World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காDemocrats back US militarism Senate approves $91 billion for wars in Iraq and Afghanistan ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்கு செனட் 91 பில்லியன் டாலர் அளிக்கிறது By Patrick Martin 86-3 என்ற வாக்கெடுப்பில் அமெரிக்க செனட் கடந்த வியாழனன்று செப்டம்பர் 30 வரை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்களுக்கு நிதி கொடுக்கும் துணைச் சட்டத்தை இயற்றியது. இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி ஒபாமாவின் கையெழுத்திற்குச் செல்ல இருக்கும் இந்த சட்ட வரைவு இந்த எட்டு ஆண்டுகளில் இரு ஆக்கிரமிப்பு போர்களுக்கும் மொத்தச் செலவை 900 பில்லியன் டாலருக்கும் மேலாக கொண்டுவந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினர்கள் 2006, 2008 தேர்தல்களின் போது போருக்கு எதிர்ப்பாளர்கள் எனக் காட்டிக் கொண்டனர். ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்புமனுவின் போதும் பின்னர் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் போர் எதிர்ப்பு எனக்காட்டிக் கொண்டமை ஒபாமா வெற்றியடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் செனட் ஜனநாயகக் கட்சியினர் வெள்ளை மாளிகையில் இருக்கும் புதிய ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி கேட்டிருந்த போர்ச் செலவுகளுக்கு கிட்டத்தட்ட ஒருமித்த ஆதரவைக் கொடுத்தனர். செனட்டில் ஜனநாயகக் கட்சி பிரிவில் இருக்கும் 59 உறுப்பினர்களில் (இரு சுதந்திர உறுப்பினர்களும் அடங்குவர்) இருவர்தான் துணை ஒதுக்கு நிதிச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். இன்னும் கூடுதலான நிதி ஒதுக்கப்படுதலுக்கு வாக்களித்தவர்களில் மாசச்சுசட்ஸின் ஜோர் கெர்ரி, வெர்மோன்ட்டின் பாட்ரிக் லீஹி, ஒகையோவின் ஷெரோட் பிரெளன், கலிபோர்னியாவின் பார்பரா பாக்ஸர் போன்ற தாராளவாதிகளும் இருந்தனர். செனட்டின் பெரும்பான்மை தலைவரான ஹெரி ரைட், விப் டிக் டர்பின் ஆகியோரும் சட்டமூலத்திற்கு ஆதரவழித்தனர். ஒபாமா, துணை ஜனாதிபதி பிடென் மற்றும் வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரின் இடங்களுக்கு நியமிக்கப்பட்ட செனட்டர்கள் அனைவரும் போர் நிதிக்கு ஆதரவாக வாக்களித்தனர். சட்டவரைவு இயற்றப்படுவதற்கு முன்பு கடைசித்தடை தீவிர வலதுசாரியான கரோலினா குடியரசுக் கட்சி ஜிம் டிமின்ட் சர்வதேச நாணய நிதியத்திற்கு கூடுதல் அமெரிக்க நிதி கொடுக்கப்படுவதை எதிர்த்த திருத்தத்தை தோல்வியுற்ற வகையில் முடிவுற்றது. அதற்கு 64-30 என்ற விதத்தில் வாக்குகள் இருந்தன; அது பொதுவாக கட்சி அடிப்படையிலான வாக்காக இருந்தது. வோல் ஸ்ட்ரீட் தோற்றுவித்த நிதிய நெருக்கடிக்கு ஒரு வெளி பலிகடாவாக வார்த்தைஜாலமாக குறைகூறமுயன்ற டிமின்ட் அறிவித்தார்: "கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க குடும்பங்களை வெளி நாடுகளுக்கு உதவச் சொல்ல இது மிகவும் மோசமான நேரம் ஆகும்." சர்வதேச நாணய நிதியத்திற்கான நிதியளிப்பிற்கு, 5 பில்லியன் டாலர் அமெரிக்கக் கருவூல நிதியை 108 பில்லியன் டாலர் கடனைத் தள்ளுபடி செய்யப்பயன்படுத்துவதற்கான புதிய கடன் கொடுக்கும் அதிகாரம் ஒன்றுதான் செனட் இயற்றிய சட்டத்திற்கும் பிரதிநிதிகள் மற்றம் மே 14 இயற்றிய சட்டவரைவிற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும். பிரதிநிதிகள் மன்றம்-செனட் குழு ஒன்று ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒபாமாவின் கையெழுத்திற்காக இறுதிச் சட்டவரைவைத் தயாரிக்கும். பல முக்கிய மன்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக நிதி ஒதுக்கும் குழு தலைவர் விஸ்கோன்ஸினின் டேவிட் ஒபே, சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி கொடுப்பதற்கு தேசிய பொருளாரவாதத்தின் அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இரு செனட் தாராளவாதியினர், விஸ்கோன்சினின் ருஸ் வென்கோல்ட் மற்றும் வெர்மோன்ட்டின் பேர்னார்ட் சாண்டர்ஸ் இருவரும் டிமின்ட்டின் திருத்தத்திற்கு இதே அடிப்படையில் வாக்களித்தனர். பல பிற்போக்குத்தன திருத்தங்கள் கடந்த சில நாட்களில் துணை சட்ட வரைவில் சேர்க்கப்பட்டன. புதனன்று செனட் மிகப் பெரிய 92-3, 90-6 என்ன வாக்கு வித்தியாசத்தில் குவான்டநாமோ வளைகுடா காவல் முகாமை மூடுதல் அல்லது அங்குள்ள கைதிகளை அமெரிக்காவிற்கு மாற்றுதல் என்பதைத் தடுக்கும் திருத்தங்களுக்கு வாக்களித்தனர். (See "Senate Democrats Block Funding for Guantanamo Bay Closure", 21 May 2009) குரல் வாக்கெடுப்பின்படி அமெரிக்க குடியுரிமை சுதந்திர அமைப்பின் (ACLU) ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கைதிகள் அமெரிக்கர்களால் சித்திரவதை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியிடப்படுவதைக் கோரும் வழக்கை மூடும் வகையில் ஒரு திருத்தத்திற்கும் செனட் ஒப்புதல் அளித்தது. ஆரம்பத்தில் ஒபாமா வழக்கை முடிப்பதற்காக புகைப்படங்களை வெளியிட ஒப்புக் கொண்டார். பின்னர் கடந்த வாரம் தானே பென்டகன் அழுத்தத்தில், குறிப்பாக ஈராக்கில் அமெரிக்கப் படைகளின் தளபதியாக உள்ள ரேமண்ட் ஒடியர்னோ அழுத்தத்தில் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். ACLU அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் வெற்றி பெற்றது. வெள்ளை மாளிகை அந்த முடிவிற்கு எதிராக அமெரிக்க மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்வதா அல்லது புகைப்படங்களை வெளியிடுவதைத் தடுக்க அவற்றை பின்னர் "உயர்மட்ட இரகசியம்" என்று அறிவிப்பதா என்ற நிர்வாக முடிவை யோசித்து வருகிறது. ஒபாமாவின் மேசையில் முடியும் இந்த செனட் நடவடிக்கை முற்றிலும் தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியிடப்படுவதை முற்றிலும் தடுத்து ACLU வழக்கில் உள்ள சட்டபூர்வ தடைகளை அகற்றிவிடும்.திருத்தம் பற்றிய சுருக்கமான விவாதத்தில் இரு கட்சிகளின் செனட்டர்களும் புகைப்படங்கள் வெளியிடப்படுவது ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பொதுமக்கள் கருத்திற்கு எரியூட்டும், அதையடுத்து துருப்புக்களுக்கு ஆபத்து உண்டு என்ற இராணுவத்தில் நிலைப்பாட்டை எதிரொலித்து பேசினர். இது விந்தையான வாதம் ஆகும். ஏனெனில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான மக்கள் தங்கள் கண்களாலேயே இன்னும் சிறந்த சான்றுகளை அமெரிக்காவின் மிருகத்தன ஏகாதிபத்தியத்தை கண்டுள்ளனர். முறையே 6, 8 ஆண்டுகளாக கொலைகள், சித்திரவதை, ஒருதலைப்பட்ச, நீடித்த சிறை தண்டனை என்று காலனித்துவரீதியான ஆக்கிரமிப்புக் குடையின் கீழ் நடந்தவற்றை அறிந்துள்ளனர். சித்திரவதைப் புகைப்படங்கள் வெளியிடுவதை தடுக்கும் உண்மை நோக்கம் அமெரிக்காவிலேயே பொதுமக்களுடைய கருத்திற்கு எரியூட்டப்படுவதை தவிர்க்கப்பட வேண்டும் என்பதாகும். ஏனெனில் அது புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களால் பரந்த தவறுகளுக்கு பொறுப்பான அரசாங்க அலுவலர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுப்பதற்கு மக்கள் ஆதரவைப் பெரிதும் ஏற்படுத்திவிடும். இந்த மிகப் பெரிய சட்டவரைவின் மற்றொரு பிரிவு, "இதன்கீழ் கொடுக்கப்படும் நிதியங்கள் எதுவும் ஹமாஸ் அல்லது ஹமாஸ் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் எந்த அமைப்பிற்கும், ஹமாஸ் உறுப்பினராக இருக்கும் அல்லது அதிகாரப் பகிர்ந்து கொள்ளல் இருக்கும் எந்த அரசாங்கத்திற்கும் கொடுக்கப்படக்கூடாது." என்று அறிவிக்கிறது. அமெரிக்க நிதியம் ஹமாஸ் பங்கு பெறும் ஒரு பாலஸ்தீனிய அரசாங்கத்திற்கு பணம் கொடுப்பதற்கு ஒபாமா இசைவு தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தில் இருக்கும் ஹமஸ் அதிகாரிகள் இஸ்ரேல் அங்கீகாரம் பற்றிய அமெரிக்க ஆணைகளை ஏற்றுள்ளனர் என்று காங்கிரஸிற்கு அவர் எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்கப் போர்களுக்கு நிதி அளிப்பது என்ற மையத்தானத்தைக் கொண்ட இச்சட்டவரைவு அரசியல்ரீதியாக மிக முக்கியத்துவம் கொண்ட கூறுபாடு ஆகும். சட்ட வரைவு அறிவிப்பதாவது: "சட்டமன்றம் கீழ்க்கண்டவற்றை கண்டுபிடித்துள்ளது: (1) ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டின் இராணுவப் பிரிவிற்கு உரித்தான மிகச் சிறந்த மரபுகளுடன் இயைந்த வகையில் வீரத்துடனும், திறனுடனும் 40,000 இராணுவத்தினர் தற்பொழுது பணியாற்றுகின்றனர். அனைத்து அமெரிக்க மக்களுடைய வலுவான ஆதரவையும் பெறும் முழுத் தகுதி அவர்களுக்கு உண்டு." மே 4ம் தேதி பல மகளிரும் குழந்தைகளும் உள்ளடங்கிய 140 ஆப்கானிய குடிமக்கள் மேற்கு பாரா மாநிலத்தில் உள்ள போலா பலுக் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டதிற்கு சில நாட்களிலேயே செனட் இத்தகைய சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளது. 2,000 இறாத்தல் வெடிகுண்டுகள் அமெரிக்க விமானங்கள் மூலம் அவர்களுடைய வீடுகளைத் தரைமட்டமாக்கியதில் முழுக் குடும்பங்களும் படுகொலைக்கு உட்பட்டன. ஆப்கானிஸ்தானில் ஒபாமா நிர்வாகத்தின் போர் தீவிரமயமாக்கல் மற்றும் பாக்கிஸ்தானுக்குள் அதன் விரிவாக்கத்திற்கு செனட்டின் இந்த சட்டம் ஒரு தடையற்ற ஒப்புதலைக் கொடுக்கிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானத்தில் மூன்று தனி பென்டகன் நிதியங்களுக்கும் இது பணத்தை ஒதுக்குகிறது. பாக்கிஸ்தானும் சம அளவில் போர்ப் பகுதியில் சேர்க்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும். அனைத்து அமெரிக்க இராணுவ நிதிகளும், குறிப்பிடப்பட்ட பகுதிக்கு புறத்தே இருப்பவை, பாதுகாப்புத் துறை என்று இல்லாமல் வெளிவிவகாரத்துறை மூலம் அனுப்பப்படும். சட்டம் இயற்றப்பட்டு சில மணி நேரத்திற்குள் ஜனாதிபதி ஒபாமா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ விரிவாக்கம் மற்றும் இராணுவ வெற்றிக்கு தன்னுடைய உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அன்னாபோலிசில் உள்ள அமெரிக்க கடற்படை பயிலகத்திற்கு துவக்கவிழா ஒன்றில் உரையாற்றிய அவர் கடற்படை செலவுக் குறைப்பை நிறுத்தியது மற்றும் கடற்படை சிறப்புப் பிரிவு கட்டமைப்பு (கடற்படையின் தரைப்படைப் பிரிவு) ஆகியவை பற்றி பெருமையுடன் பேசினார். உரையில் முக்கிய பத்தியில் அவர் அறிவித்ததாவது: "சுருங்கக் கூறின் அமெரிக்க இராணுவத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி உலகம் எப்பொழுதும் கண்டிராத அளவிற்கு மிகச் சிறந்த போர்ப்பிரிவுகளாக உங்களை வைத்திருப்போம்." நாட்டிற்கு இராணுவத்தை ஒரு முன்மாதிரியாக ஒபாமா புகழ்ந்த விதத்தில் கூறினார்: "நம்மை தவறாக பல நேரம் அழைத்துச் செல்லக் கூடிய வெளிப்படையான அடையாளங்களான பட்டங்கள், அந்தஸ்து, பொருள்சார் சிறப்புக்கள், பணம், புகழ், செல்வாக்கு போன்றவற்றை நாடிச் செல்லும் ஒரு கலாச்சாரத்தில் இந்த அமெரிக்கர்கள் நமக்கு இப்பொழுது மிகவும் தேவைப்படும் நல்லியல்புகளைத் தழுவியுள்ளனர். ... பல நிறுவனங்களும் தனிநபர்களும் பேராசை, பொறுப்பற்ற தன்மை என்று நடந்து கொண்ட தசாப்தத்தில், நம்முடைய இராணுவம் நாட்டில் மிகவும் நம்பகத்தன்மை உடைய நிறுவன அமைப்பாக விளங்குவதில் வியப்பு இல்லை." இந்தப் பொருள் பற்றிய தன் முதல் கருத்துக்களில் அவர் கடற்படையின் SEALS பற்றி, கடந்த மாதம் கப்பலைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியுற்றதை அடுத்து அமெரிக்க சரக்கு கப்பலின் தலைவரை கடத்திய மூன்று இளவயது சோமாலியர்களை சுட்டுக் கொன்றதற்கு, அவர் புகழாரம் சூட்டினார். ஒபாமாவின் கடைசிச் சொற்களை இராணுவ வன்முறை வெடிப்பு பற்றி உறையவைக்கும் கருத்து ஆகும். அவர் கூறினார்: "அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியை ஒட்டி இந்த அமெரிக்கர்கள் செய்து முடித்தனர். தங்கள் திறமைகள் நன்கு நினைவில் கொண்டனர். தங்கள் கடமைகளை செய்தனர். தங்கள் வேலைகளை செய்தனர். தங்கள் கண்காணிப்பை செய்தனர். தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு பின்னர் சுட்டனர்." |