World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The German Left Party loses support and two prominent members

ஜேர்மன் இடது கட்சி ஆதரவை இழக்கிறது மற்றும் இரண்டு முக்கிய உறுப்பினர்களையும் இழக்கிறது

By Lucas Adler
28 May 2009

Use this version to print | Send feedback

சர்வதேச பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், ஜேர்மன் இடது கட்சிக்குள் முரண்பாடுகளும், பிளவுகளும் தொடர்ந்து வெளிப்படையான வடிவம் எடுத்து வருகின்றன. அதீத வார்த்தை ஜாலத்திற்கும், வலதுசாரி அரசியல் நடைமுறைகளுக்கும் இடையே சமநிலை பேணும் அதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து பராமரிக்க அந்த கட்சியால் முடியவில்லை, தற்போது துண்டாகும் அச்சுறுத்தலில் உள்ளது.

மே மாத தொடக்கத்தில், பேர்லின் செனட்டில் இருந்த இடது கட்சி பிரிவின் நிதியறிக்கை வல்லுனர் கார்ல் வெக்செல்பேர்க், அவர் குறிப்பிட்டிருந்த பெடரல் இடதுகட்சியின் அதிகரித்து வரும் மூலதத்துவங்களுக்கு எதிராக தமது பதவியை இராஜினாமா செய்தார். சில தயக்கங்களுக்கு பின்னர், கட்சியிலிருந்தும் அவரின் இராஜினாமாவை அறிவித்தார்.

ஒருநாள் கழித்து, இடது கட்சியின் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியான Sylvia Yvonne Kaufmann, அவரின் இராஜினாமாவையும், அவர் சமூக ஜனநாயக கட்சிக்குள் சேர்வதையும் அறிவித்தார். ஏனென்றால் - அவரின் வார்த்தைகளில் - இடது கட்சியானது "கருத்தியலை அறிவின் மீது" உயர்த்திக் கொண்டுள்ளது என்பதுடன் ஐரோப்பாவை மேலும் ஜனநாயகரீதியில் கொண்டு செல்வதற்கான எவ்வித முக்கிய முறைமைகளையும் எதிர்த்து வருகிறது. இந்த இரண்டு அரசியல்வாதிகளுமே, இடதுகட்சியின் நீண்டகாலமாக இருந்து வரும், செல்வாக்குமிக்க உறுப்பினர்களாகவும், அதன் வலதுசாரியை சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.

1991ல் பிரேமெனில் கார்ல் வெக்செல்பேர்க், "ஜனநாயக சோசலிசத்தின் இடது பட்டியல்" ("Left List/Party of Democratic Socialism") என்ற கட்சியை உருவாக்கி இருந்தார். அரசியல் விஞ்ஞான பட்டம் பெற்றதைத் தொடர்ந்து 2000த்திலிருந்து பேர்லின் செனட்டில் PDSக்காக பணியாற்றினார். 2003ல் வெக்செல்பேர்க் ஒரு செனட் பிரதிநிதி ஆனார். செனட்டின் பொருளாதார செனட்டர் மற்றும் இடது கட்சியின் முன்னணி உறுப்பினரான ஹரால்டு வோல்ப் தலைமையிலான கட்சியின் "உண்மையான அரசியல்" வட்டாரங்களுக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக அவர் பட்டியலிடப்பட்டார்.

பேர்லினில் இடதுகட்சி பிரிவின் நிதியறிக்கைக்கான செய்திதொடர்பாளராக, செனட்டில் இடது கட்சி-சமூக ஜனநாயக கட்சி கூட்டணியின் வலதுசாரி கொள்கைகளுடன் வெக்செல்பேர்க் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த கூட்டணி கடந்த ஏழு ஆண்டுகளாக பேர்லினில் தொடர்ச்சியாக கடுமையான வெட்டுக்களை கையாண்டுள்ளது. முன்னணி பொதுச்சேவை தொழிற்சங்கங்களின் நெருங்கிய கூட்டணியில், நகர குடியானவர்களின் செலவில் வெட்டுக்கள் மற்றும் சேமிப்பு முறைமைகளின் மூலம் பேர்லின் செனட், அதன் நிதியறிக்கையை சாதனை வேகத்தில் மாற்றி அமைத்துள்ளது. சமீபத்திய வரலாற்றில் வேறெந்த ஜேர்மன் மாகாணமும் இதுபோன்றதொரு வாழ்க்கை நிலைமைகள் மீதான பரந்த தாக்குதல்களை அனுபவிக்கவில்லை.

சமூக ஜனநாயக கட்சி-இடது கட்சி செனட்டின் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், மொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு யூரோ பணியாளர்களை பேர்லின் அதிகளவிலான சதவீதத்தில் கொண்டிருந்தது. பேர்லினில் ஹர்ட்ஸ் IV நல தொகைகளை நம்பி இருந்தவர்களின் சதவீதம், தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு உயர்ந்திருந்தது. இதே சதவீதம் வேலைவாய்ப்பற்றிருந்தோரின் அளவிற்கும் பொருந்தும். முழுநேர மற்றும் சுய-தொழில் முனைவோரின் அதிகபட்ச விகிதத்தையும் பேர்லின் கொண்டுள்ளது. இவர்களுக்கு தங்களின் வருமானம் போதவில்லை என்பதால் அவர்களும் துணை நலத்தொகைகளை சார்ந்துள்ளார்கள். பேர்லினில் வேலை செய்து வருபவர்களில் கால் பகுதியினர் மாதத்திற்கு 900விற்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள். மேலும் பேர்லினில் வாழும் அனைத்து குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் வாழ்கிறார்கள் - இதுவும் அந்நகரில் செனட்டால் சமூக நலத்திட்டங்கள் கீழறுக்கப்பட்டிருக்கும் போது தான் ஏற்பட்டிருக்கிறது.

1976TM, Sylvia Yvonne Kaufmann கிழக்கு ஜேர்மனியின் ஆளும் ஸ்ராலினிச கட்சியான ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியில் (SED) சேர்ந்து கொண்டார். 1989-90ல் ஜேர்மனின் முதலாளித்துவ ஐக்கியத்தை தொடர்ந்து, SED என்பது ஜனநாயக சோசலிச கட்சி (PDS) என்று பெயர் மாற்றப்பட்ட போது, அந்த பெண்மணி அக்கட்சியில் தான் இருந்தார். 1991 முதல் 2002 வரை PDSன் செயற்குழுவில் இருந்த அவர், கட்சியின் அமைதி, சர்வதேச மற்றும் ஐரோப்பிய கொள்கைகளுக்கு முழு பொறுப்பாவார். 1993லிருந்து 2000 வரை கட்சியின் துணை சேர்மேனாக இருந்த Kaufmann, 1994, 1999 மற்றும் 2004ல் நடந்த ஐரோப்பிய தேர்தல்களில் முன்னணி PDS வேட்பாளராக இருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பென் உடன்படிக்கைக்கான அவரின் தாராளமான ஆதரவால் இந்த ஆண்டின் ஐரோப்பிய தேர்தலில் அவரால் கட்சியின் ஆதரவை வென்றெடுக்க முடியவில்லை.

இடது கட்சியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான விளக்கத்தில் வெக்செல்பேர்க் மற்றும் Kaufmann இருவருமே அடிப்படையில் ஒரே வாதத்தை முன் வைத்துள்ளார்கள்.

Spiegel ஆன்லைனுக்கான ஒரு பங்களிப்பில், வெறுமனே ஒரு எதிர்ப்பு கட்சியாக இருந்து வரும் அந்த கட்சி, அரசியல் வாழ்வில் ஓர் இரண்டாந்தர பங்களிப்பை தான் அளித்து வருகிறது என்று வெக்செல்பேர்க் குற்றஞ்சாட்டினார். அது பெரும்பான்மையினரை வெற்றி கொள்ளும் எவ்வித முன்னோக்கும் இல்லாத, ஒரு பிரிவினைவாத மற்றும் பொதுவுடைமை மனோபாவத்துடன் கூடிய பெடரல் கட்சியாகும் என்று அவர் குற்றஞ்சாட்டுகிறார். சமூக ஜனநாயக கட்சியானது இடது கட்சியின் சிறந்த கூட்டு என்று பாராட்டப்படுவதற்கு பதிலாக, இடது கட்சியின் முக்கிய எதிரியாக நம்பப்படுகிறது.

சமூக முரண்பாடுகளை எதிர்கொள்வதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக ஒரு பொறுப்பற்ற முறையில் கிளர்ச்சி செய்வதாக இடதுகட்சியின் தலைவரான Oskar Lafontaineஐ வெக்செல்பேர்க் குற்றஞ்சாட்டுகிறார். சமூக ஜனநாயக கட்சியின் ஒரு முன்னாள் தலைவரான Lafontaine, "சமூக-ஜனநாயகத்திலிருந்து தகுதியான நபர்களை" கட்சிக்குள் கொண்டு வர தவறிவிட்டார். ஆனால், மாறாக நாட்டின் மேற்கில் உள்ள அனைத்து இடதுசாரி உட்குழுவினரையும் மற்றும் பல பழைய சங்க அதிகாரிகளையும் இடது கட்சிக்குள் நுழைய ஊக்குவித்தார்.

ஹர்ட்ஸ் IV கைவிடப்பட வேண்டும், நேட்டோ கலைக்கப்பட வேண்டும் பணக்காரர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட வேண்டும் போன்ற இதர பிற கோரிக்கைகளுடன் இடது கட்சி அதனை அதி-தீவிரத்தில் நிலைநிறுத்தி கொண்டுள்ளது. அதன் மூலம் அரசியல் கூட்டணிக்குள் நுழைவதற்கான தகுதியை அது இழந்துவிடுகிறது என்கிறார் வெக்செல்பேர்க். உட்குழுவினர்கள் போன்ற அதன் அணிகளை இடது கட்சி நீக்க வேண்டும். அத்துடன் எவ்வித நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க சில மாதங்களுக்குள் அது அதன் அரசியல் பாதைக்கு மறுவடிவம் அளிக்க வேண்டும்.

Berliner Zeitung உடனான ஒரு நேர்காணலில், ஒரு தெளிவான அடையாளத்தை உருவாக்க தவறியதால் "Lafontaine முன்னணியில் நிற்கும் தகுதியை இழந்துவிட்டார்" என்று இடது கட்சியின் தலைமையை Kaufmann குற்றஞ்சாட்டுகிறார். ஐரோப்பிய அரசியலில் இருந்து அக்கட்சி அதனைத்தானே பிரித்துக்கொண்டுள்ளது, மேலும் சீர்திருத்த நிலைநோக்குடைய சக்திகளும் சிறுபான்மை அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளன. ஒரு "நவீன, தாராள மற்றும் சுதந்திர இடதை" உருவாக்குவதற்கான வாய்ப்பை அக்கட்சி தவறவிட்டுள்ளது.

இடது கட்சி "அதி-தீவிர" கோரிக்கைகளை முன்வைக்கிறது என்று குறிப்பிடும் Kaufmann, பிற அரசியல் கட்சிகளுடனான தொடர்புகளை உருவாக்குவதில் அதன் தவறை அது நேர்மறையாக பார்க்கிறது என்று குறிப்பிடுகிறார். அக்கட்சி அதன் சொந்த தனிமையையே கொண்டாடுகிறது, ஆனால் உண்மையில் யார் ஒருவர் சமரசத்திற்கு தயாராக இருக்கிறோரோ அவரால் மட்டுமே சமுதாயத்தை மாற்ற முடியும் என்றார்.

உண்மையில் குறிப்பிடும் வகையில் இடது கட்சி வலதிற்கு மாறும் முக்கிய வேளையில், அதன் மீதான தங்களின் குற்றச்சாட்டுகளுடன் வெக்செல்பேர்க் மற்றும் Kaufmann இருவரும் ஒருவர் பின் ஒருவராக வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜேர்மன் பாராளுமன்றத்தில் (Bundestag), இடது கட்சி தலைவர் Oskar Lafontaine, "நிதியியல் சந்தை முறையை... முடிந்த வரை விரைவாக அதன் கால்களில் நிறுத்துவதை உத்தரவாதம் செய்வது" அவசியமாகும் என்று கூறி, ஜேர்மன் அரசாங்கத்தின் வங்கி மீட்பு திட்டத்திற்கு விரைவான ஆதரவை அளித்துள்ளார்

ஒரு குறைந்தபட்ச உயர்வுக்கான ஒரு கோரிக்கைக்காக, ஹர்ட்ஸ் IV தொகைகளை கைவிடுவதற்கான எவ்வித கோரிக்கைகளுக்கும் இடது கட்சி குழி தோண்டியது. இதன் மூலம் ஹர்ட்ஸ் சட்டத்தின் கட்டமைப்பை அது வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டது. திவாலாகும் நிலையிலிருக்கும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் பங்களிப்புக்கான திட்டத்திற்கு அந்த கட்சி ஆதரவளிக்கிறது. 49 சதவீதம் வரையிலான பங்களிப்பை எட்ட தொழிலாளர்கள் அவர்களின் நிறுவனங்களில் தங்களின் சொந்த சம்பளத்தை முதலீடாக அளிக்க வேண்டும். அதாவது, நிறுவனத்தின் பெரும்பான்மை பங்களிப்பை பங்குதாரர்கள் மற்றும் தனியார் மூலதனத்தின் கைகளில் விட வேண்டும்.

ஐரோப்பிய மக்களின் பணி நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை தாக்குவதில் பல ஆண்டுகளாக முக்கிய பாத்திரம் வகித்த ஐரோப்பிய சங்கத்துடனும், அதன் அமைப்புகளுடனும் இடது கட்சி, சமீபத்திய ஐரோப்பிய தேர்தல் திட்டத்தில் அதனை அடையாளம் காட்டியுள்ளது. ஒரு மாற்று இராணுவ கூட்டணிக்கான (ரஷ்யாவின் பங்களிப்புடன் கூடிய "ஓர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை") கோரிக்கையுடன், நேட்டோ கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இடது கட்சி வெளியிட்டுள்ளது. காசாவில் இஸ்ரேலிய தாக்குதலுக்கான கூட்டொருமைப்பாடு குறித்து இடது கட்சியின் பல முன்னணி உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட ஒரு பொது அறிவிப்புடன், அக்கட்சி அதன் ஜேர்மன் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை கையாண்டது.

அமைப்பு மேலும் வலதின் பக்கம் திரும்பும் வேளையில் அக்கட்சியின் வலதுசாரி பிரபல பிரதிநிதிகள் அதிலிருந்து வெளியேறுவது முதற்பார்வையில் புரியாப்புதிராக தோன்றக் கூடும். கட்சியின் முந்தைய கொள்கையையும், மற்றும் அது அதை நெருக்கடிக்குள் மூழ்கடித்திருப்பதையும் தோலுரித்து காட்டியிருக்கும், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்துடன் தொடர்புடைய சமூக பதட்டங்களில் இதற்கான விளக்கத்தைக் காண முடியும்.

தற்போது வரை, இடது கட்சி தலைவர்களான Oscar Lafontaine மற்றும் Gregor Gysi இருவரும், சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு கொள்கைக்கு திரும்ப முடியும் என்ற கற்பனையை ஊக்குவிப்பதன் மூலம் அதிகரித்து வரும் சமூக அதிருப்தியை தணிக்க பார்த்தார்கள். வங்கி மீட்பு திட்டங்களை தொடர்ந்து, குறைந்த நேர வேலை பரவலாக்கம் மற்றும் பாரிய வேலையிழப்பு ஆகியவற்றின் அறிமுகம் என்ற இந்த முன்னோக்கு எவ்வித நம்பகத்தன்மையும் பெறவில்லை. உண்மையில், 1930களுக்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு, கூடுதலாக சில பில்லியன்களை முதலீடு செய்வதன் மூலம் யாரேனும் தீர்வு கூற முடியும் என்பதை யாரும் நம்பவில்லை.

கருத்துக்கணிப்புகளின்படி, நெருக்கடிக்கு இடையில் இடது கட்சி அதன் ஆதரவை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2007 ஜூனில் அதன் உத்தியோகபூர்வ உருவாக்கத்திலிருந்து முதன்முறையாக அக்கட்சி 10 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அது சராசரியாக 14 சதவீத ஆதரவு அளவைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது.

இடது கட்சி அதன் ஜனரஞ்சக வாய்ச்சவடால்களை கழிக்கவும், தற்போதிருக்கும் முறைக்கு பின்னால் நிபந்தனையின்றி பின்தொடரவும் இதுவே சரியான நேரம் என்று வெக்செல்பேர்க் மற்றும் Kaufmann குறிப்பிட்டனர். இந்த வேளையில் மக்களிடையே இடதுசாரி போக்குகளை முறையிடுவதற்கான எவ்வித முயற்சியும் மிகவும் அபாயகரமாக அமையும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். முதலாளித்துவத்திற்கு இடது கட்சி எவ்வித மாற்றையும் காணவில்லை என்பதை அது தெளிவாக்க வேண்டும். மேலும் மக்கள் வேறு விதமாக சிந்திக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படாமல் இருப்பதையும் அது உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.

உண்மையில், கட்சி தலைமையுடனான அவர்களின் முரண்பாடுகள் சுத்தமாக தந்திரோபாய இயல்புடையதாகும். சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமை கட்சியுடன் ஓர் அரசாங்க கூட்டணியை உருவாக்க Lafontaine மற்றும் Gysiயும் போராடி வருகிறார்கள். தங்களின் நம்பகத்தன்மையை ஆளும் வர்க்கத்திற்கு எடுத்துக்காட்ட அவர்களால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வருகிறார்கள். எவ்வாறிருப்பினும் தங்களின் இடதுசாரி வாய்ச்சவடால்களுக்கு குழி பறிக்க இடது கட்சி தலைமைக்கு இது நேரமில்லை. அவர்களின் கருத்தில், இதுபோன்ற ஒரு நடவடிக்கை இடது கட்சியின் செல்வாக்கை மேலும் கீழறுக்கக்கூடும் என்பதுடன் ஒரு உண்மையான சோசலிச எதிர்ப்புக்கும் கதவைத் திறந்து விடக்கூடும்.

இரண்டு நிலைப்பாடுகளுமே - ஒருபுறம் வெக்செல்பேர்க் மற்றும் Kaufmann, மறுபுறம் Lafontaine மற்றும் Gysi - கட்டுப்பாடற்ற சந்தை முறைக்கு சவால் விட திறம் படைத்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் பற்றிய ஆழ்ந்த அச்சத்தில் ஒன்றுபட்டுள்ளன. இதுபோன்றதொரு இயக்கத்தைத் தடுப்பதே இடது கட்சியின் மிக முக்கிய பணியாக இருக்கிறது.