WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
France: Third fatal accident at Total this year
பிரான்ஸ்: இந்த ஒட்டுமொத்த ஆண்டில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான மூன்றாவது விபத்து
By Françoise Thull
24 July 2009
Use this version
to print | Send
feedback
ஜூலை 15, புதனன்று, கார்லிங்/செயிண்ட்
அவோல்டில் (Carling/Saint
Avold) உள்ள
Total Petrochemicals
France (TPF) தளத்தில்
ஏற்பட்ட ஒரு பயங்கர வெடிவிபத்து இரண்டு இளம் தொழிலாளர்களின் உயிரைப் பறித்தது, ஆறு தொழிலாளர்கள்
மோசமாக காயமடைந்தார்கள், மேலும் பதினோறு பேர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ஜேர்மன் எல்லையில்
இருந்து வெகு தொலைவில் இல்லாத லோரைன் (Lorraine)
பிராந்தியத்தில்
உள்ளது. தானியங்கி மறு-எரிப்பூட்டு இயந்திரமுறையைக் (Automatic
re-ignition mechanism)
கொண்டிருக்காத, ஒரு முதன்மை-வெப்ப கொதிகலனை மறு-எரிப்பூட்டுவதற்கான ஒரு மனித முயற்சியின் போது,
இந்த வெடிப்பு ஏற்பட்டது. கொதிகலனை சுற்றி சுவர்களாக இருந்த கற்களின் குவியல்களின் கீழ் தொழிலாளர்கள்
புதையுண்டார்கள்.
செப்டம்பர் 2001ல், துலூசில் (Toulouse)
உள்ள Total AZF
ஆலை வெடிப்பு விவகார வழக்கு
முடிந்து 15 நாட்களுக்கு பின்னர் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதில்
31
பேர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2,500 பேர்கள்
காயமடைந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டோட்டலில் ஏற்பட்ட இரண்டு விபத்துக்கள், தொழிலாளர்களின்
உயிர்களை பறித்துள்ளது. டோட்டல் மாகாணத்தில் ஜூலை 4ல் ஒரு தொழிலாளி நச்சு வாயுவினால் மூச்சுமுட்டி
உயிரிழந்தார், மற்றொருவர் ஜனவரி 29ல் டோட்டல் பிளான்ட்ரஸில் (Total
Flandres) உள்ள பணிமனையில்
ஒரு எரிவாயு வாகன வெடிப்பில் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவத்தில் நான்கு தொழிலாளர்கள் காயமடைந்தார்கள்.
சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த சமீபத்திய சூழ்நிலை, 1947ல் அந்த ஆலை
திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஏற்பட்டிருக்காத மிக பயங்கரமானதாகும். ஆறு மாதங்களாக பயிற்சியில் இருந்து
வரும் பிரிட்டானியிலிருந்து வந்த இருபது வயது நிரம்பிய ஒரு தொழில்பயிற்சியாளரும், எட்டு வருட தொழில்
அனுபவம் பெற்ற 28 வயது நிரம்பிய அவர் பயிற்றுனரும் இந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். அழிக்கப்பட்ட
உற்பத்தி பிரிவு கார்லிங்
ஆலையின் எண் 1 ஸ்ட்ரீம் கிரேக்கர்
"டோட்டல் சமீபத்தில் மூடிய
எண்.2 ஸ்ட்ரீம் கிரேக்கர் பிரிவைப் (Steam
cracker unit)
போன்று அதே இயந்திரங்களை கொண்டிருந்திருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காது,"
என்று
CGT (General Confederation
of Labour) சங்க
அதிகாரி தெரிவித்தார்.
ஆலை மேலாளர்
Claude Lebeauன்
கருத்துப்படி, எண் 1 ஸ்ட்ரீம் கிரேக்கர் 2001லும், பின்னர் மீண்டும் 2007 இறுதியிலும் முற்றிலுமாக பழுது பார்க்கப்பட்டது.
அதன் நவீனமயமாக்கலுக்கு பின்னர், அதன் ஆண்டு எத்திலீன் உற்பத்தி திறன், (அந்த நேரத்தில் எண் 2 ஸ்ட்ரீம்
கிரேக்கரின் 250,000 டன்களுடன் ஒப்பிடும் போது) ஆண்டுக்கு 350,000 டன்களாக அதிகரித்திருந்தது. அது
கார்லிங் இடத்திலேயே அமைந்திருந்த அர்கெமா
(உத்தியோகபூர்வமாக
Atofina) இரசாயன
நிறுவனத்தின் PVC
சேய்நிறுவனத்திற்கு
பொருட்களை வினியோகித்து வந்தது.
எண் 1 ஸ்ட்ரீம் கிரேக்கரில் ஒரு தானியங்கி மறுஎரிப்பூட்டு சாதனம் இல்லாததால்,
அது தொழிலாளர்களால் இயக்கப்பட வேண்டியதாய் இருந்தது, இதனால் அதை இயக்குபவர்கள் அந்த சாதனத்திற்கு
மிக அருகில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.
"அதுவொரு
நேர்த்தியான, ஆனால் வழக்கமான நடவடிக்கையாகும்,"
என்று
Lebeau
விளக்கினார்.
"அந்த
சமயத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்தது."
இதற்கிடையில், இந்த விபத்திற்கு பின்னர் கார்லிங் ஆலைக்கு வந்து பார்வையிட்ட
மேலாண்மை இயக்குனர்,
"இந்த
விபத்திற்கான துல்லியமான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. முறையான விசாரணை நடந்து வருகிறது."
என்று தெரிவித்தார்.
100 தொழிலாளர்களை கொண்ட எண். 1 ஸ்ட்ரீம் கிரேக்கர், ஆண்டுக்கு
320,000 டன் எத்திலீனைப் பதப்படுத்தக் கூடியது, மேலும் கார்லிங்கில் அது ஒன்று மட்டுமே செயல்பட்டு
வந்தது. வெடிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஆலையில் ஏற்பட்ட இடிமின்னலினால் ஏற்பட்ட ஒரு மின்சார
சம்பவத்தைத் தொடர்ந்து, ஜூலை 13ல் அது நிறுத்தப்பட்டிருந்தது. ஸ்ட்ரீம் கிரேக்கிங் என்பது ஒரு
பெட்ரோகெமிக்கல் செயல்முறை, இதன் மூலம் செறிவுகுறைந்த ஹைட்ரோகார்பன்கள், பல நுகர்வோர்
பிளாஸ்டிக்குகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான எத்திலீன் மற்றும் பிரோப்பிலீன் தயாரிக்க சிறிய
மூலக்கூறுகளாக உடைக்கப்படுகின்றன.
TPF ன்
கார்லிங் ஆலை "உயர்மட்ட
செவிசோ 2"
என்ற வகையில் அமைவதால், அதிக அபாயகரமான பொருட்களை உள்ளடக்கிய, ஆலைகளுக்கான ஐரோப்பிய
பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் கீழ் வருகின்றன.
உலகில் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு பெருநிறுவனமான
டோட்டல், இரசாயன தொழிற்துறையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு சுமார்
14
பில்லியன் இலாபமீட்டுவதுடன், இந்த குழுமம் பல
சீரமைப்பு திட்டங்களையும், அதன் பணிக்குழுக்களின் மீது பணிநீக்கங்களையும் நடைமுறைப்படுத்தி உள்ளது.
AZF Toulouse
இரசாயன ஆலை வழக்கின் மூன்றாவது கட்சிக்காரரின் வழக்கறிஞர்
Christophe
Léguevaques, மிக
பயங்கரமான விபத்துக்களை எதிர்கொண்ட பெட்ரோகெமிக்கல் குழுமம் டோட்டல் ஆகும்:
அதாவது,
BP
குழுமத்தின் 65 நபர்கள் மற்றும்
Exxon
குழுமத்தின் 47 நபர்களுடன் ஒப்பிடும் போது
2001 முதல் 2007 வரையில் இங்கு 79 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறார்.
Arkema group
மற்றும்
TPF
ஆகிய இரண்டு வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையில் தன் நடவடிக்கைகளை
பரப்பி விட்டிருந்த
Atofina SA நிறுவனத்தின்
2004
தொடக்கத்தில் செய்யப்பட்ட மறுநிர்மானத்திலிருந்து,
டோட்டல் அதன் மறுகட்டுமான திட்டங்களை குறைத்துக் கொள்ளவில்லை. 2007ல் 1,700ஆக இருந்த கார்லிங்
பணிக்குழு 2009ல் 1,290ஆக குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது, அத்துடன் 2013ல் இதை 853 தொழிலாளர்களுக்கு
கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரான்சில் டோட்டலின் பெட்ரோகெமிக்கல் நடவடிக்கைகளை
உள்ளடக்கி இருக்கும் டோட்டல் பெட்ரோகெமிக்கல் பிரான்சின் நிர்வாகம், 2012 வாக்கில் மேலும் 306 பணிநீக்கங்கள்
இருக்கும் என்று அறிவித்தது :
Gonfrevilleல் 130
நபர்களும்,
Notre-Dame-de Gravenchon
ஆலையில் 50 நபர்களும், இந்த ஆலை நிச்சயமாக இந்த ஆண்டின் இறுதியில்
மூடப்படும்.
Pyrénées-Atlantiques
பிராந்தியத்தில் உள்ள
Mont/Lacqன் ஆராய்ச்சி
மற்றும் அபிவிருத்தி மையத்தில் 25 வேலை இழப்புகள் மற்றும் பாரீசின்
La Défense
வியாபார மாவட்டத்தின் தலைமை அலுவலகத்தில்
33 வேலை இழப்புகள் ஆகியவற்றுடன் வேலை வெட்டுக்களும் நடந்து வருகின்றன. ஆனால் ஒப்பந்ததொழிலில் வேலை
இழந்தவர்களின் எண்ணிக்கை இதில் அடங்கவில்லை.
அருகிலுள்ள ஜேர்மனியின் எல்லையோர சமூகத்தினரைப் போலவே, கார்லிங் ஆலை
தொழிலாளர்களும், கார்லிங்கின் வசிப்பாளர்களும் தாங்களும் ஒரு டைம்பாமிற்கு அருகில் வாழ்ந்து கொண்டிருப்பதை
அறிவார்கள். ஜேர்மனியில்
Sarrebruckக்கு
அருகில்
Völklingen நகரத்தின்
முதன்மை தீயணைப்பு அதிகாரி அடிவானத்தில் ஏற்பட்ட புகைமூட்டத்தைப் பார்த்து கவலைப்பட மட்டுமே முடிந்தது.
ஏனெனில், எல்லை தாண்டிய புரோட்டோக்கால் உடன்பாடுகளால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்ததால், உத்தியோகப்பூர்வமான
எவ்வித தகவலும் அவருக்கு அளிக்கப்படவில்லை. |