WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
France: Consumer credit reforms benefit finance,
trading groups
பிரான்ஸ்: நுகர்வோர் கடன் சீர்திருத்தங்கள் நிதிய, வணிகக் குழுக்களுக்கு நலன்களைக்
கொடுக்கிறது
By Jacques Valentin
10 July 2009
Use this
version to print | Send
feedback
பிரான்சின் பாராளுமன்றத்தின் மேல் மன்றமான செனட் நுகர்வோர் கடன்கள் பற்றி
சீர்திருத்த சட்ட வரைவு ஒன்றை ஏற்றுள்ளது. அதன் தற்போதைய வடிவத்தில் அது நிதியக் குழுக்களுக்கும் பெரும்
பல்பொருள் அங்காடிகளுக்கும்தான் ஆதரவாக உள்ளது. நுகர்வோருக்கு கடன் கொடுப்பதில் பெரும் கொள்ளை
முறையைத்தான் அதிகமாகக் கொண்டுள்ளது. ஒருவேளை 2009 இறுதியில்தான் பின்னர் ஒரு தேதியில் தேசிய சட்ட
மன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு சட்டமாக்கப்படும்.
சட்டவரைவில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு சில அலங்காரப் பூச்சுக்கள் நுகர்வோர்
கடனில் இருக்கும் மிகத் தீய வகைகளுள் ஒன்றான நிரந்தர அல்லது "சுழலும் கடன்" என்பதில் இருந்து எந்த
பாதுகாப்பையும் அளிக்கவில்லை. அவற்றின் கொடுமையான வட்டிவிகிதங்கள் சட்டபூர்வமாக ஏற்கப்படும் 20.9
சதவிகித உயர்வை அடைந்துவிடக்கூடும்.
சட்டவரைவின் அடிப்படை வடிவமைப்பு பொருளாதார மந்திரி
Christine Lagarde
யினால் முடிவெடுக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட "சீர்திருத்தங்கள்" பெரும்பாலும் தகவல், விளம்பரம் பற்றி உள்ளன.
ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும், நுகர்வோர் கடனில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் கவனத்தில்
எடுத்துக் கொள்ளப்படவில்லை. குறிப்பாக அதிகவட்டி விகிதத்திற்கு உச்ச வரம்பு வைக்கப்படவில்லை. பெரிய
தொடர் பல்பொருள் அங்காடிகள் வாடிக்கையாளருக்கு விசுவாச அட்டைகள் (loyalty
cards) சுழலும் கடனுடன்
அளிக்கப்படும் உரிமை வேண்டும் என்று வெற்றிகரமாக பெற்றுள்ளன.
இந்தச் சட்டவரைவின்படி, இது சட்டமான மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்சில்
நுகர்வோர் கடன் வைத்திருக்கும் குடிமக்கள் அனைவரையும் பற்றி தகவல் தளம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்று
அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய தனிப்பட்ட நிதி தகவல்களை அரசாங்கம் பார்க்கக்கூடிய
தன்மை அப்பட்டமாக ஜனநாயக விரோதச் செயல் ஆகும். இறுதியில் இது தளத்தை அணுக முடிந்தவர்களுக்கு கண்காணிப்பதற்கும்,
போலீஸ் வேலை பார்த்து இறுதியில் கடன் வாங்கும் நுகர்வோரை மிரட்ட வகை செய்யும் திறனையும் கொடுக்கிறது.
அரசாங்கம் எப்படி நிதித்துறை, பல்பொருள் அங்காடிச் சங்கலிகளின் ஆணைகளுக்கு
கீழ்ப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புக்களில் இருந்து வரும் வேண்டுகள்
பெரிதும் நிராகரிக்கப்படுகின்றன (என்பது அறியப்பட வேண்டும்). இந்த அமைப்புக்களில் ஒன்று
(UFC Que-Choisir)
விற்பனை நிலையங்களில் சுழலும் கடன் முறையை (பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றில்) சட்டம் தடை
செய்யவேண்டும் என்றும் கடனை விசுவாச அட்டைகளுடன் இணைப்பதை தடை செய்ய வேண்டும் என்றும்
கோரியிருந்தது.
அரசாங்கம் இந்தத் திட்டங்களை நிராகரித்து, "தகவல்" மட்டுமே அளிக்கப்படும்
என்று கூறியது. அது விற்பனை நிலையத்தில் விசுவாச அட்டை கொடுக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு
கொடுக்கப்படும் தகவல், ஆலோசனை மூலம் பாதுகாப்பு கொடுப்பதாக கூறியது.
Active Solidarity Martin Hirsch,
உடைய உயர் ஆணையர், ஒரு உயர்மட்ட ஆட்சித்துறை ஊழியரும் அரசாங்க உறுப்பினருமானவர், பாராளுமன்ற சட்ட
வரைவை நுகர்வோர் சங்கங்களுடன் விவாதிக்க பணிக்கப்பட்டார். நுகர்வோர் சங்கங்கள் வரவிருக்கும் சட்டத்தை
பெரிதும் எதிர்ப்பவை ஆகும்.
இவர் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து ஜனாதிபதி சார்க்கோசியின் வலதுசாரி
UMP (Union
for a Popular Movement)
அரசாங்கத்தில் சேர்ந்த பிரமுகர்களில் ஒருவர் ஆவர். மிகப்பெரிய நிறுவனமான
French Emmaus
அறக்கட்டளை சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவருக்கு பிரச்சினைகள் பற்றி தெரியும். ஆயினும்கூட,
சட்டவரைவு இறுதி பெற்ற பின்னர் அவர் தெளிவற்ற உறுதிமொழிகள் கொடுப்பதுடன் நிறுத்திக் கொண்டார். சட்ட
வரைவின் உள்ளடக்கத்தில் உள்ள சில பிரிவுகள் பாராளுமன்ற விவாத நேரத்தின் போது திருத்திக் கொள்ள முடியும்
என்று கூறிவிட்டார்.
பிரான்சில் அரசாங்கத்தில் பல முறையும் 1981ல் இருந்து இருக்கும் சோசலிஸ்ட்
மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் அப்பொழுது பெரும் கடனை வளர்க்கக்கூடிய கொள்கை முறை நுகர்வோர் கடன்
கொடுத்தலை தொடங்கியது. நிதித் தொழில்துறையில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு எந்த
சீர்திருத்தங்களையும் அவை ஆதரித்தது கிடையாது.
இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து
Seine-et-Marne
நகரின் சோசலிஸ்ட் கட்சி (PS)
செனட் உறுப்பினரான
Nicloe Bricq
உடைய பங்கினை
அடிக்கோடிட்டுக் காட்டுதல் முக்கியம் ஆகும்; இவர் நிதிக்குழுவின் உறுப்பினர் எனற முக்கியமான பதவியையும்
கொண்டுள்ளார். இவ்வம்மையார் கண்காணிப்பு தகவல் தளத்தை ஒரு சட்டவரைவாக அறிமுகப்படுத்த பழைமைவாத
உறுப்பினர்களுடன் சேர்ந்து செயல்பட்டுள்ளார்.
சுழலும் அல்லது சுழற்சிக் கடன் சமூகத்தில் வசதிகள் அற்ற அடுக்குகளில் இருந்து
ஏராளமான இலாபத்தை உறிஞ்சுகிறது. இது மீளமுடியாத அளவிற்கு குடும்பங்களை வறிய நிலைக்குத் தள்ளிவிடுகிறது.
பிரான்சில் அதிக கடன் பெற்றுள்ள குடும்பங்கள் அவமானத்தை தரக்கூடிய பொருளாதார, சட்டக் கண்காணிப்பின்கீழ்
வரும். அதையொட்டி பல ஆண்டுகள் வாங்கிய கடனை அதிகம் திரும்பக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு
தள்ளப்படுவர்.
கடன் தொடக்கக் காலத்தில் குறைந்த விளம்பரச் செலவினால் இத்தகைய கடன்களின்
சராசரி ஆண்டு வட்டி விகிதம் 15.6 ஆகும். ஆனால் பல ஒப்பந்தங்களின் உண்மையான வட்டி 20 சதவிகிதம் என்று
உள்ளது. சராசரி விகிதங்கள் பல நேரமும் அதிகரிக்கும் போக்கை கொண்டவை. ஆனால் ஐரோப்பிய மத்திய
வங்கியின் முக்கிய வட்டி சதவிகிதத்தை வரலாற்றிலேயே மிகக் குறைவாக 1 சதவிகிதம் என்று குறைந்துவிட்டது.
2008ல் 40 மில்லியன் சுழற்சி கடன் கணக்குகள் புதிதாக வந்தன. இவற்றில் 20
மில்லியன் இப்பொழுதும் செயல்படுகின்றன. பிரான்சின் குடும்பங்களில் 9 சதவிகிதம் இத்தகைய கடனைத் திருப்பிக்
கொடுக்கின்றன. இது தற்போதைய நுகர்வோர் கடனில் 21 சதவிகிதத்தை பிரதிபலிக்கிறது. கடன்
வாங்குபவர்களிடையே 41 சதவிகிதத்தினர் குறைந்த வருமானம் உடைய இல்லத்தினர் ஆவர். சுழற்சி கடன்கள் மிக
கொடூரமான வறிய நிலைமையுடன் பிணைந்தவை ஆகும்.
பிரான்சில் 710,000 இல்லத்தினர் கூடுதல் கடன் சுமையில் உள்ளனர். அதிக கடன்
வாங்கியவர்களுள் 85 சதவிகிதத்தினரில் குறைந்தது ஒரு சுழற்சி கடன் கூறுபாட்டையாவது கொண்டுள்ளனர்.
இத்தகைய கடனை வாங்கிய இல்லத்தினர் சராசரியாக அத்தகைய கடன்களில் ஐந்தை கொண்டு உள்ளனர்.
மேலும் பொருளாதார நெருக்கடியினால், மிக அதிக கடன் வாங்குவோர் விகிதம்
விரைவில் பெருகிக் கொண்டிருக்கிறது. மார்ச் 2008ல் இருந்து மார்ச் 2009 வரை இது 30 சதவிகிதம்
அதிகரித்துள்ளது. பொருளாதார வல்லுனர்கள் வேலை மற்றும் வருமானத்தில் நெருக்கடியின் விளைவுகளுடைய பாதிப்பு
2009 கோடை விடுமுறைக்கு பின்னர்தான் முழுமையாக உணரப்படும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
மிக வசதியற்ற இல்லத்தினர் தங்கள் வருமானத்தை சமூகநலத் திட்டங்களில் இருந்து
பெறும் நாடு என்று பிரான்ஸ் கருதப்படுகிறது. உண்மையில், அரசாங்கம் அது வழங்கும் வருமானங்களை களிப்புடன்
கொள்ளை அடிக்க வங்கிகளை அனுமதிக்கிறது.
சுழற்சிக் கடன் அதன் செலவினத்தை ஒட்டி, ஏற்க முடியான கடன் வகை என்று
தோன்றினாலும், நிதியத்துறை அதன் நன்மைகளையும் குறைகளையும் பெரும் உயர் தூய்மை நிலையில் இருந்து
தொடர்ந்து விவாதிக்கிறது.
உதாரணமாக சட்டவரைவை தயாரிக்க உதவுகையில் இத்துறை
நிதித்துறையின்
ஆலோசனைக்குழுவின் ஊடாக
(ஒரு
பொதுத் துறை அதிகார அமைப்பு)
Athling Management
நிர்வாகத்தை ஒரு அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டது.
டிசம்பர் 2008ல் வெளிவந்த இந்த அறிக்கை சுழற்சி கடனுக்கு ஆதரவாக நாணமின்றி
வாதங்களை முன்வைக்கும் விதத்தில் கூறுகிறது. இதன் தலைப்பே, "பிரான்சில் ஒரு பொறுப்பான புதுப்பிக்கப்படும்
கடன் வளர்ச்சிக்காக" என்று உள்ளது. சட்டவரைவிற்கு பெரிதும் ஊக்கம் கொடுத்த இந்த அறிக்கையின்படி,
நடைமுறையில் இருக்கும் விகிதம் ஒன்றும் அதிகம் இல்லை என்றும் 20சதவிகிதம் என்று இருக்கும் வட்டிகள் உண்மையாக
வங்கிச் செலவுகளை ஈடு செய்யக்கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
The Expansion
இதழின் வலைத் தளம், சட்டவரைவு பற்றி பல கட்டுரைகளை வெளியிட்டது. பிரான்சின் நிதியாளர்கள் உயரடுக்கு
வட்டங்களில் இப்பிரச்சினை பற்றி இருக்கும் இழிந்த கருத்து பற்றி மேற்கோளிட்டுள்ளது. முதலில் பிரெஞ்சுக்காரர்கள்
குறைகூறுவது தவறு, ஏனெனில் இது மற்ற இடங்களில் இன்னும் மோசமாக உள்ளது வெளிப்படை என்பது தெரியும். "ஐரோப்பாவில்
சில தடையற்ற சந்தை நாடுகளில் கொள்கை வட்டி கட்டுப்பாடு பற்றி சட்டம் எதுவும் கிடையாது, மிக உயர்ந்த
விகிதங்களை கடன் வட்டி அடையும், இங்கிலாந்தில் 35 சதவிகிதம் வரை செல்கிறது. உண்மையில் ஆங்கிலோ
சாக்சன் நாடுகளில் வட்டிவிகிதம் கடன் கொடுப்பதில் இருக்கும் ஆபத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறது என்பதை
ஏற்கிறது. எந்த ஆபத்திற்கும் ஒரு விலை உண்டு" என்று
பிரான்சு நிதிய நிறுவனங்களின்
கூட்டமைப்பின் (ASF-Association
of French Financial Companies)
இன் பொது மேலாளர்
Francoise Palle-Guillabert
விளக்கினார்.
மேலும், மத்தியதர குடும்பங்கள் முதலில் சுழற்சி கடனின் அதிக தன்மையில் இருந்து
அவற்றை பாதுகாக்க விரும்பும் சீர்திருத்தங்களின் முதல் பாதிப்புக்களாக இருக்கும். "புதுப்பிக்கப்படும் கடனின் மிக
அதிகரிக்கும் கடன் விகிதம் குறைக்கப்பட்டால், வங்கிகள் தங்கள் நிபந்தனைகளை குறைத்து, மிகக் குறைந்த வருமானங்கள்
இருக்கும் வீடுகள், அமைப்புக்கள், குறுகிய கால ஒப்பந்தத்தில் உள்ள தற்காலிக தொழிலாளர்கள் ஆகிய பிரிவுகளை
இத்துறையில் இருந்து ஒதுக்கி விடுவர்." என்று
Asteres
இன் தலைவரான
Nicolas Bouzou கூறினார்.
UFC-Que Choisir
மார்ச் 2009ல் ஒரு தேசிய கள ஆய்வை வெளியிட்டது. அது கடன் வழங்குபவர்கள் திட்டமிட்டவாறு புதுப்பிக்கக்கூடிய
கடன்களுடன் குடும்பங்களை நோக்கி திரும்புவதாகவும், இது அவர்கள் தேவைக்கு கூடுதலான பொருத்தமுடைய
தனிப்பட்ட அல்லது ஒருமுறை கடன்கள் போன்றவற்றை கடுமையற்ற தகவல்களை கொண்ட விண்ணப்பப்பத்திரங்கள் மூலம்
மற்றவர்களின் செலவில் வழங்குவதாக காட்டுகிறது.
இந்தப் பொருளாதார நெருக்கடியில் ஆளும் வர்க்கங்கள் பெருகிய முறையில் வங்கிகள்
மற்றும் வணிகங்களின் குறுகிய கால நலன்களுக்கு ஏற்றம் தரும் வகையில் நூறாயிரக்கணக்கான குடும்பங்களை அவை
அழிக்க அனுமதிக்கின்றன. இந்த நிலைப்பாட்டில் இருந்து சுழற்சி கடன், அமெரிக்க வங்கிகள் குடும்பங்களுக்கு
பிணையற்ற வீட்டு கடன்களை கொடுத்ததுதான் நமக்கு நினைவிற்கு வருகிறது. வாடிக்கையாளர்களால் அதைத்திரும்ப
தரமுடியாது என்பதை அவை நன்கு அறிந்திருந்தன. இது முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு அடையாளம் ஆகும்.
இன்னும் கூடுதலான வகையில் இலாபத்தை உறிஞ்சுவதில் அது கூடுதலான சுரண்டல், ஒட்டுண்ணித் தன்மையைத்தான்
வளர்த்துக் கொள்ளுகிறது. |