World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party considers alliances to the left and to the right

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி இடதிலும் வலதிலும் நட்புக் கூட்டுக்களை எண்ணிப்பார்க்கிறது

By Kumaran Ira and Alex Lantier
29 May 2009

Use this version to print | Send feedback

ஐரோப்பிய தேர்தலில் பிரான்சின் முக்கிய முதலாளித்துவ இடது கட்சியான சோசலிஸ்ட் கட்சியின் (PS) தேர்தல் பிரச்சாரம் மோசமான முறையில் இருப்பது பிரெஞ்சு அரசியல், செய்தி ஊடக நடைமுறையில் பரந்த கவலையைத் தூண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்தும் செல்வாக்கற்ற ஜனாதிபதி சார்க்கோசியின் பழமைவாத UMP ஐ அகற்றுவதிலிருந்தும் அதிக நலன்களை சோசலிஸ்ட் கட்சி பெற இயலாமை பற்றி அதிர்ச்சியடைந்துள்ள செய்தியாளர்களும் அரசியல்வாதிகளும் சோசலிஸ்ட் கட்சி எப்படி மற்ற கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு வெற்றிபெறும் வாய்ப்புத் திறனுடைய தேர்தல் கூட்டணி அமைக்காலம் என்பது பற்றி பல திட்டங்களை கொடுத்துள்ளனர்.

சோசலிஸ்ட் கட்சியின் (PS) தேர்தல் தளத்தில் ஏற்பட்டுள்ள சரிவு பரந்த மக்கள் பிரிவுகள் அதன்மீது விரோதப் போக்கு கொண்டுள்ளதால் ஏற்பட்டுள்ளது. 1971ல் இருந்து PS உம் PCF எனப்படும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டு சேர்ந்தது PS ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் ஒரு PS-PCF அரசாங்கம் 1981ல் அமைக்கப்பட்டதற்கு வழிவகுத்தது; ஆனால் அது விரைவில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்பார்ப்புக்களை காட்டிக் கொடுத்துவிட்டது. 1982ல் இருந்து சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தியது, அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தாலும் தொழிலாளர்கள் மீது அவற்றைச் சுமத்தியது. PS பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் உடைய பன்முக இடதின் (PS, PCF, Greens) 5 ஆண்டு அரசாங்கம் (1997-2002) மற்றும் அதன் முதலாளித்துவ சார்பு கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தை விரோதப்படுத்திய தன்மை புதிய பாசிச Jean-Marie Le Pen அதிக வாக்குகளைப் பெற்று ஜோஸ்பன் 2002 ஜனாதிபதி தேர்தல்களில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட வைத்தது.

இவ்விதத்தில் தேர்தலில் தக்க மாற்றீடு இல்லாத நிலை பிரெஞ்சு அரசியல் நடைமுறைக்கு உளைச்சலை தந்துள்ளது. அலையென வந்துள்ள வேலைநிறுத்தங்களும் ஆலை ஆக்கிரமிப்புக்களும், பொருளாதார நெருக்கடி, பிரெஞ்சு அரசாங்கம் பல பில்லியன் யூரோக்கள் வங்கிப் பிணை எடுப்பிற்கு அளித்தது பற்றி பெருகும் மக்கள் சீற்றத்திற்கு சான்றாக உள்ளன. ஆனால் தற்போதைய தேர்தல் நிலைமை மற்றும் மரபார்ந்த அரசியல் கூட்டுக்களின் தன்மையில் எப்படி ஒரு அரசாங்கம் UMP மேலாதிக்க பங்கைக் கொண்டிராத வகையில் வர முடியும் என்று பார்ப்பது கடினமானதாகும்.

முதலாளித்துவ வலதிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முயலுவதுதான் PS ன் விடையிறுப்பு ஆகும். முக்கியமான செய்தியாளர்களும் PS அரசியல்வாதிகளும் PS பிரான்சுவா பேய்ரூவின் வலதுசாரி MoDem (ஜனநாயக இயக்கம்) அல்லது பரந்த கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டு பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று அழைத்துள்ளனர்.

வலதுசாரி அரசாங்கங்களில் பல முறையும் கல்வி மந்திரிப் பதவியை வகித்துள்ள மையவாத அரசியல்வாதி பேய்ரூ சமீபத்தில் சார்க்கோசி மற்றும் அவருடைய கொள்கைகளை கண்டித்து அதிகார துஷ்பிரயோகம் (Abuse of Power) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தில் பேய்ரூ செய்தி ஊடகத்தைப் பெரிதும் நம்பியுள்ள சார்க்கோசி, அவருடைய "பணம் பற்றிய சிந்தனைப்போக்கு", சார்க்கோசி மட்டுமே உள்ள "தன்னலக்குழுவிடம்" அதிகாரக்குவிப்பு, சட்ட உரிமைகள் மற்றும் வழிவகைகள் பற்றிய அவரது அவமதிப்பு ஆகியவற்றைக் குறை கூறியுள்ளார். சில சமயம் இக்கருத்துக்கள் சார்க்கோசியை "காட்டுமிராண்டி குழந்தை", "பிரெஞ்சுக் குடியரசை கற்பழிப்பவர்" என்று வெறிகொண்ட மொழிநடையில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் கருத்துக் கணிப்பு ஒன்றின்படி, 2012 ஜனாதிபதித் தேர்த்ல்கள் இன்று நடைபெற்றால், பேய்ரூ வாக்குகளில் 19.5 சதவிகிதத்தை பெறுவார், ரோயால் 20 சதவிகிதம் மற்றும் சார்க்கோசி 28 சதவிகிதம் எனப் பெறுவர். பழமைவாத நாளேடு Le Figaro, "பிரான்சில் எதிர்க்கப்படும் முதல் நபர்" என்ற பட்டத்தை PS இடமிருந்து சார்க்கோசி திருடிவிட்டதாக எழுதியுள்ளது. கருத்துக் கணிப்புக்கள் PS ன் ஆதரவாளர்களில் மூன்றில் இருவர் ஒரு PS-MoDem கூட்டை விரும்புவதாகத் தெரிவிக்கின்றன.

ஒரு PS-MoDem கூட்டுத் திட்டம் முதலில் இந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முன்னாள் PS செயலாளர் பிரான்சுவா ஹோலந்துடன் கண்ட பேட்டியில், L'Express இதழில் வெளிவந்தது. அவர் பேய்ரூவை PS உடனான கருத்து ஒற்றுமைகள், வேற்றுமைகள் பற்றி விளக்குமாறும் அவற்றில் இருந்து தேவையான முடிவுகளை கூறுமாறும்" கேட்டிருந்தார்.

இத்திட்டம் ஒன்றும் புதிது அல்ல: 2007 ஜனாதிபதித் தேர்தல்களில் PS வேட்பாளர் செகோலீன் ரோயால் இரண்டாம் சுற்றுக்குப் பின்னர் கூறியபின் இது பெரும் விவாதத்திற்கு உட்பட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடி மற்றும் PS இன் தேர்தல் இடர்பாடுகள் ஆகியவை PS ன் பெரும்பகுதியை பேய்ரூவுடன் கூட்டு என்ற கருத்திற்கு ஆதரவாகத் தள்ளியுள்ளன.

மே 4ம் தேதி PS ன் Dijon மேயரான பிரான்சுவா ரெப்ஸ்மென்--PS முதல் செயலாளர் லீல் மேயர் மார்டின் ஓப்ரி போலவே உள்ளூர் MoDem கூட்டின் உதவியினால் முனிசிப்பல் தேர்தலை வென்றவர்-- கூறினார்: "பல சோசலிஸ்ட்டுக்களும் MoDem உடன் கூட்டு கொண்டுள்ளனர்; தங்கள் அரசியல் திட்டங்களை அவை தளமாகக் கொண்டுள்ளன. முதல் சுற்றுக்கு முன்போ, இரண்டாம் சுற்றுக்கு முன்போ இதேதான் அடுத்த பிராந்திய தேர்தல்களிலும் (2010) நடக்கும். எனவே ஐரோப்பிய தேர்தல்களுக்கு பின்னர் பிரான்சுவா பேய்ரூவுடன் விவாதங்களை தொடங்குவோம்.... ஒற்றுமைக்கூறுபாடுகள் உறுதிசெய்யப்பட்டால், அரசாங்கத்தில் நுழைவதற்கான உண்மை ஒப்பந்தத்தை விரிவுபடுத்தலாம்."

சற்றே குறைந்த ஆர்வத்தைக் கொண்டிருந்தாலும், முன்னாள் PS பிரதம மந்திரி Laurent Fabius பேய்ரூவுடன் கூட்டணிக்கான கதவுகளை திறந்துதான் வைத்துள்ளார். இறுதியில் PS உடைய கூட்டாக பேய்ரூ வந்துவிடுவார் என்று நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு அவர், "ஒவ்வொரு இராணுவத்தினனும் சிவிலியனாகத்தான் தொடங்குவார்" என்று விடையிறுத்தார்.

தன்னுடைய மே 4ம் தேதி Le Figaro தலையங்கத்தில் Paul-Henri du Limbert பேய்ரூவை ஒருவேளை PS ன் வருங்காலத் தலைவராகக்கூடும் என்று புகழ்ந்து அவரை PS ன் பிரான்சுவா மித்திரோனுடன் ஒப்பிட்டார். 1981ல் இருந்து 1995 வரை பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த மித்திரோனும் ஒரு வலதாகத்தான் தொடங்கினார்: 1930 களின் வலதுசாரி கத்தோலிக்க இளைஞர் குழுக்களில் மிகத் தீவிரமாக இருந்து, போரின்போது ஒத்துழைத்த விஷி அரசாங்கத்தில் பணிபுரிந்தார். நான்காம் குடியரசுக் காலத்தில் (1946-1958) அவர் உள்துறை மந்திரியாகவும், பின்னர் அல்ஜீரியப் போரின்போது நீதித்துறை மந்திரியாகவும் இருந்தார் என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பதவிகளையொட்டி அவர் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அல்ஜீரிய மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை குருதி கொட்டி அடக்கியதில் பங்கு பெற்றிருந்தார்.

இறுதியில் இவர் PS ன் தலைவராக 1971ல் பொறுப்பேற்றார்.

சார்க்கோசியின் குடிபெயர்ந்துள்ள பின்னணி பற்றி அதிகம் மறைப்புக் காட்டாத குறிப்பில் Limbert எழுதினார்: "பேய்ரூவின் தலையில் ஒரு தொப்பியை அணிவித்தால்போதும், மித்திரோனுடன் அவர் கொண்டுள்ள ஒற்றுமையைக் காணலாம். ஒருவர் Charentes பகுதியில் இருந்து வந்தவர் மற்றவர் Beran ல் இருந்து வந்தவர். இருவரும் விரல் நுனி வரை பிரெஞ்சுக்காரர்கள், மித்திரோன் பிரான்சை இந்த "என்னுடைய இளமைக்கால நிலத்தை" என்று அழைத்தது போல் பிரான்சை போற்றுவபவர்கள்.

Liberation நாளேட்டின் முக்கிய அரசியல் தலையங்கம் எழுதும் Laurent Joffrin ம் பேய்ரு-PS கூட்டை தன்னுடைய மே 4ம் தேதி "சார்க்கோசியை தோற்கடிப்பது எப்படி?" ("How to beat Nocolas Sarkozy?") என்ற தலையங்கத்தில் ஆதரித்து எழுதியுள்ளார். சோசலிஸ்ட் கட்சிக்கும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்ள "இடதின் ஒற்றுமை" ("Union of the Left") கூட்டு இனி நம்பகமான பெரும்பான்மையை தர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்: "Union of the Left அப்பொழுது பன்முக இடதாக இருந்தது (1997-2002ல் சோசலிஸ்ட் கட்சி - பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி - பசுமைகள் கூட்டணி), எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி - சோசலிஸ்ட் கட்சி கூட்டு ஆகும். ஆனால் இப்பொழுது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி இல்லை, சோசலிஸ்ட் கட்சி வலுவற்று உள்ளது --எங்கிருந்து பெரும்பான்மை கிடைக்கும்? Colonel-Fabien Square [PCF தலைமையகத்தில் உள்ள] Mohicans களின் கடைசியானவர் அவர்களின் கறையான் அரித்த பதாகையின்கீழ் 2 சதவிகித வாக்குகளத்தான் சேகரிக்க முடியும்."

எனவே அவர் ஒரு பரந்த கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் -- "சார்க்கோசிக்கு பிந்தைய ஒரு பெரும் கூட்டணி, அதிகாரத்துவங்களின் கூட்டினால் சேர்க்கப்படாமல், தடையற்ற சந்தை கருத்துடன் முறிந்தவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிறைந்தவர்கள், பழைய சோசலிஸ்ட் கட்சி ஆளான Jean-Luc Mélenchon போன்றவர்கள் PS, பிரான்சுவா பேய்ரூவின் ஆதரவாளர்கள், பழமைவாத முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மூலம் ஊக்கம் பெற்ற சமூக மற்றும் குடியரசு கோலிஸ்ட்டுக்கள் என அனைவரும் நிறைந்த அரங்காக இருக்கும்."

PS உறுப்பினர்கள் குழு, முன்னாள் பாதுகாப்பு மந்திரி Paul Quilès, ஐரோப்பிய பிரதிநிதி Marie-Noëlle Lienemann, PS செய்தித் தொடர்பாளர் Benoît Hamon அடங்கிய Gauche Avenir (இடது வருங்காலம்), PS உடன் கூட்டு வேண்டும் என்று கூறுகிறது; மற்றும் இடதுகளில் இருக்கும் கட்சியையும் சேர்ந்து "புதிய மக்கள் முன்னணி" என்ற பெயரில் அமைக்க விரும்புகிறது.

இது 1936-38 மக்கள் முன்னணி அரசாங்கத்தைக் குறிக்கிறது; அதில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் முதலாளித்துவ தீவிரப்போக்கு கட்சி ஆகியவை அடங்கியிருந்தன; இதற்கு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உடைய ஆதரவு இருந்தது. மே 1936 மக்கள் முன்னணி வெற்றியைத் தொடர்ந்து தொழிலாள வர்க்கம் அலையென வேலை நிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் ஆகியவற்றைத் தொடங்கியது; இவை ஒரு புரட்சிகர வேலைநிறுத்தமாக வளர்ச்சியுற்றன. புரட்சிகர எழுச்சி இறுதியில் மக்கள் முன்னணியால் PCF உடைய முக்கிய ஆதரவுடன் காட்டிக் கொடுக்கப்பட்டது.

முதலாளித்துவ நிலைப்பாட்டில் இருந்து மக்கள் முன்னணியின் பிரதான முக்கியத்துவம் அது பிரான்சிலும் ஐரோப்பாவிலும் செயற்பட்டியலில் இருந்து புரட்சிகரப் போராட்டத்தை அகற்றிவிட்டது; பாசிச நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளின்கீழ் இருந்த மக்களை கைவிட்டு போருக்கு பாதையை அமைத்துவிட்டது. ஆனால் பொது வேலைநிறுத்தத்தை அடக்குவதற்கு மக்கள் முன்னணி கணிசமான சமூக சலுகைகளை தொழிலாளர்களுக்கு கொடுக்க நேரிட்டது; அவை அடுத்த சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டன.

இச்சலுகைகளைத்தான் "புதிய மக்கள் முன்னணி" என்று அழைக்கும்போது Lienemann, Quilès, Hamon போன்றோர் மனதில் கொண்டுள்ளனர். ஆனால் இது ஒரு மோசடித்தனம்; PS, PCF, Left Party, NPA ஆகியவை முற்போக்கு சமூக சீர்திருத்தங்களை செயல்படுத்தி மக்களை உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற போலித் தோற்றங்களை ஏற்படுத்தும்.

இத்தகைய அரசியல்வாதிகள் முதல் மக்கள் முன்னணிக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வியை எழுப்புவதில்லை. 1938ல் அது கடுமையான வேலைநிறுத்தங்கள் மற்றும் கடுமையான அரசியல் சூழ்நிலையில் --PCF சட்டத்திற்கு புறம்பாக்கப்பட்டது, இரண்டாம் உலகப் போர் பிரகடனம், பிரெஞ்சு முதலாளித்துவம் நாஜிக்களுக்கு அடிபணிந்தது-- சரிந்து போயிற்று. பிரெஞ்சு முதலாளித்துவம் மக்கள் முன்னணி சீர்திருத்தங்களை நாஜி ஆக்கிரமிப்பிற்கு பின்னரும் கொடுக்க முடிந்ததற்கு காரணம் மார்ஷல் திட்டத்தின் கீழ் அமெரிக்க முதலாளித்துவம் அளித்த மகத்தான நிதிய உதவி; போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் மறு உறுதிப்பாடு, ஆகியவற்றினால்தான். ஆனால் தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி இந்த வரலாற்று நிலைமைகளில் எஞ்சியிருந்தவற்றின் இறுதி முறிவைத்தான் துல்லியமாகக் காட்டியுள்ளது.

ஒரு "புதிய மக்கள் முன்னணி"யின் அரசியல் பங்கு இன்றைய பிரான்சில் இத்தாலியின் 2006-2008 "l'Unione" அரசாங்கத்தின் பங்கைப் போல் இருக்கும்; அது ரோமனோ ப்ரோடியின் ஜனநாயகக் கட்சி, Rifondazione Comunista மற்றும் பல சிறு குட்டி முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிகளின் குழு ஆகும்: அதாவது சமூக சிக்கனத்திற்கும் போருக்கு ஆதரவு கொடுக்கும் கருத்தைக் கொண்டவை. முக்கியமான வேறுபாடு "புதிய மக்கள் முன்னணி" உலக நெருக்கடியினால் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட பொருளாதார அஸ்திவாரங்களின் அடிப்படையில் தன் கொள்களைகளை வகுக்க வேண்டும்.

இத்தகைய கூட்டிற்கு தற்காலத்தில் மற்றொரு முன்னோடி இருப்பதையும் கூறலாம். 2002 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் ஜாக் சிராக்கும் புதிய பாசிச Jean Marie Le Pen ம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய போது, இடது கட்சிகள் எவையும் புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுக்கவில்லை. மாறாக PS, PCF, பசுமை வாதிகள், LCR (இன்றைய புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் முன்னோடி), ஆனைத்தும் சிராக்கிற்கு வாக்களிக்குமாறு கோரின. இதன் விளைவாக, சிராக் தேர்தலில் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றார்; அதை அவர் பயன்படுத்தி அவருடைய அரசியல் தந்திரச் செயல்களின் சுதந்திரம் மக்கள் எதிர்ப்பினால் தடைக்கு உட்படுவதற்கு முன்பு, பல சமூக நல செலவினக் குறைப்புக்களை செய்தார்.

PCF உடன் இணைந்துள்ள Humanite நாளேட்டில் வந்துள்ள அறிக்கை ஒன்றில், கூட்டாக Marie-Noëlle Lienenmann, Paul Quilès ஆகியோரால் கையெழுத்திடப்பட்டதில், இருவரும் ஒரு புதிய மக்கள் முன்ணியை, "ஒவ்வொருவரையும் மதிக்கும் உலகளாவிய உடன்பாடு, இடதுகளின் குவியம் (அரசியல், தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள் ஆகியவை) அரசாங்கத்தை பின்வாங்க செய்து நியாயமான நடவடிக்கைகள் எடுக்கவும், சார்க்கோசியின் தர்க்கத்தில் இருந்து மாறுபட்ட கருத்துக்களை அளிக்கவும்" அமைக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளனர்.

மக்கள் முன்னணியை "2012 ல் இடதிற்கு வெற்றியை அமைக்கக்கூடிய ஒரே தீவிரப் பாதை" என்று அழைக்கும் இவர்கள் ஐரோப்பிய தேர்தல்களுக்கு பின்னர் New Popular Front அமைக்க ஒரு குழுவிற்கு முன்மொழிந்துள்ளனர். இக்குழு அரசியல் திட்டத்தை வரையறுத்து "ஜனாதிபதித் தேர்தலில் ஒரே ஒரு இடது வேட்பாளர் இருக்கும் வகையிலும், கூட்டணி ஆட்சியில் பலதரப்பட்ட கூறுபாடுகள் பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதிபடுத்தும் வகையில் சட்டமன்ற உடன்பாட்டையும்" ஏற்படுத்தும்.

செகோலீன் ரோயால், பேய்ரூவுடன் கூட்டு மற்றும் இன்னும் "இடதுகளுடன்" கூட்டு என்பதை ஒரே நேரத்தில் கொள்ள விரும்பும் கருத்திற்கு முக்கிய ஆதரவாளராக வெளிப்பட்டுள்ளார். மே 12ம் தேதி அவர் "ஐரோப்பாவில் இடதின் வருங்காலம்" என்ற கருத்தாய்வில் பங்கு கொண்டார்; இது ஸ்பெயினின் நாளேடு El Pais மற்றும் கிரேக்க நாளேடு To Vima ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய வலது சாரி ஐரோப்பிய சமூக ஜனநாயகத் தலைவர்களுடன் அரங்கில் பங்கு பெற்றார். கிரேக்க சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான பஸோக், ஜோர்ஜ் பபன்ட்ரூ, முன்னாள் இத்தாலியப் பிரதம மந்திரி மாசிமோ ட அலேமா, முன்னாள் ஸ்பெயின் ஜனதிபதி பெலிப் கோன்சாலெஸ் ஆகியோர் அதில் அடங்குவர்.

தன்னுடைய முக்கிய உரையில் ரோயால் கூறினார்: "ஐரோப்பிய இடதிற்கு அனைத்தும் சரியாகச் செல்கிறது. வோல் ஸ்ட்ரீட்டின் திவால் மற்றும் உலக நிதிய நெருக்கடி தடையற்ற சந்தை முறையைக் கண்டனத்திற்கு உட்படுத்தி, அரசாங்கத்திற்கான தேவை, சமூகப் பாதுகாப்பு பற்றிய கோரிக்கை, உண்மையான நிதியக்கட்டுப்பாடு, பொருளாதாரத்தின் பணிக்கு நிதியத்தை பயன்படுத்துதல், மனித முன்னேற்றத்திற்காக பொருளாதாரம் பயன்படுத்தப்படல் என, இடது எப்பொழுதும் போற்றிய கோரிக்கைகளுக்கு இடமளித்துள்ளது.

ரோயால் மேலும் கூறினார்: "நாம் இடதை ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் வளர்ந்து கொண்டிருக்கும் தீவிரமயப்படலுடன் சமரசப்படுத்திக் கொள்ள வேண்டும்."

ஆனால் தக்க சான்றுகள் தெளிவாகத்தான் உள்ளன: PS ன் விடையிறுப்பு மற்றும் நெருக்கடிக்கு அதன் செய்தி ஊடக நண்பர்கள் விடையிறுப்பு பலவித கட்சிகளுடன் - தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சமூக சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்திய விதத்தில்தான் ஒற்றுமையைக் காட்டிய UMP யில் இருந்து PCF வரை - ஒத்துழைப்பு என்பதாக உள்ளது.