World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama's bank regulation plan: A free pass for Wall Street

ஒபாமாவின் வங்கிகள் கட்டுப்பாட்டுத் திட்டம்: வோல் ஸ்ட்ரீட்டிற்கு தடையற்ற அனுமதி

Barry Grey
18 June 2009

Back to screen version

புதனன்று ஜனாதிபதி ஒபாமா "நிதியமுறைக் கட்டுப்பாட்டு முறையில் பெரும் மாற்றத்தை, பெரு மந்த நிலைக்குக்கு பின்னரான சீர்திருத்தங்களுக்கு பின்னர் காணப்படாத அளவில் மாற்றம்" என்று அவர் அழைத்துள்ளதை அறிவித்தார்.

இத்தகைய அலங்காரச் சொற்களுக்குப் பின் இருக்கும் உண்மை வோல் ஸ்ட்ரீட் இதை எதிர்கொண்ட விதத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. பங்குச் சந்தை இதை அதிகம் பொருட்படுத்தவில்லை; Dow, S&P 500 ஆகியவை சற்றே குறைந்தும், நஸ்டக் நிதானமான இலாபத்துடனும் முடிந்தன. ஒபாமா கோடிட்டுக்காட்டிய திட்டங்களில் தற்போதைய நெருக்கடியை ஏற்படுத்திய மோசடி நடைமுறைகள் மீது தீவிர நடவடிக்கை இருக்கும் என்ற கருத்து இருந்திருந்தால், சந்தை மகத்தான விற்பனைகளில் ஈடுபட்டிருக்கும் என்பது பற்றி உறுதியாகக் கூறமுடியும்.

உள்ளிருப்பவர்களுக்கு தாங்கள் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லை என்பது நன்கு தெரியும். ஒபாமா அளித்த திட்டம் அடிப்படையில் வோல் ஸ்ட்ரீட் செல்வாக்கு செலுத்துபவர்களால் மற்றும் தலைமை நிர்வாக நிறைவேற்று அதிகாரிகளால் இயற்றப்பட்டிருக்கக்கூடும்.

புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் திட்டம் இயற்றப்பட்ட வழிவகையை விளக்கியது: "கடந்த இரு வாரங்களில் மட்டும் நிர்வாகம் Goldman Sachs, MetLife, Allstage, JP Morgan Chase, Credit Suisse, Citigroup, Barclays, UBS, Deutsche Bank, Morgan Stanley, Travelers, Prudential, Wells Fargo மற்றும் பிறவற்றிடம் இருந்தும் உயர்மட்ட நிர்வாகிகளிடம் இருந்து கேட்டுள்ளது. நிர்வாக அதிகாரிகள் வாஷிங்டனில் இருக்கும் முக்கிய நிதிய வணிக அமைப்புக்களின் உயர்மட்ட செல்வாக்குத் திரட்டுபவர்களுடனும் ஜனாதிபதியின் திட்டம் பற்றி விவாதித்தனர்.

வங்கியாளர்கள் கலந்து ஆலோசித்த அலுவலர்களே வோல் ஸ்ட்ரீட்டின் உள்ளிருப்பவர்கள் ஆவர்; முன்னாள் Goldman Sachs மற்றும் Bank of Americaவின் நிர்வாகி ரொபேர்ட் ரூபின் உடைய ஆதரவு பெற்ற இருவர்--நிதியமைச்சர் டிமோதி கீத்னர் மற்றும் ஒபாமாவின் தேசியப் பொருளாதார குழுவின் இயகுனர் லோரன்ஸ் சம்மர்ஸ். முந்தையவர் நியூ யோர்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஒபாமாவின் நிதியமைச்சராக வருவதற்கு முன் இருந்தவர்; பிந்தயைவர் பில் கிளின்டன் காலத்தில் நிதி மந்திரியாக இருந்தவர். இவர்கள் பல கட்டுப்பாடுகளை தளர்த்தி பெரும் ஊக வணிகத்திற்கு வசதி செய்து கொடுத்தவர்கள்; அதுதான் 2008ன் பெரிய வீழ்ச்சியில் முடிவுற்றது.

ஒபாமா கோடிட்டுக் காட்டியுள்ள திட்டம், பெடரல் ரிசேர்விற்கு கூடுதலான அதிகாரத்தை பெரிய நிதிய நிறுவனங்களை --வங்கிகள் மற்றும் வங்கியற்ற நிதிய நிறுவனங்களை-- மேற்பார்வையிடுவதற்கு கொடுக்கிறது; அதைத்தவிர கூடுதலான மூலதன இருப்பு, பணமாக மாற்றிக்கொள்ளக்கூடிய தன்மையின் தேவைகள்; சில ஹெட்ஜ் நிதிகள்; பெறுமதி தொடர்பான வர்த்தகத்தின் சில வடிவங்களுக்காக தனியாரால் நடத்தப்படும் தீர்வாகும்; கடன்கொடுப்பவர்கள் வங்கிகளுக்கு விற்கும் கடன்களில் ஒரு பங்கை வைத்திருக்க வேண்டும், இவை பத்திரங்களாக மாற்றப்படலாம் இவை மீதான குறைந்த அரசாங்க கண்காணிப்பு.

இவ்வனைத்து தேவைகளுமே எளிதில் வங்கிகளால் சுற்றிக் கடக்கப்பட்டுவிட முடியும். மேலும் இவற்றைச் செயல்படுத்தும் அரசியல் சக்திகள் அனைத்தும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு முற்றிலும் கட்டுப்பட்டவை ஆகும்.

இருக்கும் ஏராளமான கூட்டாட்சி கட்டுப்பாட்டு அமைப்புக்கள் பெரும்பாலும் தங்கள் பணியை தொடரும். ஒரு புதிய அமைப்பு, Consumer Financial Protection Agency என்பது பற்றி ஒபாமா அதிகம் பேசினார்: அது நுகர்வோரை அடைமானக் கடன் கொடுப்பவர்கள் கடன் அட்டை நிறுவனங்களின் கொள்ளை முறை நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கும் என்று அவர் கூறினார். ஆனால் இந்த அமைப்பிற்கு பல பிற அமைப்புக்களிடையே முன்பு பரந்திருந்த அதிகாரங்களை தவிர, புதிய அதிகாரங்கள் ஏதும் இல்லை.

இத்திட்டத்தின் மையப்பகுதியில் பெடரல் மற்றும் பெடரல் சேமிப்பு காப்பீட்டு நிறுவனங்கள் தோற்றால் பெரும் "முறைக்கு ஆபத்து" என்று இருக்கும் பெரிய வங்கிகள் மற்றும் வங்கியற்ற நிதி நிறுவனங்களை இறுக்கிப்பிடிக்கும் அதிகாரம் கொடுக்கப்படுவதாக இருந்தது. இது தேவை என்று கருதப்பட்டதற்கு காரணம் ஏனைய திட்டங்கள் எதற்கும் வங்கிகள், ஹெட்ஜ் நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள் இன்னும் பிற நிதிய அமைப்புக்கள் ஊக நடவடிக்கைகளில் ஈடுபட்டு பின்னர் மற்றொரு நிதியச் சரிவை கொண்டுவரக்கூடிய நிலைக்கு சவால் விடும் தன்மையை கொண்டிருக்கவில்லை. தற்போதைய நெருக்கடியில் தற்காலிக வழிவகைகள் எடுக்கப்படுவதற்கு பதிலாக அது நிதிய முறைக்கு வரிப்பணத்தில் பிணை எடுப்பதை அமைப்புமுறையாக செய்துவிடுதல் போல் ஆகிவிடும்.

ஜனரஞ்சக சைகைகள் மற்றும் பெயரளவிற்கு வங்கியாளர்களுக்கு உதட்டளவு தாக்குதலுடன் முதலாளித்துவம் மற்றும் தடையற்ற சந்தைக்கு புகழாரமும் என்ற விதத்தில் ஒபாமாவின் உரை வாடிக்கையான செயற்பாடாக இருந்தது.

நெருக்கடிக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தோல்வி ஒரு "கணிசமான அளிப்பு", மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் "தவறான, கூடுதலான நடவடிக்கைகளும்" அத்தன்மையை கொண்டிருந்தன என்றார் அவர். நிதியக் கருவிகள் பெருகிவிட்டது பற்றியும் அவர் குறிப்பிட்டார்; உதாரணம் சொத்து ஆதரவுடைய பத்திரங்கள், "சுலமான பணத்தை" தோற்றுவித்தன, ஆனால் "மணல் மேட்டில் கட்டப்பட்டவை". நிர்வாகிகள் ஊதியங்களும் "பொறுப்பான தன்மைக்குப் பதிலாகப் பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கின்றன."

"முறையில் இருக்கும் முறையான தவறுகள்", "முழு அமைப்பு முறையின் தோல்வி" என்று அவர் கூறியது "சாதாரண அமெரிக்கர்களுடைய வாழ்க்கையில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது; ஓய்வூதியக்காரர்கள் வாழ்க்கையின் சேமிப்பில் அதிகம் இழந்துவிட்டனர்; குடும்பங்கள் வேலை இழப்புக்களால் பேரழிவிற்கு உட்பட்டுள்ளன, சிறு வணிகங்கள் கடைகளை மூட நேர்ந்துள்ளது" என்றார்.

"பல மில்லியன் அமெரிக்கர்கள், கடினமாக உழைத்து பொறுப்பாக நடந்து கொண்டவர்கள், தங்கள் வாழ்வின் கனவுகள் மற்றவர்களின் பொறுப்பற்ற தன்மையினால் அரிப்பிற்கு உட்பட்டதை கண்டனர்; அது, அரசாங்கம் போதுமான மேற்பார்வை இடாததால் ஏற்பட்ட தோல்வி. எமது முழுப் பொருளாதாரமும் அத்தோல்வியினால் கீழறுக்கப்பட்டுவிட்டது" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

மக்களை பெரிதும் பாதித்து இடர்பாடுகளை கொடுத்த, சமூகப் பேரழிவையைம் கொடுத்த ஒரு ஊழல் நிறைந்த பொருளாதார முறை பற்றிய சித்திரத்தை கொடுத்தபின், அவர் கூற வேண்டியதற்கு, முறையை எவ்வாறு தொடரவைப்பது மற்றும் இலாபங்கள் வரத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது பற்றி கருத்துத் தெரிவித்தார்.

தன்னுடைய உரையை முக்கியமாக கேட்கும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு விரைவாக உத்தரவாதம் அளிக்கும் வகையில் கூறினார்: "தடையற்ற சந்தை சக்தியில் எப்பொழுதும் எனக்கு வலுவான நம்பிக்கை உண்டு. அமெரிக்காவின் முன்னேற்றத்தில் அது இயந்திரமாக இருந்தது, இருக்கிறது, தொடர்ந்து இருக்கும். எமது பங்கு செல்வத்தின் மதிப்பைக் குறைவுபடுத்துவதல்ல, அதன் செல்வாக்கை அதிகப்படுத்துவதுதான்."

நாட்டையும் உலகத்தையும் பொருளாதார பேரழிவிற்குத் தள்ளி அதில் இருந்து ஆதாயம் பெற்றவர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து இலாபம் பெறுவர், தங்கள் குற்றங்களுக்குரிய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிய தேவை இல்லை என்பதற்கான அடையாளம் ஆகும் இது. எல்லாம் கூறப்பட்டு, செய்யப்பட்டபின், அவர்கள் முன்பு இருந்ததைவிட அதிக பணம் ஈட்டலாம்.

உண்மையில், நியூ யோர்க் டைம்ஸ் திங்களன்று "In Banks, Return of the Big Bonus" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அது ஆரம்பித்த விதம்: "மிகப் பெரிய அளவிற்கு வங்கியாளருக்கு போனஸ் மீண்டும் கொடுக்கப்படுவதற்கான அரங்கு அமைக்கப்பட்டு விட்டது"; பின் "10 மில்லியனும் அதற்கு அதிகமும் என்றவிதத்தில் போனஸ் தலைப்பு" வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள், வணிகர்களுக்கு இருக்கும் என்றும் எழுதியுள்ளது.

1930களின் கட்டுப்பாட்டு சீர்திதிருத்தங்களுடன் ஒபாமாவின் திட்டத்தை ஒப்புமை காண்பது நகைப்பிற்கிடமானதாகும். ஆழ்ந்த மந்த நிலையின்போது, ரூஸ்வெல்ட் வங்கிகள்மீது கட்டமைக்கப்பட்ட கணிசமான சீர்திருத்தங்களை சுமத்தி அமெரிக்க முதலாளித்துவத்தை சமூகப் புரட்சி என்ற அச்சறுத்தலில் இருந்து காப்பாற்ற வகை செய்தார். இந்தச் சீர்திருத்தங்களில் முக்கிய தன்மை 1933 Glass-Stegall Act ஆகும்; இது வணிக வங்கிகளுக்கும் முதலீட்டு வங்கிகளுக்கும் இடையே ஒரு தடுப்பை ஏற்படுத்தியது.

Glass-Stegall 1999ல் கிளின்டன் நிர்வாகத்தின்போது அகற்றப்பட்டது. வங்கிகளின் கட்டுப்பாட்டு தளர்வில் அது ஒரு மைல் கல்லாகும். அது 1980களில் தொடங்கிய வழிவகைகளின் ஒரு பகுதியாகும்; அமெரிக்க ஆளும் உயரடுக்கு பெருகிய முறையில் நிதிய திரித்தல் முறையைக் கையாண்டு இலாபத்தையும் தனிப்பட்ட செல்வத்தையும் தோற்றுவிக்க முற்பட்டது; அதே நேரத்தில் தொழில்துறையின் பெரும் பிரிவுகளை அகற்றி, தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், ஊதியங்கள் ஆகியவற்றிற்கு எதிராக இடையறா போரைத் தொடக்கியது.

இதன் விளைவு சமூக சமத்துவமின்மையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டு நாட்டின் அரசியல் வாழ்வை ஆதிக்கத்திற்கு உட்படுத்திய நிதிய தன்னலக்குழு வெளிப்பட்டது ஆகும். இரு கட்சிகளுமே வோல் ஸ்ட்ரீட்டின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொண்டன; சமூகச் செல்வம் சூறையாடப்படுவதை தடுக்கும் நடவடிக்கை எதையும் எடுக்க திராணியற்று இருந்தன.

ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியின் கீழ் உள்ள காங்கிரஸும் Glass-Steagall சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கில்லை என்று கூறிவிட்டன. நிர்வாகிகள் ஊதியத்திற்கு உச்ச வரம்பு என்ற கருத்தும் நிராகரிக்கப்பட்டது. அதே போல் கடன் திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டால் காசினோவை மூடவேண்டும் என்ற ஆலோசனையும் மறுக்கப்பட்டுவிட்டது; துணை ஆதரவு கடன் பொறுப்புக்கள், கட்டுமான முதலீட்டுக் கருவிகள் மற்றும் நிதியச் சரிவில் முக்கிய பங்கு வகித்த பிற ஊக வகை செயல்கள் மீது நடவடிக்கையும் இல்லை.

பெரிய வங்கிகளின் அளவு, அதிகாரம் இவற்றை மட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் நெருக்கடியை பயன்படுத்தி வங்கி முறை இன்னும் ஒருங்கிணைவதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது. Bear Stearns, Lehman Brothers, Merrill Lynch, Wachovia, Washington Mutual ஆகியவை மறைந்ததின் விளைவாக --பெரும் வங்கித் தோல்விகள் சில-- நான்கு மிகப் பெரிய அமெரிக்க வங்கிகள் இன்று நாட்டின் வங்கிச் சொத்துக்களில் 70 சதவிகிதத்தின்மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. 2000ம் ஆண்டின் இறுதியில் இது 50 சதவிகிதமாக இருந்தது. இத்தகைய ஒருங்கிணைக்கும் முறை ஒபாமாவின் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் அதிகரிக்கும்.

ஒபாமா திட்டத்தின் அடிப்படைக் கருத்து ஒரு பொய் ஆகும். நெருக்கடி ஒன்றும் அடிப்படையில் வங்கியாளர்கள் மற்றும் அரசாங்கக் கட்டுப்பாட்டு முறையின் தவறுகள், திரித்தல்களின் விளைவு அல்ல, அவையும் நிறைய, அழிவுதரும் வகையில் இருந்த போதிலும் கூட. இது ஒரு அமைப்பு முறையின் தோல்வியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அந்த முறைக்கு பெரும் மரியாதையை ஒபாமா கொடுக்கிறார்; அந்த முறைதான் முதலாளித்துவம்.

நிதிய தன்னலக்குழுவின் முதுகெலும்பை முறித்து பொருளாதார வாழ்வை தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூகத் தேவைகளுக்காக அமைப்பதற்கு --வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதில் ஆரம்பிக்கப்படும், சோசலிச நடவடிக்கைகளுக்கு புறத்தே தீர்வு ஏதும் கிடையாது. அதற்கு ஒபாமா நிர்வாகத்திற்கும் பெரு வணிகத்தின் இரு கட்சிகளுக்கும் எதிரான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தின், சுயாதீனமான இயக்கத்தின் அபிவிருத்தி தேவைப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved