World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSRTwo summits in Russia: A cautious challenge to the US ரஷ்யாவில் இரண்டு உச்சிமாநாடுகள்: அமெரிக்காவிற்கு ஓர் எச்சரிக்கை By John Chan ஒட்டுமொத்தமாக BRIC என்று அழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு வளரும் பொருளாதார சக்திகளும், ஜூன் 16ல் ரஷ்யாவிலுள்ள Yekaterinburg நகரில் அவற்றின் முதல் மாநாட்டை கூட்டியிருந்தன. அதற்கு ஒரு நாள் முன்னதாக கஜகிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிரிகிஜிஸ்தான் ஆகிய நாடுகளை உட்கொண்ட ரஷ்யா மற்றும் சீனாவின் தலைமையிலான ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் (Shanghai Cooperation Organisation -SCO) ஒரு மாநாடும் அதே நகரில் கூட்டப்பட்டது. சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டோவின் கருத்துப்படி, நான்கு BRIC நாடுகளும் உலக மக்கள் தொகையில் 42 சதவீதம் கொண்டிருப்பதுடன், உலக பொருளாதார வளர்ச்சியில் பாதிக்கும் மேல் பங்கு வகிக்கின்றன. சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு முக்கிய பொருளாதாரங்கள் மட்டுமே தொடர்ந்து கணிசமான விகிதத்தில், இருந்தபோதினும் மிக மெதுவாக வளர்ந்து வருகின்றன. எண்ணெய் விலை வீழ்ச்சியால் ரஷ்யா கடினமாக பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அணு ஆயுதங்களுடன் அமெரிக்காவிற்கு போட்டியாக அது மட்டுமே ஒரே சக்தியாக நிற்கிறது. இலத்தீன் அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதாரமாக விளங்கும் பிரேசில், சீனாவுடன் வர்த்தக உறவுகளை விரைவாக வளர்த்து வருகிறது. தங்களின் சர்வதேச செல்வாக்கை விரிவாக்க விரும்பும் வளரும் பொருளாதாரங்களின் ஒரு குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த BRIC மற்றும் SCO (Shanghai Cooperation Organization) மாநாடுகளுடன், Yekaterinburg நகரத்தை "உலக அரசியலுக்கான ஒரு புதிய வரலாற்று மையமாக" ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் குறிப்பிட்டார். 2001ல், அமெரிக்காவின் செல்வாக்கையும், மத்திய ஆசியாவில் அதன் இராணுவ இருப்பையும் எதிர்க்க ரஷ்யா மற்றும் சீனா SCOவை உருவாக்கின. வழக்கமான விருந்தினராக இருக்கும் ஆப்கானிஸ்தான் இந்த ஆண்டு "பேச்சுவார்த்தை கூட்டாளியாக" ஆகியிருப்பது போன்று, இலங்கை மற்றும் பெலாரஸூம் அவ்வாறே ஆகியிருக்கும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான், மங்கோலியா மற்றும் ஈரான் ஆகியவை SCO இன் பார்வையாளர் நாடுகளாக உள்ளன. ரஷ்ய-சீன குழுவாக்கத்தில் இருந்து சற்றே விலகி இருப்பதற்காக முன்னர் எரிசக்தி துறை அதிகாரிகளை மட்டுமே அனுப்பி வந்ததற்கு பின்னர், இந்திய பிரதம மந்திரி மன்மோகன்சிங் முதல்முறையாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். புஷ் நிர்வாகம் இந்தியாவை ஒரு மூலோபாய கூட்டாளியாகவும், சீனாவின் எதிர்ப்பலமாகவும் ஊக்குவித்து வந்தது. அதே கொள்கை ஒபாமாவின் கீழும் தொடர்ந்து வருகிறது. எவ்வாறிருப்பினும், பனிப்போர் காலத்தில் இந்தியாவுடன் ரஷ்யா கொண்டிருந்த நெருங்கிய உறவை மீண்டும் உயிர்ப்பிக்க, மத்திய ஆசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெற புதுடில்லிக்கு சலுகைகள் அளிப்பதன் மூலமும், பெருமளவிலான ஆயுதங்களை விற்பதன் மூலமும் ரஷ்யா முயற்சித்து வருகிறது. சீனா மற்றும் இந்தியா தொடர்ந்து ஒன்றுக்கொன்று பிராந்திய போட்டியாளர்களாகவே பார்க்கின்றன. சிங்கின் பங்கேற்பு, அவர் ஓர் "அமெரிக்க-நிராகரிப்பு பேரவையை" நோக்கி அவர் போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியது. இந்திய வெளியுறவு செயலாளர் சிவ சங்கர் மேனன் ஊடகத்திற்கு பின்வருமாறு அதைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்: "அமெரிக்க நிராகரிப்பு என்பது ஓர் அதிதீவிரமான வார்த்தை, BRICஐ ஒரு அமெரிக்க-நிகாரிப்பில் வகைப்படுத்த எவ்வித காரணமும் இல்லை. இவை உலகின் நான்கு மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் ஒரு நேர்முகமான மற்றும் கட்டமைப்புடன் கூடிய பாத்திரத்தை வகிப்பதற்காக தங்களுக்குள் கூடியுள்ளன. மேலும், இது யாருக்கும் எதிராக திருப்பிவிடப்படவில்லை." என்றார். இருந்தபோதினும், இந்த மாதத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிப்பிற்கான சவால்களின் ஒரு பிரச்சனையான பிரச்சாரத்தை தமது உள்நாட்டில் எதிர்கொண்டு வரும் ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதினிஜத்திற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு கூட்டத்தின் எதிர்-அமெரிக்க போக்கிற்கு ஆதாரமாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் மறைமுகமாக ஈரானிய எதிர்கட்சி தலைவர்களுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், BRIC மற்றும் SCO உறுப்பினர்கள். அஹ்மதினிஜத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அஹ்மதினிஜத் SCO கூட்டத்தில், அமெரிக்கா ஒரு வீழ்ச்சியடைந்து வரும் சக்தி என்று குறிப்பிட்டார்: "பேரரசுகளின் காலம் முடிந்து விட்டது மற்றும் அவற்றின் போட்டிகள் இனி இருக்காது என்பது மிகவும் வெளிப்படையாக உள்ளது." என்று தெரிவித்த அவர், "ஈராக் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒழுங்கில்லை. பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது. அமெரிக்கா பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது, அவர்களின் முடிவுகளில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. அமெரிக்காவின் கூட்டாளிகளும், இந்த பிரச்சனைகளுடன் போராட தயாரான ஒரு நிலையில் இல்லை." என்றார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அழுத்தங்களுக்கு ஒரு பயனுள்ள எதிர்பலமாக, சீனா, ரஷ்யா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு ஆதரவளிக்கும் ஈரானிய முதலாளித்துவத்தின் ஒரு பிரிவிற்கு அஹ்மதினிஜத் பிரதிநிதியாக உள்ளார். சீனா தற்போது ஈரானின் மிக பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது, ஈரானிடமிருந்து பெருமளவில் எரிசக்தியை வாங்கி வருகிறது. ஈரானிய எரிசக்தி வளங்களின் மீதான முதலீட்டிற்கு அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட தடைகளில் மூக்கை நுழைக்கும் வகையில், பாரசீக வளைகுடாவில் உள்ள 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எரிவாயு வயல் திட்டத்தில் பிரெஞ்சு நிறுவனமான Total SA விற்கு குழிபறித்து விட்டு, ஜூன் 3ல், சீனாவின் CNPC நிறுவனத்திற்கு ஆதரவாக அதை அளித்தது. ரஷ்யாவில் ஆதிக்கம்கொண்ட சர்வதேச ஈரோ-ஆசிய இயக்கத்தின் (International EurAsian Movement) தலைவரான அலெக்சாண்டர் டூகின், ஜூன் 16ல் Christian Science Monitorக்கு அளித்த பேட்டியில், "உலக அமைப்பு முறையில் இருந்து தங்களைத்தாங்களே விதிவிலக்காக உணரும், அமெரிக்க-ஆக்கிரமிப்பு ஒருமுனை துருவமாக்கல் முறையால் பாதிக்கப்பட்டதாக உணரும் நாடுகளுக்கு SCO ஒரு வகையான அமைப்பாக உருவாகி வருகிறது. தற்போது இந்த ஒருமுனை துருவமாக்கல் உலகமானது, பொருளாதார நெருக்கடி மற்றும் ஏகாதிபத்திய பின்னடைவு ஆகியவற்றால் அதன் அடித்தளங்களே ஆட்டம் கண்டு வருகிறது, அத்துடன் பன்முக உலக துருவமாக்கலின் ஒரு புதிய திட்டத்தை வரையறுப்பதற்கு இதுவே சரியான நேரமாகும்." என்று தெரிவித்தார். அமெரிக்க டாலரை சர்வதேச சேமிப்பு செலாவணியிலிருந்து வேறொன்றால் பதிலீடு செய்வது என்பது தான் BRIC மாநாட்டின் ஒரு முக்கிய கருத்தாக இருந்தது. இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்க கருவூல நிதிகளின் கையிருப்புகளை குறைக்க ரஷ்யா அதன் விருப்பத்தை அறிவித்தது, அதனுடன் சீனா மற்றும் பிரேசிலும் சேர்ந்து கொண்டன. மாறாக, இவை மூன்றும் சர்வதேச நாணய நிதிய பங்குபத்திரங்களை வாங்க ஒத்து கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, அமெரிக்க கருவூல பங்குபத்திரங்களில் BRIC 1.711 டிரில்லியன் ஈரோக்களை கொண்டுள்ளது, குறிப்பாக சீனா அவர்களின் டாலர் சொத்துக்களை திடீரென மூழ்கடிக்குமானால் இது சாத்தியமற்றதென்றாலும், இதுபோன்றதொரு நகர்வு முக்கியமாக அமெரிக்க டாலரை மதிப்பிழக்க செய்து விடக்கூடும். ஜூன் 14ல் பைனான்சியல் டைம்ஸிற்கு எழுதுகையில், அமெரிக்க பொருளாதார வல்லுனர் மைக்கேல் ஹட்சன் பின்வருமாறு குறிப்பிட்டார்: "இந்த அரசாங்கங்கள் ஒரு கடுமையான தேர்வை முகங்கொடுக்கின்றன: ஒன்று, அமெரிக்க கருவூல பங்குபத்திரங்களை வாங்குவதன் மூலம் மீண்டும் அமெரிக்காவிற்கு டாலர்களை கொண்டு செல்வது அல்லது தடையற்ற வர்த்தக சந்தைகள் டாலருடன் தொடர்புடைய தங்களின் செலாவணிகளை திணிப்பது. இதன் மூலம் சர்வதேச சந்தைகளில் தங்களின் ஏற்றுமதிகளை தாங்களே விலை நிர்ணயம் செய்வதால், இது உள்நாட்டு வேலைவாய்ப்பின்மை மற்றும் வியாபார தோல்விகளை உருவாக்கும். அமெரிக்க பாணியிலான தடையற்ற சந்தைகள், கட்டுப்பாடில்லாமல் டாலர்களை ஏற்க அவர்களை கட்டாயப்படுத்தும் ஓர் அமைப்புமுறைக்குள் அவர்களை மாட்டிவிடும். தற்போது அவர்கள் இதிலிருந்து வெளியேற விரும்புகின்றனர்." அமெரிக்காவிற்கு இது நீண்டதூர விளைவுகள் உருவாக்கும் என்று ஹட்சன் எச்சரித்தார். "சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு மற்றும் பிற வாஷிங்டன் அமைப்புகளும், இராணுவ செல்வாக்கில் மட்டும் விடப்பட்டு பொருளாதார பலத்தால் தொடர்ந்து ஆள முடியாத ஒரு தோல்வியுற்ற அமெரிக்க பேரரசின் தடங்களாக பார்க்கப்படுகின்றன. போதிய வருவாய் இல்லாமல் இந்த செல்வாக்கு தொடர முடியாது என்று பார்க்கும் அவை, அமெரிக்க நிதி-இராணுவ உலக அமைப்பின் திவால் நிலைமையை விரைவுபடுத்த முயற்சிக்கின்றன. சீனா, ரஷ்யா மற்றும் அவர்களின் கூட்டாளிகள் தங்களின் சொந்த வழியைக் கொண்டு விட்டால், அமெரிக்கா பிறரின் சேமிப்புகளில் தொடர்ந்து வாழ முடியாது என்பதுடன் கட்டுப்பாடில்லாமல் இராணுவ செலவுகளுக்கும் பணத்தை கொண்டிருக்காது." என்றார். சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்புரிமையின் அடிப்படையில், ரஷ்யா ஒரு "சூப்பர்-நேஷனல்" செலாவணியின் (சீனாவின் யானும், விளைபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் அத்துடன் தங்கமும் கொண்டிருக்கும் ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்றவை உட்பட அவர்களின் செலாவணியின் ஒரு கூட்டு) தேவையை உயர்த்தி வருகிறது. மெட்வடேவ் BRIC கூட்டத்தில் பின்வருமாறு தெரிவித்தார்: "பயன்பாட்டில் உள்ள நிதிய அமைப்புகள் ஒரேயொரு செலாவணியின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தால், வெற்றிகரமான சர்வதேச செலாவணி முறை இருக்க முடியாது. இன்று இந்த நிலை தான் உள்ளது, தற்போது டாலர் தான் அவ்விடத்தில் உள்ளது." என்றார். ஏப்ரலில் பிரிட்டனில் நடந்த ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக சீனா முதன்முதலில் இந்த யோசனையை தெரிவித்தது. எவ்வாறிருப்பினும், அமெரிக்க டாலரின் வீழ்ச்சி நேரடியாக சீனாவின் $1.5 டிரில்லியன் டாலர் சொத்துக்களை பாதிக்கும் என்பதால், அந்த விஷயத்தில் அது சமீபத்தில் மெளனமாக இருந்தது. truthdig.com வலைத்தளத்தின் பேட்டியில், சர்வதேச சேமிப்பு செலாவணியாக அமெரிக்க டாலர் அதன் நிலைப்பாட்டை இழந்தால் ஏற்படும் கடும் விளைவுகள் குறித்து ஹட்சன் விளக்கினார். "நமது சொந்த இராணுவ செலவுகளுக்கு நாம் நிதி ஒதுக்க வேண்டும், சம்பள விகிதங்களை தீவிரமாக குறைப்பது மட்டுமே இதற்கான ஒரே வழியாக உள்ளது. வியாபாரத்தில் மீண்டும் வர்க்க யுத்தம் ஏற்பட்டுள்ளது. வோல் ஸ்ட்ரீட் இதை நன்றாக அறியும். ஆகவே தான் புஷ் மற்றும் ஒபாமா $10 டிரில்லியன் ஏன் கொடுத்தார்கள் என்றால், அது உயிர் வாழ போதிய பணம் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக தான்" என்று அவர் தெரிவித்தார். அமெரிக்க டாலரின் எவ்வித வீழ்ச்சியை பற்றி அளிக்கப்பட்ட நீண்ட விளைவுகளை பற்றி, BRIC கூட்டம் பின்வருமாறு குறிப்பிட்டதுடன் அப்பிரச்சனையில் மெளனமாக இருந்தது: "சர்வதேச நிதி அமைப்புகளில் வளர்ந்து வரும் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரங்கள் உரத்த குரலையும், பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்க வேண்டும். நிலையான, கணிக்க கூடிய மற்றும் மிகவும் மாற்றுரீதியான சர்வதேச நாணய முறையின் தேவை அதிகமாக உள்ளது." சீனா, டாலர் மீதான அதன் நம்பிக்கையை படிப்படியாக குறைக்க விரும்புகிறது. இந்த மாதம், தங்களின் சொந்த செலாவணிகளில் இருதரப்பு வர்த்தகத்தை கொண்டு வர சீனா பிரேசிலுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆர்ஜெண்டினா மற்றும் பல ஆசிய நாடுகளுக்கு இடையிலும் இதேபோன்ற உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. பிரேசிலின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்த அமெரிக்காவை, இந்த ஆண்டு சீனா மிஞ்சிவிட்டது. ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்த ஜேர்மனியையும் இந்த ஆண்டு சீனா மிஞ்சிவிட்டது. இவ்விரு நாடுகளும் இந்த ஆண்டு சாதனையளவாக $100 பில்லியன் மதிப்பிலான எரிசக்தி உடன்பாடுகளில் கையெழுத்திட்டன. தங்கள் குழுவிற்குள் ஒரே முறையிலான கணக்கை மேற்கொள்ள தொடக்கத்தில் ஒரே செலாவணியை உருவாக்க வேண்டும் என்று SCOவிற்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது. "ஐரோப்பிய செலாவணி அலகை (ECU) நாம் நினைவுபடுத்தி கொள்வோம், முதன்மை சேமிப்பு செலாவணியாக யூரோ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் ஐரோப்பிய சமூக நாடுகளில் கணக்கீட்டிற்கான ஓர் அலகாக, அது மதிப்புமிக்க ஒரு சூப்பர்நேஷனல் செலாவணியாக இல்லையானாலும், ஒரு நாணய அலகாக பயன்பட்டது." என்று மெட்வடேவ் குறிப்பிட்டார். Yekaterinburg ல் நடந்த இரண்டு மாநாடுகளும், சர்வதேச நிதி நெருக்கடியால் அமெரிக்க உலக நிலைமை குழிதோண்டப்பட்ட நிலையில், முக்கிய சக்திகளுக்கு இடையிலான உறவுகள் ஓர் உடனடி மறுகட்டமைப்பிற்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான ஓர் அறிகுறியாகும். இந்த மாறும் உறவுகள் முக்கிய சக்திகளுக்கு இடையில் பதட்டங்களை அதிகரிக்க இட்டு செல்கின்றன.எவ்வாறிருப்பினும், SCO மற்றும் BRIC ஆகிய இரண்டு குழுக்களும் திடமாக இல்லை. அமெரிக்க பொருளாதாரம் மற்றும் மூலோபாய தலைமையை பலவீனமாக்க ஓர் ஒருங்கிணைந்த விருப்பம் இருந்தபோதினும், சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா அனைத்தும் முரண்பட்ட நலன்களை கொண்டிருக்கின்றன. மத்திய ஆசியாவில் சில பூகோள-அரசியல் நலன்களுடன் பிரேசில், முதன்மையாக ஓர் இலத்தீன் அமெரிக்க பிராந்திய சக்தியாக இருக்கிறது. SCO அணி கூட்டு இராணுவ பயிற்சிகளையும் மேற்கொள்கின்றன, ஆனால் அது ஓர் உத்தியோகபூர்வ இராணுவ கூட்டணியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. சர்வதேச கடன் உடைவுடன் போராடி வரும் SCO உறுப்பினர்களுக்கு சீனா $10 பில்லியன் கடனாக அளித்துள்ளது. இந்த பணத்தை வரவேற்ற போதினும், மத்திய ஆசியாவில் நிதி "வெளிப்படையானதாக" இருக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியது. இது ரஷ்யாவின் செல்வாக்கை அப்பிராந்தியத்தில் குழிபறிக்க வேண்டாம் என்பதற்கான பெய்ஜிங்கிற்கு அளிக்கப்பட்ட ஒரு மறைமுகமான எச்சரிக்கையாகும். ரஷ்யா அதன் வாகனத்துறையை காப்பாற்ற, அதன் கட்டணங்களை அதிகரித்துள்ளது, இதனால் சீனாவின் பெரியளவிலான சர்வதேச சந்தைக்கு அதன் கார் ஏற்றுமதியில் ஒரு கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விலைநிர்ணய பிரச்சனைக்கு இடையில், ரஷ்ய எரிபொருள் நிறுவனமான Gazporm சீனாவிற்கான திட்டமிடப்பட்ட இரண்டு குழாய்வழிகளை தள்ளி வைத்திருக்கிறது. ரஷ்யா SCOவிற்குள் இந்தியாவை ஊக்குவிக்க விரும்புகிறது, ஆனால் சீனா அதன் சொந்த கூட்டாளியான இந்தியாவின் போட்டியாளரான பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கிறது. கடந்த ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக இந்திய பிரதம மந்திரி சிங்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியும் சந்திப்பதை மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் இரண்டும் வரவேற்றுள்ளன. பாகிஸ்தான் பிரதேசம் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்பட கூடாது என்பதை உங்களுக்கு எடுத்துரைப்பது தான் என் தீர்மானமாகும்," என்று ஜர்தாரியிடம் சிங் குறிப்பிட்டதுடன் அவர்களின் கூட்டம் எதிர்பாராமல் முடிந்துவிட்டது. ஐரோப்பிய-ஆசிய நிலப்பகுதியில் சீனா மற்றும் ரஷ்யா ஒரு போட்டி அணியை ஒருங்கிணைப்பதை அமெரிக்கா வெறுமனே பார்த்து கொண்டிருக்க போவதில்லை. ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது, அத்துடன் பாகிஸ்தான் அதன் மாகாணங்களுக்குள் அமெரிக்காவிற்கு எதிரான போராளிகள் செயல்படுவதற்கு எதிராக பாகிஸ்தான் அதன் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் அளிக்கிறது. உலகின் இந்த முக்கிய பிராந்தியத்தில் முக்கிய சக்திகள் பொருளாதார மற்றும் மூலோபாய ஆக்கிரமிப்புக்கு போட்டியிடுவதால், இதன் அதிகரித்து வரும் போட்டிகள், பெரியளவிலான மோதல்களுக்கு மேடை அமைக்கின்றன. |