World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காObama: US "meddling" in Iran should not be seen ஒபாமா: ஈரானில் அமெரிக்க நடவடிக்கை "தலையீடு" என கருதப்படக்கூடாது By Bill Van Auken ஜனநாயக வழிமுறைகள் மற்றும் சுதந்திர பேச்சு இவற்றின் "எங்கும் ஏற்கப்படும் மதிப்புக்கள்" பற்றி தன் கடப்பாடு பற்றிய அலங்காரச் சொற்களில், செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா செவ்வாய்க்கிழமை அன்று ஈரான் பற்றி தற்செயலான அறிக்கையைக் கொடுத்தார்: "அமெரிக்க ஈரானிய உறவுகளின் வரலாற்றை எடுத்துக் கொண்டால், இது ஒரு குறுக்கீடு என்று கருதுவது ஆக்கபூர்வமாய் இராது." தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் மீர் ஹொசைன் மெளசவி தலைமையில், கடந்த வெள்ளி நடந்த ஜனாதிபதித் தேர்தலை ஒரு "மோசடி" என்று வெளிப்படையாக கண்டித்த ஈரானிய எதிர்ப்புடன் ஒபாமா நிர்வாகம் சேராமற் போனதிற்கு அறிக்கை ஒரு விளக்கமாக உள்ளது; மேலும் அமெரிக்க குடியரசின் வலதிலிருந்து வரும் குறைகூறலில் இருந்தும் ஒரு பாதுகாப்பாக உள்ளது. ஒபாமா இந்த அறிக்கையை வெளியிடுமுன், 2008 தேர்தலில் அவருடைய குடியரசுக் கட்சி போட்டியாளரான அரிசோனா செனட்டர் ஜோன் மக்கெயின், நிர்வாகத்தின் நிதானப் போக்கைக் கண்டித்து, "இது ஒரு ஊழல் மிகுந்த, குறைபாடான போலித் தேர்தல் என்று ஒபாமா கூறவேண்டும்; ஈரானிய மக்கள் அவர்கள் உரிமைகளை இழந்துவிட்டனர் என்றும் கூறவேண்டும்" என்றார். எவ்வாறாயினும், ஒபாமா சொற்களை தேர்ந்தெடுத்துள்ளது நிறையவே எடுத்துரைக்கிறது. அமெரிக்கா "தலையீடு செய்வதாக காணப்படக்கூடாது" என்பது தலையீடுதானா என்பது முற்றிலும் வேறு விஷயம். "அமெரிக்க-ஈரானிய உறவுகள் வரலாறு" பற்றிய ஜனாதிபதியின் குறிப்பு 1953 ல் சிஐஏ ஆதரவுடன் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைக் குறிக்கிறது; அப்பொழுது நாட்டின் தேசியவாத பிரதம மந்திரி மொகம்மது மொசடெக் அகற்றப்பட்டார்; இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் ஈரானின் எண்ணெய் தொழிலைத் தேசியமயமாக்கும் முயற்சியை ஆரம்பித்தார்; அதுவரை அது பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு 26 ஆண்டுகள் அமெரிக்க ஆதரவைப் பெற்றிருந்த ஷா மற்றும் SAVAK என்னும் அவருடைய மிருகத்தனமான இரகசிய போலீஸ் ஆட்சியையும் பதவியில் இருத்தியது; அவை 1979 ஈரானியப் புரட்சிக்குப் பின்னர்தான் முடிவுற்றன. 1954 ஆகஸ்ட்டில் ஆட்சிமாற்றம் நடந்து கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர், நியூ யோர்க் டைம்ஸ் CIA நடவடிக்கைக்கு பின்னணியில் இருக்கும் உந்துதல்களை தெளிவாக விளக்கி ஒரு தலையங்கம் எழுதியது: "பெரும் வளத்தைக் கொண்ட வளர்ச்சியுறா நாடுகளில் வெறிபிடித்த தேசியவாதத்தால் நாட்டில் எவரேனும் கிறுக்குப்பிடித்து செய்யும் செயல்களுக்கு மிக அதிக விலை கொடுக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு படிப்பினையாகும்." ஏடு மேலும் தலையங்கத்தில் தெரிவித்ததாவது: "ஈரானின் அனுபவம் பிற நாடுகளில் இருக்கும் மோசடெக்குகளை தடுத்துவிடும் என்று எதிர்பார்ப்பது அதிகம்தான்; ஆனால் இந்த அனுபவம் குறைந்த பட்சம் இன்னும் கூடுதல் பொறுப்பு, தொலைநோக்குடைய தலைவர்களை வலுப்படுத்தக்கூடும்." வெளிப்படையாக எழுந்துள்ள வினா இதுதான்: "அமெரிக்க-ஈரானிய உறவுகளில்" அந்த நாட்களில் இருந்து எது அடிப்படையாக மாறிவிட்டது? புஷ்ஷின் கீழ் இருந்ததை போலவே ஒபாமாவின் கீழும் வாஷிங்டன் இரு காலனித்துவ வகைப் போர்களை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதாவது ஈரானின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில்; இவை ஒரு மில்லியன் மக்களுடைய உயிர்களுக்கும் மேலாகக் குடித்து விட்டன. இப்போர்களின் நோக்கம் 1953 ஆட்சி மாற்றத்தின் குறிக்கோளைப் போன்றதுதான்--அதாவது "செல்வ வளங்களை" கட்டுப்படுத்துதல், பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில் இருக்கும் எண்ணெய் வளங்களை எடுத்து அதை அனுப்புவதற்கான குழாய்த் திட்டங்களையும் அமைத்தல் ஆகும். தேர்தல்கள் பின்னர் ஈரானில் அடக்குமுறை பற்றிய கவலைகளை எழுப்பும் அறிக்கைககளின் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் கூடுதலான குற்றங்களை ஈரானிய மக்களுக்கு எதிராகச் செய்வதற்கு தயாராக உள்ளது. வாஷிங்டன், ஈரானிய அரசாங்கத்தின் உறுதியை குலைப்பதில் நேரடிப் பங்கு பெற்றிருப்பதாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை; ஏனெனில் இது அதன் வரலாற்றை ஒட்டி மக்களிடையே பெரும் கிளர்ச்சியைத் தூண்டும். அமெரிக்க நிறுவனங்கள் இரகசியமாக இயங்குகையில், ஒபாமா நிர்வாகம் நேரடிப் பிரச்சார நடவடிக்கைகளை செய்தி ஊடகம் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளை செய்ய விட்டுள்ளது. நியூ யோர்க் டைம்ஸினால் மிக முக்கியமான பங்கு வகிக்கப்பட்டுள்ளது; இதே செய்தித்தாள்தான் ஈராக்கிற்கு எதிரான போருக்கான போலிக் காரணத்திற்காக "பேரழிவு ஆயுதங்கள்" என்ற கற்பனையை உருவாக்குவதில் முக்கியமானதாக இருந்தது. 1953ல் டைம்ஸ் ஈரானில் ஆட்சி மாற்றத்தை தலையங்கத்தின் மூலம் ஒப்புதல் கொடுத்தது மட்டும் இல்லாமல், அதன் நிருபர் Kenneth Love மூலம் அதை ஒழுங்கு செய்தவர்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டது. தற்போதைய நெருக்கடியில் எந்த புறநிலை ரீதியான சான்றும் இல்லாமல், டைம்ஸ் ஈரானிய எதிர்க்கட்சிகளின் கூற்றான, தேர்தல் தில்லுமுல்லுக்கு உட்பட்டது என்றும் 62.6 சதவிகிதம் என்று இப்பொழுது ஜனாதிபதியாக இருக்கும் மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டிற்கு கிடைத்த வெற்றி இயலாதது என்றும், மெளசவிதான் உண்மையாக வெற்றி பெற்றுள்ளது என்பதை உண்மை போல் தகவலாக கொடுத்துள்ளது. நிகழ்வைப்பற்றி இத்தகைய பதிப்புதான் பொதுவாக ஊடகத்தின் மற்ற பகுதிகளாலும் ஒலிக்கப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தித்தின் ஈரானை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு பிரச்சார முகவர்களாக பணியாற்றுபவர்கள் Nation இதழைச் சூழ்ந்துள்ள போலி இடதுகள் ஆவர்; இது ஒபாமா நிர்வாகத்தின்கீழ் டைம்ஸ் போலவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உள் ஏடாக வெளிப்பட்டுள்ளது. புதனன்று அது வெளிநாட்டுக் கொள்கை நிருபர் Robert Dreyfuss எழுதிய கட்டுரையை வெளியிட்டது "நான் பக்க சார்புடையவன், பசுமைப் புரட்சிக்கு ஆதரவு கொடுக்கிறேன்" என்று அவர் மெளசவியின் பின் நிற்கும் சக்திகளை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்பின், இச்சக்திகளை அவர் பொதுநிலை சொற்களில் சித்தரிக்கிறார்: "அஹ்மதிநெஜாட்-எதிர்ப்புக் கூட்டணி ஆழ்ந்து, பரந்து உள்ளது. இதில் கன்சர்வேட்டிவ்கள், இஸ்லாமிய குடியரசை நிறுவிய பழைய காவலர்கள், அஹ்மதிநெஜாட்டை இகழ்வுடன் காண்கிறவர்கள் உள்ளனர்.... மிக அதிக, பெருகிய ஈரானிய மத குருமார்கள், மூத்த அயதுல்லாக்கள், நீண்ட காலமாக அவர்களில் பலர் தலைவர் அயதுல்லா அலி காமனேனியையே (Ayatollah Ali Khamenei) புதுப்பணக்காரர், பதவியைத் திருடியவர் என்று நினைப்பவர்கள்....; கிட்டத்தட்ட ஈரானின் வணிக வர்க்கம் முழுவதும், குறிப்பாக உயர் தொழில்நுட்பம், விமானப்பிரிவு, எண்ணெய், எரிபொருள், கனரகத் தொழில் ஆகியவற்றில் உள்ளவர்கள், அஹ்மதிநெஜாட்டை அவருடைய பேரழிவு தரும் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்கு குறைகூறுபவர்கள் மற்றும் "சீர்திருத்தவாதிகள்" என்று அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி கடாமி, மெளசவி மற்றும் "கற்ற உயரடுக்கு" போன்றவை இதில் அடங்கும். இங்கு விவரிக்கப்படுபவர்கள் ஈரானிய சமூகத்தில் பெரும் செல்வம் படைத்தவர்கள், சலுகைகள் நிறைந்த அடுக்கைச் சேர்ந்தவர்கள்; நாட்டின் ஆளும் அரசியல் நடைமுறையில் இவர்கள் மொத்தமாக நிர்ணயம் செய்யும் தட்டு போன்றவர்கள். இந்த "கூட்டணியில்" குறிப்பிடத்தக்க வகையில் இல்லாதவர்கள், தொழிலாள வர்க்கத்தினர், கிராமப்புற வறியவர்கள் மற்றும் ஈரானிய மக்களின் பெரும்பாலனவர்கள் ஆகியோர் ஆவர். "ஒரு அசைந்துவரும் புரட்சியை" பற்றி பெரும் வர்ணனைகள் செய்தி ஊடகத்தில் வந்தாலும், மெளசவி தொழிலாளர்கள் ஆதரவைப் பெற்றுள்ளார், ஈரானிய சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட அடுக்குகளின் ஆதரவைக் கொண்டுள்ளார் என்று எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அதன் இரகசிய குறுக்கிட்டீன் மூலம், மிக உரத்த குரலில் அதன் முந்தைய "தாராளவாத", "இடது" ஆதரவாளர்களால் கூறப்படும் கருத்தைக் கொண்டு, ஒபாமா நிர்வாகம் எதை ஈரானியத் தேர்தலில் சாதிக்க முயல்கிறது? ஈராக் போல் இங்கு "ஆட்சி மாற்றத்தை" அது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. புஷ் நிர்வாகத்தின் சங்கடத்தால் சில படிப்பினைகள் கற்றுக்கொள்ளப்பட்டுள்ளன; மிக முக்கியமாக அமெரிக்க மேலாதிக்கத்தால் இலக்கு கொள்ளப்படும் ஒரு நாட்டில், இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளை அகற்றுதல் என்பது பெரிய தவறு என்பது ஒன்றாகும். இப்படைகளைத்தான் ஏகாதிபத்தியம் நம்பி தன் கொள்கைகளை செயல்படுத்த முடியும்; அவைதான் பெரும்பாலான மக்கள்மீது தீவிர அடக்குமுறையை கையாளவும் வெகுஜன, உண்மையான புரட்சி இயக்கத்தை ஒடுக்கவும் உதவும். வாஷிங்டனுக்கு வேண்டியது ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளில் ஒரு மாற்றம்; அது அமெரிக்க புவி-மூலோபாய நலன்கள் ஈரானிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருப்பதற்கு சாதகமாக இருக்கும். மெளசவி மற்றும் அவரை ஆதரிப்பவர்களிடம் ஒபாமா நிர்வாகம் தெஹ்ரான் இன்னும் வெளிப்படையான ஒத்துழைப்பை அதன் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களில் கொடுக்கும் சாத்தியத்தை காண்கின்றனர்; அதே நேரத்தில் அவர்கள் "தடையற்ற சந்தை" பொருளாரக் கொள்கைக்கு ஆதரவு கொடுப்பர்; அது நாட்டை, அமெரிக்காவை தளமாக கொண்ட எண்ணெய் பெருநிறுவனங்கள் மற்றும் பிற நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள் சுரண்டுவதற்கு திறந்துவிடும். தோற்றப்பாட்டில் வாஷிங்டன் எச்சரிக்கையுடன் இருப்பதற்குக் காரணம் அமெரிக்க ஈரானிய உறவுகளின் வரலாறு மட்டும் அல்ல; ஈரானின் ஆளும் வட்டங்களுக்குள் இருக்கும் பிளவுகள், தெருக்களுக்கு வரும் கூட்டங்கள் ஆகியவை கட்டுப்பாட்டை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்ற அச்சமும்தான். எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, தெஹ்ரான் மற்றும் பிற இடங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வசதி உடைய, கல்வி கற்ற ஈரானிய சமூகப் பிரிவுகளின் ஆதிக்கத்தில் இருந்தன. ஆனால் பரந்த சமூக சக்திகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினால், மெளசவி, அவருடைய பில்லியனர் ஆதரவாளர் அயதுல்லா அலி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சனி (Ayatollah Ali Akbar Hashemi Rafsanjani) இன்னும் ஆளும் நடைமுறையில் இருக்கும் பலர் கட்டுப்பாட்டை இழந்தால், அமெரிக்கா ஒரு புதிய ஈரானியப் புரட்சியை எதிர்கொள்ள நேரிடும். இன்னும் கூடுதலாக அடிப்படையான போராட்டத்திற்குத்தான் ஈரானிய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அவசியம் தயாரிப்பு செய்ய வேண்டும். தற்போதைய அரசியல் மோதல் ஒரு குறுகிய ஈரானிய ஆட்சி உயரடுக்கிற்குள் நடக்கிறது; இவர்களுடைய நலன்களும் ஆர்வங்களும் முற்றிலும் ஈரானிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிரிடையானவை ஆகும். அடக்குமுறை வலதுசாரி வாய்ச்சவடால் அஹ்மதிநெஜாட்டோ அல்லது மெளசவிவியை சுற்றி உள்ள வசதியுடன் இருக்கும் "சீர்திருத்தவாதிகளோ" தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கிய பாதையை அமைக்கப் போராட மாட்டார்கள். அஹ்மதிநெஜாட்டின் சமூக, அரசியல் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் போராட முற்படும் மாணவர்களும் மக்களின் ஏனைய பிரிவுகளும் மெளசவியின்மீது நம்பிக்கை வைக்கக்கூடாது; ஏனெனில் அவரே 1980 கள் முழுவதும் பிரதம மந்திரியாக இருந்தபோது காட்டுமிராண்டித்தன அடக்குமுறைக்குப் பொறுப்பு ஆவார்; அதே போல் ரப்சஞ்சானியின் மீதும் நம்பிக்கை கூடாது; அவருடைய பெயர் செல்வம், சலுகைகள், ஊழல்கள் இவற்றுடன் இணைந்ததாகும். 1953 மற்றும் 1979ம் ஆண்டுகளில் ஈரானிய தொழிலாள வர்க்கம் பட்ட பெரும் துன்பங்களின் படிப்பினைகளை கற்பது மிகவும் முக்கியமாகும். அப்பொழுதுதான் மீண்டும் அவை நேராது. 1940களின் கடைசி, 1950களின் ஆரம்ப ஆண்டுகளில் ஈரானிய தொழிலாளர்களின் போராட்டங்கள் நாட்டின் அரசியல் வாழ்வில் ஆதிக்கம் கொண்டிருந்தன. 1978, 1979ல் ஈரானிய தொழிலாளர்களின் போராட்டங்கள், மிக முக்கியமாக எண்ணெய் தொழிலாளர்களின் போராட்டங்கள், நாட்டின் முக்கிய பொருளாதாரப் பிரிவை முடக்கியது, வெறுப்பிற்குட்பட்டிருந்த ஷாவின் ஆட்சியை வீழ்த்துவதற்கு உறுதியான சக்தியாக இருந்தது. ஆனால் இரு காலங்களிலும் ஸ்ராலினிச டுடே கட்சி (Tudeh Party) இப்போராட்டங்களை முதலாளித்துவ பிரிவுகளுக்கு தாழ்த்தும் வகையில் செயல்பட்டது. முதலில் அது கம்யூனிச எதிர்ப்பு தேசியவாத அரசியல்வாதி மொசடெக்கிற்கு அடிபணியச்செய்தது. இவர் CIA யினால் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதற்கு முன்பு, ஷா திரும்பிவருவதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு இராணுவத்தை அழைத்தார். இரண்டாவதில், அயதுல்லா கோமேனியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பிற்போக்கு மதக் கூறுபாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தியவற்றிற்கு அடிபணியச்செய்தது, இச்சக்திகள் பதவிக்கு வந்தபின்னர் இடதிற்கு எதிராக காட்டுமிராண்டித்தன அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டன. இன்று டுடே கட்சி அதன் முன் நிலையுடன் பார்க்கையில் ஒரு கோதாகத்தான் உள்ளது. ஆனால் அதுவும் அதிலிருந்து பின் வந்த குழுக்களும் அதே பங்கைத்தான் செய்கின்றன; மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரை, அஹ்மதிநெஜாட் ஆட்சிக்கு எதிரான போராட்டம் மெளசவி மற்றும் அவருடைய குழுவிற்கு கொடுக்கப்பட்டுவிடவேண்டும் என்று நம்ப வைக்கும் முயற்சியில் அவை ஈடுபட்டுள்ளன. இந்த முன்னோக்கு புதிய தோல்விகளுக்கும் மற்றொரு சுற்று குருதி சிந்தும் அடக்குமுறைக்கும்தான் வழிவகுக்கும். இங்கு தேவைப்படுவது யாதெனில், ஈரானிய சமூகத்தின் மிக முக்கியமான அடுக்குகளை --ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் தலைமையில் தொழிலாள வர்க்கத்தை-- ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் அணிதிரட்டுவதற்காக ஒரு சுயாதீனமான சோசலிச வேலைத்திட்டத்தை வளர்த்தெடுப்பதாகும். ஈரானிய தொழிலாளர்களின் சுயாதீனமான புரட்சிகர இயக்கம் இயலாது என்று கூறுபவர்கள், ஆளும் நடைமுறையின் ஒரு கன்னையை மற்றொன்றுக்கு எதிராக செயல்பட ஆதரவு கொடுக்க வேண்டும், அதுதான் சரியான "நடைமுறைக்கேற்ற" அணுகுமுறை என்று கூறுபவர்கள், வேண்டுமென்றே ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த புரட்சிகர மரபுகளை புறக்கணிக்கின்றனர். வர்க்கக் கோடுகள் வரையப்பட வேண்டும். வேலை, வாழ்கைத் தரங்கள், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் தொழிலாளர்கள் தங்களின் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும், இக்கோரிக்கைகளுக்காக போராட வெகுஜன மன்றங்களை ஒழுங்கமைக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தையும் ஈரானிய முதலாளித்துவத்தையும் தோற்கடிக்க மத்திய கிழக்கின் ஏனைய பகுதிகள் மற்றும் மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சர்வதே அளவில் தொழிலாள வர்க்கத்துடன் தங்கள் போராட்டங்களை கட்டாயம் ஒன்றிணைக்க வேண்டும். இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஈரானியப் பகுதியாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர கட்சியைக் கட்டியமைக்க வேண்டியது அவசியமாகும். |