர்களுடன் உறவை கெடுத்துக்
கொள்ள அவை விரும்பவில்லை. |