:
ஆசியா
:
சீனா
China and Russia forge closer military cooperation
சீனாவும், ரஷ்யாவும் நெருங்கிய இராணுவ ஒத்துழைப்பில் முன்னேறுகின்றன
By John Chan
26 May 2009
Use this
version to print | Send
feedback
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க யுத்தமும், பாக்கிஸ்தானில் அமெரிக்க ஆதரவிலான
சண்டையும் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 25 கூட்டு இராணுவ நடவடிக்கைகளுடன்
ரஷ்யா மற்றும் சீனா அவற்றின் இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகின்றது. முன்னதாக, 2002 வரை சீனா அன்னிய
நாடுகளுடன் மொத்தம் வெறும் 21 இராணுவ பயிற்சிகளை மட்டுமே கொண்டிருந்தது.
ஏப்ரல் 29ல் நடந்த பாதுகாப்பு மந்திரிகளின் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின்
(SCO) கூட்டம், அந்த திட்டங்களை உறுதிப்படுத்தியது. இந்த
அமைப்பு ஓர் இராணுவ கூட்டணியாக உருவாகி வருகிறது என்பதை மறுத்து, இந்த கூட்டம் ஓர் அரசியல் மறுப்பறிக்கையை
வெளியிட்டது. அனைத்து பயிற்சிகளும் "பயங்கரவாதத்திற்கு
எதிரான யுத்தத்தைக்"
குறி வைத்து நடத்தப்பட்டவையே அல்லாமல், ஒரு மூன்றாவது நாட்டிற்கு எதிராக அல்ல என்று அது குறிப்பிட்டது.
எவ்வாறிருப்பினும், சீனா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராணுவ உறவுகள் அமெரிக்காவை
எதிர்க்க நோக்கம் கொண்டவை என்ற சிறு சந்தேகம் நிலவுகிறது. கடந்த டிசம்பரில், சீன ஜனாதிபதி ஹூ
ஜின்டோ பின்வரும் அறிவிப்புடன், நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார்:
"சீன-ரஷ்ய மூலோபாய பங்காண்மையையும், எதிர்காலத்தை
நோக்கிய சிறந்த மற்றும் விரைவான அபிவிருத்திக்காக ஒரு புதிய வரலாற்று ரீதியான தொடக்கப் புள்ளியிலிருந்து
இரண்டு இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளையும் முன்னேற்ற.... நான் எண்ணுகிறேன்."
எரிசக்தி வளம்மிக்க மத்திய ஆசியாவை சீனா மற்றும் ரஷ்யா இரண்டுமே முக்கிய
மூலோபாயமாக காண்கின்றன என்பதால், முன்னாள் சோவியத் குடியரசுகளுடன் அமெரிக்காவின் உறவுகள்
வளர்வதற்கு பதில் நடவடிக்கையாக 2001ல் SCO
உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீட்டைத்
தொடர்ந்து இந்த அமைப்பு அதன் நோக்கத்தை விரிவாக்கியது. 2005ல், தங்களின் முதல் கூட்டு இராணுவ
பயிற்சியை தொடங்கிய சீனா மற்றும் ரஷ்யா, 2007ல் அதை ஒரு பரந்த
SCO
நிகழ்வாக விரிவாக்கின. ரஷ்யா, சீனா, கஜகஸ்தான்,
உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிரிகிஸ்தான் ஆகியவை இந்த
SCO
அமைப்பில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், மங்கோலியா
மற்றும் ஈரான் ஆகியவை பார்வையாளர்களாக இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டிற்கான யுத்த விளையாட்டுக்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஏப்ரலில்,
ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள தஜிகிஸ்தான் எல்லையில் ஒரு
"கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு"
பயிற்சியை SCO
நடத்தியது.
"Peace Mission 2009"
என்ற முக்கிய பயிற்சி ஜூலை-ஆகஸ்டில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில்
வழக்கமான பயிற்சிகளுடன், 2,000த்திற்கும் மேலான ரஷ்ய-சீன துருப்புக்களும், டாங்கிகள், போக்குவரத்து
விமானங்கள், தானியங்கி ஏவுகணைகள் மற்றும் முடிந்தால் மூலோபாய வெடிகுண்டுவீசிகள் போன்ற கனரக
ஆயுதங்களும் சேர்க்கப்படலாம். ரஷ்யாவால் திட்டமிடப்பட்டு வரும் இந்த மூன்று கட்ட பயிற்சியானது,
மங்கோலியாவின் எல்லைக்கருகில் வடகிழக்கு சீனாவில் நடத்தப்படும்.
ஜோர்ஜியா மீது நேட்டோவுடனான உறவுகள் சீர்குலைந்த போது தான், நெருங்கிய
ரஷ்ய-சீன இராணுவ ஒத்துழைப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. ஜோர்ஜியாவில் மே 5ல் தொடங்கிய நேட்டாவின்
27 நாட்கள் இராணுவ பயிற்சிக்கு மாஸ்கோ கண்டனம் தெரிவித்த போது, ஜோர்ஜிய டாங்கி பிரிவின் கலகத்திற்கு
பின்னால் ரஷ்யா இருப்பதற்காக ரஷ்யாவை திபிலிசி குற்றஞ்சாட்டியது.
ஏப்ரல் 28ல், ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வதேவுடன் பிராந்திய பாதுகாப்பு
குறித்து விவாதிக்க சீனாவின் பாதுகாப்பு மந்திரி லீங் காங்லி தலைமையில் ஒரு பிரதிநிதிகள் குழு ரஷ்யாவின் வடக்கு
காகசஸ் இராணுவ மாகாணத்திற்கு சென்றது. ஏப்ரல் 30ல், ரஷ்ய படைகள் ஜோர்ஜியாவிலிருந்து உடைந்து வந்த
பிராந்தியங்களான அப்காஜியா மற்றும் தெற்கு ஒசிடியாவின் எல்லைகளைப் பாதுகாக்க அனுமதிக்கும் வகையில்,
அவற்றுடன் ரஷ்யா ஐந்து ஆண்டுகளுக்கான பாதுகாப்பு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டது.
எரிசக்தி வளம்மிக்க யுரேஷியாவின் மையப்பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு
வருவதற்கான அமெரிக்காவின் மூலோபாய திட்டங்கள் மீதான ரஷ்யா மற்றும் சீனாவின் பரஸ்பர கவலைகள் தான்
அவற்றின் நெருங்கிய உறவுகளுக்கு பின்னால் இருக்கும் செயலூக்கிகளாகும். ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகியவற்றை
நோக்கி ஒபாமா நிர்வாகம் நேசக் குறிப்புகளை காட்டியிருக்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், தற்போது பாகிஸ்தானிலும்
அது யுத்தத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் யுத்தத்தை விட இந்த நகர்வுகள் மிகவும்
அச்சுறுத்தலானவை என்று பெய்ஜிங்கும், மாஸ்கோவும் குறிப்பிட்டுள்ளன.
ஆசியா டைம்ஸ் மே 14ல் பின்வருமாறு குறிப்பிட்டது:
"பின்னர் ஆப்கானிஸ்தான் குறித்து சிந்தியுங்கள், திரவத்திற்கான
(எண்ணெய் மற்றும் எரிவாயு) யுத்தத்தில் புறக்கணிக்கப்பட்ட துணை நிகழ்ச்சியாக உள்ளது. மொத்தத்தில்,
1970களின் ஆரம்பத்தில் இருந்த ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் சகாப்தத்தில் இருந்து, அமெரிக்க வெளிநாட்டு
கொள்கையின் ஒரு குறிக்கோள் ரஷ்யா மற்றும் சீனாவைப் பிரிப்பது தான். 1999 மார்ச்சில் சேர்பியாவில்
குண்டுவீச தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் பட்டுச்சாலை மூலோபாய சட்டத்தை அமெரிக்க காங்கிரஸ்
கொண்டு வந்த போதிலிருந்து, SCOவின்
தலைமை இதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த சட்டம் மத்திய ஆசியாவில் அமெரிக்க பாதுகாப்பு நாடுகளின்
அலங்காரங்களை உருவாக்குவது மற்றும் யுரேஷிய எரிசக்தி இடைவழி நிலங்களை இராணுவ துணையுடன் பாதுகாப்பது
ஆகியவற்றுடன் கருங்கடலில் இருந்து மேற்கு சீனா வரையிலான அமெரிக்காவின் புவிமூலோபாய நலன்களை தெளிவாக
வெளிப்படுத்தி காட்டியது. இப்போது நடந்துவருவது போல, கெளகாசஸ் மற்றும் மேற்கு சீனாவை இணைக்கும்
எவ்வித புதிய பட்டுச்சாலைகளின் சந்திப்புக்களில் வசதியாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது. இத்துடன் நான்கு அணுசக்தி
நாடுகளும் (சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா) அருகில் பதுங்கி இருக்கின்றன."
இதன் தொடர்ச்சியாக, மத்திய ஆசியா முக்கிய சக்திகளுக்கு இடையிலான ஒரு
போட்டிக் களமாக உருவாகி உள்ளது. மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கின் அழுத்தத்தின் கீழ், மத்திய ஆசியாவில்
இருந்து அமெரிக்க தளங்களை நீக்குவதற்கு 2005ல் SCO
அழைப்பு விடுத்தது. உஸ்பெகிஸ்தான் அதன் அமெரிக்க
விமானத்தளத்தை மூடியது மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நீர்வழி வினியோகத்திற்கு அமெரிக்க இராணுவத்தால்
பயன்படுத்தப்பட்டு வந்த மனூஸ் தளம் மூடப்படும் என்று இந்த ஆண்டு கிர்கிஸ்தான் அறிவித்தது. மேற்படியில்
இரண்டாவது அறிவிப்பானது, ரஷ்யா 2.15 பில்லியன் டாலர் உதவியாக வழங்கியதுடன் பொருந்தி இருந்தது.
பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளும் தொடர்ந்து யுத்தத்தில் சிக்க
வைக்கப்பட்டிருப்பதால், மூடிய ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல பெண்டகன் மாற்று வினியோக பாதையைத் தேடி
வருகிறது. ஈரானுடன் வாஷிங்டனுக்கு எவ்வித உறவுகளும் இல்லை என்பதால், மத்திய ஆசியா மூலமாக மட்டுமே
ஒரே வாய்ப்பு உள்ளது. குறைந்தளவிலான இராணுவ சரக்குகளை கொண்டு செல்ல அனுமதிக்க ஆப்கானிஸ்தானின்
எல்லையில் உள்ள இரண்டு SCO
நாடுகளான தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுடன் அமெரிக்கா
இந்த ஆண்டு உடன்பாடுகள் செய்து கொண்டது.
எவ்வாறிருப்பினும், மத்திய ஆசியா வழியிலான பெரும்பாலான பாதைகளுக்கு
ரஷ்யாவின் மறைமுக அனுமதி தேவைப்படுகிறது. இதற்கு கைமாறாக, ஜோர்ஜியா மற்றும் உக்ரேனை
நேட்டோவிற்குள் கொண்டு வரும் திட்டங்களை கைவிடுவது போன்ற குறிப்பிடத்தக்க சலுகைகள்
எதிர்பார்க்கப்படுகின்றன. ரஷ்யாவை தவிர்த்து, ஜோர்ஜியா வழியாகவும், அஜர்பைஜானிலிருந்து துர்க்மெனிஸ்தான்
வழியாகவும் கருங்கடலில் இருந்து ஒரு புதிய வினியோக பாதையை ஏற்படுத்த பெண்டகன் முயன்று வருகிறது.
உதவிகள் மற்றும் இராணுவ கூட்டுறவின் மூலம் மத்திய ஆசியாவில் ரஷ்யா அதன்
செல்வாக்கை உயர்த்தி வருகிறது. பெப்ரவரியில், பெலாரஸ், ஆர்மீனியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான்,
உஜ்பெகிஸ்தான் மற்றும் கஜகிஸ்தான் போன்ற ரஷ்யாவின் முன்னாள் சோவியத் குடியரசுகளை உள்ளடக்கிய
ஒருங்கிணைந்த பாதுகாப்பு உடன்பாட்டு அமைப்பு
(Collective Security Treaty Organisation - CSTO)
என்பதன் ஒரு பகுதியாக 3,000 துருப்புகளைக் கொண்ட ஒரு
விரைவு பதில் நடவடிக்கை படையை மாஸ்கோ உருவாக்கியது. இந்த திட்டம் படையை 10,000மாக உயர்த்த
உள்ளது.
SCO அமைப்பின் மத்திய ஆசிய
உறுப்பினர்கள் அனைவரும் மாஸ்கோவின் செல்வாக்கின் கீழ் உறுதியாக இல்லை. சான்றாக, ஏப்ரலில்
தாஜிக்-ஆப்கான் எல்லையில் மூன்று நாட்கள் நடந்த SCO
பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் பங்கெடுக்க உஸ்பெகிஸ்தான்
மறுத்துவிட்டது. 2005 வரை மத்திய ஆசியாவில் உஸ்பெகிஸ்தான் அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டாளியாக
இருந்தது. அரசியல் எதிர்ப்பின் மீதான அதன் ஒடுக்குமுறையின் மேற்கத்திய விமர்சனங்களுக்கு பின்னர் அது
முற்றிலுமாக மாஸ்கோவின் பக்கம் திரும்பியது.
கடந்த அக்டோபரில், உஸ்பெகிஸ்தான் மீதான அதன் தடைகளை ஐரோப்பிய
ஒன்றியம் நீக்கியது. இதனால் ரஷ்யாவுடன் எவ்வித ஆலோசனையும் செய்யாமல், ஆப்கானிஸ்தானுக்கான ஒரு மாற்று
பாதையின் சாத்தியப்பாட்டை விவாதிக்க அது பாதுகாப்புத்துறை உறுப்பினர்களை ஜேர்மனிக்கு அனுப்பியது.
நவம்பரில், ஒரு மரபு ஒன்றியம் உருவாக்குவதற்கான ரஷ்யா, கஜகிஸ்தான் மற்றும் பெலாரஸின் திட்டங்களை எதிர்த்து,
யுரேசிய பொருளாதார சமூகத்தில் இருந்து உஸ்பெகிஸ்தான் வெளியேறியது.
எரிவாயு உற்பத்தியாகும் துர்க்மெனிஸ்தான் தான் அமெரிக்காவின் முக்கிய கவனத்தில்
உள்ளது. ரஷ்யாவின் சொந்த சோவியத் சகாப்த எரிவாயு வயல்கள் அவற்றின் முடிவு காலத்திற்கு வந்துவிட்டதால்,
ரஷ்யா எரிவாயு அளிக்க மத்திய ஆசியாவை பார்த்து வருகிறது. எவ்வாறிருப்பினும், கடந்த ஆண்டு துர்க்மேனிஸ்தானுக்கு
உறுதியளித்த அதிகபட்ச விலைகளை மாஸ்கோவினால் செலுத்த முடியாது. ரஷ்யாவை ஒதுக்கி வைக்கவும், ஐரோப்பாவிற்கு
நேரடியாக ஏற்றுமதி செய்ய மாற்று குழாய்வழிகளை பயன்படுத்தவும் துர்க்மென் தலைமையை இணங்கச் செய்ய வாஷிங்டன்
கோரி வருகிறது. மேலும் துர்க்மேனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை
இணைக்கும் ஒரு எரிவாயு குழாய் வழியையும் அமெரிக்க கொண்டுள்ளது.
ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய எரிசக்தி வினியோகங்களை சுரண்டுவதில் வலிமையான
நிலையில் உள்ள சீனாவிடம் இருந்தும் அமெரிக்கா சவால்களை எதிர்நோக்கி வருகிறது. பெப்ரவரியில், ரஷ்யாவுடன்
25 பில்லியன் டாலர் மற்றும் கஜகிஸ்தானுடன் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் உடன்பாடுகளில் சீனா
கையெழுத்திட்டுள்ளது. தெற்கு சீனாவிற்கு எரிவாயு கொண்டு வர, உலகின் மிக நீளமான (7,000 கிலோமீட்டர்)
மற்றும் மிகச் செலவிலான (26 பில்லியன் டாலர்) குழாய்வழியை துர்க்மேனிஸ்தானில் சீனா உருவாக்கி வருகிறது.
தன் நலன்கள் "மூன்றாம்
நபர்களால்"
அச்சுறுத்தப்படக்கூடாது என்று அந்த உடன்பாட்டில் கையெழுத்திடும் போது, சீனா குறிப்பிட்டது. இது அமெரிக்கத்
தளங்களை தடைசெய்வதற்கான ஒரு தெளிவான ஆதாரமாகும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்க யுத்தங்களுக்கு பிரதிபலிப்பாக
உயர்ந்திருக்கும் ரஷ்ய-சீன இராணுவ கூட்டுறவானது, முக்கிய மூலோபாய பிராந்தியமான மத்திய ஆசியாவின் மீது
அதிகரித்திருக்கும் மோதல்களின் மற்றொரு முக்கிய அறிகுறியாகும். |