WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The Hillary Clinton doctrine
ஹில்லாரி கிளின்டன் கோட்பாடு
Bill Van Auken
24 July 2009
Use this
version to print | Send
feedback
1980களின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மத்திய கிழக்கில் ஒரு பெரிய
அமெரிக்க இராணுவ கட்டமைப்பை தொடக்கினார்.
அந்த ஆண்டு நாட்டிற்கு ஆற்றிய உரையில், அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டர்
கோட்பாடு என பின்னர் அறியப்பட்ட கருத்தை கோடிட்டுக் காட்டும் வகையில் அறிவித்தார்: "பாரசீக வளைகுடாப்
பகுதியை வெளிசக்திகள் ஏதாவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சி அமெரிக்காவின் முக்கிய நலன்கள்மீது தாக்குதல்
என்று கருதப்படும், அத்தகைய தாக்குதல் இராணுவ சக்தி உட்பட, தேவையான வழிவகைகள் மூலம் எதிர்த்து
அகற்றப்படும்."
அதற்கு ஓராண்டிற்கு முன்னதாக நடந்த இரு நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பாக கார்ட்டர்
நிர்வாகத்தால் இவ்வாறு உரத்த குரலில் கூறப்பட்டது. முதல் நிகழ்வு ஈரானியப் புரட்சி; அது அமெரிக்க ஆதரவை
கொண்டிருந்த ஷாவின் சர்வாதிகாரத்தை அகற்றியது. அவர் வாஷிங்டனின் விசுவாசமான காப்பாளராக அப்பகுதியில்
செயல்பட்டுவந்தார். இரண்டாவது சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானத்தில் தலையீட்டது. இதை வாஷிங்டனேதான்
தூண்டியிருந்தது. அப்பொழுது கார்ட்டருடையதும் மற்றும் இப்பொழுது ஒபாமா ஆலோசகரான
Zbivgniew Brezezinski
உடைய வார்த்தைகளில் "சோவியத் ஒன்றியத்திற்கு அதன் வியட்நாம் போரைக் கொடு." என்பதாகும்.
வாஷிங்டன் தேவையானால் வலிமை பயன்படுத்தி பாதுகாக்க தயாராக இருக்கும்
"முக்கிய நலன்கள்" எவை என்பது பற்றி கார்ட்டர் சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை. ஆப்கானிஸ்தான் "பெரும்
மூலோபாய முக்கியத்துவம்" வாய்ந்தது என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில் "உலகின் ஏற்றுமதி செய்யக் கூடிய
எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் இருக்கும் பகுதியில் அது உள்ளது"என்றார்.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஒரு
கடுமையான காலனித்துவ வகையான போரை நடத்திக் கொண்டிருக்கிறது, ஈராக்கை ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கிறது, வெளிப்படையான அச்சுறுத்தல்கள், இரகசியமான உறுதிகுலைக்கும் நடவடிக்கைகளை ஈரானிய
மதகுருமார் ஆட்சிக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் அதே "முக்கிய நலன்களை"
பாதுகாத்தல் என்ற நோக்கத்திற்காக செய்கிறது.
இந்தப் பின்னணியில்தான் வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் புதனன்று
தாய்லாந்தில் கூறிய கருத்துக்கள் விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். கிளின்டன் தன்னுடைய சொந்த கோட்பாட்டை
கூறுவது போல் தோன்றியது (அல்லது கார்ட்டர் கோட்பாட்டிற்கு கிளின்டன் துணைவிதி சேர்ப்பது போல்),
தெஹ்ரான் ஒரு புதிய அணு ஆயுதத்தைப் பெறக் கூடும் என்று கூறப்படும் அச்சுறுத்தலுக்கு விடையிறுக்கும் வகையில்
மத்திய கிழக்கில் இருக்கும் எண்ணெய் வளம் உடைய நாடுகளுக்கு அமெரிக்க அணுவாயுதக் குடையை கொடுக்க
முன்வந்துள்ளதுதான். அமெரிக்கா ஈரானின் அரபு அண்டை நாடுகளுக்கு ஆயுதங்களை கொடுக்கும் (முடியாட்சிகள்,
எமிரேட்டுக்கள் என்ற கூட்டம், இவற்றுடன் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக்).
"..நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம், பல
முறையும் நான் கூறியுள்ளதுபோல், முடக்கிவிடும் நடவடிக்கை எடுப்போம், அப்பகுதியில் இருக்கும் எமது பங்காளிகள்
பாதுகாப்பை மேம்படுத்த செயல்படுவோம்." என்று கிளின்டன் ஒரு தாய்லாந்து தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.
இவருடைய கருத்துக்கள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்புமனுக்காலத்தில் கடந்த ஆண்டு இவர் கொடுத்த அறிக்கையை
எதிரொலித்தன; அதில் அவர் இஸ்ரேலை ஈரான் தாக்கினால் தான் அதை "முற்றிலும் அழித்துவிடுவதாக" கூறியிருந்தார்.
அவர் தொடர்ந்தார்: "நியாயமான மதிப்பீடு என்று நான் நினைப்பதை ஈரான்
எண்ணிப் பார்க்க வேண்டும்: அமெரிக்கா அப்பகுதியில் ஒரு பாதுகாப்பு குடையை கொடுக்கிறது என்றால்,
வளைகுடா பகுதியின் இராணுவத் திறனை வளர்ப்பதற்கு இன்னும் அதிகம் செய்யப்போகிறோம் என்றால், ஈரான்
அதிக வலுவுடையதாகவோ, பாதுகாப்பு உடையதாகவோ இருப்பது கடினம். ஏனெனில் அவர்கள் (ஈரானியர்கள்)
அணுவாயுதத்தைப் பெற்றுவிட்டால் தாங்கள் செய்யலாம் என நினைக்கும் மிரட்டல், ஆதிக்கம் செலுத்துதல்
ஆகியவற்றை அவர்கள் செய்ய முடியாது."
ஈரானிய ஆட்சி அதன் யூரேனிய அடர்த்தித் திட்டம் முற்றிலும் எரிசக்தி
உற்பத்திக்காகத்தான் என்று கூறிக்கொண்டுதான் வருகிறது.
கிளின்டனின் கருத்துக்கள் உடனடியாக இஸ்ரேலில் எரியூட்டலை கொடுத்தது. அது
ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது ஒருதலைப்பட்ச தாக்குதலை நடத்துவதாக அச்சுறுத்தியுள்ளது. அணுசக்தி உடைய
ஈரான் என்பதற்கு வாஷிங்டன் ஏற்றுள்ள நிலையைத்தான் அணுவாயுத குடை என்னும் அவர் அழைப்பு புலப்படுத்துவதாக
இஸ்ரேல் கூறுவதுடன் பனிப்போர் வகையில் "அடக்குதல்", "ஒருவரை ஒருவரை உறுதியாக அழித்தல்"
போன்றவையும் வந்துள்ளது என்கிறது. வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர்கள் கிளின்டன் ஈரானிய
அணுவாயுதத் திட்டம் பற்றி அமெரிக்க நிலைப்பாட்டை எவ்விதத்திலும் மிருதுவாக்கிக் கொள்ளவில்லை என்று
கூறியுள்ளனர்.
ஒரு அமெரிக்க பாதுகாப்புக் குடை பேர்சிய வளைகுடாவில் ஈரானிய அச்சுறுத்தலை
எதிர்கொள்ளுவதற்கு என்ற போலிக்காரணத்திற்காக என்பது வாஷிங்டனுடைய நோக்கமான எண்ணெய் செழிக்கும்
அப்பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை சுமத்தவும் அதிகம் உதவும்.
இதுதான் இந்த ஆண்டு முன்னதாக "ஜனாதிபதி பணிப் பிரிவினால்" வெளியிடப்பட்ட
அறிக்கையில் கூறப்பட்டது; அக்குழுவில் ஒபாமா நிர்வாகத்தால் பின்னர் அதன் வளைகுடா மற்றும் தென்மேற்கு
ஆசியா பற்றிய சிறப்பு ஆலோசகர் என குறிக்கப்பட்ட
Dennis Ross உம் அடங்குவார்.
"ஈரான் அணுவாயுத திட்டத்தை எதிர்கொள்ளுதல் அமெரிக்க நலன்களை
முன்னேற்றுவிக்க வாய்ப்புக்களை கொடுக்கிறது" என்று அறிக்கை கூறியது; மேலும் இது வாஷிங்டனை "அதன் மத்திய
கிழக்கு நண்பர்களுடனான அமெரிக்க உறவையும் ஆழப்படுத்த அனுமதிக்கும்" என்று சேர்த்துக் கொண்டது.
ஆனால், கிளின்டனின் போர்முரசு மற்றொரு உடனடி நோக்கத்திற்கும் உதவுகிறது.
இது தெஹ்ரானின் மதகுருமார் ஆட்சியில் ஏற்பட்டுள்ள போட்டி முதலாளித்துவ பிளவுகளுக்கு இடையே நடக்கும்
கடுமையான உட்பூசலை இயன்றளவு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தையும் கொண்டது. ஜூன் 12 ஜனாதிபதி
தேர்தலுக்குப் பின் இந்த உட்பகை வெடித்து வெளிவந்துள்ளது. துணை ஜனாதிபதி ஜோசப் பிடன், தன்னுடைய
பாதுகாப்பு நலன்களை பாதுகாக்கத் தேவையாக தாக்குதல் நடத்த வேண்டும் என்றால், இஸ்ரேல் ஈரானை
தாக்கும் "உரிமை" கொண்டுள்ளது என்று சமீபத்தில் கொடுத்துள்ள அறிக்கையை தொடர்ந்து இவ்வம்மையாரின்
கருத்துக்கள் வெளிவந்துள்ளன;
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பல முறையும் ஈரானிய ஆட்சிக்குள் இருக்கும்
பூசலை தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடைய நேரடிப் பேச்சுக்களை தடுப்பதாக உள்ளவை என்று
சுட்டிக்காட்டியுள்ளார். "நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்குத்தான் முற்படுகிறோம், அவர்கள் தேர்தலிலும் அதற்குப்
பின்னரும் செய்தது பற்றி முழு கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ள போதிலும்கூட எதை செய்யத் தயாராக உள்ளோம்
என்பதையும் இப்பொழுதும் கூட தெளிவாக்கியுள்ளோம். ஆனால் இப்பொழுது அத்தகைய முடிவு எடுக்கும் திறனை
அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்."
இத்துடன் அமெரிக்க பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்பு என்பது காலவரையற்று
நீடிக்காது என்று புதுப்பிக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளும் இணைந்துள்ளன. "அணுவாயுத கடிகாரம் ஒலியிடுகிறது.
அமெரிக்கா ஜன்னலை எப்பொழுதும் திறந்து வைத்திருக்காது என்றார் அவர். இப்பொழுது அவர் வாஷிங்டன்
"முடக்கிவிடக்கூடிய பொருளாதாரத் தடைகளை" சுமத்தும் என்ற அச்சுறுத்தலை புதுப்பித்துள்ளார்.
இவை அனைத்தும் பெருகிய முறையில் உறுதியற்று காணப்படும் ஈரானிய அரசாங்கத்தின்
மீது மிகஅதிக அழுத்தம் கொடுக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்
மீர் ஹொசைன் மெளசவி மற்றும் அவருடைய பாதுகாவலரும் இலட்சாதிபதியுமான முன்னாள் ஜனாதிபதி அலி அக்பர்
ஹஷேமி ரப்சஞ்ஜானி முகாமினை நோக்கி அதிகாரச் சமநிலையை மாற்றலாம் என்ற நம்பிக்கையும் கொண்டவை
ஆகும்.
இப்பிரிவு இப்பொழுது ஜனாதிபதியாக உள்ள மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டின் வெளியுறவுக்
கொள்கையை பொறுப்பற்றது என்று குறைகூறி, அதே நேரத்தில் இன்னும் விரைவான வகையில் தடையற்ற சந்தை
பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்துதல், பரந்த வகையில் வெளி மூலதனத்திற்கு இடமளித்தல் மற்றும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மறு இணைப்பு கொள்ளுதல் ஆகியவற்றிற்கு ஆதரவையும் அடையாளம் காட்டியுள்ளது.
இவை அனைத்தும் வாஷிங்டன் ஈரானிய தேர்தல் முடிவுகள் பற்றிக் கொண்டுள்ள சீற்றத்தை விளக்குகின்றன.
அதேபோல் அமெரிக்க செய்தி ஊடகம் மெளசவியின் "பச்சை புரட்சி" என்பதற்கு காட்டும் தடுப்பற்ற
ஆர்வத்தையும் புலப்படுத்துகிறது.
இப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மகத்தான மூலோபாய நலன்களைக்
காணும்போது (அமெரிக்க ஆயுதமேந்திய படைகள் ஈரானின் கிழக்கு (ஆப்கானிஸ்தான்), மேற்கு (ஈராக்) எல்லைகளில்
போர்கள் நடத்திக் கொண்டிருக்கிறது) இந்த நாடே நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களை பொறுத்தவரையில்
உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளபோது ஒபாமா நிர்வாகம் தெஹ்ரானின் ஆட்சியின் உயர்மட்டத்தில் ஒரு மாறுதலை
கொண்டுவர கணிசமான இருப்புக்களை செலவழிக்க தயாராக உள்ளது.
இத்தகைய கருத்துக்கள் அமெரிக்காவில் இருக்கும் குட்டி முதலாளித்துவ போலி "இடது"
சக்திகளால் பொருந்தாதவை என்று கருதப்படுகின்றன. அவர்கள் எத்தகைய வர்க்க ஆய்விற்கும் விரோதப் போக்கு
காட்டுவதுடன், வேலைத்திட்டத்திற்கு கவனம்செலுத்துதல் அல்லது ஈரானில் அமெரிக்க குறுக்கீட்டின் நீண்ட வரலாறு
பற்றிய ஆய்வு, "சீர்திருத்தவாதிகள்"' எனப்படும் மெளசவி அல்லது ரப்சஞ்ஜானி ஆகியோர் வழிநடத்தும் இயக்கத்தின்
உண்மை உள்ளடக்கத்தை மதிப்பிடுதல் ஆகிவற்றிற்கும் விரோதப் போக்கு காட்டுகின்றனர். அவற்றைப் பொறுத்தவரையில்
ஈரானிய நிகழ்வுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்கம் செய்கையிலும், புதிய
தலையூடுகளுக்கு தயாரிப்பு நடத்துகையிலும் ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவை
கொடுக்கும் ஆதரவை ஒருங்கிணைக்கும் வழிவகையாக பயன்படும்.
அமெரிக்க தலையீட்டினால் மகத்தான ஆபத்துக்கள் ஏற்படும். அணுசக்தி குடை என்று
பேசுதல், ஒரு பிராந்திய ஆயுத கட்டமைப்பு மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் அனைத்தும் ஒரு போர்
வெடிப்பைத் தோற்றுவிக்கக்கூடும். அது ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் நடக்கும் போர்களை மிகச் சிறிய
தன்மை ஆக்கிவிடும் அளவில் இருக்கும். அதே நேரத்தில் அப்பகுதியில் அவற்றின் கணிச நலன்களைக் கொண்டிருக்கும்
மற்ற முக்கிய சக்திகளையும் அதனுள் இழுக்கும்.
ஈரான், அமெரிக்க மற்றும் சர்வதேச அளவில் இருக்கும் தொழிலாள வர்க்கம்தான்
போரை தோற்றுவிக்கும் இலாபமுறைக்கு எதிரான அரசியல் போராட்டத்தை சுயாதீனமாக நடத்துவதற்கு அதன்
வலிமையைத் திரட்டி நிற்கும் வகையில் இத்தகைய ஆபத்துக்களை தோற்கடிக்க முடியும். |