WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Violence against Indian students in Australia: the
class issues
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான வன்முறை: வர்க்கப் பிரச்சினைகள்
Laura Tiernan
13 June 2009
Use this version
to print | Send
feedback
ஆஸ்திரேலியாவில் கடந்த 12 நாட்களாக நடக்கும் இந்திய மாணவர்களின் எதிர்ப்புக்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சாதாரண மக்களிடையே சீற்றத்தையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ள
வன்முறை, இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுவதன் அடித்தளம் பற்றி வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன. சமூக
சமத்துவமின்மை மற்றும் பல தசாப்தங்கள் நீடிக்கும் தடையற்ற சந்தைக் கொள்கைகளினால் உண்டுபண்ணப்பட்ட அடக்கப்பட்ட
பதட்டங்கள் தீமைபயக்கும் பிற்போக்குத்தன "வெளிநாட்டினர்" என்ற வடிவத்தில் --இம்முறை அது இந்திய மாணவர்கள்மீது--
இனவழி அவதூறு, வன்முறைத் தாக்குதல் என்ற முறையில் வெடித்துள்ளன.
இத்தாக்குதல்கள் கடந்த சில வாரங்களில் தீவிரமாகியுள்ளன. ஒரு அடுக்குமாடி
இல்லம் சிட்னியில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது, கார்கள் எரிக்கப்பட்டுள்ளன மற்றும் மெல்போர்னில் இனவழி
வசவுகளுக்கு இடையே மற்றொரு இளைஞர் ஒரு ஸ்க்ரூடிரவைர் மூலம் மிருகத்தனமாக தாக்கப்பட்டார். மே 31ம்
தேதி இதை எதிர்கொள்ளும் விதத்தில் 4,000 இந்திய மாணவர்கள் மெல்போர்னின் மத்திய வணிகப் பகுதி வழியே
அணிவகுத்து, கூட்டாட்சி, மாநில அரசாங்கங்கள், போலீஸ் ஆகியவை தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை
எடுக்குமாறு கோரினர்.
சேதத்தை சரிப்படுத்த வேண்டும் என்பதுதான் தொழிற்கட்சி அரசாங்கத்தின் முன்முயற்சியாக
இருந்தது. ஜூன் 1ம் தேதி பிரதம மந்திரி கெவின் ரூட் "எங்கள் நாட்டில் இருக்கும் 90,000 மேற்பட்ட இந்திய
மாணவர்கள் எங்கள் உவந்த விருந்தாளிகள் ஆவர்" என்ற உத்தரவாதங்களை கொடுத்தார். கொடுக்கப்படும் ஒரே
"வரவேற்பு" இந்திய மாணவர்களால் ஆண்டுதோறும் கொடுக்கப்படும் பில்லியன் கணக்கான டாலர்களுக்குத்தான்;
இது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்களிடம் இருந்து கிடைக்கும் $15 பில்லியன் டாலர்களில் ஒரு பகுதியாகும்;
ரூட் அரசாங்கம் இதற்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறது.
உண்மையில் தொழிற்கட்சி, லிபரல் வேறுபாடின்றி அடுத்தடுத்து வரும் மாநில,
கூட்டாட்சி அரசாங்கங்கள்தான் போலீஸுடன் சேர்ந்து, ஆஸ்திரேலியாவில் பயிலும் சர்வதேச மாணவர்கள்மீது நடக்கும்
தாக்குதலுக்கு நேரடிப் பொறுப்பு ஆகும்.
FISA எனப்படும் ஆஸ்திரேலியவில்
உள்ள இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் கெளதம் குப்தாவின் கூற்றுப்படி, இந்திய மாணவர்களுக்கு
எதிரான தாக்குதல்கள், பிற குற்றங்கள் கடந்த இரு ஆண்டுகளாக பெருகி வருகின்றன என்றும், போலீஸிடத்தில்
கொடுக்கப்படும் புகார்கள் முறையாகப் புறக்கணிக்கப்படுகின்றன என்றும், மாணவர்களே "மிருதுவான இலக்குகளாக"
இருப்பதுதான் இதற்கு காரணம் என்றும் அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. ஆட்களை அடித்தல், உதைத்தல் இவற்றை
போலீஸ் ஏதும் செய்யாமல் விட்டுவிடுகையில், இந்த மாத மாணவர்கள் எதிர்ப்பிற்கு அத்தகைய இரக்கம் ஏதும்
காட்டப்படவில்லை. போலீஸ் அடக்குமுறை உடனடியாக நடத்தப்பட்டது; கலகப்பிரிவு போலீஸார், மோப்ப நாய்கள்,
குதிரைப் படை போலீஸ் என்று குவிக்கப்பட்டன. கடந்த வாரம் மெல்போர்ன் இரயில்வே நிலையங்களில் மாணவர்களும்
உள்ளூர்வாசிகளும் வீடு திரும்பும் இளம் இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு குழுமியிருக்கையில், போலீசார்
அவர்களை தாக்கினர். இதுதான் அரசாங்கப் "பாதுகாப்பின்" முகம் ஆகும்.
இந்த வாரம் ஹாரிஸ் பார்க்கில் போலீஸ் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி உள்ளூர்
பகுதி கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் ரோபர்ட் ரெட்பெர்ன், இவர் டிசம்பர் 2005 ல்
Cronulla வில்
இழிந்த இனக் கலவரங்கள் ஏற்பட்டபோது அங்கு உள்ளூர் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்பெர்னின் தலைமையின் கீழ் அப்பொழுது இனவெறி பிடித்து குடித்து விட்டுத் தாக்கிய கூட்டம் மத்திய கிழக்கு
இளைஞர்களை தாக்கியபோது போலீசார் பேசாமல் இருந்தனர். பிந்தையவர் அடுத்த நாட்களில் பதிலடி
கொடுத்தபோது, போலீஸ் அடக்குமுறை விரைவில் வந்தது. பாராளுமன்றத்தின் மூலம் மாநில அரசாங்கம் கடுமையான
அதிகாரங்களை போலீஸுக்கு கொடுக்கும் சட்டங்களை இயற்றியது; செய்தி ஊடகம் "லெபனிய தரம் கெட்ட குழுக்கள்தான்"
"பொது ஒழுங்கு, பாதுகாப்பு" ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல் கொடுப்பதாக சித்தரித்தது.
இன்னும் கூடுதலான போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்ற முறையீடுகள் ஆர்ப்பாட்டம்
நடத்தியவர்களால் விடுக்கப்பட்டது; ஆனால் மாணவர்களுக்கு இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும்:
கிரோனுல்லா போல் இத்தகைய கோரிக்கைகள் இன்னும் இரக்கமற்ற "சட்டம், ஒழுங்கு" கொள்கைகள், முழுத்
தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக இலக்கு கொண்டவற்றை நியாயப்படுத்தத்தான் பயன்படுத்தப்படும். மாணவர்களுக்கு
உதவுபவை போலீஸோ, அரசாங்கமோ அல்ல; நாட்டிலும் உலகெங்கிலும் இருக்கும் மாணவர்களும் சர்வதேச
தொழிலாள வர்க்கமும்தான்.
இந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மெல்போர்ன் மத்திய வணிகப் பகுதியில் போலீஸார்
வன்முறையில் தாக்கிய சில மணி நேரங்களுக்குள் ஜூன் 1ம் தேதி ரூட் கூறினார்: "பலதரப்பட்ட பிரிவினர் ஒற்றுமையுணர்வு,
சகிப்புத்தன்மை ஆகியவற்றுடன் வாழும் நாடு ஆஸ்திரேலியா ஆகும்." மாறாக மற்ற முதலாளித்துவ நாடுகளில் இருப்பதைப்
போலவே இங்கும் மகத்தான வர்க்கப் பிளவுகள் உள்ளன, பெருகிக் கொண்டிருக்கின்றன, என்றார் அவர்.
மேற்கு சிட்னியில் ஹாரிஸ் பார்க்கைச் சுற்றியுள்ள புறநகர்களிலும்,
St.Albans
உட்பட மெல்போர்னின் மேற்கு புறநகர்களிலும்,தான் தாக்குதல்கள் அதிகமாகிக கொண்டிருக்கின்றன, மூன்று
தசாப்தங்களாக பொருளாதார மறுசீரைப்பினால் உருவாக்கப்பட்ட சமூக அழுத்தங்கள் முறியும் நிலையில் உள்ளன;
தொழில்கள், வங்கிகள், பல ஆயிரக்கணக்கானவர்களை முன்பு பணியில் அமர்த்தியிருந்த அலுவலங்கள் என பலவும்
1980 மற்றும் 1990 களில் மூடப்பட்டன; இவை முழுக்குடும்மங்களையும் வேலையின்மை, வறுமை ஆகியவற்றில்
தள்ளின; அவர்கள் அதில் இருந்து மீளவில்லை.
இப்பொழுது 1930 களுக்குப் பிறகு மிக மோசமான உலக பொருளாதார மந்த
நிலையில், வேலையின்மை மீண்டும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது; அடுத்து ஆண்டு அளவில் இது ஒரு மில்லியன்
மக்களைப் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 15-19 வயது வரை உள்ளவர்கள்
வேலையின்றி இருப்பது 10 ல் இருந்து 18 சதவிகிதத்திற்கு தேசிய அளவில் உயர்ந்துவிட்டது; சில இடங்களில்
இளைஞர்களிடையே வேலையின்மை என்பது 40 சதவிகிதமாக உள்ளது.
இதற்கு முன் இருந்த ஹோவர்ட் அரசாங்கம் போலவே ரூட் அரசாங்கமும் ஆழ்ந்த
சமூக நெருக்கடியை ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் வாடிக்கையான முறையில் எதிர்கொண்டுள்ளது; அதாவது
பொதுஜன சீற்றத்தையும் எதிர்ப்பையும் பிற்போக்குத்தன தேசிய, இனவெறி அரசியலில் வழிப்படுத்த முற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் குடியேறியவர்கள், புகலிடம் நாடுபவர்கள், "படகில் வருபவர்கள்", முஸ்லிம்கள் மற்றும்
"லெபனிய வீண்கூட்டம்" என்ற அனைத்துமே, மில்லியன் கணக்கான சாதாரண மக்களுக்கு போதுமான வாழ்க்கை
வசதிகளை இலாப அமைப்பு முறை அளிக்கத்தவறியதற்காக பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். .
இந்த வாரம் இந்திய மாணவர்களின் எதிர்ப்புக்கள் தொடர்ந்த போது,
மெல்போர்ன் வானொலியில் ரூட் அறிவித்தார்: "கடந்த தசாப்தத்தில் 20 ஆஸ்திரேலியர்கள் வரை கொலைசெய்யப்பட்டனர்
அல்லது பலவித தாக்குதல்களுக்கு உட்பட்டனர் என்று எனக்கு கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் இந்தியாவில் ஆஸ்திரேலியர்கள்
இலக்கு கொள்ளப்பட்டதால் அல்ல; உலகெங்கிலும் இருக்கும் நகரங்களில் காணப்படும் வன்முறையின் உண்மைதான்
இது."
ரூட் மற்றும் முழு அரசியல் நடைமுறையினரும் ஏன் இத்தக்குல்கள் நடக்கின்றன என்பதை
தடுக்க தீவிரமாக ஆராய்வதை தடுக்கின்றனர். உயர்ந்த அளவு இளைஞர் வேலையின்மை, வறுமை ஆகியவை ஆஸ்திரேலியாவின்
முக்கிய நகரங்களில் இன பதட்டங்களுக்கு எரியூட்டியுள்ளது என்பது வாழ்வின் "தவிர்க்க முடியாத" உண்மை அல்ல.
இந்த நிலைமைகள், தொழிற்கட்சி, லிபரல் வேறுபாடின்றி அடுத்தடுத்து வந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் நிர்வகிக்கப்பட்ட
தடையற்ற சந்தை கொள்கைகளின் உருவாக்கமாகும்; இதைத்தவிர அவற்றை எதிர்த்து போராட முற்போக்கான
சோசலிச மாற்றீட்டைக் கொடுப்பதற்கு தொழிலாள வர்க்கம் அரசியல் அளவில் ஐக்கியப்படாததும் காரணம்
ஆகும். இதுதான் பல இளைஞர்களை இனம், தேசியம் என்ற பிற்போக்குத்தன திசைதிருப்பல்களுக்கு இரையாக்கியுள்ளது.
ரூட், போலீஸ் மற்றும் முதலாளித்துவ செய்தி ஊடகம் ஆஸ்திரேலிய, இந்திய, மத்திய
கிழக்கு இளைஞர்களை இனம், தேசிய வழிகளில் பிரிக்கும் முயற்சிகளுக்கு எதிராக, உண்மையன ஆபத்து பதிலடித்
தாக்குதல்கள் கொடுக்க நேரிடும் என்ற நிலையில், மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறியுள்ள
பிரிவினர் தொழிலாள வர்ககத்திடையே சர்வதேச, சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்குத் துல்லியமாக திரும்ப
வேண்டும். இந்த முன்னோக்கிற்குத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் மாணவர் இயக்கமான
International Students for Social
Equality ம் பாடுபடுகின்றன.
டிசம்பர் 2005ல், கிரோனுல்லா இனக்கலகங்களை அடுத்து, இலங்கை சோசலிச
சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் விஜே டயஸ் இலங்கையின் நீண்ட, சோகம் ததும்பிய இனவெறி அரசியலின்
படிப்பினைகளை ஒட்டி ஆஸ்திரேலேயாவில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார்.
"இதற்கு விடை வகுப்புவாதத்தில் இல்லை; அனைத்துத் தொழிலாளர்களும், மதம்,
தோல் நிறம், மொழி, இனம் ஆகியவற்றில் எப்படி இருந்தாலும் இலாப முறை என்ற ஒரு பொது விரோதியை
சந்திக்கிறோம் என்ற உணர்விலான வர்க்கத் தீர்வில்தான் உள்ளது. தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில்
முன்முயற்சி எடுத்து பெரும்பாலான மக்களின் தேவைகளை வலியுறுத்தும் வகையில் சமூகத்தை சோசலிச வகையில்
கட்டமைக்காவிட்டால், ஆளும் வர்க்கம் தொடர்ந்து சகோதரர்களிடையே பூசலைத்தான் தூண்டிவிடும்: அது
"ஆஸிகள்" "லெப்ஸுகளுக்கு" எதிராக அல்லது சிங்களர்கள் தமிழர்களுக்கு எதிராக என்றாலும். உலகந்தழுவிய
மூலதனத்தை அகற்றி, உலக சோசலிசத்தை கட்டமைத்தல் என்பது ஏற்பட்டால்தான் பூசல்கள் போர் ஆகியவற்றிற்கு
முடிவு கட்டி அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், அனைவருக்கும் கெளரவமாக வாழ்க்கை தரத்திற்கும்
உத்தரவாதம் கொடுக்க முடியும்." |