WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் : உலக பொருளாதாரம்
UN report issues dire forecast for world economy
ஐ.நா. அறிக்கை உலகப் பொருளாதாரம் பற்றி கடுமையாக எச்சரிக்கை கொடுக்கிறது
By Patrick O'Connor
1 June 2009
Use this version to
print | Send
feedback
DESA எனப்படும் ஐக்கிய நாடுகளின்
பொருளாதார, சமூக விவகாரங்கள் பிரிவு "உலகப் பொருளாதார நிலைமையும், வருங்காலமும்" பற்றிய அதன்
அறிக்கையை கடந்த வியாழனன்று நேர்த்தி செய்து இந்த ஆண்டு உலக வளர்ச்சி விகிதம் -2.6 சதவிகிதமாக (எதிர்மறை
2.6)
இருக்கும் என்று கணித்துள்ளது. உலக வணிகம் 11.1 சதவிகிதம் சரியும் என்றும், 1930 களில் இருந்து மிக அதிகம்
என்ற விதத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இச்சமீபத்திய கணிப்புக்கள் ஜனவரி மாதம் ஐ.நா.வின்
கணிப்பான நேரிய 1 சதவிகிதம் 2009க்கு என்பதில் இருந்து தீவிரச் சரிவைக்காட்டுகிறது; அப்பொழுது மிக மோசமான
நிலை என்றுகூட 0.5 சதவிகித வளர்ச்சிதான் எதிர்பார்க்கப்பட்டது.
திருத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் உலகப் பொருளாதார நடவடிக்கையில் சரிவு என்பது
முன்னோடியில்லாத வகையில் வெகு விரைவில் உள்ளது என்பதற்கு மற்றொரு அடையாளம் ஆகும். சமீபத்திய
நம்பிக்கை தரும் அமெரிக்க செய்தி ஊடக தகவல்களான தவிர்க்க முடியாத மீட்பு என்பதை அகற்றிவிட்டு,
DESA
உடைய வளர்ச்சிக் கொள்கை, பகுப்பாய்வுப் பிரிவு ஆகியவற்றின் இயக்குனரான
Rob Vas "இந்த
குளிர்காலத்தை ஒத்த காட்சியில் ஒரு புதிய வசந்தகாலத்தின் அடையாளங்களைக் காட்டும் துவக்கங்கள் பற்றி பசுமையான
காட்சிகள் ஏதும் தெரியவில்லை." என்றார்.
இந்த அறிக்கை 2009 ல் முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்களில் 3.9
சதவிகிதச் சுருக்கம் இருக்கும் என்று கணித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் 3.5 சதவிகிதம் சுருக்கம் அடையும்
என்று கூறப்படுகிறது. "வேலையின்மை தீவிரமாக உயர்ந்து கொண்டிருக்கையில், நிதிய ஆதரவுக் குறைவு தொடர்கையில்,
பொருளாதாரம் நீடித்த தேக்கநிலையில் தள்ளப்படுவதற்கான ஆபத்து பெருகிக் கொண்டிருக்கிறது" என்று ஐ.நா.
எச்சரித்துள்ளது.
வெள்ளியன்று அமெரிக்க வணிகத்துறை வெளியிட்ட தகவல்கள் ஐ.நா.கணிப்பிற்கு கூடுதல்
மதிப்பைக் கொடுக்கின்றன. அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி (GNP)
2009 முதல் காலாண்டில் 5.7 சதவிகிதம் குறைந்தது; முந்தை காலாண்டு குறைவான 6.3 சதவிகிதம் போல்
கடுமை இல்லை என்றாலும், பெரும்பாலான பொருளாதார வல்லுனர்களின் கணிப்பைவிட மோசமானதாகும்.
காலாண்டு பெருநிறுவன இலாபங்கள் சராசரி 3.4 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக வணிகத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதற்கு உந்துதல் கொடுத்தது நிதியப் பிரிவின் இலாபங்கள்; வியத்தகு முறையில் இது 94.9 சதவிகித இலாபத்தை
ஒபாமா நிர்வாகத்தின் பிணை எடுப்பு நடவடிக்கைகளினால் ஏற்பட்டது; நிதியத்துறை அல்லாத பிரிவுகளில்
இலாபங்கள் 8.6 சதவிகிதம் சரிவுற்றன.
மற்றய முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்களில் யூரோப்பகுதி 3.7 சதவிகிதம்
எதிர்மறை வளர்ச்சியை கொள்ளும் என்று ஐ.நா. கணிப்புக்கள் கூறியுள்ளன. ஜப்பான் குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பிற்கு
உட்படும் என்றும் GDP
அங்கு 7.1 சதவிகிதத்தைக் காணும் என்றும் கூறப்பட்டுள்ளது: "உலகத் தேவையில் கடுமையான சரிவு, குறிப்பாக
கார்ப்பிரிவு, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ளது ஜப்பானிய ஏற்றுமதிகளில் சரிவைக்
கொடுத்து பெருநிறுவன இலாபங்களில் தீவிர சரிவை, நிதிய நிலைமைகளில் கடினம், வேலையின்மை உயர்வு, வீட்டுச்
சொத்துக்கள் சரிவு, உள்நாட்டுத் தேவைக்குறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது" என்று அது கூறியுள்ளது.
சீராக்கப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை உலகம் முழுவதும் தொழிலாளர்கள்மீது
சுமத்தப்படும் சமூக வறுமையின் சில கூறுபாடுகளை குறிக்கிறது. தலா நபர் வருமானம் உலகம் முழுவதும் இந்த
ஆண்டு 3.7 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கக் கணிப்புக்கள் சர்வதேச அளவில்
வேலையின்மை 50 மில்லியன் என உயரும் எனக் கூறியது; "ஆனால் நிலைமை தொடர்ந்து சரிந்து வருவதால் இந்த
எண்ணிக்கை எளிதில் இரு மடங்கு ஆகலாம்."
ஐ.நா., 2010க்கான உலக வளர்ச்சி பற்றி 1.6 சதவிகிதம் இருக்கும் என்று
கணித்துள்ளது; "அநேகமாக குறைந்தவிதத்தில்" நம்பகத்தன்மை உடைய 2.3 சதவிகிதம் வரக்கூடும் என்றும்
நம்பிக்கையற்ற முறையில் அது 0.2 சதவிகிதமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அது மேலும்
எச்சரிப்பதாவது: நிதிய உறுதியற்ற தன்மை மற்றும் உண்மைப் பொருளாதாரத்தில் குறைப்பு என்பது போதுமான
முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், தொலைநோக்குடைய, ஒருங்கிணைந்த உலகக் கொள்கை நடவடிக்கைகள்
எடுக்கப்படாவிட்டால் "இன்னும் நீடித்த உலக மந்தநிலை தொடரக்கூடும்."
அறிக்கையின் பெரும்பகுதி வளர்ச்சி பெறும் நாடுகள்மீது பொருளாதார நெருக்கடியின்
பாதிப்பு பற்றி விவரிக்கிறது. இவை GDP
வளர்ச்சி விகிதம் சராசரியாக 1.4 சதவிகிதம் இருக்கும் என்று கணிக்கின்றன. "கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவில்
--இதில் வேகம் குறைந்தாலும், பெருகிவரும் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரங்களும் அடங்கும்-- சராசரி
3.2 சதவிகித வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப் பகுதிகள் அனைத்துமே சுருக்கும் தரும்
நடவடிக்கைகளைத்தான் காணும்; சகாரா துணை ஆபிரிக்க பகுதி 0.1 எதிர்மறை வளர்ச்சி, மேற்கு ஆசியா
எதிர்மறை 0.7 வளர்ச்சி, இலத்தீன் அமெரிக்கா மற்றும் காரிபியன் தீவுகள் 1.9 எதிர்மறை வளர்ச்சி என்று
இருக்கும்.
ஐக்கிய நாடுகள் அறிக்கை, "வறுமைக் குறைப்பு மற்றும் பட்டினிக்கு எதிரான
போராட்டத்தில் கணிசமான குறைப்பை" எதிர்பார்க்கின்றது; இன்னும் கூடுதலான 73 முதல் 103 மில்லியன் மக்கள்
வறியவர்களாவார்கள் அல்லது பொருளாதார நெருக்கடியால் வறிய நிலைக்குத் தள்ளப்படுவர். கிழக்கு மற்றும்
தெற்கு ஆசியாவில் 56-80 மில்லியன் மக்கள் பாதிப்பிற்கு உட்படுவர்; இதில் பாதி இந்தியாவிலும், ஆபிரிக்காவில்
12 முதல் 16 மில்லியனும் மற்றும் ஒரு 4 மில்லியன் இலத்தீன் அமெரிக்கா, காரிபியனிலும் இருப்பர்.
இந்தக் கணிப்புக்கள் நெருக்கடியின் உண்மை வறுமையின்மீதான பாதிப்பை
குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும்; ஏனெனில் நெருக்கடிப் பகிர்வின் விளைவுகள் போதுமான முறையில்
சரிபார்க்கப்படவில்லை." என்று அறிக்கை முடிவுரையாகக் கூறுகிறது. "வேலைகள் ஏணியின் கீழ்ப்படிகளில்
தொழிலாளர்கள் உள்ளனர்; இதில் இளைஞர்கள் மறறும் பெண் தொழிலாளிகளும் அடங்குவர்; இவர்கள் வேலைகளை
இழக்கக்கூடும் அல்லது வருமானக் குறைப்பைக் காணக்கூடும். மேலும் தொழிலாளர்கள் ஏற்கனவே இயக்கம் நிறைந்த
ஏற்றுமதி சார்பு உடைய பிரிவிகளில் இருந்து அகன்று கொண்டிருக்கின்றனர், ஒன்று வேலையின்மையில் உள்ளனர் அல்லது
குறைந்த உற்பத்தித் திறன் நடவடிக்கைகளுக்கு மாறுகின்றனர் (இதில் நகர்ப்புறத்தில் இருந்து கிராமப் புறத்திற்குச்
செல்லுதலும் அடங்கும்.)
முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளுக்கு சென்றுள்ள புலம் பெயர்ந்தோர்
வேலையின்மை, குறைந்த ஊதியங்கள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களிடம் இருந்து பணம் அனுப்புதல்
குறையும் என்பதால் வறிய சமூகங்களும் கஷ்டத்தில் ஆழ்ந்து போகும்
வணிகம் மற்றும் முதலீட்டில் அசாதாரண சரிவின் பாதிப்பு "முன்னேறிவரும்
பொருளாதாரங்களில்" எப்படி இருக்கும்" என்பதையும் ஐ.நா. கோடிட்டுக்காட்டுகிறது. இந்நாடுகளுக்கு நிகர
வெளி தனியார் மூலதன வரத்துக்கள் கடந்த ஆண்டு 50 சதவிகிதம் சரிந்தன, கிட்டத்தட்ட $1 டிரில்லியனில் இருந்து
$500 பில்லியனுக்கு. இது இன்னும் பாதியாக 2009ல் குறைந்து போகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. சரிவில்
தீவிரமான வெளிப்பாடு மூலதன முதலீட்டில் வங்கிக்கு கொடுக்கும் கூறுபாட்டின் சரிவு ஆகும்--அதாவது வங்கிகள்
முன்னேறிவரும் பொருளாதாரங்களுக்கு கொடுப்பது 2007 ன் $400 பில்லியன் நிகரப்பண வரத்தில் இருந்து இந்த
ஆண்டு பணம் வெளியே செல்லும் என்ற விதத்தில் உள்ளது.
நெருக்கடியை அதிகப்படுத்தும் காரணமாக இருப்பது வெளிநாட்டு மூலதனம் திரும்பப்
பெறுவதால் ஏற்படுகிறது; இதற்குக் காரணம் கடனை திருப்புவதில் செலவு அதிகம் ஆவது ஆகும். ஒரு முக்கிய
குறியீடான Emerging Markets Bond Index,
250 ல் இருந்து 800 புள்ளிகள் கடந்த வாரம் ஒரு சில
வாரங்களிலேயே அதிகம் ஆயிற்று; இது பொது மற்றும் தனியார் உள் கட்டுமான திட்டங்களை தள்ளிவைத்துள்ளது.
ஐ.நா. வறிய நாடுகளைப் பாதிக்கும் கொடுக்க வேண்டிய பண பாக்கிகள்
பெருகுவது பற்றியும் உயர்த்திக் காட்டியுள்ளது. மூலதனம் வெளியேறிவிட்டது, பொருட்கள் விலைச் சரிவினால்
ஏற்றுமதி வருமானக் குறைவு, தேசிய நாணயங்களின் மதிப்பைக் காப்பாற்றும் முயற்சிகள் ஆகியவை வெளிநாட்டு நாணய
மாற்று இருப்புக்களில் கணிசமான குறைப்புக்களை ஏற்படுத்திவிட்டன. அறிக்கை குறிப்பிடுகிறது: "கடந்த தசாப்தத்தில்
வெளி நாணய இருப்புக்களின் குவிப்பு வளர்ச்சியுறும் நாடுகளில் "அதிகமாக" இருந்ததாகத் தென்பட்டது; ஆனால்
பெரும்பாலானவற்றில் இப்பொழுது அது "தற்காப்பிற்குக்கூட" போதாத தன்மையில் உள்ளன; இதற்குக் காரணம்
உலக நிதிய நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஆகியவை அளித்துள்ள வெளி அதிர்ச்சிகளின் பெரும் தன்மையாகும்."
100 நாடுகளுக்கும் மேலாக தனிக்
கடன் கொடுப்பதற்கு போதிய நிதி இன்றி அவதிப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது; இது மொத்தத்தில் "நிதிய இடைவெளியை"
$200 முதல் $700 பில்லியன் வரை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட இவைகளில் 30 நாடுகளில் இருப்புக்கள் இப்பொழுது
மூன்று மாத இறக்குமதி என்ற தரத்தைவிட பெரிதும் குறைந்துவிட்டன--"அந்தத் தரம் உற்பத்தியை தொடர்வதற்கு
முற்றிலும் அவசியமானது" என்று DESAS
உடைய Rob Vos
எச்சரித்துள்ளார்.
ஐ.நா. அறிக்கை கணக்கிலடங்கா மத்தியதர, குறைந்த வருமானம் உடைய நாடுகள்
சமீபத்திய மாதங்களில் 20 முதல் 50 சதவிகிதக் குறைவு என்று நாணய மதிப்புக் குறைவைக் கண்டுள்ளன என்று
கூறுகிறது. இது "வெளிக்கடன் சுமைகளை உள்ளூர் நாணய அடிப்படையில் அதிக செலவு என்று ஆக்குவதுடன், ஏற்கனவே
அரசாங்கங்கள் மற்றும் வணிகங்களின் பட்ஜேட் நிலைமையையும் பாதித்துள்ளன. இதன் விளைவாக, பல வளர்ச்சியுறும்
நாடுகள் தங்கள் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிக் கொடுப்பதில் கஷ்ட நிலையைக் காண்கின்றன; ஏனெனில்
2009ம் ஆண்டில் முன்னேறிவரும் பொருளாதாரங்களில் வெளிநாட்டுக் கடன்கள் $3 டிரில்லியன் என்று முதிர்ச்சி அடைகின்றன."
இது இருப்புக்கள் சர்வதேச வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கையில்,
உறுதியாக அடிப்படைச் சமூக நலத் தேவைகளான சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி போன்றவற்றில் செலவினங்களைக்
குறைக்கும் அரசாங்க நடடிக்கைகளின் புதுச் சுற்று தொடங்கும் என்பதைக் காட்டுகிறது. |