World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Election platform of the "European Left": Pious wishes and right-wing policies

"ஐரோப்பிய இடதின் தேர்தல் மேடை: விசுவாசமான விருப்பங்களும் வலது சாரிக் கொள்கைகளும்

By Lucas Adler and Peter Schwarz
6 June 2009

Use this version to print | Send feedback

சமீபத்திய மாதங்களில் அலையென வந்த பெருநிறுவனங்களின் திவால்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் வருங்கால தடையற்ற சந்தை சிந்தனைகள் பற்றிய கணிப்பிற்கு அதிர்ச்சிதரும் தாக்குதலை கொடுத்துள்ளது. தங்கள் வாக்காளர் தளத்துடன் ஓரளவு நம்பகத்தன்மையையேனும் தக்க வைத்துக் கொள்ள வேண்டி, "சமூகப் பொறுப்பு" மற்றும் அரசு கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான தேவைக்கு பழமைவாத ஐரோப்பிய அரசியல்வாதிகள்கூட உதட்டளவு ஆதரவை அளித்துள்ளனர்.

இச்சூழலில், இவ்வார இறுதிக்குகள் முடியவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தல்களில் முக்கிய இழப்பாளர்கள் ஐரோப்பாவின் சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆக இருக்கலாம். இதற்குக் காரணம் ஜேர்மனியில் (SPD) சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ் இருந்த முந்தைய அரசாங்கம், இங்கிலாந்தில் டோனி பிளேர் மற்றும் கோர்டன் பிரெளன் ஆகியோருடைய அராசங்கங்கள், ஸ்பெயினில் Jose Zapatero உடைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஆகியவை நிதியச் சந்தைகள் கட்டுப்பாடற்று இருப்பதற்கு உரியதைச் செய்ததுடன், சமூக நலத் திட்டங்களையும் அழித்திருந்தன. அத்தகைய தடையற்ற சந்தைக் கொள்கைகள் வருங்கால பொருளாதார செழிப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கும் என்று அவை அனைத்தும் கூறின.

ஜேர்மனியில் மில்லியன் கணக்கானவர்கள் Hartz IV பொதுநல எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் பிற சமூக ஜனநாயக "சீர்திருத்தங்களின்" விளைவுகளினால் துன்பத்திற்குள்ளாகினர். ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளிலும் இதே போன்ற முடிவுகள்தான் உள்ளன.

வார இறுதியில் வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கதிதற்கு குறிப்பாக ஒரு மரணதண்டனை போல் இருக்கும் --குறைந்த பட்சம் சவப்பெட்டியில் ஒரு பெரிய ஆணி அறைவது போல் இருக்கும்-- என்பதற்கு பல அறிகுறிகள் உள்ளன.

இக்கட்சிகள் விட்டுச் சென்றுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில், "ஐரோப்பிய இடது--தங்களை "சோசலிஸ்ட்" அல்லது "கம்யூனிஸ்ட்" என்று அழைத்துக் கொள்ளும் கட்சிகளின் கூட்டு உள்ளது; இது தற்பொழுது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 41 பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.

இக்குழுவின் முக்கிய அமைப்புக்களில் ஜேர்மனிய இடது கட்சி, பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தாலியின் கம்யூனிச மீள் நிர்மாணம் (Refounded Communism) (PRC), கிரேக்க Synaspismos ஆகியவை உள்ளன. ஐரோப்பிய இடதின் தலைவர் ஓஸ்கார் லாபொன்டைன் உடன் சேர்ந்து இயங்கும் ஜேர்மனிய இடது கட்சித் தலைவர் லோதர் பிஸ்கி ஆவார். நவம்பர் 2007ல் ஐரோப்பிய இடதின் தலைவர் பதவிக்கு Fausto Bertinotti (PRC) க்கு பதிலாக பிஸ்கி வந்தார்.

ஐரோப்பிய தேர்தலுக்காக ஐரோப்பிய தேர்தலுக்காக ஐரோப்பிய இடது ஒரு கூட்டு அரங்க அறிக்கை கொடுத்துள்ளது. இந்த அறிக்கை ஒரு பெரிய பல்பொருள் அங்காடியை ஒத்துள்ளது; அங்கு ஒரே கூரையின்கீழ் ஏராளமான பொருட்கள் கிடைக்கும். இதில் நினைக்கும் தலைப்புக்களில் எல்லாம் அரிய உறுதிமொழிகள் தொடர்ச்சியாக உள்ளன: நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி, சமாதானம், ஒற்றுமை, மகளிருக்கு சம உரிமைகள், ஜனநாயக முறையில் பங்கு பெறுதல், ஒற்றுமை உணர்வு, பாசிச-எதிர்ப்பு, இனவெறி-எதிர்ப்பு, குடியுரிமைகள், மனித உரிமைகள் போன்றவை.

அரங்க அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: "ஐரோப்பிய இடது, இந்த ஐரோப்பா அதன் பொருளாதாரங்கள் சமூக ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் நீடித்திருக்கக் கூடியதாகவும் பெண்ணுரிமையை காத்து ஜனநாயகம் ஒற்றுமை உணர்வு அடிப்படையையும் வளர்க்கக்கூடியதாகவும் அமைதியாகவும் சிவில் ஐரோப்பாவாகவும் இருக்க வேண்டும் என்று கோருகிறது." பின் அத்தகைய ஐரோப்பா எப்படி இருக்க வேண்டும் என்று விரிவாக கூறுகிறது.

ஆனால் Woolworths, Herties, Karstadt ஆகியவற்றின் அனுபவத்தில் இருந்து பல்பொருள் அங்காடிகளும் திவாலை எதிர்கொள்ளுவது தெளிவாகியுள்ளது. அவற்றின் பலவித பொருட்கள் காட்சியில் இருந்தும்கூட, அஸ்திவாரம் உறுதியாக இல்லை.

இதேதான் ஐரோப்பிய இடதின் அரங்கிற்கும் பொருந்தும்; முக்கியமான பிரச்சினைகளை சமாளிக்க இது தவிர்க்கிறது. விசுவாசமான விருப்புகளின் முழு மாளிகையும் சமூக உண்மையின் போக்கை, அதாவது பரந்த மக்களுக்கும் ஆளும் உயரடுக்குகளுக்கும் இடையே இருக்கும் சமரசப்படுத்த முடியாத வர்க்கப் பிளவை மூடிமறைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடி முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளில் வேர்களை கொண்டிருக்கிறதா அல்லது அது ஒரு தவறான கொள்கையின் அடிப்படையில் விளைந்ததா? ஐரோப்பிய ஒன்றியம், தேசிய பாராளுமன்றங்கள், சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என்று இப்பொழுதுள்ள நிறுவனங்களையும் அமைப்பையும் தொழிலாளர்களின் நலன்களுக்காக புதுப்பிக்க முடியுமா அல்லது தொழிலாள வர்க்கம் தன்னைச் சுயாதீனமாக ஒழுங்கமைத்துக் கொண்டு அதன் சமூக, அரசியல் மாற்றீட்டை வளர்த்தெடுக்க வேண்டுமா?

இந்த வினாக்கள் ஐரோப்பிய இடதால் பதில் கூறாமல் விட்டுவிடப்பட்டுள்ளன. ஐரோப்பிய இடதின் முழு அரசியல் நடவடிக்கையும், தொழிலாளர்கள் நெருக்கடியிலிருந்து புரட்சிகர முடிவுகளை எடுப்பதிலிருந்தும், உண்மையான சோசலிச முன்னோக்கை ஏற்பதிலிருந்தும் தடுப்பதில்தான் மையம் கொண்டுள்ளது.

ஒரு அழுகிய அஸ்திவாரத்தில் உள்ள வீட்டில், அதன் சுவர்கள் சரியும் நிலையில், உள்கட்டுமானம் முழுச் சிதைவில் இருக்கும் தன்மையில் அதில் வண்ணமயமான காகிதத்தை ஒட்ட முயலும் மற்றும் வண்ணப் பூச்சை பூச முயலும் ஒரு மனிதனைத்தான் ஐரோப்பிய இடது ஒத்துள்ளது. எந்த கட்டிட வல்லுனருக்கும் தெரிந்துள்ளதுபோல், இத்தகைய வீட்டை விற்க முடியும், ஆனால் பின்னார் அது சரிந்து விழுவதை அது தடுத்து விட முடியாது.

ஆடம்பரச் சொற்களுக்குப் பின்னே, ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் நிறுவனங்களையும் காப்பாற்றுவதற்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கு ஐரோப்பிய இடது அதன் உதவியைத் தருகிறது. இக்குழு அத்தகைய விஷயங்களில் கணிசமான அனுபவத்தை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட அதன் உறுப்பு அமைப்புக்கள் அனைத்தும் ஏற்கனவே முதலாளித்துவ அரசாங்கங்களில் பங்கு பெற்றவை ஆகும்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (CP) சமூக நலன்களைக் காத்து விரிவாக்க விரும்புவதாக வாக்குறுதி கொடுத்த போதிலும், சமூக நல வெட்டுக்களை அமுல் செய்த சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் 1981ல் இருந்து தொடர்ச்சியாக அதிகாரத்தைப் பகிர்ந்து வருகிறது. இத்தாலிய PRC பாராளுமன்றத்தில் வலதுசாரி அரசாங்கங்களுக்கு ஆதரவை 1990 களின் தொடக்கத்தில் இருந்து கொடுத்துள்ளது; 2006ல் இருந்து 2008 வரை Romano Prodi அரசாங்கத்தில் பங்கேற்றது; அதன் வரவு-செலவு குறைப்புத் திட்டங்கள் சில்வியோ பெர்லுஸ்கோனியின் வலதுசாரி மீண்டும் அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்தது. ஜேர்மனியில் இடது கட்சி, நகர வரவு-செலவு திட்டத்தை சமச்சீராக்குவதற்கு கடுமையான வெட்டுக்களை செயல்படுத்திய பேர்லினின் செனட்டில் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஒரு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கிறது.

ஐரோப்பிய இடது முன்வைத்துள்ள அறிக்கையை ஒருவர் கவனமாகப் படித்தால், குழுவின் வலதுசாரித் தன்மை நன்கு வெளிப்படையாகும்.

அதன் மே 2004 நிறுவனப் பிரகடனத்தில் ஐரோப்பிய இடது, தான் முதலாளித்துவத்தை எதிர்க்க முற்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக இது வர்க்கப் போராட்ட வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் பொருட்டு சமூக சீர்திருத்தவாதத்தில் பிரமைகளை ஊக்குவிக்க முற்பட்டுள்ளது.

பிரகடனத்தில் இது "ஐரோப்பிய சமூக முன்மாதிரியின் மூலத் தன்மையை" பாராட்டுகிறது; அதே போல் அதன் அரசியல், பண்பாட்டு வேர்களையும் போற்றுகிறது. "20ம் நூற்றாண்டில் பெரும் சாதனைகளை கொண்டுவந்த மரபாரந்த பாதையில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளுவதுடன், புரட்சிகர ஊக்கத்தால் விளைந்த பெரும் தோல்விகள், சோகங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொள்ளுகிறது." மாறாக ஐரோப்பிய இடது, சமூகத்தை சீர்திருத்த வேண்டி "ஒரு மாற்று, தீவிரப்போக்குடைய, சுற்றுச்சூழல், பெண்ணிய இடது" க்கு முயற்சிக்கிறது.

தற்போதைய தேர்தலுக்கான ஐரோப்பிய இடது மேடை முதலாளித்துவத்தை ஒரு சமூக முறை என்பதற்காக எதிர்க்கவில்லை; மாறாக அதன் "புதிய தாராள, உலகந்தழுவிய" வடிவமைப்பிற்காக எதிர்க்கிறது. தோற்றுவிட்டது "புதியதாராளமய பூகோளமயமாக்கல்தான் --அதுதான் உலகெங்கிலும் உள்ள நிதியச் சந்தைகளின் முக்கிய பங்குதாரர்களின் இலாபங்களை அதிகப்படுத்த உதவுகிறது; அரசின் குறுக்கீடு, கட்டுப்பாடு போன்ற வாய்ப்புக்களை தவிர்க்கிறது." ஏதோ இலாப விழைவு அதிகம் இல்லாத முதலாளித்துவம் இருக்கமுடியும் என்பது போல் கருதுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், அதன் நிறுவனங்கள் ஆகியவற்றில் சீர்திருத்தம் வேண்டும் என்று இம்மேடை கோருகிறது; ஆனால் அவை அகற்றப்பட வேண்டும் என்று கூறவில்லை. ஒரு சோசலிச ஐரோப்பாவிற்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை; மாறாக "ஒரு ஜனநாயக, சமூக ஐரோப்பா" தேவை என்கிறது --இத்தகைய சூத்திரம் எந்த சமூக ஜனநாயக வேலைதிட்டத்திலும் காணப்படலாம். மேடையின் மற்றொரு பிரிவு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை பிளக்க விரும்பும் பிராந்திய இயக்கங்களுக்கு ஒரு விட்டுக் கொடுத்தல் போல் "மக்களின் ஐரோப்பா" என்று குறிப்பிடுகிறது.

மே 9, பாரிசில் நடந்த ஐரோப்பிய இடதின் தேர்தல் கூட்டத்தில் தலைவர் பிஸ்கி மீண்டும் ஐரோப்பிய இடதின் குறைந்த வரம்புடைய முன்னோக்கை தெளிவுபடுத்தி முதலாளித்துவ வடிவமைப்பை அது ஏற்றது பற்றியும் குறிப்பிட்டார். "ஐரோப்பிய இடது, நிதியச் சந்தைகள் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்புகிறது; பொருளாதாரத்தில் ஒரு சமூக, சுற்றுச்சூழல் மாற்றத்தை விரும்புகிறது; ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு ஐரோப்பிய மத்திய வங்கி நிறுவப்படுதல், உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சி உடன்பாட்டிற்கு பதிலாக, வளர்ச்சி, முழு வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான உடன்பாடு வேண்டும் எனக் கூறுகிறது" என்றார் அவர்.

தேர்தல் மேடையின் வலதுசாரிப் பொருளுரை வெளியுறவுக் கொள்கை பற்றிக் கூறுகையில் நன்கு புலனாகிறது. இராணுவவாத எதிர்ப்பிற்கு உதட்டளவு ஆதரவு கொடுத்து, ஐரோப்பிய இடது வெளிப்படையாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முக்கிய நோக்கங்களை தழுவுகிறது.

இவ்விதத்தில் மேடையானது, தெளிவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் விரிவாக்கத்திற்கும் தன் ஆதரவை அறிவிக்கிறது." அதே போல் இன்னும் இருக்கும் ஐரோப்பிய பொருளாதார அரசியல் பிளவுகளை கடக்க ஒரு உறுதியான அனைத்து ஐரோப்பிய கட்டமைப்புக்கும் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் அதிகமாக விரிவுபடுத்தப்படுவதற்கும் ஐரோப்பிய இடது ஆதரவு கொடுக்கிறது." இந்த ஆவணம் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு உகந்த வெளியுறவுக் கொள்கையை "பேரவா மிகுந்த மத்தியதரைக் கடல் ஒன்றியத்திற்கான அரசியல் திட்டம்" என்று பாராட்டுகிறது.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெருகும் பூசல்கள் பற்றியும் இம்மேடை எதிர்கொள்கிறது; NATO கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகள் சிலவற்றின் நிலைப்பாட்டில் இருந்து இவ்வாறு எழுந்துள்ளது; அவை "ஐரோப்பாவில் அமெரிக்க நலன்களை ஒட்டி நேட்டோ கொள்ளும் பங்கு இராணுவவகையில் மட்டுமல்லாமல் எதிர்மறை அரசியல்" என்பதை வலியுறுத்தியுள்ளன. மாறாக ஐரோப்பிய இடது, "அமைதி, பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு" இவற்றுக்கு அணி சேர்ந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான" மாற்று பாதுகாப்பு என்னும் கருத்துருக்கு" அழைப்பு விடுக்கிறது.

இக்கருத்து பற்றி மேடை கூறுவதாவது: "எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைதி, பாதுகாப்பு, ஆயுதங்கள் களைதல், கட்டுமானத்திலேயே தாக்குதல் திறன் அற்ற நிலை, OCSE முறைக்குள் அரசியல், சிவில் வழிவகைகளில் பூசல்களை தீர்த்தல் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், சர்வதேச சட்டம் மற்றும் சீர்திருத்தப்பட்ட, ஜனநாயக நெறியுடன் கூடிய ஐ.நா.முறைக்குள் தளத்தைக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய கூட்டு, ஒத்துழைப்பு நிறைந்த ஐரோப்பியமுறை விசை அளிப்புக்கள், சுற்றுச் சூழல், மனித உரிமைப் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு மற்றும் நிரந்தர அனுமதி ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்."

ஆனால் இந்த ஒற்றைப் பத்தி பல அரசியல் சங்கேதச் சொற்களை கொண்டுள்ளது. "சீர்திருத்தப்பட்ட, ஜனநாயக நெறியுடன் கூடிய ஐ.நா.முறை" என்பது ஐரோப்பிய ஆளும் சக்திகள் தங்கள் அதிகாரத்தை ஐ.நாவிற்குள் பெருக்கும் முயற்சியுடன் முற்றிலும் இயைந்துதான் உள்ளது--இதுவரை வெற்றிபெறவில்லை. செப்டம்பர் 11, 2001 ல் இருந்து "பாதுகாப்பு" என்னும் சொல் ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் மற்றும் இராணுவக் குறுக்கீடு ஆகியவற்றிற்கு சமமாக உள்ளது.

குறிப்பாக "தடையற்ற வகையில் விசை (Energy) பெறுதலுக்கு" அழைப்பு என்பது ஆக்கிரமிப்புப் போர்களுக்கு பல காலமும் நியாயப்படுத்த உதவியுள்ளது. 1990 ல் மறு ஐக்கியத்திற் பின் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையில் இராணுவ வாத மீழெழுச்சியை நியாயப்படுத்திய முக்கிய வாதங்களில் ஒன்றாகும்.

கவனமாக ஆராயும்போது, ஐரோப்பிய இடதின் மேடை இன்னும் அதிகமான சமூக சமச்சீர் உடைய, நியாயமான ஐரோப்பிய ஒன்றியத்தை அடைவது இயலும் என்ற போலித் தோற்றத்தை வளர்ப்பதை சாரமாகக் கொண்டுள்ளது. இந்த முறையீட்டின்பேரில் ஐரோப்பிய இடது ஐரோப்பிய மக்கள் முழுமையாயாக முதலாளித்துவ முறையை பெரிதும் ஏற்பர் என்று நம்புகிறது.

வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களில் இந்தக் குழு சந்தேகத்திற்கு இடமின்றி அதிகாரத்தில் இருப்பவற்றுடன் சேர்ந்துகொண்டு தன்னால் இயன்ற மட்டும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தைக் காக்கும்.