WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
France: Near win for neo-fascists in Hénin-Beaumont
by-election
பிரான்ஸ்: எனின் போமோ இடைதேர்தலில் நவ-பாசிஸ்டுகள் வெற்றிக்கு அண்மித்தனர்
By Antoine Lerougetel
27 July 2009
Use this version
to print | Send
feedback
வட பிரான்சில் 26,000 மக்கள் வசிக்கும் நகரமான
Hénin-Beaumont
நகரசபை இடைதேர்தலில், ஜூலை 5ல்
நவ-பாசிச தேசிய முன்னணி (Front
National) வெற்றியை அண்மித்ததானது,
தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். பெருந்திரளான மக்கள், மதிப்பிழந்திருக்கும் சோசலிஸ்ட்
கட்சி (PS)
மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட்
கட்சி (PCF)க்கு
ஒரு நம்பகமான மாற்றீடைக் காண முடியாமலும், அரசியல் வாழ்விலிருந்து பரந்தளவில் அந்நியப்பட்டிருக்கும் நிலைமையின்
கீழும் தேசிய முன்னணி கணிசமான ஆதரவை ஈர்த்திருக்கிறது.
ஒரு முன்னாள் நிலக்கரி சுரங்க வடிநிலமாகவும், இடதுசாரி கருத்தில் நீண்டகாலம்
பலமாகவும் இருந்த வடக்கில், தேசிய முன்னணிக்கு ஒருபோதும் பெரியளவில் வாக்காளர்களின் ஆதரவு இல்லாத
நிலையில், இந்த அபிவிருத்தி எல்லா வகையிலும் குழப்பமாக உள்ளது. முதலாம் உலக யுத்தத்தில் இருந்து
Hénin-Beaumont,
சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட்
கட்சி மேயர்களைக் கொண்டிருக்கிறது. 1884ல், அருகிலிருக்கும் அன்ஜினில் நடந்த சுரங்க தொழிலாளர்களின் 46
நாள் போராட்டம் (இது
Emile Zolaஐ
அவரின் பிரபல நாவலான ஜேர்மினல்(Germinal)
என்பதை எழுத தூண்டியது), பிரான்சில் தொழிற்சங்கத்தை சட்டரீதியாக அங்கீகரித்த
Waldeck-Rousseau
சட்டத்தின் பாதைக்கு இட்டு சென்றது.
எவ்வாறிருப்பினும், சமூக ஜனநாயகவாதிகளும், ஸ்ராலினிசவாதிகளும் பொருளாதார
பேரழிவிற்கு தலைமை தாங்கி, அவர்களின் அரசியல் ஆதரவை படிப்படியாக இழந்துவிட்டிருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டின்
மத்தியில் இருந்து ஒரு நிலக்கரி-தோண்டும் நகரமாக இருக்கும்
Hénin-Beaumont
இன் கடைசி சுரங்கம் 1970ல் மூடப்பட்டது.
இன்று, அது 19 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதத்தை முகங்கொடுக்கிறது.
பொது நிதிகளை தவறாக கையாண்டதற்காக ஏப்ரல் 7ல் சோசலிஸ்ட் கட்சி
(PS) மேயர்
Gérard Dalongeville
கைது செய்யப்பட்டதால்
தூண்டப்பட்ட இந்த இடைதேர்தலின் சூழ்நிலைகள், இந்த தொழில்துறை அழிவுக்குட்பட்ட பகுதியின் உழைக்கும்
மக்களிடமிருந்து சோசலிஸ்ட் கட்சி
அதிகாரிகளைப் பிரிக்கும்
ஆழ்ந்த சமூகப் பிளைவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
Hénin-Beaumont,
வியாபாரிகளின் ஒரு குழுவாலும், தேர்ந்தேடுக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி
அதிகாரிகளாலும்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
"இல்லாத
சேவைகளுக்காக போலி ரசீதுகளை பரிமாறிய தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் ஒரு வலையமைப்பால்
நடத்தப்பட்ட போலி கணக்குகளின் ஒரு பரந்த முறை"
என்று பத்திரிகை கணக்குகள்
Rue89
இன்
வார்த்தைகளில் விவரித்தன.
மோசடிக்கு நிதி அளிக்க நகரசபை சொத்துக்களை விற்று வந்த தம் கூட்டாளியும்,
வியாபாரியுமான
Guy Mollet தனியார்
விமானங்களில் பயணம் செய்வதற்குரிய கட்டணத்தை செலுத்துவதற்கான மேயரின் முடிவு நகரசபை ஊழலின் ஓர்
உதாரணமாகும்.
ஒட்டுமொத்தமாக 4
மில்லியன் யூரோக்கும் மேலாக
திருடபட்டிருக்க கூடும் என்று மதிப்பீடுகள் குறிப்பிட்ட போதினும், குறைந்தபட்சம் 900,000 யூரோ
தவறாக செலவழிக்கப்பட்டிருக்க
கூடும் என்று போலீஸ் மதிப்பிடுகிறது. நிதி ஆதாரங்களின் பற்றாக்குறையால், அந்த நகரம் யதார்த்தத்தில் திவாலாகி
உள்ளது. ஏப்ரல் 7ல்,
Dalongevilleன்
அலுவலகத்தை போலீஸ் சோதனையிட்ட போது, சில்லரையாக இருந்த 13,000 யூரோவுடன் ஒரு
கல்லாப்பெட்டியைக் கண்டுபிடித்தார்கள். ஏப்ரல் 9ல்,
"பொது
நிதிகளைத் தவறாக கையாண்டது, ஆவணங்களை தவறாக காட்டியது மற்றும் குரோனியிசம் (மோசடியில் ஈடுபடும்
நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு உதவுதல்)"
ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு அவர் காவலில் வைக்கப்பட்டார், பொதுப்பணிகளுக்கான நிதி மற்றும்
ஒப்பந்தங்களுக்கான அவரின் முன்னாள் துணை மேயரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இடைத் தேர்தலின் முதல் சுற்றில், ஜூன் 28ல்,
Marine Le Pen
போன்ற தேசிய முன்னணி (FN)
தலைவர்களால் முழுமையாக ஆதரவளிக்கப்பட்ட
Front National பட்டியல் 39 சதவீதமான பெரும்பாலான
வாக்குகளை பெற்றது. Dalongeville
மற்றும் சோசலிஸ்ட் கட்சியை
பகிரங்கமாக குற்றஞ்சாட்டி கொண்டும், அதேசமயம் அதன் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பிரச்சாரத்தைக்
கவனமாக மறைத்து கொண்டு, தேசிய முன்னணி
ஒரு ஜனரஞ்சக பாதையில்
சென்றது.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ( PCF),
பிரான்சுவா பேய்ரூ இன்
MoDem
போன்ற சிறிய வலது-சாரி கட்சிகளுடனும் சென்ற சோசலிஸ்ட் கட்சி,
"சுயாதீன இடது"
வேட்பாளரான
Daniel Duquenneஆல்
முறையே 17 மற்றும் 20 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆளும் பிற்போக்குவாத
UMP (Union for a
Popular Movement)க்கு
4 சதவீதமும், ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி
(NPA)க்கு 2 சதவீதமும்
கிடைத்தன.
இரண்டாவது சுற்றில், சிறுபான்மை பிரிவுகள் ஒரு
"குடியரசு
முன்னணியை"
உருவாக்கி இருந்தன, இவை
Duquenne's
பிரிவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டது.
UMPல்
இருந்து NPA
வரை, அவர்கள் தங்களின்
குரல்களை ஒரேமாதிரியாக ஒலித்தார்கள்:
அதாவது, தேசிய முன்னணி
வெற்றி அடையவதை எவ்வகையிலும் நிறுத்த வேண்டும். அதிக வாக்காளர்களின் ஆதரவுடன், தேசிய முன்னனி அதன்
வாக்குகளை 7 சதவீதத்திற்கு மேல், அதாவது 48 சதவீத வாக்குகளை பெற்றது.
Duquenne
52 சதவீத வாக்குகளை பெற்றார்.
பிரெஞ்சு அரசியல் அமைப்பு வெற்றி முழக்கங்களுடன்
"குடியரசுக்"
கூட்டணியின் வெற்றியை வாழ்த்தியது. தேசிய முன்னனியின் வழியை மறிக்க
Duquenneக்கு
வாக்களிக்குமாறு கோரியிருந்த
UMP
மந்திரி
Xavier Bertrand, "இடதின்"
ஒரு வெற்றியை
பாராட்டினார். "குடியரசு
முன்னணியின் வெற்றியை"
புகழ்ந்த PSன்
முதல் செயலாளரான
Martine Aubry, "இது
ஜனநாயகத்தின் வெற்றி"
என்று ஆர்ப்பரித்தார்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்
Marie-George Buffet, "இந்த
தேர்தல்களில் இருந்து சோசலிஸ்ட் கட்சி
பாடங்களை பெற வேண்டும்,"
என்று கூறி ஓர் ஐக்கிய
இடதிற்கு அழைப்பு விடுத்த அவர்,
"வேலைவாய்ப்பின்மைக்கு
ஓர் உறுதியான வேலைத்திட்டத்தை முன்வைத்து, அதை நடைமுறைக்கு எடுத்துச்செல்லக் கூடியதாக அது இருக்க
வேண்டும்"
"Hénin-Beaumontன்
வாக்காளர்கள், நகரசபைக்கு தீவிர வலதை எடுத்துச் செல்வதை தடுத்திருப்பதன் மூலம், மிக மோசமான
நிலைமையை தவிர்த்திருக்கிறார்கள்"
என்பதுடன்
"நிம்மதியும்"
அளித்திருக்கிறார்கள் என்றார்.
இதுபோன்ற முடிவுகள் அரசியல்ரீதியாக திவாலாகிவிட்டன என்பதால் அவை
முட்டாள்தனமான மனநிறைவாகும். தேசிய முன்னணியின் தோல்வி,
Hénin-Beaumont
மக்களின் ஜனநாயக மற்றும் அரசியல்ரீதியான உணர்வுகளை பிரதிபலித்திருக்கும் போதினும், பிராந்திய சோசலிஸ்ட்
கட்சி
அதிகாரிகளின் ஒரு முன்னாள் கூட்டாளியான Duquenneன்
கொள்கைகள், தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பதில் முடிந்த மக்கள் அந்நியப்படுதலைத்தான் மேலும் ஆழப்படுத்தும்.
அந்த நகரத்தின் நிதிப் பற்றாக்குறையும், அதன் 39 மில்லியன் யூரோ நகரசபை
வரவு-செலவு திட்ட கடனின் பெரும்பகுதியும் மக்களால் திருப்பி செலுத்தப்படும் என்று
The Regional Chamber of
Accounts தெளிவுபடுத்தி
உள்ளது. தம் பிரச்சாரத்தின்போது, செலவுகளையும், தற்காலிக பணியாளர்களையும் குறைப்பதாக
Duquenne
உறுதியளித்திருந்தார்.
சமீபத்தில் நகர வரவு-செலவு திட்டத்தின் கட்டுப்பாட்டை தேசிய அரசின் உள்ளூர்
பிரதிநிதியான
préfet யிடம் ஒப்படைத்திருந்த அவர், சமூக நல நிறுவனங்களுக்கான
மானியங்களையும் வெட்டினார்.
மேலும் பரந்தளவில், சோசலிஸ்ட் கட்சியை அல்லது அதன் துணைக்கட்சிகளை
ஆதரிப்பதன் மூலம் தேசிய முன்னணியை ஒருவர் எதிர்க்க முடியும் என்ற வாதம் அர்த்தமற்றதாகும். அவர்களின்
வலதுசாரி கொள்கைகளே தேசிய முன்னணி உருவாவதற்கு மேடை அமைத்தது, ஆனால் இன்று அவர்கள்
சட்ட-ஒழுங்கையும், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தொந்தரவுகளையும் தீவிரவாக ஊக்குவித்து வருகிறார்கள்,
இது தேசிய முன்னணி
வளர்வதற்கு தான்
உதவுகிறது.
சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் ,
முதலாளித்துவ சந்தையை
வரவேற்றும், சமூக செலவுகளை வெட்டியும், ஜவுளித்துறை, நிலக்கரி மற்றும் உருக்கு போன்ற அடிப்படை
தொழிற்துறைக்கு குழிதோண்டியும் அவரின் கண்டிப்பான வழிமுறையை திணித்தபோது, ஜனரஞ்சக-இனவாத தேசிய
முன்னணியின் வளர்ச்சி 1983ல் தொடங்கியது. சோசலிஸ்ட் கட்சி
பிரதம மந்திரி லியோனல்
ஜோஸ்பனின் கட்டுப்பாடற்ற சந்தை கொள்கைகள் மீதான பாரிய வெறுப்பு 2002 தேர்தலில் இடது வாக்குகளை
பிரித்தபோது, தேசிய முன்னணி அதன் மாபெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றது. தேசிய முன்னணி,
ஜோஸ்பனை வெளியேற்றி,
முதல் சுற்றில் 17 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
சோசலிஸ்ட் கட்சி,
பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சி
மற்றும் LCR (NPA
இன் முன்னோடிக்கட்சி)
ஆகியவற்றின் பிரதிபலிப்பு,
வலதுசாரி வேட்பாளரான ஜாக் சிராகிற்கு அழைப்புவிடுப்பதாக இருந்தது. சிராக்கிற்கு ஆதரவளித்த நிலையில்,
தேசியவாதத்தையும், புலம்பெயர்வுக்கான எதிர்ப்புணர்வையும் தூண்டிவிட அவர்கள் பழமைவாதிகளின் பிரச்சாரத்திலும்
இணைந்தார்கள். அவர்கள் அனைவரும், பள்ளிகளில் பெண்கள் முஸ்லீம் பர்காக்களை அணிய வேண்டும் என்ற 2004
சட்டத்திற்கு ஆதரவளித்தார்கள்.
இந்த கோடையில், பழமைவாத ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, முஸ்லீம்
பெண்கள் பர்தா அல்லது நிகாப் அணிவது குறித்து அவர்களுக்கு எதிராக மற்றொரு இனவாத பிரச்சாரத்தை
தொடங்க "இடது"
கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட்டார்.
Vénissieuxன்
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி
மேயர்
André Gerin தலைமையிலான ஒரு பாராளுமன்ற திட்டமான
பிரான்சில் பொதுவிடங்களில் இந்த உடைகளை அணிய தடை விதிக்கும் சட்ட மசோதாவை தயாரிப்பதற்கு அவர்
ஆதரவளிக்கிறார். 11
சோசலிஸ்ட் கட்சி அங்கத்தவர்களும் இந்த பாராளுமன்ற திட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மேலாதிக்கத்தின் மிக நச்சுத்தன்மை மிக்க வடிவங்களான
இதுபோன்ற கட்சிகளின் ஊக்குவிப்புகள், துல்லியமாக ஒரு பிரெஞ்சு நிகழ்வுப்போக்கல்ல, ஆனால் இது ஐரோப்பா
முழுவதும் பரவுகிறது. ஹங்கேரியில், சோசலிஸ்ட் கட்சி வலதுசாரி
"கிராம
பாதுகாப்பு"
இராணுவங்களை
(பார்க்க:
"Hungary: Socialist Party establishes right-wing militias")
அமைத்து வருகிறது. ஸ்பெயினில் ஆளும்
றிஷிளிணி (றிணீக்ஷீtவீபீஷீ ஷிஷீநீவீணீறீவீstணீ ளிதீக்ஷீமீக்ஷீஷீ ணிsஜீணீமஷீறீ,
ஸ்பானிஷ் சோசலிஸ்ட்
தொழிலாளர் கட்சி)
புலம்பெயர்ந்தோரை
வெளியேற்றுவதற்கான அளவுகளை அமைத்து வருவதுடன், அருகில் வசிக்கும் தொழிலாள வர்க்கத்திற்குள்
புலம்பெயர்ந்தோர்களுக்கு எதிரான சோதனைகளையும் நடத்தி வருகிறது.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்களில் சமூக ஜனநாயகத்தின் சமீபத்திய
தோல்வியாலும்,
Hénin-BeaumontTM
சோசலிஸ்ட் கட்சியின்
குற்றங்களாலும் மற்றும் சமூக ஜனநாயகத்தினதும், ஸ்ராலினிச கட்சிகளினதும் சித்தாந்த மற்றும் குணவியல்ரீதியான
உடைவினால் எடுத்துக்காட்டப்படும் ஓர் அடிப்படை அரசியல் யதார்த்தத்திற்கு இது மேலும் ஓர் ஆதாரமாக
உள்ளது.
மேலும், பிறவிடங்களில் போலவே
Hénin-Beaumontலும்,
போலியான இடது வார்த்தைஜால திரையின் கீழ், இந்த கட்சிகளுக்கான ஓர் அரசியல் துணையின் பாத்திரத்தை
NPA
நம்பிக்கையான வகையில் செய்திருக்கிறது.
Hénin-Beaumont தேர்தல்களுக்கு முன்னதாக,
"நெருக்கடிக்கு
எதிராக போராடும் இடது கட்சிகளின்"
கூட்டணியை உருவாக்க அழைப்பு விடுத்திருந்தது. அது அர்த்தமற்ற வகையில், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நீண்டகால
ஆளும் நபர்களான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி
மற்றும் இடதுகட்சியின் முன்னாள் சோசலிஸ்ட் கட்சியின் மந்திரியான
Jean-Luc Mélenchon
போன்றவர்களுடன் இந்த கூட்டணியை உருவாக்க முன்மொழிந்தது.
2002
ஜனாதிபதி தேர்தல்களின்இதில்
நவ-பாசிஸ்டுகளை அலுவலகத்தை விட்டு விரட்டும் மந்திரத்துடன் சிராகிற்கு வாக்களிக்க அவர்கள்
அழைப்புவிடுத்தார்கள்
சுற்றுகளுக்கு இடையில் தங்களின் பாத்திரத்தை மீண்டும் புகழ்ந்துரைத்த
NPA, Hénin-Beaumontன்
இரண்டாவது சுற்றுக்கு முன்னதாக ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது,
ÜFTM "தேசிய
முன்னனியை நகரமண்டபத்திலிருந்து வெளியேற்றுமாறு"
வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. Duquenneன்
வெற்றிக்கு பின்னர், NPA
மற்றொரு அறிக்கையை வெளியிட்டது, அதில்
"தொழிலாளர்களின்
நலன்களை மிக இறுதிவரை பாதுகாக்கும் இந்த அமைப்புமுறையுடன் உடைக்கும் ஒரு திட்டத்தில் ஒன்றிணைந்து
செயல்பட"
அது தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுத்தது.
எவ்வாறிருப்பினும், பிரெஞ்சு அரசு இயந்திரத்தில் பதவிகளைப் பெற
NPAன்
தலைதெறிக்கும் ஓட்டத்திற்கான ஒரு வசன ஓலையுடன், இதுபோன்ற வெற்று முறையீடுகள் முற்றிலுமாக மதிப்பற்றவையாகும்.
சமீபத்திய
Aix-en-Provence இடைதேர்தலில்,
முன்னாள் சோசலிஸ்ட் கட்சி
மந்திரியான
Jean-Luc Mélenchonன்
இடது கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த பட்டியலில் அது நின்றது. மார்ச் 2010ல் வரவிருக்கும் பிராந்திய
தேர்தல்களிலும் இந்த கட்சிகளுடன் கூட்டணி பட்டியல் உருவாக்க இது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இரண்டாவது சுற்றில் சோசலிஸ்ட் கட்சியுடன் ஒரே பட்டியலில் போட்டியிட அவர்கள் ஒத்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்விதத்தில் பிராந்திய நிர்வாகங்களை பழமைவாத கட்சிகள் எடுப்பதை ஒருவேளை தடுக்கலாம் என
நம்புகின்றனர்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிச கட்சியின் இதுபோன்ற அரசியல்
ஒட்டுத்தன்மையின் பாசாங்கு,
Hénin-Beaumont
இடைதேர்தலில் ஏற்பட்ட நெருக்கடி போன்ற
நெருக்கடிகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சோசலிச கட்சியின் குற்றங்களால் நிலைகுலைந்தும்,
நம்பிக்கை இழந்திருக்கும் மற்றும் நம்பகமான அரசியல் மாற்றைக் காணமுடியாமலும் இருக்கும் மக்களின் குழம்பிய
அடுக்குகள் FNக்கு
வாக்களிப்பதைத் தவிர வேற வழியைக் காணவில்லை.
உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையை மறுகட்டமைப்பதற்கு தேவையான முதலீடு
மற்றும் பொதுப்பணிகளின் ஒரு பெரிய திட்டமில்லாமல்
Hénin-Beaumont
போன்ற சமூக பிரச்சனைகளை தீர்க்க முடியாது.
எவ்வாறிருப்பினும், சர்வதேச பொருளாதாரத்தை வழிநடத்தும் கொள்கையாக இலாப முறையை நீக்கவும், ஐரோப்பாவில்
ஆக்கிரமித்துள்ள புல்லுருவி அரசியல் அமைப்பை தூக்கி எறியவும் இதுபோன்ற திட்டத்தை கொண்டு வருவது என்பது
தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தை சார்ந்துள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இதுபோன்ற
ஒரு முன்னோக்கிற்காக போராடும் ஒரு கட்சியை பிரான்சில் உருவாக்கும் பணியில் தன்னைத்தானே ஈடுபடுத்திக்
கொண்டுள்ளது. |