WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Tehran and Tegucigalpa: A tale of two capitals
தெஹ்ரானும் டெகுசிகல்பாவும்: இரு தலைநகரங்களின் கதைகள்
By Barry Grey
9 July 2009
Use this version
to print | Send
feedback
தெஹ்ரானில் அமெரிக்க ஆதரவு பெற்ற தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்
விடுத்த அழைப்புக்களில் நடைபெறும் இடைவிடாத ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தகவல்கள் அமெரிக்க செய்தி ஊடகத்தில்
முழுதாக வெளிவருகின்றன. முன்னாள் பிரதம மந்திரி மீர் ஹொசைன் மெளசவி தேர்தல் திருடப்பட்டுவிட்டது எனக்கூறும்
குற்றச்சாட்டு, மற்றும் "இராணுவ ஆட்சி மாற்றம்" என்பவை விமர்சனமற்றமுறையில் எழுதப்படுபவை உண்மைபோல்
நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் பிற "ஆதாரபூர்வ" செய்தித்தாட்களால்
அவற்றைப்பற்றி எந்தவித சுதந்திரமான விசாரணையும் இன்றி வெளியிடப்படுகின்றன. செய்தி ஊடக பிரச்சாரம், அதியுயர்
தலைவர் ஆயத்துல்லா காமேனி மற்றும் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநாஜேட் தலைமையில் உள்ள ஈரானின் ஆளும் பிரிவை
தனிமைப்படுத்தி, சீர்குலைக்கும் நோக்கத்தைக் கொண்டு தொடர்கிறது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் வசதியான பிரிவுகள் ஆதிக்கம்
கொண்டுள்ளன. இவர்கள் அதிக அளவில் மெளசவிக்கும் அவருடைய வலதுசாரி வேலைத்திட்டமான அமெரிக்கா,
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகள் மற்றும் சந்தைசார்புடைய கொள்கைகளை விரைவில் அறிமுகப்படுத்துதல்
ஆகியவற்றிற்கு வாக்களித்துள்ளனர். இந்த மெளசவி மற்றும் இலட்சாதிபதியான முன்னாள் ஜனாதிபதி அலி அம்பர் ஹஷேமி
ரப்சஞ்சனி தலைமயில் இருக்கும் "சீர்திருத்தவாதிகள்" பிரிவிற்கு ஆதரவு கொடுப்பதில் எந்த இலாபமும இல்லை
என்பதை அறிந்துள்ள தொழிலாள வர்க்கம் எதிர்ப்புக்களில் இருந்து விலகியுள்ளது.
புறநிலைமை பற்றி செய்தி ஊடகங்கள் பாசாங்காக இருப்பதுடன், எதிர்ப்பு இயக்கத்தையும்
அதன் தலைவர்களையும் ஜனநாயகத்திற்கான ஒரு "பச்சை வண்ண புரட்சிக்கு" தலைமை தாங்குபவர்கள் என்று ஈரானிய
ஆட்சியின் ஒவ்வொரு அடக்குமுறைச் செயலும் தலைப்புச் செய்திகளாக இடம் பெருகின்றன; நூற்றுக்கணக்கானவர்கள்
இறந்துவிட்டனர் என்பது போன்ற வதந்திகள் உண்மை போல் தகவலாகின்றன. அமெரிக்க செய்தி ஊடகம் இணையம்
மற்றும் கைத்தொலைபேசி தொடர்புகளை ஆட்சி துண்டிப்பது பற்றி குறிப்பாக தனது கவனத்தை காட்டுகிறது.
இரு வாரங்களுக்கு பின்னர் அமெரிக்காவில் பயிற்சி பெற்று, ஆயுதம்தரித்த
ஹொன்டூரஸ் இராணுவம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைகிறது, அவரை மூட்டையாக கட்டி ஒரு
விமானத்தில் ஏற்றி, துப்பாக்கி முனையில் அவரை நாட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்கிறது. பதவியில் இருந்து
இறக்கப்பட்ட ஜனாதிபதியான மானுவல் ஜேலயாவின் அடிப்படைக் குற்றம் அவருடைய அரசாங்கத்தை வாஷிங்டனுடைய
இலத்தீன் அமெரிக்காவில் இருக்கும் பரம விரோதியான வெனிஜுலாவின் ஹ்யூகோ ஷாவேஸ் மற்றும் கியூபாவின் பிடல்
காஸ்ட்ரோவுடன் பிணைத்துக் கொண்டதும், ஹொன்டூரஸிற்குள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியது போன்ற
குறைந்த அளவு மக்கள் நல சீர்திருத்தங்களை மேற்கொண்டதாகும்.
ஹொன்டூரஸில் ஒரு சதி நடைபெற்றது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த
நிகழ்ச்சி அமெரிக்க செய்தி ஊடகத்திலும் தொலைக்காட்சிகளானாலும் காணப்படவில்லை. ஜெலயா அரசாங்கத்தின்
மந்திரிகள் கைது செய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்டது, பதவிவிலக்கப்பட்ட ஜனாதிபதிக்கு பரிவுணர்வு காட்டிய
உள்ளூர் செய்தி ஊடகங்கள் மூடப்பட்டது, வெளிநாட்டு செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டது மற்றும் அமெரிக்க
தளத்தைக் கொண்ட CNN
போன்றவை மூடப்பட்டது, ஒரு நடைமுறை முற்றுகை நிலையை சுமத்தியது, இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள்
போடப்பட்டது மற்றும் ஒவ்வொரு முகற்கிய நகரத்திலும் ஹொன்டூரஸ் துருப்புக்கள் ஆயிரக்கணக்கில் நிறுத்தப்பட்டது
ஆகியவையும் வெளிவரவில்லை.
ஹொன்டூரஸ் வணிக உயரடுக்கு, காங்கிரஸ், நீதிமன்றங்கள் மற்றும் திருச்சபை
ஆகியவற்றின் ஆதரவு பெற்ற இந்த சதி இணையதளம் மற்றும் கைத்தொலைபேசி தொடர்பையும் தடுத்து நிறுத்த
முற்படுகிறது--இதற்கும் அமெரிக்க செய்தி ஊடகத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை.
புதிய ஆட்சிக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தலைநகரமான
டெகுசிகலாவின் மத்தியதர செழிப்பு மிக்க பிரிவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன.
அரசாங்க அடக்குமுறையின் மத்தியில் ஹொன்டூரஸ் ஆசிரியர் சங்கம் 60,000 பேர்
அடங்கிய வேலைநிறுத்தத்தைத் தொடக்குகிறது, இது பள்ளிகளை மூட வைக்கிறது, டெகுசிகல்பாவில்
ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் ஆர்ப்பாட்டங்களில் தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள்,
வேலையின்மையில் வாடுபவர்கள், கிராமப்புற வறியவர்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. தொழிலாள வர்க்கம்
ஆட்சிக்கு எதிர்ப்பு காட்டுவது அமெரிக்க செய்தி ஊடகத்தில் சிறிதும் குறிப்பிடப்படுவதில்லை.
ஞாயிறன்று, ஜூலை 5ம் தேதி, டெகுசிகல்பாவின் விமான நிலையத்தை தடைக்கு
உட்படுத்தியிருக்கும் துருப்புக்கள் ஒரு தனி விமானத்தின் மூலம் வந்திறங்கி தன்னுடைய பதவியை தொடர முயலும்
ஜெலயாவை வரவேற்கக்கூடியுள்ள ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்ள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். ஒரு 19
வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதைப்பற்றியும் அமெரிக்க செய்தி ஊடகத்தில் அதிக குறிப்பு
கிடையாது.
அஹ்மதிநெஜாட் மெளசவியைக் கைது செய்து ஈரானை விட்டு வெளியே
அனுப்பியிருந்தால் அமெரிக்க செய்தி ஊடகம் எப்படி இதை எதிர்கொண்டிருக்கும் என்பதை கற்பனைதான் செய்து
பார்க்க முடியும். அதேபோல் ஈரானிய ஜனாதிபதி விமான நிலையத்தை முற்றுகை இட்டு அவர் திரும்பிவருவதை
தடுத்திருந்தால் பெரும் சீற்றமான இழிவான கருத்துக்கள்தான் அவற்றிடம் இருந்து வெடித்து வந்திருக்கும்.
ஈரான் மற்றும் ஹொன்டூரஸ் பற்றிய செய்தி வழங்கல்களில் இருந்த இரட்டைவேடம்
பல உள்ளன. உதாரணத்திற்கு சில:
CNN ஈரானிய ஆட்சி செய்திகள்
தணிக்கை செய்தது, அயல்நாட்டு செய்தியாளர்கள் மிரட்டப்பட்டது ஆகிய முயற்சிகள் பற்றிப் பெரிதும் பேசியது.
ஹொன்டூராஸில் இதன் ஒளிபரப்புக்களையே மூடிய புதிய ஆட்சி பற்றி எதுவும் கூறவில்லை.
ஜூலை 4ம் தேதி
CNN.com தான் ஹொன்டூரஸ் துருப்புக்கள் கிராமப்புறங்களில்
இருந்து மக்கள் சதிக்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்க டெகுசிகல்பாவிற்கு வருவதை நிறுத்த பஸ்களின் டயர்களை
சுட்டது பற்றிய ஒளிப்பதிவு நாடாக்கள் கிடைத்ததாக கூறியது. அதன் இணையத்திலும் சிறிது ஒளிபரப்பு செய்வதற்கு
அதற்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது.
இதையும் விட மிக முக்கியமானது அமெரிக்க செய்தி ஊடகத்தில் ஞாயிறன்று
டெகுசிகல்பா விமான நிலையயத்தின் ஆட்சி மாற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கொலை மற்றும்
பலர் காயமுற்றது பற்றி எந்தத் தகவலும் கொடுக்கப்படாதுதான். திங்களன்று பைனான்சியல் டைம்ஸ்
உறையவைக்கும் கொடூர நிகழ்வைப் பற்றி ஒரு குறிப்பை கொடுக்கிறது. இது எப்படி அது முன்கூட்டியே
திட்டமிடப்பட்டது என்பதை தெளிவாகுகிறது. 1,500 பேர் விமான நிலையத்தை சூழ்ந்துள்ள வேலியின் அருகே
ஜெலயாவின் விமானத்தை வரவேற்கக நின்றது பற்றி செய்தித்தாள் பின்வருமாறு எழுதுகிறது;
"ஆனால் ஞாயிறன்று கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணிக்கு திரு.ஜெலயா மீண்டும் வருவதை
தடுப்பதற்கு விமான ஓடுதளத்தைக் காவல் புரிந்த இராணுவத்தினர் ஆயுதமற்ற கூட்டத்தின்மீது தாக்குதலை
நடத்தியதாக சாட்சிகள் கூறுகின்றன.
"அவர்கள் விமான நிலையத்தின் உள்ளிருந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்,
அதன் பின் கண்ணீர்புகைக் குண்டுகளாலும் கூட்டத்தை தாக்கினர்."
"ஒரு சில கணங்களில் சில இராணுவத்தினர் சுற்றுச் சுவரை
கடந்தனர். இச்சுவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் சிதைக்கப்பட்டிருந்தது. தங்கள் தானியங்கி ரைபிள்களை உயர்த்தி
பெரும் பீதியில் இருந்த ஆடவர், பெண்கள், குழந்தைகள் மீது குறிவைத்தனர். பின்னர் மீண்டும் சுட்டனர். குறைந்தது
ஒரு நபராவது கொல்லப்பட, 30 பேர் காயமுற்றனர்."
இலத்தீன் அமெரிக்க செய்திஊடகம் பரந்த அளவில் சக எதிர்ப்பாளர்களால்
இழுத்துசெல்லப்படும் இறந்த இளைஞர் Isis Obed
Murillo உடைய புகைப்படத்தை வெளியிட்டது. அத்தகைய
புகைப்படங்கள் முக்கிய அமெரிக்க செய்தி தாட்களில் வெளிவரவில்லை, தொலைக்காட்சி செய்தி அமைப்புகளிலும்
காட்டப்படவில்லை. அமெரிக்க செய்தி ஊடகத்தைப் பொறுத்தவரையில்
Murillo ஒரு
பெயரிடப்படாத, துக்கம் கொண்டாடப்படாத நபராக உள்ளார்.
செய்தி ஊடகம் கொடுக்கும் இத்தகைய இரக்கமற்ற தகவல் முறையை ஜூன் 20
அன்று தெஹ்ரானில் நெடா ஆகா சொல்டான் இறப்பு பற்றிய பரபரப்புடன் ஒப்பிட்டால் போதும். ஒரு மெளசவி
எதிர்ப்பு அணியை பார்த்துக் கொண்டிருந்த 27 வயது மாணவியின் இறப்பு சந்தேகத்திற்கு உரிய சூழ்நிலையில் நடந்தது.
அரசாங்கம் இதற்கு பொறுப்பை ஏற்க மறுத்தது; ஆனால் செய்தி ஊடகம் உடனே இப்பெண்மணியை "பச்சை வண்ணப்
புரட்சியின்" தியாகி என்று அறிவித்தது. அவருடைய படம் செய்தித்தாட்களின் முதல் பக்கங்களில் எங்கு பார்த்தாலும்
போடப்பட்டது, ஒவ்வொரு தொலைக்காட்சி அமைப்பும் படத்தைக் காட்டியது. "நெடா" ஈரானிய எதிர்ப்பின்
"இந்த நூற்றாண்டின் பெண்மணி'' (Joan of Arc)
என்று அறிவிக்கப்பட்டார்.
இந்த இரு தலைநகரங்களின் கதை அமெரிக்க செய்தி ஊடகத்தின் பங்கு பற்றிய
தன்மையை மிகத் தெளிவாக சித்திரித்துக் காட்டுகிறது. மகத்தான பெருநிறுவனங்களின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டில்
இருக்கும் செயதி ஊடகம் அரசாங்கத்தின் விரிவாக்கமாகவும் அதன் சார்பாக அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களின்
ஒரு பிரச்சார இயந்திரமாகவும் உள்ளது. இதன் வர்க்க ஆதரவு (இதன் உயர்மட்ட ஆசிரியர்கள், மூத்த நிருபர்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தலைவர்கள் ஆகியோர் என்று பெரும் ஊதியம் பெறும் பிரிவுடையதும்) தெஹ்ரான் மற்றும்
டெகுசிகல்பாவில் நடக்கும் எதிர்ப்புக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விடையிறுப்புக்களை காட்டுவதின் மூலம் வெளிப்படுகிறது
என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
இதே பங்குதான் "முற்போக்கான" தாராளவாத செய்தி ஊடகம் என அழைக்கப்படுவற்றாலும்
செய்யப்படுகிறது. இவை ஒரே சீராக ஈரானில் இருக்கும் ஆளும் பிரிவிற்கு எதிரான அமெரிக்க பிரச்சாரத்தின்பின்
நிற்கின்றன. Nation
ஏட்டின் வலைத் தளம் புதனன்று அதன் தலைப்புக் கட்டுரையை ஈரான் நிருபர் ரோபர்ட் ட்ரேபுஸ் எழுதியதை வெளியிட்டுள்ளது;
அக்கட்டுரை மெளசவி சார்பு சக்திகளின் புதிய ஆர்ப்பட்டங்களுக்கான அழைப்புக்களை பாராட்டுகிறது. ஹொன்டூரஸ்
நிகழ்வுகள் பற்றி ஏதேனும் கட்டுரை இருக்குமா என்று தேட வேண்டியுள்ளது.
(ட்ரேபுஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ள,
பார்க்கவும்:
தெஹ்ரானில் நேஷன் உடைய நபர்: யார் இந்த ரொபேர்ட்
ட்ரேபுஸ்? http://www.wsws.org/tamil/articles/2009/June/090624_Nat.shtml)
அமெரிக்க செய்தி ஊடகம் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் உள்நாட்டு வெளிநாட்டு
கொள்கை இலக்குகளுக்கு ஏற்ப பொது மக்களின் கருத்தைத் திரிப்பதில் எந்தத் தரங்களையும், வரம்புகளையும்
அதன் செயற்பாட்டில் மேற்கொள்வதில்லை. அமெரிக்க ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவில் "சுதந்திரமான செய்தி
ஊடகம்" என்பதின் இழிசரிவை அமெரிக்க நலன்களுக்கு எதிர் எனக் கருதப்படும் ஆட்சிகளுக்கு எதிரான போலியான
"வண்ணப் புரட்சிகளுக்கு" ஆதரவு கொடுப்பதிலும், CIA,
இராணுவம் மற்றும் வெளிவிவகாரத்துறையின் ஆதரவுடனான ஆட்சிகள் ஜனநாயக விரோதச் செயல்கள் புரிவதை
அப்பட்டமாக புறக்கணிப்பதிலும் நன்கு நிரூபணம் ஆகிறது. |