World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

New York Times on the UAW's corporatism: a rewriting of history

New York Times ஐக்கிய கார்த்தொழிற்சங்கத்தின் கூட்டுறவுவாதம் பற்றி எழுதுகின்றது: வரலாறு மீண்டும் எழுதப்படல்

By Tom Eley
4 June 2009

Use this version to print | Send feedback

ஜூன்2ம் தேதி நியூ யோர்க் டைம்ஸ், கட்டுரையாளர் ஸ்டீவன் க்ரீன்ஹெளஸ் எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது; இதில் நீண்டகாலமாக மூன்று பெரிய அமெரிக்க கார்த் தயாரிப்பு நிறுவனங்களின் விரோதியான UAW, தொழிற்சங்கம், வணிகம், அரசாங்கம் ஆகியவற்றின் பலவீனமான உறவினை நோக்கி தற்காலிகமாக திரும்பி இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதைவிட உண்மைக்கு புறம்பாக வேறு ஏதும் இருக்க முடியாது. கார்த் தயாரிப்பு தொழிலாளர்களின் நலன்களை காப்பதற்குப் பதில் UAW ஒபாமா நிர்வாகத்துடனும் அதன் கார்த்துறை பணிக்குழுவுடனும் இணைந்து சதி செய்து நெருக்கடியை தான் தவறாக பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் தொழிலாளர்களின் முதுகுகளில் ஏற்றும் வகையில் ஆலை மூடல்கள், பணி நீக்கங்கள், ஊதிய, பிற நலன்கள் வெட்டுக்கள், பணியிட விதிகளைத் தகர்த்தல் ஆகியவற்றை செய்து வருகிறது.

UAW இப்பொழுது ஒரு பெருநிறுவன உரிமையாளர் என்பதை க்ரீன்ஹெளஸ் ஒப்புக் கொள்கிறார்; இதை அவர் நயத்துடன் "ஒரு புதிய இரட்டை பங்கு" என்று குறிப்பிடுகிறார். "நிர்வாகத்தின் இலாபத்தை அதிகரிக்க "தொழிற்சங்கம்" உதவும், கார்த்தயாரிப்பாளர்களின் பங்கு விலைகளை உயர்த்து நோக்கத்தில்" என்பதையும் ஒப்புக் கொள்ளுகிறார்; கிறைஸ்லர், ஜெனரல் மோட்டர்ஸிற்கு எதிராக வேலைநிறுத்தங்கள் சட்ட விரோதம் என்று செய்துவிட்டது; சமீபத்திய ஆண்டுகளில் "தொழிற்சங்கம் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து தொழிலாளர் அமைதி, உற்பத்தித்திறன் அதிகம் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் கொடுத்துள்ளதுடன்....தொழிலாளர் செலவினங்ளையும் குறைக்க உதவியுள்ளது."

ஆயினும் அதே நேரத்தில் UAW தொழிலாளர்களுக்கு இணையற்ற போராடும் சக்தியாக, அதன் உறுப்பினர்களுடைய நலன்களை கார்த் தொழில் தப்பிப் பிழைக்க வேண்டியதின் நலன்களுடன் சமப்படுத்த பெரிதும் போராடும் உறுதியான சக்தியாக க்ரீன்ஹெளஸ் சித்திரிக்கிறார். புதிய ஒப்பந்தங்கள் "தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள விரோதப் போக்குடைய உறவிற்கு" முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது அதற்கு பதிலாக UAW "தன்னுடைய மரபார்ந்த மூர்க்கத்தனமான எதிர்ப்பை தொடருமா" என்றும் கட்டுரையாளர் சிந்திக்கிறார். "மாறி மாறி UAW கடுமையான விரோதியாகவும் அதே நேரத்தில் மூலோபாய பங்காளியாகவும் இருந்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

UAW பற்றிய தன் தவறான விவரிப்பை சுருக்கிக் கூறுகையில், க்ரீன்ஹெளஸ் அறிவிக்கிறார்: "பல தசாப்தங்களாக UAW கார்த்தயாரிப்பாளர்களிடம் இருந்து தனக்கு வேண்டியதை பெறுவதற்கு எளிய மூலோபாயமான வேலைநிறுத்ததில் ஈடுபடுவதைச் செய்து வந்தது."

இத்தகைய UAW பற்றிய விவரிப்பு பின்வரும் வினாவை முன்வைக்க செய்கின்றது. கடந்த நான்கு தசாப்தங்களாக க்ரீன்ஹெளஸ் எந்த கிரகத்தில் வசிக்கிறார்? உண்மையில் UAW நீண்டகாலமாக கார்த்தயாரிப்பு நிறுவனங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில் பெருநிறுவனக் கொள்கையைத்தான் கடைபிடித்து வந்துள்ளது.

டைம்ஸின் தொழிலாளர் பிரிவு கட்டுரையாளரின் UAW, அதன் வழிவகைகள் பற்றிய விளக்கம் 1970 களில் சற்று பொருத்தமாக இருந்திருக்கலாம்; அப்பொழுதுதான் அமெரிக்கக் கார்த்தயாரிப்பு தொழிலில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் நடந்தது. 400,000 தொழிலாளர்கள் பங்கு பெற்ற 1970 ஜெனரல் மோட்டர்ஸ் வேலைநிறுத்தம் அதிகாரத்துவத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்தியது. அதிகமான கார்த் தொழிலாளர்களுக்கு குறைந்த அளவு நலன்களை அது பெற்றுத் தந்தாலும், இரண்டு மாத காலம் நீடித்த போராட்டம் UAW உடைய வேலைநிறுத்த நிதியைக் கிட்டத்தட்டக் காலி செய்து விட்டது. அப்பொழுது முதல் உயர்மட்ட UAW அதிகாரிகள் எப்படியும் நீடித்த தொழில்துறை வேலைநிறுத்தங்களை தடுக்கத்தான் முயன்றுள்ளனர்.

1979 முதல் UAW இன் வரலாறு இடைவிடாமல் தொழிலாளர்களின் சலுகைப் பறிப்புக்கள் மற்றும் காட்டிக் கொடுப்புகளின் வரலாறுதான். அந்த ஆண்டு கிறைஸ்லர் பிணை எடுப்பிற்கு அரசாங்கப் பணத்தை பெறுவதற்காக UAW கிறைஸ்லர் தொழிலாளர்களிடம் இருந்து பெரும் விட்டுக்கொடுப்புகளுக்கு ஒப்புக் கொண்டது. கார்ட்டர் நிர்வாகம் பின்னணியில் இருந்து நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு இடையே கிறைஸ்லர் டெட்ரோயிட்டிற்கு அருகே இருந்த Mamtramck நகரின் Dodge Main என்னும் அதன் பாரிய தொழிற்சாலையை மூடிவிட்டது. Dodge Main தகர்ப்பிற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பை UAW நெரித்ததுடன், அரசாங்கம் கேட்ட விட்டுக்கொடுப்புகளை கட்டாயமாக தொழிலாளர்கள் கொடுக்க உதவியது.

கிறைஸ்லர் திவால்தன்மை மற்றும் Dodge Main மூடப்பட்டதும் அடுத்த முப்பது ஆண்டுகள் நிகழ்வுகளுக்கு வடிவமைப்பை கொடுத்தன. 1980கள் தொடங்கி, UAW உள்ளூர் சங்கங்களின் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தி நெரிக்க முற்பட்டது; இதில் கார் உதிரிபாகத் தயாரிப்பாளர்கள் நிறுவனங்களும் அடங்கும். அதே நேரத்தில் உள்ளூர் சங்கங்கள் தங்கள் செயற்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கும் திறனை அகற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. பல்லாயிரக்கணக்கான வேலைத் தகர்ப்புக்களை அதிகாரத்துவும் கண்காணித்தது. அதே நேரத்தில் அதனது சொந்த வருமானம், பிற சலுகைகள் அதிகரித்தன. அதே நேரத்தில் ஜப்பான், ஜேர்மனி, இன்னும் பிற இடங்களில் இருக்கும் கார்த் தொழிலாளர்களை பலி ஆடுகளாக மாற்றுவதில் இருந்த தன்னுடைய சொந்த குற்றத்தை மூடி மறைத்தது.

ஜெனரல் மோட்டர்ஸிற்கு "எதிராக" UAW 2007ல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்தது உண்மையில் ஒரு பொது உறவு தந்திர நடவடிக்கை ஆளும்; இதன் பின்னணியில் தொழிற்சங்க நிர்வாகிகள் அடிமட்டத் தொழிலாளர்கள் பெரும் சலுகைகளைக் கொடுக்க வைக்கும் ஒப்பந்தத்திற்கு தயார் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருந்தனர்; அதில் பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஓய்வூதியம் பெறுவோரின் சுகாதார நிதி நிறுவுதன் அடங்கியிருந்தது (ஊழியர்கள் தாங்களே முன்வந்து நலன்கள் பெறும் அமைப்பு VEBA ஏற்படுத்திக் கொண்டது); இதை அதிகாரத்துவம் கட்டுப்பாட்டிற்குள் கொள்ளும் அதற்கு அதையொட்டி கார்த் தொழிலாளர்களை வறிய நிலையில் தள்ளுவதால் நேரடி நிதிய நலன்கள் கிடைக்கும்.

2008ம் ஆண்டில் American Axle மிச்சிகன் மற்றும் நியூயோர்க்கில் இருக்கும் முக்கிய உதிரிப்பாக விநியோக ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் மூன்று மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, UAW மற்ற கார்த் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுத்துவிட்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மாதம் $200 என்ற அற்பமான தொகையை தன்னுடைய தவறாகப் பெயரிடப்பட்டிருந்து வேலைநிறுத்த நிதியில் இருந்து கொடுத்தது; அதில் கிட்டத்தட்ட $900 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் மாபெரும் சொத்துக்கள் மூலம் (சமீபத்திய வோல் ஸ்ரீட் ஜேர்னல் மதிப்பீட்டின்படி $1.12 பில்லியன்) மற்றும் பிறவகை வருமானங்களை ஒட்டி, UAW தன்னை தான் மேற்பார்வையிட்டு வந்துள்ள பாரிய வேலை இழப்புக்களில் இருந்து நஷ்டம் வராமல் திறமையுடன் பார்த்துக் கொண்டுள்ளது. 1979ல் UAW இல் 1.5 உறுப்பினர்கள் இருந்தனர். 2008ஐ ஒட்டி இந்த எண்ணிக்கை 431,000 என்று குறைந்துவிட்டது; சமீப மாதங்களில் வேலை இழப்புக்கள் இன்னமும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. 2000த்தில் இருந்து 2008 ஆண்டு காலத்தில் UAW தன் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 40 சதவிகிதச் சரிவைக் கண்டாலும், UAW அதிகாரிகள் தங்கள் மொத்த ஊதியங்களை $11 மில்லியனுக்கும் மேல் உயர்த்திக் கொண்டனர்.

UAW இன் விதி அமெரிக்க முதலாளித்துவத்துடன் அதன் நலன்கள் பிணைந்துள்ள நீண்ட வரலாற்று வழிவகையின் விளைவு ஆகும். 1930 களில் அது நிறுவப்பட்டபோது, தொழிற்சங்கத்தின் தலைமையில் இருந்தவர்கள் அனைவரும் ட்ரொட்ஸ்கிசவாதிகள் உட்பட சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் போர்குணமிக்கவர்களின் மேலாதிக்கத்தில் இருந்தது. UAW தலைவராக 1946 முதல் 1970 வரை இருந்த Walter Reuther 1930 களில் தன்னை ஒரு சோசலிஸ்ட் என்றுதான் கூறிக் கொண்டார்.

ஆனால் Reuther உம் UAW ம், மற்றும் அமெரிக்கத் தொழிற்சங்கம் முழுவதுமே, அமெரிக்க முதலாளித்துவத்துடன் உடன்பாட்டைக் கொண்டனர். இலாபமுறைக்கு சவால் விடாமல், உற்பத்தி வழிவகை ஜனநாயகக் கட்டுப்பாட்டில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற முந்தைய கோரிக்கைகளையும் அகற்றி விட்டனர். இது ஜனநாயகக் கட்சியுடன் அரசியல் திருமணப் பிணைப்பு என்ற விதத்தில் தொழிற்சங்கம் கொண்டதுடன் பிணைந்து நின்றது.

இரண்டாம் உலகப் போரின்போது, UAW அமெரிக்கப் போர் முயற்சிகளுக்கு தொழிலாளர்கள் நலன்களை தாழ்த்தும் வகையில் வேலைநிறுத்தம் கிடையாது என்ற உறுதிமொழியை கொடுத்தது. டெட்ரோயிட்டின் கார்த்தயாரிப்பு ஆலைகள் "ஜனநாயகத்தின் ஆயுதக்கிடங்குகளாக இருக்கும்" என்று Reuther உறுதியளித்தார். போருக்குப் பிந்தைய காலத்தின் தொடக்கத்தில் Reugher, UAW அதிகாரத்துவத்தினரும் தொழிற்சங்கங்களில் இருந்து சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் போர்குணமிக்கவர்களை அகற்றி விட்டனர்; 1955ல் Reuther CIO எனப்படும் Congress of Industrial Organizations (தொழில்துறை அமைப்புக்களின் பேரவை) என்பதற்கு தலைமை தாங்கி அதை American Federation of Labour (AFL) என்னும் பிற்போக்குத்தன அமைப்பின் பிடிகளில் தள்ளியது.

UAW தன்னுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு, அமெரிக்க மூன்று பெருநிறுவனங்களின் உலக மேலாதிக்க நிலையை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்களிடம் அதிக சலுகைகளைப் பெற்றுவிடும் என்று பந்தயம் கட்டினார். தொழிற்சங்கத்தின் நல்ல வருங்காலம் மூன்று பெரிய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களிடம் இருந்து பிரிந்தவை அல்ல என்றும் Reuther அறிவித்தார்.

இந்த முன்னோக்கின் தோல்வி 1960களின் கடைசியில் இருந்து உலக சந்தையில் மூன்று பெரிய நிறுவனங்களின் பங்கு தீவிரச் சரிவு அடைந்ததின் மூலம் நிரூபணம் ஆயிற்று. ஆனால் அதிகாரத்துவத்தின் தேசியவாத முன்னோக்கு மாறாமல்தான் இருந்தது. இதன் பங்கு உலகச் சந்தையில் "இதன் தொழிலாளர்கள்" போட்டித் தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு மூன்று பெருநிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்கள் பெற்றிருந்த சலுகைகளை இழக்கச் செய்தல் மற்றும் ஆலை மூடல்களை மேற்பார்வையிடல் என்பதாக இருந்தது.

அமெரிக்க கார்த் தயாரிப்புத் தொழிலில் இலாபம் அடைவது பற்றிய நெருக்கடியை UAW உடைய முயற்சிகள் தடுப்பதில் தோல்வியுற்றன. இப்பொழுது UAW கிறைஸ்லரின் முக்கிய உரிமையாளராகவும் ஜெனரல் மோட்டர்ஸின் இரண்டாம் பெரிய உரிமையாளராகவும் உள்ள நிலையில், மூன்று பெரிய நிறுவனங்களின் பங்கு மதிப்பை உயர்த்துவதற்கு கார்த் தொழிலாளார்களின் ஊதியத்தைப் பெரிதும் குறைக்கும் உந்துதலில் இதற்கு நேரடி அக்கறை உண்டு.

தொழிலாளர்களுக்கு தங்கள் முதலாளிகள் நலன்களைவிட சுயாதீன நலன்கள் உண்டு என்று முன்பு மிக நயமற்ற தொழிற்சங்கவாதத்தின் அரிச்சுவடி கூறும் எண்ணத்தை UAW Inc. நிராகரிக்கிறது. உண்மையில் எவரிடமிருந்து கட்டணத்தை தொடர்ந்து வசூல் செய்கிறதோ, அந்தத் தொழிலாளர்களின் நலன்களிடம் இருந்து இப்பொழுது UAWஇன் நலன்கள் முற்றிலும் எதிரிடையாகவிட்டன.

UAW மற்றும் அதன் வரலாற்றை க்ரீன்ஹெளஸ் தவறாகக் கூறியிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. செய்தித்தாளின் மத்தியதர உயர்மட்ட வர்க்க வாசகர்களிடம் நன்மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளுவதற்காக தொழில்சங்க அதிகாரத்துவத்திற்கு பாராட்டுக் கொடுப்பதற்குத்தான் அவர் ஊதியம் கொடுக்கப்படுகிறார்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ள முடியாவிட்டாலும், இந்த அமைப்புக்கள் அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் இல்லாமல் செய்துவிடவில்லை. பெருவணிகத்திற்காக தொழிலாளர்கள் சலுகைகளைப் பறித்தல், அவர்களை கண்காணித்தல் என்பவற்றில் ஈடுபட்டாலும், பழைய தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அடக்குவதிலும் முக்கிய பங்கைக் கொண்டிருக்கின்றன. இந்தக்காரணத்தினால்தான் க்ரீன்ஹெளஸ் UAW ஐ தவறான வண்ணத்தில் சித்தரிக்கிறார்.