World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Socialist Equality Party certified for 2009 federal election

2009 தேசிய தேர்தலில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி பங்கு பெற அனுமதிக்கப்பட்டுள்ளது

By our reporter
22 July 2009

Use this version to print | Send feedback

ஜூலை 17 நடைபெற்ற கூட்டத்தில் ஜேர்மனியில் கூட்டாட்சி தேர்தல்குழு நீண்ட பிரச்சனைகளுக்கு பின்னர், ஜேர்மனியின் சோசலிச் சமத்துவக் கட்சி (Partei fur Soziale Geleicheit-PSG) செப்டம்பர் மாத தேசியத் தேர்தல்களில் கலந்துகொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது.

52 அமைப்புக்கள் தேர்தலில் பங்கு பெறுவதற்கு கொடுத்திருந்த மனுக்களில் 31 ஐ குழு நிராகரித்தது. இந்த 52 மனுக்கள் இதுவரை இல்லாத அதிக அளவு எண்ணிக்கை ஆகும். நிராகரிக்கப்பட்ட கட்சிகளுள் பல ஜேர்மனிய பாராளுமன்றமான புண்டஸ்டாக் முன்னைய தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

PSG வாக்குச் சீட்டில் பதிவு பெறுவதற்குத் தேவையான அனைத்து சட்டபூர்வ நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருந்தது. மாநிலப்பட்டியல் அளிப்பதற்கான காலக்கெடு, வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டார மாநாடுகளின் நடவடிக்கைக் குறிப்புக்கள், மாநாடுகள் நடக்கும் முறை பற்றிய உறுதி பிரமாணப்பத்திரங்கள், கட்சி வேட்பாளர்கள் தகுதி பற்றி உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் மற்றும் வேட்பாளர்களின் விருப்ப அறிக்கைகள் ஆகியவை இதில் இருந்தன. இந்த ஆவணங்கள் அனைத்தும் உரிய அரசாங்க தேர்தல் அலுவலர்களிடம் அளிக்கப்பட்டிருந்தன.

இதைத்தவிர PSG தேவையான, முறையான 2,000 வாக்காளர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் ஆதரவிட்டு இதன் மாநில பட்டியலுக்கு கொடுத்துள்ள கையெழுத்துக்களையும் அளித்திருந்தது. இக்கையெழுத்துக்கள் ஒவ்வொன்றும் பதிவு அலுவலகத்தில் உரிய அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டன.

ஒன்பது பேர் கொண்ட கூட்டாட்சித் தேர்தல் குழுவின் தலைவர் ரொட்றிஜ் ஈகலர் ஆரம்பத்தில் PSG திருப்திகரமாக தேர்தல்களில் பங்கு பெறுவதற்கான "பொதுவான" நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளது என்று என்றாலும் கட்சி அதற்கேற்ற "பொருள்சார்" நிபந்தனைகளை திருப்திபடுத்திவிட்டதா என்பது பற்றிக் கணிசமான சந்தேகங்களை கொண்டுள்ளதாக கூறினார்.

முந்தைய ஆண்டுகளில் PSG பல நேரங்களில் வேட்பாளர்களை நிறுத்தி வைத்துள்ளது மற்றும் அரசியல் ஆதரவைப் பெற முற்பட்டது என்பதை அவரால் மறுக்க முடியவில்லை. ஆனால், குறைந்த பிரதிபலிப்பையும் மற்றும் கட்சியின் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையும் கருத்தில் கொண்டு, வேட்பாளர்களை அது நிறுத்தி வைக்கும் உரிமை தீவிரமாக கேள்விக்குரியதாக உள்ளது என்று அவர் கூறினார்.

PSG யின் தலைவர் உல்ரிச் ரிப்பேர்ட் ஈகலரின் ஆட்சேபங்ளை எதிர்த்து கடுமையாக வாதிட்டார். தேர்தல்களில் பங்கு பெறுவதற்கு சட்டபூர்வ தேவை ஆயிரக்கணக்கான சான்று ஆதரவு உடைய கையெழுத்துக்களை சேகரிப்பதை தளமாகக் கொண்டுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார். PSG திருப்திகரமாக இத்தேவையை முந்தைய பாராளுமன்ற மற்றும் மாநிலத் தேர்தல்களில் பூர்த்தி செய்துள்ளது என்றும் இன்னும் சமீபத்தில் ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலிலும் பூர்த்தி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

"மக்களிடையே எங்களுக்கு ஆதரவு உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் எப்பொழுதும் தேவைக்கு அதிகமான கையெழுத்துக்களையே அளித்திருக்கிறோம்" என்று ரிப்பேர்ட் விளக்கினார்.

ஐரோப்பிய தேர்தலில் 0.5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே PSG பெற்றுள்ளது என்று கூறிய கூட்டாட்சி தேர்தல் அதிகாரியின் கருத்தை எதிர்கொள்ளும் விதத்தில் PSG தலைவர் வாக்குகளின் மதிப்பை இக்கருத்து தவறாகப் பிரதிபலிக்கிறது என்றார். "ஐரோப்பிய தேர்தல்களில் நாங்கள் கிட்டத்தட்ட 10,000 வாக்குகளை பெற்றோம். அது ஒன்றும் மதிப்பற்ற எண்ணிக்கை அல்ல." என்றார். "மற்ற கட்சிகளைப் போல் அதிக வாக்குகளைப் பெறவில்லை என்று எங்கள் மீது இயல்பாக குற்றம் சாட்டலாம். ஆனால் அது ஒன்றும் தேர்தலில் நாங்கள் பங்கு பெறுவதை தடுப்பதற்கு தக்க அடித்தளம் ஆகாது" என்று சேர்த்துக் கொண்டார்.

PSG இன் பணி தேர்தல் பங்குடன் நின்றுவிடவில்லை என்று அதன்பின் ரிப்பேர்ட் விளக்கினார். "நாங்கள் தேர்தலில் வெறும் பங்கு மட்டும் பெறவில்லை. நாங்கள் அன்றாடம் இளைய தளப் பதிப்பான உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடுகிறோம். இது முக்கிய அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிகழ்வுகளை பற்றியது. நாங்கள் Gleichheit என்னும் அச்சிடப்படும் இதழையும் வெளியிடுகிறோம். இந்த இதழ் இருமாதங்களுக்கு ஒருமுறை வருகிறது, பல புத்தகக் கடைகளிலும், சிறு கடைகளிலும் கிடைக்கிறது. சமூகப் பிரச்சினைகள் முக்கியமானவை பற்றி நாங்கள் பொது அரசியல் கூட்டங்களை நடத்துகிறோம். பேர்லின் மற்றும் பிற நகரங்களில் எங்கள் தேர்தல் கூட்டங்களுக்கு நிறுவப்பட்டுள்ள கட்சிகள் என்று அழைக்கப்படுவதைக் காட்டிலும் அதிக பார்வையாளர்கள் வருகின்றனர்." என்றார் அவர்.

ஒப்புமையில் குறைவான உறுப்பினர் எண்ணிக்கையில் இந்தத் தரத்தில் எப்படி நடவடிக்கைகளை செய்ய முடிகிறது என்று கேட்கப்பட்டதற்கு, ரிப்பேர்ட் PSG மற்ற கட்சிகளை விட உறுப்பினர்களிடம் அதிக பணியை எதிர்பார்க்கிறது என்று விளக்கினார். "எங்கள் கட்சியில் அரசியல் சடலங்கள் ஏதும் கிடையாது. PSG உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கும் உபரி நேரத்தை அரசியல் பணிக்குச் செலவிடுகின்றனர். இதைத்தவிர, PSG யின் பணிக்கு உற்சாகத்துடன் ஆதரவு தரும் பரிவுணர்வு கொண்ட பரந்த ஆதரவாளர் வட்டமும் எங்களுக்கு உண்டு" என்றார்.

அரசியல் வாழ்வில் PSG யின் பங்குபெறும் அளவு பற்றி எந்த ஐயமும் இல்லை என்றும் ரிப்பேர்ட் வலியுறுத்தினார். அது வாக்குப் பதிவில் இருந்து ஒதுக்கப்பட்டால், இருக்கும் அரசியில், சட்ட வழிவகைகளை அனைத்தையும் பயன்படுத்தும் விதத்தில் அம்முடிவை PSG எதிர்கொள்ளும் என்று தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து ஈகலர் PSG தேர்தலில் பங்கு பெறலாம் என்று கூறியவுடன் அவருடைய கருத்த ஒருமனதாக மற்ற குழு உறுப்பினர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

கூட்டாட்சி தேர்தல் குழு தன்னுடைய கூட்டத்தில் எடுத்த நிலைப்பாடு பல கேள்விகளை எழுப்புகிறது. குழு முறையான அளவுகோல்களை மட்டும் பார்ப்பதுடன் நின்றுவிடாது, அதாவது தேர்தலில் பங்கு பெறுவதற்கு கூறப்பட்டுள்ள சட்ட விதிகளை பார்ப்பதுடன் மட்டும் இல்லை என்று கூறுவது, மற்றும் "பொருள்-சார் சூழ்நிலை" மற்றும் முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் எனப்படுவது அதிகாரத்துவ ஒருதலைப்பட்சத்தின் வெளிப்பாடு ஆகும்.

இக்குழு ஜேர்மனியில் அரசியலமைப்பிற்கு (அடிப்படைச் சட்டம்), கூட்டாட்சித் தேர்தல் சட்டம் மற்றும் அரசியல் கட்சிகள் சட்டம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டது ஆகும். அடிப்படைச் சட்டத்தின் 21வது விதி கூறுகிறது: "மக்களுடைய அரசியல் விருப்பத்தை உருவாக்குவதில் அரசியல் கட்சிகள் பங்கு பெறுகின்றன. அவை சுதந்திரமாக நிறுவப்படலாம். அவற்றின் உள் அமைப்புக்கள் ஜனநாயக கொள்கைகளுடன் இயைந்து இருக்க வேண்டும். தங்கள் இருப்புக்களின் ஆதாரங்கள், சொத்துக்கள் ஆகியவை பற்றி அவை பகிரங்கமாக கணக்குக்கூற பொறுப்பு உடையவர்கள்."

கூட்டாட்சி தேர்தல் சட்டத்தின் 18வது பத்தி எந்த அமைப்புக்கள், எந்த சூழ்நிலையில் தேர்தலில் பங்கு பெறலாம் என்பதை குறிப்பாக தெரிவிக்கிறது. முந்தைய தேர்தல்களில் குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்ற தேவை பற்றி எவ்விதக்க குறிப்பும் இல்லை. கொடுக்கப்பட்டுள்ள ஒரே நிபந்தனை கட்சிகள் கையெழுத்துக்களை சேகரிக்க வேண்டும் என்பதுதான். அது எந்த அளவிற்கு மக்களிடையே அதற்கு ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கிறது.

கட்சிகள் பெறும் அல்லது இழக்கும் வாக்குகளை வைத்து முடிவிற்கு வருதல் ஒன்றும் தேர்தல் குழுவின் வேலை அல்ல. அப்படி இருந்தால், சமூக ஜனநாயக கட்சி, சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து பாரிய தோல்விகளை பெற்றுள்ளதை அடுத்து, அது தகுதி பெறுவது பற்றி எவரும் தீவிரமாக வினா எழுப்பலாம்.

தேர்தல் குழு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது கொண்டிருக்கும் திமிர்த்தன, ஒதுக்கித்தள்ளும் அணுகுமுறை, மற்றும் கட்சிகளின் விதியை தன் விருப்பம் போல் நிர்ணயிக்கும் முயற்சி (பிரபுக்கள் காலத்தில் இருந்த தன்மையைப் போல்) எந்த அளவிற்கு ஜேர்மனிய அரசாங்கம் வரவிருக்கும் சமூக மோதல்களை எதிர்கொள்ளும் என்பதற்கு அடையாளம் ஆகும்.

பலர் வெளிப்படையாக உத்தியோகபூர்வ அரசியலின்பால் மற்றும் அதேவித வணிகச் சார்புடைய அடிப்படைக் கொள்கைகளை செயல்படுத்துவதுடன் விரோதப் போக்கு கொண்டுள்ளனர். அவர்கள் சுயாதீனமாக இயல்பூக்கமடைந்து அரசியல் வாழ்வில் தங்கள் அரசியல் நெறிகளுடன் தலையிட விரும்புகின்றனர். இந்த அடிப்படை ஜனநாயக விழைவை அரசாங்கம் ஒரு அச்சுறுத்தல் என்றும் எதிர்ப்பின் அடையாளம் என்றும் காண்கிறது.

இவ்விதத்தில் சமூக பிரச்சினைகளை எழுப்ப முற்படும் பல கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டன. இவற்றுள் Greys (Die Grauen) ஓய்வுதியம் பெறுவோர் பிரச்சினைகள பிரதிநிதித்துவப்படுத்த முற்பட்டு பல ஆண்டுகளாக தேர்தலில் பங்கு பெற்றது. PASS கட்சி, வேலையின்மையில் இருப்பவர்கள், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு வாதிடும் கட்சி. SAG எனப்படும் மாற்றீட்டு சமூக நீதி கட்சி. அரச நிராகரிப்புவாத (anarchist) PEGO கட்சி ஆகியவை பல ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற்றுள்ளன.

இத்தேர்தலை PSG நடைமுறைக் கட்சிகளுக்கு எதிராக அலையெனப் பெருகும் முற்போக்கான, தெளிவான அரசியல் சார்பை இலக்கு கொள்ளும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை சுற்றி விவாதம் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளும்.

தற்போதைய தேர்தல் பிரச்சாரம் அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளுடைய அரசியல் சதியின் தன்மையைக் கொண்டுள்ளது; இவை ஒன்றாகச் செயல்பட்டு பொருளாதார, சமூக நெருக்கடியின் உண்மையான அளவை மறைத்துள்ளன. அதே நேரத்தில் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பெரும் தாக்குதல்கள் நடத்தவும் தயாரிப்பு செய்து வருகின்றன. இலையுதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்தின் கூட்டு எப்படி அமைந்திருந்தாலும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் ஏற்றிவிடும் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தும் இலக்குகளைத்தான் கொண்டிருக்கும்.

தொழில்துறை உற்பத்தி இப்பொழுது மிகப் பெரிய விகிதத்தில் குறைந்துகொண்டிருக்கிறது, வேலையின்மை இதுகாறும் இல்லாத அளவிற்கு பெருகி வருகிறது. மேல்பரப்பிற்கு கீழே மகத்தான சமூகப் புயல் உருவாகிக் கொண்டு இருக்கிறது.

PSG தன்னுடைய கடந்த மாத ஐரோப்பிய தேர்தலுக்கான அறிக்கையில் எழுதியது: "அத்தகைய புயலை ஒரு முன்னேற்ற திசையில் தயாரித்து அரசியலில் இயக்கும் நோக்கத்தை எங்கள் பணியாக கண்கிறோம். முதலாளித்துவத்தின் சக்தியை உடைப்பதையும் தொழிலாளர்கள் அரசாங்கத்தையும் நிறுவவும் ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்திற்கு அடித்தளத்தை அமைக்க விரும்புகிறோம்.

"நாங்கள் ஒரு சக்தி வாய்ந்த வரலாற்று மரபில் நிற்கிறோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஜேர்மனியப் பிரிவு என்ற முறையில் PSG ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியை உருவகமாக கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கிசம், ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்திற்கு எதிராக மிகக் கடினமான சூழ்நிலையில் மார்க்சிசத்தை பாதுகாத்துள்ளது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பா, அமெரிககா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் இருக்கும் சக சிந்தனையாளர்களுடன் நாங்கள் நெருக்கமாக ஒத்துழைக்கிறோம்.