WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய அமெரிக்கா, கரிபியன்
Capitalism's deadly toll: 44 children dead in Mexican
day care fire
முதலாளித்துவத்தின் மரண எண்ணிக்கை: மெக்சிகன் குழந்தைகள் பாரமரிப்பு இல்லத்தில்
நெருப்பினால் 44 குழந்தைகள் பலி
By Rafael Azul
9 June 2009
Use this version
to print | Send
feedback
ஜூன் 5ல், வடக்கு மெக்சிகனிலுள்ள சோனோரா மாகாணத்தின் தலைநகரான
ஹெர்மோசிலோவில் உள்ள ABC
பராமரிப்பு இல்லத்தை விழுங்கிய ஒரு நெருப்பு, 44 குழந்தைகளின் உயிர்களை பறித்து கொண்டதுடன், மேலும்
குறைந்தபட்சம் 30 குழந்தைகளை தீவிர காயமடைந்த நிலைமையில் விட்டுச்சென்றுள்ளது.
துயரால் கொந்தழித்தெழுந்த பெற்றோர்களும், தீயணைப்பு வீரர்களும் நெருப்பை
அணைத்து குழந்தைகளை மீட்க அவ்விடத்திற்குள் நுழைய முயற்சித்தபோது, புகையாலும், கார்பன்
மோனாக்சைடினாலும் விரைவாக நிறைந்துவிட்ட அந்த கட்டிடம் மழலையர்களுக்கும், குழந்தைகளுக்கும் நச்சாக மாறியது.
அவர்களில் பலர் தங்களின் இருப்பிடங்களுக்குள்ளேயே மாட்டி கொண்டார்கள்.
இந்த பரிதாப சம்பவம் வெறும் ஒரு விபத்தல்ல; இது, மனிதர்களின் மிக அடிப்படை
தேவைகளிலும் கூட இலாபங்களை திணிக்கும் ஒரு முதலாளித்துவ அமைப்புமுறையின் நேரடி விளைவாகும்.
முப்பது குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களின் 11 பேரின்
நிலை மிகவும் மோசமாக உள்ளது. மீதமிருப்போரில் சிலர், கடுமையான தீக்காயங்களினால் உடல் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் பலத்த நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
சிலருக்கு மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 10 நபர்களுக்கு மூன்றாம்-நிலை தீக்காயங்கள்
ஏற்பட்டுள்ளது. அவர்கள் கெளடாலாஜாராவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு நபர், தனது
உடலில் 80 சதவீதத்திற்கும் மேல் நெருப்பு காயங்களுடன் இருக்கும் ஒரு பெண் குழந்தை கலிபோர்னியாவின்
சாக்ராமென்டோ மருத்துவமனை தீக்காய பிரிவுக்கு விமானத்தில் எடுத்து செல்லப்பட்டார்.
தனியாருக்கு சொந்தமான இரண்டு பண்டகசாலைகள் சேருமிடத்தில் இந்த நெருப்பு
பற்றியது. இவற்றில் ஒன்று வாகன டயர்களை சேமிக்கும் இடமாகும். இரண்டாவது இடம், வாகனங்கள்
நிறுத்துவதற்கும் மற்றும் சோனோரா மாகாண அரசாங்கத்திற்கு அலுவலகத்தை வாடகைக்கு விடும் இடமாகவும்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெருப்பு கட்டுப்பாட்டை மீறி செல்வதற்கு வழிவகுக்கும் வகையில், புகை அறியும்
சாதனங்கள் பழுதுபட்டிருக்க கூடும். பெருந்தீ பரவுவதற்கு காரணமாக, ஒரு வெடிப்பு சத்தம் கேட்டதாக நேரில்
பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். தீப்பொறிகள் பராமரிப்பு நிலையத்தின் மேற்கூரைகள் முழுவதும் பரவியது.
நெருப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்களுக்கு இரண்டு மணி நேரம் ஆனது. மெக்சிகோ
நகர தினசரியான La Jornada
வெளியான ஓர் அறிக்கையின்படி, இரண்டு பண்டகசாலைகளில் ஒன்றில் ஏற்கனவே குறைந்தபட்சம் ஒரு முறை தீவிபத்து
ஏற்பட்டிருந்தது.
சமூகநல மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி மழலையர் காப்பகம் (Estancias
de Bienestar y Desarrollo Infantil)
என்றழைக்கப்படும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக குறைந்த கட்டணத்தில் 223,000 குழந்தைகளுக்கு
IMSS (Mexican Institute for Social Security-சமூக
பாதுகாப்பிற்கான மெக்சிகன் பயிலகம்) குழந்தைகள் பராமரிப்பை அளித்து வருகிறது. இந்த திட்டத்தின்கீழ்
1,500 மையங்கள் செயல்படுகின்றன. IMSS
உடனான ஒப்பந்தத்தின்கீழ் இலாபத்திற்காக நடத்தப்படும் 526 தனியார் பராமரிப்பு மையங்களில்
ABCம் ஒன்றாகும்.
இந்த தீவிபத்து மெக்சிகோவில் உள்ள மழலையர் காப்பகங்களின் தரங்கள் குறித்தும்,
அவற்றில் நடத்தப்படும் சோதனைகள் குறித்தும் சந்தேகம் எழுப்பி உள்ளது. ஒரேயொரு கதவும், மேற்தளத்திற்கு
பக்கத்தில் சுவரில் உயரமாக ஐந்து சிறிய ஜன்னல்கள் மட்டுமே கொண்ட அந்த கட்டிடம் (அதாவது
மாற்றியமைப்பட்ட பண்டகசாலை), இந்த ஆண்டு மே 26ல் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக
தெரிகிறது. அந்த கட்டிடத்தின் இரண்டாவது கதவு ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. ஆறு மாதம் முதல் ஐந்து
வயது வரையிலான 173 குழந்தைகளை ஆறு பணியாளர்கள் கவனித்து வந்தனர்.
அந்த கட்டிடத்தில் நெருப்பு பற்றிய போது, அங்கு 141 குழந்தைகள் இருந்தனர்;
அது பகலுறக்கம் கொள்ளும் நேரமாக இருந்தது. அங்கிருந்த சின்தெடிக் பிரிப்புகள் மற்றும் எரியக்கூடிய
பிளாஸ்டிக்குள் உருகவும், சிதையவும் தொடங்கிய போது, நெருப்பு பற்றி கொண்டதை
ABC பணியாளர்கள்
அறிந்தார்கள். ஆனால் அதற்குள் கட்டிடம் முழுவதும் எரியும் அறைதடுப்புகள், எரியக்கூடிய தரைவிரிப்புகள், உருகும்
பிளாஸ்டிக் நாற்காலிகள், திடீரென பெரும்பாலும் மொத்தமாக உடைந்துவிட்ட கட்டிடத்தின் மேற்கூரை
ஆகியவற்றால் ஏற்பட்ட புகை கட்டிடம் முழுவதும் நிரம்பிவிட்டதால், காலம் மிகவும் கடந்துவிட்டிருந்தது. சின்தெடிக்
பொருட்களால் ஏற்பட்ட நச்சு வாயுக்களால் பாதிக்கப்பட்ட இளம் குழந்தைகளின் நுரையீரல் கடுமையாக
பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவித்தார்கள்.
பள்ளிக்கல்வி கட்டிடங்களில் நச்சு பொருட்களின் பயன்பாடுகள் குறித்து நீதித்துறை
மந்திரியின் அலுவலகத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகள் உட்பட, மெக்சிகன் விதிமுறைகளை அந்த
பயிலகம் மீறியிருப்பதை ஆரம்பகட்ட அறிக்கைகள் வெளியிடுகின்றன.
இந்த துக்க சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
ABCல் பணியாற்றிய
ஒரு பெண்ணின் தாயும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரின் இரண்டு வயது நிரம்பிய பேரனின்
பாட்டியுமான Guadalupe Arvizu, ABC
குறித்து குறிப்பிடுகையில்: "அது மிகவும் மோசமாக இருந்தது," என்று தெரிவித்தார். "அதுவொரு பண்டகசாலை,
வகுப்பறைகளில் ஜன்னல்களே கிடையாது" என்றார். மையத்திற்கு செல்வதற்கான இரண்டாவது அவசர வழியும்
திறக்க முடியாமல் மூடியே இருந்தது என்று Arvizu
குறிப்பிட்டார். சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில், பாதிக்கப்பட்டவர்களில் முதல் குழுக்கள் அடக்கம்
செய்யப்பட்டனர். IMSSஐ
குற்றஞ்சாட்டிய அதிர்ச்சியும், கோபமும் அடைந்திருந்த பெற்றோர்கள்,
ABC காப்பகத்தை
ஒரு மரணக்குழி என்று குறிப்பிட்டார்கள்.
ஹெர்மோசிலோவில் மக்களின் மனநிலையை விவரித்த
La Jornada,
பக்கத்தில் இருந்தவரும், சம்பவத்தை நேரில் பார்த்தவருமான
Francisco Soto
கூறியதை பிரசுரித்திருத்திருந்தது: "எவ்வாறு நடந்திருக்க முடியும்?" என்று வினவிய
Francisco Soto,
அக்கட்டிடத்தில் இருந்தவர்களை விரைவாக வெளியேற்றுவதற்காக
ABC சுவரினை
சரக்கேற்றும் வண்டியால் ஒரு இளைஞன் மோதியதைப் பற்றி தெரிவித்தார். அந்த காப்பகம் அரசியல்
பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களுடையது என்பதை அருகில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு
தெரியும் என்று Francisco Soto
குறிப்பிட்டார்.
மே மாத ஆய்வுக்கு பின் அளிக்கப்பட்ட ஆய்வாளரின் அறிக்கைக்கும், அக்கட்டிடத்தின்
உண்மையான நிலைமைக்கும் இடையில் முற்றிலுமான முரண்பாடு இருந்தது.
ABCல் ஒன்றுக்கு
மேம்பட்ட அவசர வழி இருந்ததாகவும், தீயணைப்பு சாதனங்கள் இருந்ததாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது. உண்மையில்,
பொதுவவாக பராமரிப்பு மையங்கள் கொண்டிருக்க வேண்டிய உடைக்கும் கருவிகள், எரியாத பொருட்களால் ஆன
தடுப்புகள், தப்பிக்கும் வழிகள் மற்றும் தப்பிக்கும் முறைகள் போன்ற எவ்வித முதன்மை பாதுகாப்பு முறைகளையும்
ABC
கொண்டிருக்கவில்லை. மேலும், ABC
கொண்டிருந்த 29:1
ஒன்று என்ற குழந்தைக்கும் பராமரிப்பாளருக்குமான விகிதமானது, 18 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கான
சர்வதேச தரத்தை விட ஏறத்தாழ ஆறு மடங்கு அதிகமாகும். அதேபோல் 5 வயது குழந்தைகளுக்கான தரம் இரு
மடங்கு அதிகமாகும்.
ABC ன் உரிமையாளர்களை
பொறுத்த வரை, அந்த இடம் குழந்தைகளை வைக்கும் ஒரு பண்டகசாலையாக இருந்தது, அதாவது தனியாக
வாழும் மற்றும் ஏழை தாய்மார்களின் குழந்தைகளுக்கான காப்பகம் என்பதன் மூலம் இலாபங்கள்
சம்பாதிப்பதற்கான ஒரு வழி. மெக்சிகோவிலுள்ள மூன்று முக்கிய ஆளும் அரசியல் கட்சிகளில் இரண்டான
Institutional Revolutionary Party (PRI)
மற்றும் National Action Party (PAN)
ஆகியவற்றுடன் அரசியல் தொடர்புடைய உரிமையாளர்களை, ஹெர்மோசிலோவிலுள்ள உள்ளூர் வானொலி
நிலையங்களும், இணைய வலைப்பதிவுகளும் வாரயிறுதியில் அம்பலப்படுத்தின.
ஆரம்பத்தில், ABC
உரிமையாளர்களின் பெயர்களை அளிக்க அதிகாரிகள்
மறுத்தார்கள். சனிக்கிழமை மதியத்தில் தான் பெயர்கள் வெளியிடப்பட்டன. உரிமையாளர்களில் இருவர்
சோனோரா அரசால் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது வெளியானது. அவர்களில் ஒருவரான
விணீக்ஷீநீவீணீ விணீtவீறீபீமீ கிறீtணீரீக்ஷீணீநீவீணீ நிரனீமீக்ஷ் பீமீறீ சிணீனீஜீஷீ
ஜிஷீஸீமீறீறீணீ, மெக்சிகன் ஜனாதிபதி
திமீறீவீஜீமீ சிணீறீபீமீக்ஷீரஸீ
மனைவியின் அத்தை ஆவார். மூன்றாவது உரிமையாளர், அந்நாட்டில் ஆளும்
கட்சியான Institutional Revolutionary
Party (PRI)ன் ஓர் அதிகாரியாவார். இந்த வெளிப்பாடு
செல்வாக்கை பயன்படுத்தியமைக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பியது. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், இதுவரை
அவ்விடத்தில் எவ்வித உண்மையான ஆய்வும் பெரும்பாலும் நடந்திருக்க சாத்தியமில்லை. |