WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
தென் அமெரிக்கா
பிஷீஸீபீuக்ஷீணீஸீ னீவீறீவீtணீக்ஷீஹ் ணீஜீஜீமீணீக்ஷீs tஷீ தீணீநீளீ ஜீறீணீஸீ tஷீ க்ஷீமீstஷீக்ஷீமீ ஞீமீறீணீஹ்ணீ
tஷீ ஷீயீயீவீநீமீஸீஷீt tஷீ ஜீஷீஷ்மீக்ஷீ
ஜீலயாவை அதிகாரம் இல்லாமல் பதவியில் இருத்தும் திட்டத்திற்கு ஹொன்டூரஸ் இராணுவம்
ஆதரிப்பது போல் தோன்றுகிறது
By Rafael Azul
27 July 2009
Use this
version to print | Send
feedback
ஒபாமா நிர்வாகம் மற்றும் பென்டகனின் வெளிப்படையான தூண்டுதலின் பேரில் நாட்டின்
அகற்றப்பட்ட ஜனாதிபதி ஜோஸ் மானுவல் ஜீலயாவை அதிகாரம் இல்லாமல் பதவியில் இருத்தும்
San Jose
உடன்பாட்டிற்கு சுயாதீனமாக ஆதரவை ஹொன்டூரஸ் இராணுவம் கொடுக்க மதிப்பிடுவதுபோல் தெரிகின்றது .
ஹொன்டூரஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்து, ஒரு சில கணங்களில் நிக்கரகுவாவிற்கு
திரும்பி ஜீலயா திரும்பிச் சென்றதற்கு மறுநாளான சனிக்கிழமை அன்று இராணுவ அறிவிப்பு வந்துள்ளது.
அமெரிக்க தூண்டுதலில் தயாரித்த மத்தியஸ்த வழிவகை திட்டத்தின் ஒரு பகுதியாக
கோஸ்டரீக்காவின் ஜனாதிபதி ஓஸ்கார் அரியாஸ் முன்வைத்த
San José
உடன்பாடு ஜீலயா ஜனாதிபதி அரண்மனைக்கு திரும்ப வேண்டும் என்றும், ஆனால் "ஒற்றுமை, சமரசம்" ஆகியவற்றின்
பெயரில் அவரை ஜூன் 28 ஆட்சிமாற்றத்தை அடுத்து அவரை வெளியே அனுப்பிய சக்திகள் நடத்தும் அதே அரசாங்கத்திற்கு
அவர் பெயரளவிற்குத்தான் தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளது. ஆட்சிசதியின் தலைவர்கள், அவர்களுடைய முக்கிய
நோக்கங்களை சாதித்தபின், அவர்களுடைய குற்றங்களுக்கு பொது மன்னிப்பு பெறுவர்.
ஜீலயாவால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்பாடு, வலதுசாரி ஆட்சி சதிக்குப்
பின்னர் வந்த முன்னாள் சட்டமன்ற தலைவர் ரோபேர்ட்டோ மிச்சேலெட்டியின் குழுவால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.
அது பதவிநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கைதுக்கு உட்படுத்தப்படல், ஹொன்டூரஸ் அரசியலமைப்பை மீறியது ஆகிய
குற்றங்களுக்காக விசாரணைக்குட்படல் என்பதை முகம்கொடுக்கத்தான் நாட்டிற்கு அவர் திரும்ப வரலாம் என்று
கூறியுள்ளது.
ஹொன்டூரஸ் இராணுவத்தின் வலைத்தளத்தில் ஜூலை 24ம் தேதி வந்துள்ள அறிக்கை
ஒன்று நாட்டின் இராணுவம், "ஒரு அமைப்பு என்னும் முறையில் நம் நாட்டை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு
San José
உடன்பாட்டின் வடிவமைப்பிற்குள் பேச்சுவார்த்தை வழிவகை மூலம் தீர்விற்கு
ஆதரவு கொடுக்கிறது. இவ்விதத்தில் நம் அரசியலமைப்பு, பிற சட்டங்களுடன் இயைந்த செயற்பாடுகளுக்கு
தடையற்ற ஆதரவை நாங்கள் வலியுறுத்துகிறோம்."
இந்த அறிக்கை ஆட்சி மாற்றம் பற்றிய தாக்குதலைக் கொடுக்கிறதா அல்லது
நேரத்தை கடத்தும் ஒரு தந்திரோபாயமா என்பது தெளிவாக இல்லை. நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள அறிக்கை
ஒன்றின்படி இந்த அறிக்கை டெகுசிகல்பாவில் என்று இல்லாமல் வாஷிங்டனில் வரையப்பட்டது.
"நடுமட்ட ஹொன்டூரஸ் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் உதவியாளர்களுக்கு இடையே
பல நாட்கள் பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் வாஷிங்டனில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது" என்று சனிக்கிழமை
அன்று டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது.
அறிக்கையை தயாரிக்க உதவிய ஹொன்டூரஸ்காரர்களில் "இரு இராணுவ கேர்னல்கள்
இருந்தனர், அவர்கள் அரசியல் பூசலால் ஏற்பட்ட அழுத்தங்களை பற்றி கவலை கொண்டனர்" என்று
பெயர்கூறவிரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுடன் இன்னும்
பேச்சுவார்த்தைகளுக்காக ஜீலயா வாஷிங்டனுக்கு வரவுள்ளார்.
தற்போதைய அரசியல் தேக்க நிலையில் இருந்து வெளியே வருவதற்கு இதுதான்
வழியென்றால், ஹொன்டூரஸின் நீண்ட அரசியல் சோக, வரலாற்றுடன் அது முற்றிலும் பொருத்தமாகத்தான்
இருக்கும். அங்கு மிக முக்கியமான அரசியல், பொருளாதார முடிவுகள் வாஷிங்டனின் ஆணைப்படி எடுக்கப்படுவதுடன்,
இராணுவம் அவற்றை செயல்படுத்தப்படுவதில் தீர்மானகரமான பங்கை வகிக்கும்.
ஆரம்பத்தில் இருந்தே சில நேரம் அலங்கார, வனப்புரை சொற்கள், சைகைகள்
என்பவை இருந்தபோதிலும்கூட, ஜீலயா அத்தகைய தீர்விற்கு தன் ஒத்துழைப்பு உண்டு என்பதை கூறிவந்துள்ளார்.
வெள்ளியன்று அகற்றப்பட்ட ஹொன்டூரஸ் ஜனாதிபதி நிகரகுவா-ஹொன்டூரஸ் எல்லையை
ஒரு சில நிமிஷங்களுக்கு கடந்தார். தன்னுடைய பரந்துவிரித்த தொப்பியையும் அணிந்தவிதத்தில், இடைவிடாமல்
கைத்தொலைபேசியில் உரையாடிக்கொண்டும், ஆதரவாளர்கள் சூழ அவர் எல்லை கடந்தது வெறும்
புகைப்படத்திற்காக நடந்த சடங்கு போல்தான் இருந்தது.
தன்னுடைய ஜீப்பில் ஏறி எல்லைக்கு செல்ல இருக்கையில், ஜீலயா ஆட்சி சதியின்
அதிகாரிகளுடன் தான் பேசுவேன் என்று அறிவித்தார். ரோபேர்ட்டோ மிச்சலேட்டியின் நடைமுறை ஆட்சியின்
பிரதிநிதிகளுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளை தான் நடத்த முடியும் என்றார். ஆனால் மிச்சலேட்டியோ
அகற்றப்பட்ட ஜனாதிபதியை கண்டித்தது மட்டும் இல்லாமல் நாட்டிற்கு அவர் திரும்பிவந்தால் கைது செய்யுமாறு
உத்தரவிட்டுள்ளார்.
ஹொன்டூராவிற்குள் வந்தபின், ஜீலயா ஒரு இராணுவ அதிகாரியுடன் கைகுலுக்கி,
சுருக்கமாக பேசினார்: "நான்தான் ஹொன்டூரஸின் அரசியலமைப்பு நெறியின்படி ஜனாதிபதி." எனவே,
"உங்களுடைய தலைமைத் தளபதி." என்றார். அதற்கு அந்த அதிகாரி கட்டளைகள் வந்தவுடன் அவர் பாதுகாப்புப்
படைகளால் கைது செய்யப்படுவார் என்று பதில் கூறினார். சில கணங்களுக்குப் பின்னர் ஜீலயா நிகரகுவாவிற்குள்
திரும்பிச் சென்றார். பின்னர் மிச்சலேட்டி ஜீலயாவை சதி நோக்கம் உடையவர், வன்முறையைத் தூண்டுபவர் மற்றும்
ஹொன்டூரஸிற்குள் வெளிநாட்டுத் துருப்புக்களை கொண்டுவருபவர் என்று குற்றம் சாட்டினார். தன்னுடைய அரசாங்கம்
இது ஒரு சர்வதேச நிகழ்வாகிவிடாமலிருக்கவே ஜீலயாவை கைது செய்யவில்லை என்றும் மிச்சலேட்டி கூறினார்.
இப்படி எல்லை கடந்தது புகைப்பட காட்சிக்காக இருந்தாலும், ஜீலயாவின் ஆதரவாளர்களுக்கு
எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறை மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் முன்னதாக ஆயிரக்கணக்கான
துருப்புக்கள் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டு, காலை 6 முதல் மாலை 6 வரை ஒரு 12 மணிநேர ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது ஜீலயாவின் ஆதவாளர்கள் எல்லைப் புறம் வருவதைத் தடுக்கும் நோக்கத்தை
கொண்டிருந்தது. துருப்புக்கள் எல்லை சிறுநகரமான Lad
Manos க்கு அருகே இருக்கும் நெடுஞ்சாலைய துண்டித்து 37
பஸ்களை ஓடவிடாமல் செய்து, எதிர்ப்பாளர்கள் கால்நடையாக போகும்படி செய்துவிட்டன.
"நாங்கள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் அடக்கப்பட்டோம். சுதந்திரமாக
நடமாடுவது என்னும் அரசியலமைப்பு உரிமைக்கு மரியாதை இல்லை." என்று
CPEMH எனப்படும்
ஹொன்டூரஸ் மத்திய தர கல்வி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பப்லொ ஒயெலா கூறினார். "எங்களை
குற்றவாளிகள் போல் நடத்துகின்றனர். எங்கள் பெயர்களை எழுதிக் கொண்டு, எங்கள் வண்டிகளின் உரிம
எண்களையும் குறித்துக் கொள்ளுகின்றனர். இவை எங்கள் மிரட்டும் வகையில் உள்ளது" என்றார் ஒயெலா.
இராணுவ சாலைத் தடை எல்லையில் இருந்து 10 கிமீ. என்று அமைக்கப்பட்ட
பகுதியில் இரு எதிர்ப்பாளர்கள் காயமுற்றனர்; ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் ஆபத்தான காயமடைந்தார்.
ஞாயிறன்று El Paraiso
என்று எல்லைக்கருகில் உள்ள சிறு நகரத்தில் கைது செய்யப்பட்ட எதிர்ப்பாளரின் சடலம் சாலைக்கு அருகே
சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்களுடன், தூக்கி எறியப்பட்டிருந்தது.
இதற்கிடையில் Agencia
Bolivariana de Noticias என்னும்
ABN செய்தி
நிறுவனத்தின் நிருபர் ஒருவர் இராணுவத் துருப்புக்கள் எல் பரசியோவில் உள்ளூர் விளையாட்டு அரங்கு ஒன்றை
எடுத்துக் கொண்டு அதை ஏராளமான மக்களை கைது செய்து காவலில் வைக்கும் மையமாக பயன்படுத்தும்
தயாரிப்பில் உள்ளன என்று தகவல் கொடுத்துள்ளார்; இது 1973 ல் சிலி நாட்டில் அகஸ்டோ பினோசே என்னும்
கொலைகார சர்வாதிகாரியின் வழிவகையைப் போலவே உள்ளது.
ஜீலயாவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் எல்லைக்கு சென்று அவர் ஹொன்டூரஸிற்குள்
இருந்த சில நிமிடங்களில் அவரை வரவேற்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக இராணுவம் கண்ணீர்ப்புகை குண்டை
வீசி அவர்கள் கூட முடியாமல் தடுத்தது. அவர் புறப்படும்போது ஜீலயா தன்னுடைய ஆதவாளர்களை தொடர்ந்து
எதிர்க்கும்படி கூறினார். படையினரிடம் மக்கள்மீது சுடவேண்டாம் என்றும் கூறினார்.
அது ஒரு குறுகிய கால எல்லை கடக்கும் நாடக பாவனை இருந்தது. எல்லையைக்
குறிக்கும் சங்கிலியை அவருடைய ஆதரவாளர்கள் உயர்த்தியபோது, ஹொன்டூரஸ் துருப்புக்கள் ஏதோ சைகை
வழங்கப்பட்டதுபோல் 20 அடி பின்வாங்கினர். இது "ஹொன்டூரஸிற்கு நல்வரவு" என்று சாலையில் நடப்பட்டுள்ள
பதாகையை நெருங்குவதற்கு ஜனாதிபதியை அனுமதித்தது. அவர் இராணுவ அதிகாரி ஒருவருடன் கைகுலுக்கினர்.
துருப்புக்களோ கலகப்பிரிவு சீருடையில் இருந்தன. "இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் இராணுவ
உயர்கட்டுப்பாட்டுடன் பேசுவதற்கு வந்துள்ளேன். தன்னலக்குழுவின் ஆதரவு இல்லாமல் நான் ஆட்சி நடத்தமுடியாது,
அவர்கள் மக்களுடைய ஆதரவு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி
ஆதரவு இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது" என்றார் ஜீலயா செய்தி ஊடகத்திடம்.
ஜீலயாவின் சொற்கள் அமெரிக்காவும், ஆட்சி சதியின் தலைவர்களும் ஆட்சி சதிக்கு
மக்கள் பிரதிபலிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தினர் என்பதைச் சரியாகவே எடுத்துக்காட்டுகின்றன. ஏராளமான
மக்கள் டெகுசிகல்பா மற்றும் பிற நகரங்களில் எதிர்ப்பு தெரிவித்ததைத்தவிர, ஹொன்டூரஸ் நெடுகிலும்
தொழிலாளர்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்து ஜீலயா திரும்பவேண்டும் என்றும் கோரினர்.
வேலைநிறுத்தங்களில் நாட்டின் பொது பள்ளி ஆசிரியர்கள், தேசிய மின்விசை நிறுவன ஊழியர்கள், மற்றும்
ஹொன்டூரஸ் பல்கலைக்கழக, பொதுச் சுகாதார ஊழியர்களும் இருந்தனர்.
ஜீலயா ஹொன்டூரஸ், ஒரு புதிய அரசாங்கத்தை இந்த இலையுதிர்காலத் தேர்தல்கள்
கொண்டுவரும் வரை, மீண்டும் ஆளப்பட உகந்தது என மாற்றும் நபராக தன்னைக் காட்டிக் கொள்கிறார். இது
ஜூலை 18ல் கொஸ்டாரீகா ஜனாதிபதி ஒஸ்கார் அரியஸ் ஆட்சி சதியின் தலைவர்களால் பெரிதும்
கட்டுப்படுத்தப்படும் அரசாங்கத்தின் தலைவராக இருத்தும் திட்டத்தை அவர் ஏற்றதில் தெளிவாயிற்று.
இது ஒன்றும் மக்கள் எழுச்சிக்குத் தலைமை கொடுக்கும் தன்னை பேராபத்திற்கு
உட்படுத்த தயாரான மற்றும் ஜனாதிபதி பதவியை மீட்டு அவருடைய பதவியை அபகரித்தவர்களை நீதிக்கு முன்
நிறுத்தும் மக்கள் தலைவர் ஒருவருடைய தோற்றம் அல்ல. மாறாக இந்த விரிவான கேலிச் செயல் அமெரிக்க
வெளிவிவகாரத்துறை மற்றும் கொஸ்டாரீக்கா ஜனாதிபதி ஒஸ்கார் அரியஸ் ஆகியோர் கூறும் "தேசிய சமரச"
அரசாங்கம் என்பதை அடையும் வகையில் உள்ளது. இந்தச் சமரசச் சூத்திரம் ஹொன்டூரஸ் தன்னலக்குழு மற்றும்
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நலன்களைக்காக்கும்.
நடைமுறை ஆட்சி ஜீலயா ஜனாதிபதி அரியாசுடன் பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டது
பற்றி "வருந்தத்தக்கது" என்று கூறியுள்ளது. அரியஸுடைய சமரசத்திட்டத்தில் ஜீலயா ஜனாதிபதியாக மீண்டும்
வரவேண்டும் என்பதும் இருந்தது. அதைத்தான் அமெரிக்க அரசுகளின் அமைப்பும் (Organization
of American States) கோரியுள்ளது. ஆட்சிசதியின்
சதிகாரர்களின் பிடிவாதப்போக்கைக் காணும்போது,
San José பேச்சுவார்த்தைகள் இதுவரை ஒரு போலித்தனம்
என்றுதான் தோன்றுகின்றன.
வாஷிங்டனில் ஈராக் ஜனாதிபதி நூரி அல்-மாலிகியுடன் நடத்திய ஒரு செய்தியாளர்
கூட்டத்தில், ஹில்லாரி கிளின்டன் ஆட்சி மாற்றத்தைவிட குறுகிய காலத்திற்கு ஜீலயா எல்லை கடந்து வந்தது பற்றி
கடுமையாகப் பேசினார். அவருடைய நடவடிக்கைகள் "பொறுப்பற்றவை" என்று கூறிய அவர் ஹொன்டூரஸில்
வன்முறையைத் தூண்டும் முயற்சியில் ஜீலயா ஈடுபட்டுள்ளார் என்னும் மிச்சலேட்டியின் குற்றச்சாட்டை எதிரொலித்துப் பேசினார்.
"அனைத்துக் கட்சிகளும் வன்முறையை ஏற்படுத்தக்கூடிய தூண்டுதல் கொடுக்கும் நடவடிக்கையைக்கைவிடவேண்டும் என்று
நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்" என்றார் அவர். இரு கட்சிகளும் அரியஸின் சமரசத் திட்டத்தை
ஒப்புக் கொள்ளுமாறும் அவர் வலுயிறுத்தினார்.
இராணுவ ஆட்சி மாற்றம் நடந்த ஜூன் 28 முதல் வெள்ளை மாளிகை ஜீலயாவை
அகற்றிய சக்திகளுக்கு நெறி கொடுத்து வந்துள்ளதுடன், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு வேண்டும் என்று கூறி
வருகிறது; இது ஜீலயா பெரும்பாலான வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை புறக்கணிக்கிறது.
அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு மக்களிடையே வாக்கெடுப்பு வேண்டும் என்ற அவருடைய செயல் முற்றிலும்
நியாயமாகிறது. ஆனால் அவருடைய எதிர்ப்பாளர்கள் வாக்காளர்களுடைய அனுமதி இல்லாமல் வலதுசாரி
ஹொன்டூரஸ் தன்னலக்குழு, திருச்சபை மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர் .
அப்பொழுது முதல், அது வன்முறையை கையாண்டு ஆட்சிசதிக்கு எதிராக ஆர்ப்பரித்த
ஆயிரக்கணக்கானவர்களை அடக்கி, 1972-81 களில் அமெரிக்க ஆதரவு இருந்த சர்வாதிகார காலத்தில் செயல்பட்ட
அடக்குமுறை அமைப்புகளை புதுப்பித்து மீண்டும் செயல்பட வைத்தது. இதில் சுயாதீன நிருபர்கள், தொழிலாளர்கள்,
விவசாயிகள் ஆகியோரை மரணப்படையினர் மிரட்டி கொலை செய்தமையும் அடங்கும். இந்த உள்ளடக்கத்தில், ஈரானில்
நடைபெற்ற தேர்தல் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்தியிருந்த எதிர்ப்புக்களை ஈரானிய ஆட்சி வன்முறையாக அடக்கியது
பற்றிய கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள பின்னணியில் வெளிவிவகார செயலாளர் கிளின்டனுடைய அறிக்கைகள்
முற்றிலும் பாசாங்குத்தனமாகத்தான் உள்ளன.
அமைதியான வழிவகைக்கான கிளின்டனுடைய அழைப்புகளுக்குப் பின்னணியில் ஆட்சி மாற்றம்
மற்றும் மிச்சலேட்டியின் ஆட்சிக்கு அமெரிக்க ஆதரவு என்பதற்கு பெருகிய சான்றுகள் உள்ளன. இந்த அரசியல் கட்டத்தில்
மூன்று கூறுபாடுகள் செயலில் உள்ளன; அமெரிக்க அரசுகளுக்கான கூட்டமைப்பு (Organization
of American States) கியூபாவிற்கு எதிரான பொருளாதாரத்
தடைகளை நிராகரித்தது; இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வணிக சுதந்திரம் பெருகியிருப்பது; அமெரிக்க தொழில்துறை
பிரேசிலுக்கு எதிராகவும் அதன் ஐரோப்பிய ஆசிய போட்டியாளர்குக்கும் எதிராகவும் அதிகரித்தளவில் வலுவிழப்பது
ஆகியவையே. மத்திய கிழக்கை போலவே அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார வீழ்ச்சியை இராணுவ
வலிமை மூலம் ஈடுகட்ட முற்படுகிறது.
நிகரகுவாவிற்கு திரும்பியபின், ஜீலயா தான் நிகரகுவா எல்லையில் ஒரு முகாமை
நிறுவ இருப்பதாகவும் அங்கிருந்து தான் திரும்புவதற்கு வலியுறுத்தப் போவதாகவும் கூறினார். பதவியில் இருந்து இறக்கப்பட்ட
தலைவர், புதிய அரசாங்கம் மனித உரிமைகள் மீறி செயல்களை செய்துள்ளது என்று மேற்கோளிட்டு, அமெரிக்க
ஜனாதிபதி பாரக் ஒபாமா ஹொன்டூரஸ் மீது பொருளாதாரத் தடைகளை சுமத்தி அமெரிக்காவிற்கு ஆட்சி
சதிசெய்தவர்கள் பயணிப்பதும் தடைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினார்.
ஆரம்பத்தில் இருந்தே ஜீலயா ஏகாதிபத்தியத்தில் இருந்து உண்மையான சுயாதீனமாக
இல்லை என்று நிரூபித்துள்ளதுடன் ஆட்சி சதியில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் அவர்களுடைய அமெரிக்க
ஆதரவாளர்களுடன் சமரசம் செய்துகொள்ள விருப்புவதையும் தெரிவித்து வந்துள்ளார். |