WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Wall Street throws General Motors into bankruptcy
ஜெனரல் மோட்டார்ஸை வோல் ஸ்ரீட் திவால் தன்மைக்குத் தள்ளுகிறது
By Jerry White
29 May 2009
Use this version
to print | Send
feedback
கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் ஒபாமா நிர்வாகத்தின் கார்த் தொழிலை "மறுசீரமைத்தல்"
மற்றும் அதன் திட்டமான ஜெனரல் மோட்டார்ஸை திவால் தன்மைக்கு தள்ளுதல் ஆகியவற்றிற்கு பின் உள்ள அப்பட்டமான
வர்க்க நலன்களை நிரூபித்துள்ளன.
வியாழனன்று அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய நிதிய அமைப்புக்கள் சிலவற்றை உள்ளடக்கிய
முக்கிய பங்குப்பத்திரம் வைத்திருப்போரின் குழு ஒன்று, ஜெனரல் மோட்டார்ஸ் திவால்தன்மையில் இருந்து வெளிப்பட்டுவிட்டால்
நிதி அமைச்சரகம் அதன் பங்கு 25 சதவிகிதம் அதிகப்படுத்தப்படும் என்று கூறியதற்கு உடன்பட்டனர்.
கடுமையான ஊதிய, பிற குறைப்புக்களையும் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள்
மீது சுமத்தப்படும் முக்கிய பத்திரம் வைத்திருப்போருடனான உடன்பாடு நூறாண்டுகாலம் இருந்த தொழில்துறை பெருமிதச்
சின்னம் "ஒழுங்கான" திவால்தன்மையை அடைவதற்கான நிர்வாகத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தில்
நிறுவனத்தில் எஞ்சியிருக்கும் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அகற்றப்படல், ஆலைகள் அகற்றப்படல் மற்றும்
நூற்றுக்கணக்கான விற்பனையாளர் ஒப்பந்தங்கள் அகற்றப்படல் ஆகியவையும் உள்ளன.
பங்குப்பத்திரக்காரர்கள் ஜெனரல் மோட்டார்ஸின் $27 பில்லியன் பாதுகாப்பில்லாத
கடனில் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர். நிறுவனம் கிட்டத்தட்ட உடைந்துவிட்டது என்ற நிலையில்
இவர்களின் கடன்கள் வெளிச் சந்தையில் டாலருக்கு ஒரு சில சென்ட்டுகளைத்தான் கொண்டுவரும். ஆயினும்கூட அவர்கள்
அமெரிக்க நிதி அமைச்சரகத்தில் இருந்து பல சலுகைகளையும் கோரியுள்ளனர்; அதுவோ பாரிய முறையில் பொதுப்பணத்தில்
இருந்து இதைக் கொடுக்க முன்வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில், 10 சதவிகித பங்கு வழங்குவது என்ற
நிர்வாகத்தின் அழைப்பை பங்குப்பத்திரக்காரர்கள் நிராகரித்தனர். தங்கள் நடவடிக்கை நிறுவனத்தை திவால்தன்மைக்குள்ளும்
மற்றும் இல்லாதொழித்துவிடலாம் என்று தெரிந்தும் இவ்வாறு செய்தனர்.
பத்திரம் வைத்திருப்பவர்கள் பல தனியார் முதலீட்டு நிறுவனங்கள்,
"பிரச்சனைக்குட்பட்ட கடன் சந்தை" பற்றிய சிறப்பு பயிற்சியுள்ள பெரிய மூலதன நிறுவனங்களும் மற்றும்
Fidelity Investment, Reseasrch &
Management, Loomis, Sayles, Pacific Insvestment Management Company,
Franklin Resources Inc. ஆகியவையும் அடங்கும்.
நியூயோர்க் டைம்ஸின் வணிகப்பிரிவு கட்டுரையாளர்
Andrew Sorkin கருத்துப்படி, "ஜெனரல் மோட்டார்ஸின்
பத்திரங்கள் விரைவில் கைமாறி வருகின்றன. இதன் பொருள் சில தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அவற்றிற்குப் பணம்
அளித்து, அதன்மீது அவற்றின் மதிப்பு பெருகுவதற்கு சூதாடுகின்றனர் என்பதாகும்."
முதலீட்டாளர்களுக்கு கொடுத்த அறிக்கை ஒன்றில் நிதிய அமைப்புக்கள் "திருத்தப்பட்ட
அளிப்பு" "பத்திரக்காரர்களுக்கு சிறந்த மாற்றீடு" என்றும் அமெரிக்க கருவூலம் இன்னும் கூடுதலான பணத்தை
ஜெனரல் மோட்டார்ஸிற்கு கொடுக்க இருப்பதாகவும், "இது நிறுவனத்தில் இருப்புநிலைக் குறிப்பை பெரிதும்
மேம்படுத்தும் என்றும் கணிசமான வகையில் பங்கு மதிப்பை உயர்த்தும் என்றும் கூறியுள்ளது.
பல பங்குப்பத்திரக்காரர்கள் திவால்பிரிவு நீதிபதியிடம் இருந்து இன்னும் சிறந்த
உடன்பாடு வரக்கூடும் என்று எதிர்பார்க்கின்றனர். வேறு சிலர் நிறுவனத்தின் சரிவில் இருந்து இலாபத்தை
எதிர்பார்க்கின்றனர்; ஏனெனில் அவர்களுடைய முதலீடுகள் வோல் ஸ்ரீட் காப்பீட்டாளர்களால் கடன் பாதுகாப்பு
உடன்பாட்டின்கீழ் பாதுகாப்பு பெற்றுள்ளன.
ஆரம்பத்தில் இருந்தே ஒபாமா நிர்வாகம் கார்த் துறை நெருக்கடியில்
குறுக்கிட்டமை, பொது சொத்துக்களை மற்றொருவிதத்தில் கொள்ளையடித்தல், தொழிலாள வர்க்கத்தின்மீது
தாக்குதல்கள் என்பதாகத்தான் உள்ளது. முன்னொருபோதுமில்லாதவாறு, ஜெனரல் மோட்டார்ஸின் இருப்புக்களில்
72.5 ஐ கட்டுப்படுத்தும் இது கார்த் தொழிலை பகுதி தேசியமயமாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளமை
தொழிலாளர்கள் அல்லது பொது சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கு என்று இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின்
இழப்பில் நிதிய உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகளுக்கு பணிதல் என்ற விதத்தில் உள்ளது.
கார்த் தொழிலாளர்கள் பல தசாப்தப் போராட்டங்களுக்கு பின்னர் வெற்றியடைந்த
சாதனைகள்--நல்ல ஊதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியநலன்கள், தங்கள் குழந்தைகளுக்கு கல்லூரிப்
படிப்பு போன்றவை--அமெரிக்க நிதிய உயரடுக்கினால் நீண்ட காலமாக தன் இலாபங்களுக்கு தடை என
காணப்பட்டு வந்துள்ளன. கார்த் தொழிலாளர்கள்மீது நடத்தும் தாக்குதலை ஒபாமா நிர்வாகம் தொழிலாள
வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்த
அரங்காக மாற்ற முற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் "மீட்பு" தொழிலாள வர்க்கத்தின்
கடும் சிக்கனம், வறிய நிலை ஆகியவற்றைத் அடித்தளமாகக் கொள்வதுடன், செல்வந்தர்களின் இலாபங்கள் பெரிதும்
அதிகரிக்கும்.
இந்த முழு வழிவகையில் இழிந்த தன்மை ஒபாமாவின் கார்த் தொழில் பணிக்குழுவின்
தலைவரான ஸ்ரீவன் ரட்னர் இன் பங்கின்மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இவர்
Chrysler, GMக்குக்
கடன்கொடுக்கும் பிரிவான GMAC
ஆகியவற்றில் முதலீடுகள் செய்ததில் இலாபம் அடைந்துள்ளார். குறைந்தது $608 மில்லியன் நிகரச் சொத்துக்கு
உரியவர் என்று கருதப்படும் ஒரு தனி பங்குச் சந்தை மேலாளரான ராட்னெர்,
Cerberus Capital Management
இல் பங்குகளாக மில்லியன் டாலரைக் கொண்டிருந்தார். அது
Chrysler, GMAC
இரண்டையும் வாங்கியது என்று கூட்டாட்சி நிதியப் பிரிவு தெரிவிக்கிறது. "நலன்களில் முரண்பாட்டினால்தான்"
ராட்னெர் சில முதலீடுகளை விற்றதாக நிதி அமைச்சரகம் கூறுகிறது.
பணிக்குழுவின் தலைவர் என்ற முறையில், மான்ஹட்டனில் ஐந்தாம் அவென்யூவில் ஒரு
அடக்குவீடு, ஒரு விமானம், குதிரைப் பண்ணை ஆகியவற்றின் உரிமையாளரான ராட்னெர் கார்த் தொழிலாளர்கள்
பாரிய நிரந்தர வாழ்க்கத்தர குறைப்புக்களை ஏற்க வேண்டும் என்று கோரியுள்ளார். அதில் ஓய்வுபெற்ற
நூறாயிரக்கணக்கான தொழிலாளிகள் அவர்களை நம்பியிருப்பவர்களின் பற்கள், கண்கள் பாதுகாப்பு நலன்களை
உடனடியாக அழிப்பதும் உள்ளடங்கியுள்ளது.
வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் தங்கள் நலன்களைக் காப்பதற்கு நடந்து கொள்ளும்
இரக்கமற்ற முறை, ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கம் விருப்பத்துடன் ஜெனரல் மோட்டார்ஸ்
தொழிலாளர்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், பணி நிலைமைகள் ஆகியவை தகர்க்கப்பட உதவியுள்ள
விதத்திற்கு முற்றிலும் எதிரிடையாக உள்ளது.
"இந்த ஆபத்தான நிலைமையை எதிர்கொண்டு, அரசாங்கத்தின் தேவைகளை
வருங்காலத்தில் பூர்த்தி செய்வது என்பது ஜெனரல் மோட்டார்ஸின் முடிவைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்த
உங்கள் பேரம் பேசுபவர்கள் கார்த்தொழிற்துறையின் நிதியமைச்சின் குழுவை திருப்தி செய்யும் விதத்தில் கூட்டாக
பேச்சுவார்த்தை நடத்திய உடன்பாட்டில் கவனத்துடன் பல திருத்தங்களை கொண்டுவந்துள்ளனர்" என்று
UAW சலுகைகள்
கொடுத்த ஒப்பந்தத்தின் சுருக்கத்தில் கூறியுள்ளது. அது மேலும் கூறுவதாவது: "நிலைக்கச் செய்யும் திட்டத்திற்கு
வேதனை தரும், முன்னோடியில்லாத தியாகங்கள் UAW
உறுப்பிர்களிடம் இருந்து தேவை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்."
இந்த உடன்பாடு எஞ்சியிருக்கும் 62,000
UAW பணிகளில்
23,000 அழிக்கப்பட இசைவு தருகிறது. இதைத்தவிர ஊதியங்கள், மேலதிககொடுப்பனவுகள், இடைவெளி நேரம்,
விடுமுறைகள், பணி விதிகள், ஓய்வூதிய மருத்துவ நலன்களிலும் பல விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளது. இவை
நிறுவனத்திற்கு மொத்தம் $1.5 பில்லியன் சேமிப்பைக் கொடுக்கும் என்பதுடன் தொழிலாளர் செலவினங்களை
டோயோடா இன்னும் பிற சர்வதேச நிறுவனங்கள் நடததும் அமெரிக்க ஆலைகளில் தொழிற்சங்க உறுப்பினர்
இல்லாத தொழிலாளர்களின் சம்பளத்திற்கு ஒப்பாக அல்லது அதற்கு குறைவாகக் கொண்டு வரும்.
பங்குப்பத்திரக்காரர்கள் தங்கள் நலன்களைக் காக்க கடுமையாக
போராடுகின்றனர்; பல தலைமுறைகளாக தொழிலாளர்கள் கடுமையான போராட்டம் மற்றும் தியாகத்தில்
அடைந்த சாதனைகளை UAW
கொடுத்து விடுகிறது. ஏன் இப்படி என்று புரிந்து கொள்ளுவதற்கு
UAW
அதிகாரத்தட்டின் இயல்பாக முதுகெலும்பற்ற தன்மை மற்றும் ஊழலைச் சுட்டிக்காட்டுவதையும் விட அதிகம்
கூறவேண்டும்.
கடந்த சில தசாப்தங்களாக,
UAW அமைப்பு
தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் தொழிலாளர்களுடைய நலன்களுக்கு முற்றிலும் எதிரான, தனி நலன்களை
பொருளாதாய தன்மையில் வளர்த்துள்ளது. ஒரு பெரிய படை குவிப்பு போல் இது கொண்டிருக்கும் ஊழியர்களின்
வருமானமும் சொத்துக்களும் பெருகிவிட்டன.-இப்பொழுது அது $1.2 பில்லியன் என்று உள்ளது; அதே நேரத்தில்
உறுப்பினர்கள் எண்ணிக்கை மூன்றில் இரு பங்கு குறைந்துவிட்டது. கார்த்தொழில் மறுகட்டமைப்பில்,
UAW வோல்
ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்களின் துணை நிறுவனம் போல் செயல்பட்டு, தொழிலாளர் பிரிவின்மீது கண்காணிக்கும் வேலையும்
பார்த்து அதன் சந்தா செலுத்தும் "உறுப்பினர்கள்மீது" மிக இரக்கமற்ற சுரண்டல் நிலைமைகளையும் சுமத்துகிறது.
இதற்கு ஈடாக ஒபாமா நிர்வாகம்
UAW க்கு ஜெனரல்
மோட்டார்ஸின் பங்குகளில் மில்லியன் கணக்கான எண்ணிக்கையைக் கொடுத்துள்ளது; அதைத்தவிர இந்த அமைப்பிற்கு ஜெனரல்
மோட்டார்ஸின் உரிமைப் பொறுப்பில் 20 சதவிகிதமும் கொடுத்துள்ளது; இதைத்தவிர பெருநிறுவன இயக்குனர்
குழுவிலும் ஒரு இடத்தைக் கொடுத்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் இருந்து
UAW நேரடியான
நிதிய பணயத்தை நிறுவனத்தில் கொள்ளும். அதற்காக அது தொழிலாளர் செலவினங்களைக் குறைத்து பங்குதாரர்களின்
மதிப்பை உயர்த்தப் பாடுபடும்.
UAW ஒப்பந்தச் சுருக்கம் கூறுகிறது:
"மிகவும் முன்னேற்றத்தைக் காட்டும் இருப்பு நிலைக் குறிப்பு உள்ள நிலையில், வணிக நடவடிக்கைகள் கணிசமாக மறு
கட்டமைப்பிற்கு உட்படுகையில், புதிய நிறுவனத்தின் பங்கு வருங்காலத்தில் கணிசமான மதிப்பைப் பிரதிபலிக்கும்
என்பது உண்மையான மதிப்பீடு ஆகும்."
கார்த் தொழிலாளர்கள் தீவிரப் போராட்டத்தின் ஆரம்ப புள்ளியாக
UAW அச்சொல்
கொடுக்கும் பொருளில் கூட ஒரு "தொழிற்சங்கமாக" இல்லை என்பதை உணர்ந்துகொள்வதுடன் அது ஒரு பெருநிறுவனக்
கூட்டுக்குழு, தொழிலாளர்களுக்கு ஆழ்ந்த விரோதப் போக்கு உடைய சமூக நலன்களைப் பிரதிபலிக்கிறது என்பதை
அறிந்துகொள்ளவேண்டும். இந்த அமைப்பிற்கு தொழிலாள வர்க்கம் எவ்வித விசுவாசத்தையும் கொண்டிருக்கவில்லை
என்பதோடு, ஆலைகளில் இருந்து இதை அகற்றிவிட்டு புதிய போராட்ட அமைப்புக்களை தன் வர்க்க நலன்களின்
தளத்தில் கட்டமைக்கவேண்டும்
வரலாறுரீதியாக கார்த் தொழிலாளர்களுடன் அடையாளம் காணப்படும் வர்க்கப்
போராட்டத்தின் சக்தி வாய்ந்த மரபுகளைப் புதுப்பித்தலுக்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையின்
அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது. இதற்கு ஜனநாயகக் கட்சியிலிருந்தும் மற்றும்
முதலாளித்துவ அரசியல் முழுவதுடனும் அரசியல் முறிவு தேவையானதுடன், பொருளாதார வாழ்வு சோசலிச முறையில்
மறுகட்டமைக்கப்படுவதற்கான போராட்டமும் தேவையாகும். |