World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan Tamil parties participate in sham local elections

இலங்கை தமிழ் கட்சிகள் போலி உள்ளூராட்சித் தேர்தல்களில் பங்குபற்றுகின்றன

By M. Vasanthan
9 July 2009

Use this version to print | Send feedback

இலங்கை தமிழ் கட்சிகள், யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட வட மாகாணத்தில் ஆகஸ்ட் 8 நடக்கவுள்ள இராஜபக்ஷ அரசாங்கத்தின் போலி உள்ளூராட்சித் தேர்தல்களில் பங்குபற்றுவதன் மூலம், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஒரு ஜனநாயக போர்வையை வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு உதவுகின்றன.

தமிழ் முதலாளித்துவ கும்பலை பிரதிநிதித்துவம் செய்யும் பல வித கட்சிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகரசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தில் ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. அதே சமயம், அவை இராணுவக் கட்டிப்பாட்டிலான முகாம்களில் கிட்டத்தட்ட 300,000 யுத்த அகதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது உட்பட, அடிப்படை ஜனநாயக உரிமைகளும் நிலைமைகளும் அழிக்கப்படுவது தொடர்பாக சாதாரண தமிழ் மக்கள் மத்தியிலான சீற்றத்தை திசை திருப்பவும் முயற்சிக்கின்றன.

வடக்கில் எந்தவொரு ஆதரவுத் தளமும் இல்லாத மற்றும் தமிழ் மக்களால் வெறுக்கப்பட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அதன் கூட்டணி பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பதாதையின் கீழ் போட்டியிடுகின்றது. யாழ்ப்பாணத்தில் அது தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் இரு சுயேட்சைக் குழுக்களுடன் மோதுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போதும், யாழ்ப்பாண குடாநாடு இன்னமும் இறுக்கமான இராணுவ ஆட்சியின் கீழ் இருப்பதானது உண்மையான ஜனநாயகம் என்ற எந்தவொரு கூற்றையும் கேலிக்கூத்தாக்குகிறது. அன்றாடம் ஊரடங்குச் சட்டம் ஐந்து மணித்தியாலங்கள் குறைக்கப்படுகின்ற போதும், அது இன்னமும் இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை அமுலில் உள்ளது. ஆயிரக்கணக்கான யாழ்ப்பாண வாக்காளர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டுள்ளனர் அல்லது தடுப்பு முகாங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு இளம் வேட்பாளருக்கு பிறப்புச் சான்றிதல் அல்லது சத்தியக் கடதாசியை வழங்கத் தவறியதாக குற்றஞ்சாட்டி, ஒரு இஸ்லாமிய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (ஸ்ரீ.ல.மு.கா.) வேட்பாளர் பட்டியலை துணை தேர்தல் ஆணையாளர் நிராகரித்ததில் இருந்து தேர்தலின் ஜனநாயக விரோத பண்பு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த முடிவை சவால் செய்து ஸ்ரீ.ல.மு.கா. தாக்கல் செய்த அடிப்டை அரசியலமைப்பு உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.

இராஜபக்ஷ அரசாங்கத்தில் சமூக விவகார அமைச்சராக இருக்கும் ஈ.பி.டி.பி. தலைவர் டக்லஸ் தேவானந்தா தனது கட்சி அதனது சொந்த வீணை சின்னத்தில் போட்டியிடாமல் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என்பதை விளக்குவதில் சிரமங்களை கொண்டிருந்தார்.

அவரது கட்சியின் பத்திரிகையில் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் தேவானந்தா கூறிக்கொண்டதாவது: "ஈ.பி.டி.பி. ஒரு சுயாதீனமான தமிழ் கட்சி மற்றும் நாம் எமது சுயாதீன அடையாளத்தை பாதுகாக்கின்றோம். ஆனால் அதே சமயம், இலகுவாகவும் வேகமாகவும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைய ஒரு தோழமைக் கட்சியாக சுதந்திர முன்னணியுடன் ஐக்கியப்பட்டுள்ளதோடு இதை ஒரு பரீட்சார்த்தமாகவும் எடுத்துக்கொண்டுள்ளோம்." இந்த அறிக்கையை வாசிப்பதற்காக பகிரங்க அறிவிப்பு உபகரணங்களுடன் அதன் வாகனங்களில் தனது ஊழியர்களை ஈ.பி.டி.பி. ஈடுபடுத்தி வருகிறது.

தேவானந்தாவின் அறிக்கை முற்றிலும் நேர்மையற்றதாகும். இராஜபக்ஷவின் யுத்தத்தை ஈ.பி.டி.பி. ஆதரித்ததோடு அதை தொடர்ந்து நடக்கும் இராணுவ அடக்குமுறைகளுக்கும் உதவியது. கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்கள் மற்றும் கொலைகளும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் அன்றாடம் இடம்பெற்றன. இந்த பயங்கரவாதப் பிரச்சாரத்தில் ஈ.பி.டி.பி. யின் துணைப்படை பிரிவு இராணுவத்துடனும் கடற்படையுடனும் நெருக்கமாக செயற்பட்டது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) உட்பட பல தமிழ் ஆயுதக் குழுக்களில் முன்னணி உறுப்பினராக இருந்த பின்னர், தேவானந்தா 1987ல் ஈ.பி.டி.பி. யை உருவாக்கினார். 1987 ஜூலையில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், ஈ.பி.டி.பி. "ஜனநாயக நீரோட்டத்துக்குள்" நுழையும் என அவர் பிரகடனம் செய்தார். இரு அரசாங்கங்களும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுடனான மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் பிரேரணையை முன்வைத்த அதே வேளை, இந்த உடன்படிக்கையின் கீழ் இந்திய இராணுவம் புலிகளை நிராயுதபாணிகளாக்க வடக்குக்கும் கிழக்குக்கும் அனுப்பப்பட்டன.

புலிகள் இந்த உடன்படிக்கையை முதலில் ஏற்றுக்கொண்ட போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் சலுகைகள் இன்றி ஆயுதங்களை வாங்குவது தொடங்கியவுடன் பின்வாங்கியது. ஏனைய தமிழ் குழுக்களுடன் புலிகளுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளை ஆதரித்த ஈ.பி.டி.பி., தனது சொந்த துணைப்படைக் குழுவை ஸ்தாபித்தது. கடுமையான உயிர் சேதத்துடன் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், ஈ.பி.டி.பி. இலங்கை இராணுவத்துடனும் கடற்படையுடனும் ஒத்துழைக்கத் தொடங்கியது.

1994 பொதுத் தேர்தலில், தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டுக்களின் மத்தியிலும், இந்திய-இலங்கை உடன்படிக்கையின் விதிகளின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையின் 30 ஆசனங்களில் 9 ஆசனங்களை ஈ.பி.டி.பி. வென்றது. எவ்வாறெனினும், 2004 தேர்தல்களில் மதிப்பிழந்த கட்சி தேவானந்தாவுக்கு மட்டும் ஒரு ஆசனம் கிடைத்தது. இந்த துணைப்படை குழு இராணுவத்துடன் செயற்பட்ட அதே வேளை, 2000ம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கீழ் முதலில் புனர்வாழ்வு அமைச்சராக தேவானந்தா அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார்.

தனது பாத்திரத்தில் வெறுப்பை சம்பாதித்துள்ள ஈ.பி.டி.பி. இப்போது புதிய இசையை பாடத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் "மத்தியஸ்த சபைகளுடன்" நடந்த ஒரு தேர்தல் தொடர்பான சந்திப்பில் பங்குபற்றிய தேவானந்தா, ஈ.பி.டி.பி. யின் துப்பாக்கி ஏந்திய குண்டர்கள் பற்றி கேள்விக்குள்ளாக்கப்பட்டார். "துப்பாக்கி கலாச்சாரம்" முடிந்துவிட்டதாகவும் தனது கட்சி "ஜனநாயகத்திற்காக" நிற்பதாகவும் அவர் கூறிக்கொண்டார். ஆனால், துணைப்படை உறுப்பினர்கள் இன்னமும் செயற்பட்டு வருகின்றனர்.

மிகவும் விரக்திக்கு தள்ளப்பட்ட தேவானந்தா, கடந்த வாரம் வேலையற்ற பட்டதாரிகளை அழைத்து அவர்களுக்கு வேலையளிப்பதாக வாக்குறுதியளித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் சிறு எண்ணிக்கையிலான மாணவர்களே வருகை தந்திருந்ததால், அவர் வேலையற்ற பட்டதாரிகளை பஸ்களில் அழைத்துவரத் தள்ளப்பட்டார்.

இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பாகமாக, 13 வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இந்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் ஜனநாயக உரிமைகளைப் பெற முடியும் என தேவானந்தா கூறிக்கொண்ட போதிலும், இந்த மாகாண சபைகள் கொழும்பு அரசாங்கத்துடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள தமிழ் தட்டுக்களுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வழிவகை மட்டுமே ஆகும். இராஜபக்ஷ ஆட்சியின் ஒரு வாடிக்கை காரராக செயற்படும் அதே வேளை, அந்த வாய்ப்புக்களை தக்கவைத்துக்கொள்வதே ஈ.பி.டி.பி. யின் முன்நோக்காகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது "தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற" புலிகளின் போலி உரிமை கோரலை அங்கீகரிப்பதன் அடிப்படையில், பழைய தமிழ் அரசியல் ஸ்தாபனங்களின் ஒரு பகுதியால் 2001ல் அமைத்துக்கொள்ளப்பட்டதாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு, புலிகளின் தோல்வியில் இருந்து அரசாங்கத்தின் பக்கம் நெருக்கமாக நகர்ந்துள்ள அதே வேளை, சிங்கள முதலாளித்துவ கும்பலுடன் தனது சொந்த அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குகளை ஏற்படுத்திக்கொள்ளும் புலிகளின் அடிநிலையில் இருந்த முன்நோக்குக்காக இன்னமும் அழுத்தம் கொடுக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமசந்திரன், ஜூலை 3 விடுத்த அறிக்கையொன்றில், கொடூர யுத்தத்தின் பின்னரும் அரசாங்கத்துடன் இருந்துகொண்டு சுதந்திர முன்னணி பட்டியலில் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈ.பி.டி.பி. யை கண்டனம் செய்தார். "[யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில்] 20,000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தமிழர்களின் தலைநகரத்தை [யாழ்ப்பாணம்] அரசாங்கத்துக்கு கொடுப்பது சரியா" என அவர் கேட்டார்.

"ஒரணியில் திரண்டால் அரசாங்கத்தின் மீது பலமான அழுத்தத்தை கொடுக்கலாம், சர்வதேச சமூகமும் மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் எங்களிடம் எதிர்பார்ப்பதும் அதையே," என ஈ.பி.டி.பி. உட்பட அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் கொள்கையின் வழியில் இராஜபக்ஷ அரசாங்கத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளும் ஒரு புதிய வரம்புத் திட்டத்துக்காக பேரம் பேச எதிர்பார்க்கின்றது. தமிழ் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றி அக்கறை காட்டுவதற்கு மாறாக, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் உள்ள தமிழ் மக்களின் மத்தியிலான அதிருப்தியை தணிப்பதன் பேரில் கொழும்பு மற்றும் புது டில்லியுடன் சேர்ந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புகிறது.

ஜூலை 4 அன்று யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன் தமிழ் நாளிதழின் ஆசிரியர் தலைப்பு, "[அரசாங்கத்தால்] தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் வடக்கில் மீள்கட்டுமானம் முன்னெடுக்கப்படும். வடக்கில் மீள் கட்டுமான வேலைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கெடுத்துக்கொள்ள கொழும்பு அரசாங்கத்துடன் பேசுவதாக இந்தியா வாக்குறுதியளித்துள்ளது," என தெரிவித்தது.

ஜூலை 2 ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நடத்திய "அபிவிருத்தி மற்றும் சமரச இணக்கத்துக்கான அனைத்துக் கட்சிக் குழுவின்" கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களில் தமது உடந்தையையும் சமிக்ஞை செய்யும் ஏனைய சகல பாராளுமன்றக் கட்சிகளுடன் இவர்கள் இணைந்துகொண்டனர். வலம்புரி பத்திரிகையின்படி, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தனியான ஒரு கலந்துரையாடலை இராஜபக்ஷவிடம் சிறிகாந்தன் வேண்டினார். அது உடனடியாகக் கிடைத்தது.

ஈ.பி.டி.பி. யைப் போல் யுத்தத்துக்கு ஆர்வத்துடன் ஆதரவளித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், அது நீண்டகாலமாக பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிராவிட்டாலும், அனைத்துக் கட்சி அரங்கத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது. சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்ததாவது: "தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக நடமாடவிட்ட புலிகளுக்கு எதிராக இடைவிடாது அரசாங்கத்தை ஆதரித்தது எப்படி என்பதை நினைவூட்டினார். இது தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள தனது முன்நாள் பங்காளிகள் மீதான ஒரு நேரடி குத்தாகும்.

இத்தகைய ஊழல் மோசடியான மற்றும் நாதியற்ற தமிழ் கட்சிகள் இராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பிடிக்க ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக்கொள்கின்றன என்ற உண்மையை ஆனந்தசங்கரியின் கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு விடயத்தில் அவர்கள் அனைவரும் உடன்படுகின்றனர். அது ஆளும் தட்டுக்களுக்கு எதிரான சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் இந்தியத் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மீதான பகைமையாகும்.

தேர்தலைச் சூழவுள்ள ஒடுக்குமுறை சூழலை பற்றி உலக சோசலிச வலைத் தளத்துக்கு பல யாழ்ப்பாண வாசிகள் கருத்துத் தெரிவித்தனர்.

சென். பற்றிக் கல்லூரியின் மாணவன் தெரிவித்ததாவது: "யாழ்ப்பாணத்தில் தொன்நூறு வீதமான மாணவர்கள் வேலையற்றவர்கள். கடுமையான பொருளாதார சிரமங்கள் மற்றும் யுத்த நிலைமையிலும், பெற்றோர்கள் தமது சிறுவர்களுக்கு கல்வியூட்ட முயற்சித்த போதிலும், தொழில் இல்லை. சில இளைஞர்கள் மாதத்துக்கு 3,500 ரூபாவுக்கு (30 அமெரிக்க டொலர்) மட்டும் தொண்டர் ஆசிரியர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். எமது பாடசாலையில் 20 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர்.

"எனது சொந்த இடம் பிரதான கடற்படைத் தளத்துக்கு அருகில் உள்ள நைனாதீவு. அது உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. எமது கிராமத்துக்குள் நுழையும் எவரும் அனுமதி பெறவேண்டும். எனது அப்பா மீனவர். யுத்தத்தின் போது மீன் பிடிப்பது மிகவும் சிரமமானது. அவரது வருமானம் மாதம் 5,000 ரூபாவை விட குறைவாகும். எனது வகுப்புக் கட்டணம் மாதம் 800 ரூபா. எனவே எனது உறவினர்கள் உதவினர்.

"இளைஞர்கள் இந்தக் கட்சிகள் தொடர்பாக வெறுப்படைந்துள்ளனர். விடுதலை இயக்கங்கள் என சொல்லிக்கொண்டவையும் ஜனநாயக விரோதமானவை. அரசாங்கம் மட்டுமன்றி, இத்தகைய இயக்கங்களும் மக்களை ஒடுக்குகின்றன.

தனது வீட்டில் இருந்து இடம்பெயர்ந்த பின்னர் வாடகை வீடொன்றில் வசிக்கும் ஒரு நடு வயது விவசாயி தெரிவித்ததாவது: "நான் அரியாலையில் வாழ்ந்து வந்தேன். அது யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம். எனக்கு ஒரு அளவு காணி இருக்கின்றது. பூநகரியைச் சூழ இராணுவம் உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றை ஸ்தாபித்த போது சுமார் 700 குடும்பங்கள் தமது காணிகளை இழந்தனர்.

"இப்போது யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் எங்களால் இன்னமும் வீட்டுக்குப் போக முடியாமல் உள்ளது. இராணுவம் 100 பேரை மட்டுமே அனுப்பியது. அதுவும் அங்கு நிரந்தரமாகத் தங்க அல்ல. காணி உரிமையாளர்களுக்கு பச்சை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. தொழிலாளர்களுக்கு வெள்ளை அட்டைகளே இருந்தன. அவர்கள் காலையில் அங்கு போகலாம். ஆனால் மாலை திரும்பிவிட வேண்டும்.

"நாங்கள் வாடகை வீடுகளில் பங்கீட்டில் வாழ்கிறோம். 1996 அளவிலயே இந்த பங்கீடுகள் அமைக்கப்பட்டன. ஐந்து பேர் அடங்கிய குடும்பத்துக்கு 1,250 ரூபா (12 டொலர்) மாதம் கிடைக்கும். இந்த நிலைமையை எங்களால் சமாளிக்க முடியாது. எதுவும் மாறவில்லை. இராணுவ வாகனம் ஒன்று வந்தால், நாங்கள் ஒதுங்கி வழி விட வேண்டும். இராணுவம் வெளியேறினால் மட்டுமே நாங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்."